POTHU TAMIL MODEL QUESTION PART 1
பொதுத்தமிழ் – மாதிரித்தேர்வு -1
1. “இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே” என்ற பாடலை எழுதியவர்.
a. பாரதிதாசன்
b. பாரதியார்
c. கவிமணி
d. குமரகுருபர்
2. உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்வாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தை பொறுத்தல், இடையறாநிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை
a. தால்சுதாய்
b. வீரமாமுனிவர்
c. கால்டுவெல்
d. ஜி.யு. போப்
3. “வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை” என்ற பாடலை பாடியவர்
a. ஜி.யு.போப்
b. வள்ளலார்
c. சுந்தரர்
d. அப்பர்
4. “ஒரு நாட்டின் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிபற்றே, மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது என்பது உறுதி எனக் கூறியவர்”
a. அறிஞர் அண்ணா
b. மு.வரதசாசனார்
c. பெரியார்
d. பரிதிமாற்கலைஞர்
5. உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தால் போதும், மீண்டும் அதனை புதுப்பித்துவிடலாம்
a. கால்டுவெல்
b. பாவணர்
c. வீரமாமுனிவர்
d. இரா.பி. சேது பிள்ளை
6. தொல்காப்பிய நெறி நின்றவர்
a. திருவள்ளுவர்
b. கம்பர்
c. இளங்கோவடிகள்
d. சீத்தலை சாத்தனார்
7. வடமொழி எழுத்தையும், பிறமொழிக்கலப்பையும் தடுத்தவர்
a. இளங்கோவடிகள்
b. வீரமாமுனிவர்
c. தொல்காப்பியர்
d. கம்பர்
8. “அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே” என்ற பாடலை பாடியவர்
a. மாணிக்க வாசகர்
b. தாயுமானவர்
c. வள்ளலார்
d. சுந்தரர்
9. “மெய்தான்அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற் கென்” என்ற பாடலை பாடியவர்.
a. மாணிக்க வாசகர்
b. வள்ளலார்
c. திருமூலர்
d. தாயுமானவர்
10. பொருத்துக.
(1) விடேன் (a) வினையாலணையும் பெயர்
(2) ஒழுக்கம் (b) தன்மை ஒருமை வினைமுற்று
(3) கொளல் (c) பண்புத்தொகை
(4) நல்லொழுக்கம் (d) தொழிற்பெயர்
(5) உரவோர் (e) அல் ஈற்றுத் தொழிற்பெயர்
(6) கலங்காது (f) எதிர்மறை வினையெச்சம்
a. b c d f a e
b. a b c d e f
c. b d e c a f
d. f e b d a
11. நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை
a. ஓவியக்கலை
b. நாடகக்கலை
c. இசைகலை
d. பேச்சுக்கலை
12. “அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற் படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்” என்று கூறியவர்
a. நேரு
b. அம்பேத்கர்
c. ராஜேந்திர பிரசாத்
d. காந்தி
13. “நல்” என்று அடைமொழி கொடுத்து போற்றப்படும் நூல்
a. நற்றிணை
b. பதிற்று பத்து
c. அகநானூறு
d. புறநானூறு
14. பொருத்துக
(1) அரி (a) பனையோலைப் பெட்டி
(2) செறு (b) நெற்கதிர்
(3) யாணர் (c) வயல்
(4) வட்டி (d) புது வருவாய்
a. b c d a
b. a b c d
c. b c d a
d. b c a d
15. தமிழ்த்திரைப்பட உலகின் வழிகாட்டியாகவும் பாதுகாவலராகவும் திகழ்ந்தவர்
a. உடுமலை நாராயணக்கவி
b. எ.வி. மெய்யப்பர்
c. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
d. கண்ணதாசன்
16. பொருத்துக
(1) மேதி (a) பாம்பின் நஞ்சு
(2) நிறைக் கோல் (b) திரு நீறு
(3) மந்தமாருதசீதம் (c) நான்மறை
(4) சூலை (d) தாமரை
(5) கமலம் (e) குளிர்ந்த இளந்தென்றல்
(6) மறைநூல் (f) கொடிய வயிற்றுநோய்
(7) பூதி (g) துலாக் கோல்
(8) பணிவிடம் (h) எருமை
a. h g e f d c b a
b. h g d c f b a e
c. h g d f c d a b
d. h g d f c b d a
17. தம்மக்கள், அளவை, நிறைக்கோல், பசு தாம் வைத்த தண்ணீர் பந்தல் ஆகிய அனைத்திற்கும் திருநாவுக்கரசு என்னும் பெயரையே சூட்டி மகிழ்ந்தவர்
a. திரு நீலக் கண்டர்
b. மாற நாயனார்
c. அப்பூதியடிகள்
d. சமணமுனிவர்கள்
18. இலக்கண குறிப்பு ;-
(1) வழிக்கரை (a) வினைத்தொகை
(2) நீர்த்தடம் (b) அன்மொழித் தொகை
(3) கரகமலம் (c) இரண்டாம் வேற்றுமை தொகை
(4) பூதி சாத்த, பெருமையறிந்து (d) உருவகம்
(5) அங்கணர் (e) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
(6) பொங்குகடல் (f) ஆறாம் வேற்றுமைத் தொகை
a. f e d c b a
b. f d c b e a
c. f e d c a b
d. a b c d e f
19. கீழ்கண்டவற்றில் உள்ள கூற்றை ஆராய்க
(1) கருத்துப்படம் அமைக்க தொடங்கியவர் – வால்ட் டிஸ்னி
(2) திரைப்படம் எடுக்கப்பயன்படும் படச்சுருள் – எதிர்சுருள்
(3) ஈஸ்ட்மன் பவர் படச்சுருள் உருவாக்கும் முறையை கண்டு பிடித்தார்
(4) ஒருவர் மட்டும் பார்க்கும் படக் கருவியை எடிசன் கண்டுபிடித்தார்
(5) எட்வர்டு மை பிரிட்சு என்பவர் ஓடும் குதிரையை இயக்கபடமாக எடுத்து வெற்றி பெற்றார்
(6) 1830 ஆம் ஆண்டு ஒளிபடம் எடுக்கும் முறையை கண்டு பிடித்தனர்
a. 1,2,3,4,5 சரி 6 தவறு
b. அனைத்தும் சரி
c. 1,2,3,4,சரி 5,6 தவறு
d. 1,3,4,5,6 சரி 2 தவறு
20. மு.சி.பூர்ணலிங்கம் துவங்கி வைத்த “ஞானப்போதினி” என்னும் இதழை நடத்தி வந்தவர்
a. பெருஞ்சித்திரனார்
b. பரிதிமாற்கலைஞர்
c. பாரதியார்
d. முடியரசன்
21. “பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழார் பெருமானை புகழ்ந்துரைத்தவர்
a. திருவிகா
b. சுந்தரர்
c. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
d. அண்ணா
22. பொருத்துக (இளமைப் பெயர்)
(1) ஆடு (a) கன்று
(2) மான் (b) பிள்ளை
(3) கீரி (c) குருனை
(4) சிங்கம் (d) குட்டி
a. d a b c
b. a b d c
c. c b a d
d. a b c d
23. இந்திய அரசு பாரதரத்னா என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு எந்த ஆண்டு வழங்கி பெருமைப்படுத்தியது
a. 1989
b. 1990
c. 1988
d. 1987
24. “விடு நனி கடி தென்றான மெய் உயிர் அனையானும்” என்ற பாடல் வரி இடம் பெற்ற நூல்
a. கம்பராமாயணம்
b. சிலப்பதிகாரம்
c. பெரிய புராணம்
d. புறநானூறு
25. எந்த நூல் பெரும் காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாக பெற்றது. பொருள், அணி, நடை ஆகியவற்றால் சிறந்தது. கற்போர்க்கு இனிமை தரும் கவிச்சுவை நிறைத்தது சொற்சுவையும், பொருட்சுவையும், தமிழ்ப் பண்பாடும் மிளிர்ந்துள்ள நூல்.
