Daily Current Affairs – July 19th to 22nd – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (July 19th – 22nd)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : Daily Current Affairs 

Date : July 19th – 22nd

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்

ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியா ஒரு வெள்ளி (திவ்யா காக்ரன்) மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை (கருணா, ரீனா) வென்றது.

 

டெக்கத்லான் சாதனை

15 வது தேசிய இளைஞர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை  குஜராத் மாநிலத்தின் வதோதராவில் ஹரியாணாவின் மோகித் குமார் 18 வயதிற்குட்பட்டோருக்கான தேசிய டெக்கத்லான் சாதனையை முறியடித்தார்.

 

ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் போட்டி

ராம்குமார் ராமநாதன் ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டிம் ஸ்மைஷெக்கைத் தோற்கடித்து முதன்முறையாக ATP இறுதிப் போட்டிக்கு தேர்வு அடைந்தார்.

 

ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்

சச்சின் ரதி மற்றும் தீபக் பூனியா, ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றனர்.

 

ஜூனியர் சாம்பியன்ஷிப்

இந்திய வீரரான லக்ஷியா சென் இந்தோனேசியாவில் நடந்த பேட்மிண்டன் ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரரானார்.

 


உலக செய்திகள்

 

EVM உற்பத்திக்கான வசதித் திறப்பு விழா

பெங்களூர், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், இராணுவத் தொடர்பு வர்த்தகப் பிரிவில் EVM உற்பத்திக்கான புதிய உற்பத்தி வசதியை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திறந்துவைத்தார்.

பிரெயில் EPI  Cards முதல் முறையாக கர்நாடகாவில் பார்வை குறைவான வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

 

பிரிக்ஸ் செய்தி போர்டல்

பிரிக்ஸ் மீடியா அகாடமி மற்றும் பிரிக்ஸ் செய்தி போர்டலை நிறுவுவதற்கான ஒரு தீர்மானம் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் 2018 BRICS ஊடக மன்றத்தில் எடுக்கப்பட்டது.

 

கடற்படைக் குழுவில் சேரும் பிரான்சின் முதல் பெண்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்குப் பிறகு, பாரம்பரியக் கப்பல்களைக் காட்டிலும் நீண்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பணிகள் செய்யும் அணுசக்தி கடற்படைக் குழுவில் பெண்களை சேர்க்கும் மூன்றாவது நாடு பிரான்ஸ் ஆகும்.

 

காற்று தரம் மற்றும் வானிலை அடிப்படையிலான மிகவும் மேம்பட்ட அமைப்பு (SAFAR)

மிகவும் மேம்பட்ட காற்று தரம் மற்றும் வானிலை கணிப்பு அமைப்பைத் (SAFAR) டாக்டர் ஹர்ஷவர்தன் தில்லி சாந்தினி சௌக்கில்  தொடங்கி வைத்தார்.

 

சாகர்மாதா பிரண்ட்ஷிப்  -2

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தின் தலைநகரான செங்டூவில் 10 நாள் நேபாள-சீன கூட்டு இராணுவப் பயிற்சி ‘சாகர்மாதா பிரண்ட்ஷிப் -2’ன் இரண்டாவது பதிப்பு நடைபெறும்

 

திட்டங்கள்

 

கேலோ இந்தியா திறமை மேம்பாட்டுத் திட்டம்

இந்திய விளையாட்டு அமைப்பு விளையாட்டு மேம்பாட்டுக்கு கணிசமான முன்னேற்றத்தை எடுத்துச் சென்றுள்ளது.

இதன்படி கேலோ இந்தியா திறமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 734 வீரர்களுக்கு உதவித்தொகை அளிக்கவுள்ளது.

 

கிரீன்கோவின்  புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டமான (IREP) ஸ்தாபிப்பதற்காக கிரீன்கோ எனர்ஜீஸ் பிரைவேட் லிமிடெட் (GEPL) திட்டம் கர்னூல் மாவட்டத்தின் பன்யாம் மண்டலத்தில் பின்னபுரம் கிராமத்தில்  ஆந்திர மாநில அரசு அங்கீகரித்தது.

