Daily Current Affairs (May 8-10)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : May 8-10
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
கிரிக்கெட்
ஆஸ்திரேலியா ஒருநாள் அணிக்கு டிம் பெய்ன் கேப்டன்
ஆஸ்திரேலியா டி20 அணிக்கு ஏரோன் பிஞ்ச் கேப்டன்
11 வது அயர்லாந்து தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி
பாக்கிஸ்தானுக்கு எதிரான அதன் ஆரம்ப டெஸ்ட் போட்டியில் வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட் அயர்லாந்து தலைவராக இருப்பார்.
சர்வதேச செஞ்சிலுவை தினம் – மே 8
உலகம் முழுவதும், போரின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் உருவான அமைப்புதான் ரெட் கிராஸ்.
இதற்குக் காரணமானவர் ஹென்றி டுனான்ட்.
இவர் 1828ம் ஆண்டு மே 8 இல் பிறந்தார், முதன்முறையாக 1948ம் ஆண்டு, ஹென்றியின் பிறந்த நாளான மே 8 அன்று செஞ்சிலுவை தினம் கொண்டாடப்பட்டது.
மாநில செய்திகள்
15வது ஆசிய ஊடக உச்சிமாநாடு
15வது ஆசிய ஊடக உச்சிமாநாட்டை (ஆஊஉ) புதுதில்லியில் மே 10 முதல் 12 வரை நடக்கிறது
இந்தநிகழ்வை இந்தியா முதன்முறையாக நடத்துகிறது.
மையக் கருத்து – “எங்கள் கதைகளைச் சொல்கிறோம் –ஆசியாவிலும் அதற்கு மேலும்”
மிகப்பெரிய இந்திய கொடி
இந்தியாவின் 1857 ஆம் ஆண்டின் முதல் சுதந்திர தினத்தையொட்டி 185 அடி நீளமும், 122 அடி அகலமும் கொண்ட இந்திய தேசிய கொடி 10.05.2018 அன்று என்.டி.ஆர் ஸ்டேடியத்தில் பவன் கல்யாண் ஏற்றினார்
சிருமலை மேற்கு வனப்பகுதி பாதுகாக்கப்பட்ட காடு
திண்டுக்கல் மாவட்டத்தில் 173 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள சிறுமலை காடுகளை தமிழ்நாடு அரசாங்கம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்துள்ளது.
அதன் தாவர மற்றும் விலங்கினங்களை பாதுகாக்கும் முயற்சியாக, 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி இந்த நடவடிக்கை நிர்ணயிக்கப்பட்டு, மே மாதம் 9 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் 4 வது புலிகள் பாதுகாப்பு சரணாலயம்
உத்தரப்பிரதேசத்தில் நான்காவது புலிகள் பாதுகாப்பு சரணாலயத்தை சித்ராக்கூட்டில் ராணிப்பூர் காட்டுயிர் சரணாலயத்தில் உருவாக்க மாநில அரசுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது .
தஹால் குழு .
பணி : கழிவு நீர் மேலாண்மை, நுண் பாசனம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை தஹால் குழுமம் மேற்கொண்டு வருகிறது..
தலைமையகம் : குர்காவுனில் உள்ளது
தீர்வு : கிராமங்களில் 8,000 குளங்கள் புனரமைக்கப்படுவது, கழிவு நீர் சுத்திகரிப்பு போன்ற பிரச்சினைகளை தீர்க்க உதவும்.
சர்வதேச செய்திகள்
அர்மேனியா புதிய பிரதமர் – நிக்கோல் பாஷின்யான்
உலகின் சிறந்த ரயில் பயணங்கள்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான ‘தி கார்டியன்’ (The Guardian) உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளது.
இதில் ஆசியா கண்டத்தில் இந்தியாவில் நீலகிரி மலை ரயிலும் , இலங்கையின் யாழ் தேவி ரயில் மற்றும் சீனாவின் குங்ஹாய் – திபெத் ரயில் ஆகிய மூன்று ரயில் பயணங்களை தேர்வு செய்துள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியல்
2018-ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் உலகின் சக்தி வாய்ந்த மனிதராக முதலிடத்தில் உள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்பதாவது இடமும் கிடைத்துள்ளது.
அமெரிக்கா ஈரானுடனான அணு ஒப்பந்தம்
ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் பதக்கம்
ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஸ்ரீ சிவாஜி, ‘ரயில்வே அமைச்சர்’ பதக்கத்துடன் ரூபாய் 1 லட்சத்தையும் பெற்றார்
தைரியம், திறமை, துணிவை காட்டிய படைப்பிரிவின் உறுப்பினருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இராணுவத் தளபதி புத்தகம் வெளியிட்டார்
ராணுவ தளபதி கென் பிபின் ராவத், ‘அக்ராஸ் தி பெஞ்ச்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்
இன்சைட் இன்டூ தி ஜூடிசியல் சிஸ்டெம் ‘ என்ற புத்தகத்தை முன்னாள் ராணுவ தளபதியும், ‘ஏ’, ஆயுதப்படைத் தலைவருமான கென் கியான் வெளியிட்டார்.
6 வது அமெரிக்க-இந்தியா விமானப்படை உச்சி மாநாடு
6 வது அமெரிக்க-இந்தியா விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு மும்பையில் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவால் முறையாகத் தொடங்கப்பட்டது.
இந்த சிவில் விமான போக்குவரத்து உச்சிமாநாட்டை விமானப்படை அமைச்சகம் மற்றும் அமெரிக்க வர்த்தக மேம்பாட்டு முகமை (யு.எஸ்.டி.டி.டீ) இணைந்து நடத்தும்.
அறிவியல் செய்திகள்
சிறுநீரக செல்கள் ஆராய்ச்சி
அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் தாஹிர் ஹுசேன் சிறுநீரகத்தில் இயற்கையாக AT2R(angiotensin type 2 receptor) என்ற புரதம் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளார்.
இந்த AT2R புரதத்தை பயன்படுத்தி சிறுநீரக எரிச்சலை கட்டுப்படுத்த முடியும்.
‘இன்சைட்’ ரோபோ
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ‘நாசா’ மையம் ஏற்கனவே ‘ரோவர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது.
தற்போது ‘இன்சைட்’ என்ற புதிய ரோபோவை செவ்வாய் கிரகத்துக்கு ‘நாசா’ அனுப்பியுள்ளது.
திடீர் எபோலா தாக்குதல்
கோங்கோவில் 1976 ஆம் ஆண்டு , எபோலா என்ற கொடிய நோய் முதலில் கண்டறியப்பட்டது.
எபோலா சில நேரங்களில் மிருகங்கள், குரங்குகள், வௌவ்வால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவுகின்றது.
எபோலா நோய்க்கு எந்த குறிப்பிட்ட சிகிச்சையும் இல்லை, இது மக்களின் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது.
ஸ்குரோல் யாஹூ
யாஹூ தனது சொந்த புதிய க்ரூப் சாட் ஆப் ஆன ஸ்குரில் யாஹூ பயன்பாட்டை வெளியிடுகிறது
Download Daily Current Affairs (2018-MAY- 8 & 10)
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