a. சிலப்பதிகாரம்
b. நற்றிணை
c. பெரிய புராணம்
d. கம்பராமாயணம்
26. சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு எனக் கூறி அதனை நீக்கப் பாடுபட்டவர்
a. அம்பேத்கர்
b. பெரியார்
c. பாரதியார்
d. பாரதிதாசன்
27. “எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால் இங்குள்ள எல்லாரும் நாணிடவேண்டும்” என்ற பாடலை எழுதியவர்
a. பாரதிதாசன்
b. பாரதியார்
c. மலைவாழ் மக்கள்
d. நாமக்கல் கவிஞர்
28. “அடிகள் நீரே அருளுக” என கூறியவர்
a. சேரன் செங்குட்டுவன்
b. மலைவாழ் மக்கள்
c. சீத்தலை சாத்தனர்
d. இளங்கோவடிகள்
29. கீழ்கண்டவற்றில் சரியற்றவை தேர்ந்து எடு
a. அங்கை – அகம் + கை
b. எம்மருங்கும் – என் + மருங்கும்
c. அங்கண் – அம் + கண்
d. விதிர்ப்புற்றஞ்சி – விதிர்ப்பு + உற்று + அஞ்சி
30. உழைத்துப் பெறு ! உரிய நேரத்தில் பெறு ! முயற்சி செய்து பெறு ! என்று கூறியவர்.
a. மு. வரதராசனர்
b. திரு.வி.க
c. பரிதிமாற்கலைஞர்
d. அண்ணா
31. காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்ட முடிவது,
a. பெயரெச்சம்
b. தெரிநிலை பெயரெச்சம்
c. குறிப்பு பெயரெச்சம்
d. தெரிநிலை வினையெச்சம்
32. கீழ்கண்டவற்றில் தவறானவற்றை தேர்ந்தெடு
a. எம்.ஜி.ஆர் அவர்களை ”மக்கள் திலகம்” எனக் கூறியவர் -கண்ணதாசன்
b. எம்.ஜி.ஆர் அவர்களை “இதயக்கனி” என அழைத்தவர் – அண்ணா
c. செல்வமும், உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம், உழைப்பும், கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் – Dr.B.R.அம்பேத்கர்
d. சமூக முரண்களை எதிர்த்தவர், மூடக் கருத்துகளை முட்டறுத்தவர் -பெரியார்
33. M.G.R அவர்களுக்கு எந்த ஆண்டு நடுவண் அரசு பாரத ரத்னா விருது வழங்கியது
a. 1987
b. 1988
c. 1989
d. 1986
34. எம்.ஜி.ஆர் காலம்
a. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1987 வரை
b. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1988 வரை
c. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1988 வரை(d) ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1986 வரை
d. ஜனவரி 17, 1917 முதல் டிசம்பர் 24, 1986 வரை
35. திருவாசகத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் உள்ளன
a. 656
b. 657
c. 659
d. 658
36. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
a. மாணிக்கவாசகர் தலைமையமைச்சராக பணியாற்றிய மன்னர் – அரிமர்த்தன பாண்டியன்
b. ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் – இலத்தீன்
c. மாணிக்க வாசகர் காலம் – கி.பி.9ம் நூற்றாண்டு
d. மாணிக்கவாசகர் பாடல்கள் இடம் பெற்றுள்ள திருமறை – 8 ஆம் திருமறை
37. ”இந்தியாவின் தேசிய பங்கு வீதம்” என்ற நூலை எழுதியவர்.
a. அம்பேத்கர்
b. அமர்த்தியாசென்
c. நேரு
d. காந்தியடிகள்
38. பொருத்துக
(1) விழுப்பம் (a) பகைவர்
(2) பரிந்து (b) செல்வம்
(3) இழுக்கம் (c) மன வலிமையுடையோர்
(4) உரவோர் (d) குற்றம்
(5) ஏதம் (e) ஒழுக்கம் இல்லாவர்
(6) திரு (f) விரும்பி
(7) செறுநர் (g) சிறப்பு
a. b c d f a e g
b. g e c f b b a
c. g f e c d b a
d. f e g c d b a
39. ஏலாதி, சிறப்பாயிரம், தற்சிறப்பாயிரம் உட்பட எத்தனை வெண்பாக்களை கொண்டுள்ளது.
a. 97
b. 87
c. 99
d. 81
40. “உயர்தனிச் செம்மொழி” என்னும் ஆங்கில நூல் தேவநேயப்பாவாணரால் எழுதி வெளியிடப்பட்ட ஆண்டு
a. 1969
b. 1966
c. 1919
d. 1918
ANSWER WILL BE ADDED SOON
DOWNLOAD ANSWERS