 

கேலோ இந்தியா திறமை மேம்பாட்டுத் திட்டம்

இந்திய விளையாட்டு அமைப்பு விளையாட்டு மேம்பாட்டுக்கு கணிசமான முன்னேற்றத்தை எடுத்துச் சென்றுள்ளது.

இதன்படி கேலோ இந்தியா திறமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 734 வீரர்களுக்கு உதவித்தொகை அளிக்கவுள்ளது.

தரவரிசை

 

பொது விவகாரங்கள் குறியீடு – 2018

சிறந்த ஆளுமை கொண்ட பெரிய மாநிலம்

1) கேரளா

2) தமிழ்நாடு              

3) தெலுங்கானா

4) கர்நாடகா

 

மாநாடுகள்

 

ஜிஎஸ்டி கவுன்சிலின் 28 வது கூட்டம்

பொருட்கள் மற்றும் சேவைகள் வரி கவுன்சில் அதன் 28 ஆவது கூட்டத்தில் சானிட்டரி நேப்கின்கள், சிறிய தொலைக்காட்சிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்பதன பெட்டிகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் கட்டணத்தை குறைத்தது.

 

அறிவியல் செய்திகள்

 

தொலையுணர்வுக் கருவி -லிடார் (LiDAR)

தேசிய காற்று சக்தி நிறுவனம் (NIWE), குஜராத் கடற்கரையில் காம்பாட் வளைகுடாவில் உள்ள கடல் காற்று வளத்தை மதிப்பீடு செய்வதற்கு லிடார்(LiDAR) எனும் தொலையுணர்வுக் கருவி ஒன்றை நிறுவியுள்ளது.

 

டாக்ஸிபோட்கள்

புது தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுவதற்கு இஸ்ரேல் தயாரித்த டாக்ஸிபோட்கள் விரைவில் வரவுள்ளது.

 

புதை சாக்கடையை சுத்தம் செய்ய ஒரு ரோபோ

தமிழகத்தில் புதை சாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றும் தானியங்கி இயந்திரம் வாங்கும் முதல் நகரமாகிறது கும்பகோணம்

 

சூரியனின் உஷ்ண வளிமண்டலத்தில் நாசா ஆய்வு செய்யத் துவங்கவுள்ளது

சிறிய கார் அளவிலான பார்கர் சோலார் ப்ரோ என்ற ரோபோ விண்கலத்தை சூரியப்புயல் உருவாவதற்கு காரணமான விண்மீன் வளிமண்டலத்தின் மிகப்பெரிய பக�����தியைப்பற்றி தெரிந்துகொள்ள  நாசா சூரியனுக்கு அருகில் அனுப்பத் தயாராகி வருகிறது.

 

ஜப்பனீஸ் ஸ்டார்ட் அப் ‘விண்கற்கள் மழை’

2020களின் தொடக்கத்தில் ஹிரோஷிமா மீது உலகின் முதல் செயற்கை விண்கற்கள் மழை பொழிவை உண்டாக்க தயாராக இருப்பதாக ஜப்பான் ஸ்டார்ட் அப் நிறுவனம் கூறியுள்ளது .

 

லாவெண்டர் வண்ண சிறிய ரூ .100

இந்திய ரிசர்வ் வங்கி புதிய லாவெண்டர் வண்ண சிறிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது, இது தற்போது இருக்கும் நோட்டை விட சிறியதாக இருக்கும்.

“நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை சித்தரிக்கும் வகையில், ராணி கி வாவ் படம் நோட்டின் பின்னால் உள்ளது.”

 

விருதுகள்

லீடர்ஷிப் விருது 2018 

கேரள சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா என்பவர் லீடர்ஷிப் விருது 2018  பெற்றார் .

 

நியமனங்கள்

நீதிபதி வி.கே.தஹில்ரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.

 


 

 Download Daily Current Affairs [2018- July – 19 & 22]

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us