TNPSC Group 1 Exam Date Announced
குரூப் 1 முதன்மை எழுத்துத் (Main Exam) தேர்வு ஜூலை இரண்டாவது வாரத்துக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் 1 தேர்வுக்கான முதல்நிலைத் தேர்வு(Preliminary Exam) மார்ச் 3-இல் நடைபெறுவதாகவும், முதன்மை எழுத்துத் தேர்வு மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத் திட்டங்களை தேர்வாணையத்தின் இணையதளமான http://www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.
No Change in Group 1 Prelims syllabus and Exam date
முதன்மைத் தேர்விற்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காகத் தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு ஜூலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய தேர்வுத் திட்டம் மற்றும் பாடத் திட்டத்திற்கு தயாராகலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
COMBINED_CIVIL_SERVICES_EXAMINATION_ I_SYLLABUS – Download Here
