Daily Current Affairs
(April 2019 – 5 to 8)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 5 to 8 April 2019
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
2020 ஒலிம்பிக் டென்னிஸ் விளையாட்டு நடைமுறை மாற்றம்
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ITF) 2020 ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி வடிவங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. ஆண்கள் ஒற்றையர் தங்க பதக்கப் போட்டி ஐந்து டைப்ரேக் சுற்றுகளுக்கு பதிலாக இனி மூன்று டைப்ரேக் சுற்றுகளாக நடக்க உள்ளது.
முக்கிய தினம்
ஏப்ரல் 5 – தேசிய கடல் தினம்
100 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், 1919 ஆம் ஆண்டில், தி சிண்டியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி லிமிட்டட்டின் முதல் கப்பல், எஸ் எஸ் லாய்லிட்டி, ரஷ்ய சென்றது இது இந்தியாவின் கப்பல் வரலாற்றின் ஒரு முக்கியமான நாளாகும்.
தேசிய கடல் தினத்தின் 56 வது பதிப்பின் 2019 கருப்பொருள்:- “Indian Ocean-An Ocean of opportunity”
ஏப்ரல் 5, 1964 அன்று முதல் தேசிய கடல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தேசிய கடல் தின விருதின் பெயர் வருணா விருது ஆகும்.
ஏப்ரல் 6 – சர்வதேச விளையாட்டு அபிவிருத்தி மற்றும் அமைதிக்கான தினம்
ஏப்ரல் 6 ம் தேதியை ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) பொதுச் சபை விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்க்கான சர்வதேச தினமாக 2013ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இது 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டுவருகிறது.
ஏப்ரல் 7 – உலக சுகாதார நாள்
1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் முதல் உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. சுகாதார நடவடிக்கைகளை அறிந்து உடல்நலப் பிரச்சினையின்றி துல்லியமாக தங்கள் பணிகளை நிறைவேற்ற மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
2019 உலக சுகாதார நாள் கருப்பொருள்:- “Universal health coverage: everyone, everywhere”
உலக செய்திகள்
FIFA நிர்வாகி குழு முதல் இந்தியர்
அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎஃப்எஃப்) தலைவர், பிரபுல் படேல், FIFA நிர்வாகிகள் குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியரானார். படேல் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் (AFC) மூத்த துணைத் தலைவராக பணியாற்றுகிறார்.
உலக வங்கி தலைவர்
டேவிட் மால்பாசை உலக வங்கி தலைவராக அமெரிக்க கருவூலம் அறிவித்துள்ளது.உலக வங்கியின் 13 வது ஜனாதிபதியாக மால்பாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கியின் தலைவராக 63 வயதான டேவிட் மால்பாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது ட்ரம்ப் அமைச்சரவையில் நிதித்துறை துணை அமைச்சராகவும், சர்வதேச கருவூல விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பையும் வகிக்கிறார். இவர் உலக வங்கியின் 13-வது தலைவராக ஏப்ரல் 9-ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
மறு சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி (ஐபிஆர்டி) மற்றும் சர்வதேச மேம்பாட்டு கூட்டமைப்பு (ஐடிஏ) ஆகியவற்றின் இயக்குநர் குழுவுக்கும் உலக வங்கித் தலைவரே தலைவராக இருப்பார்.
இதுவரையில் உலக வங்கியின் தலைவராக பொறுப்பு வகித்த அனைவருமே அமெரிக்கர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாடுகள்
இந்தியா – நேபாளம் முதலீட்டு உச்சி மாநாட்டு
நேபாளத்தின் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (FNCCI) மே மாதம் காத்மாண்டுவில் நேபாள முதலீட்டு உச்சிமாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
உலக ஹோமியோபதி தினத்தின் சர்வதேச மாநாடு
உலக ஹோமியோபதி தினத்தையொட்டி புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2019 ஏப்ரல் 9,10 ஆகிய இரண்டு நாட்கள் உலக ஹோமியோபதி தினத்தின் சர்வதேச மாநாட்டை ஹோமியோபதியின் மத்திய ஆராய்ச்சி மையம் (CCRH) ஏற்பாடு செய்துள்ளது.
ஹோமியோபதி முறையின் நிறுவனரான டாக்டர் கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிச் சாமுவேல் ஹன்மான்மன் பிறந்த நாள் நினைவாக உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
தரவரிசைகள்
ஃபிஃபா தரவரிசை
கால்பந்து அரங்கில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) வெளியிட்டது. இதில் இந்திய அணி 103வது இடத்தில் இருந்து 101வது இடத்துக்கு முன்னேறியது. இந்த ஆண்டு துவக்கத்தில் அபுதாபியில் நடந்த ஆசிய கோப்பை லீக் சுற்றில் தாய்லாந்தை வென்ற இந்திய அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), பக்ரைன் அணிகளிடம் வீழ்ந்தது.
1வது இடம் – பெல்ஜியம்
2வது இடம் – பிரான்ஸ்
3வது இடம் – பிரேசில்
4வது இடம் – இங்கிலாந்து
5வது இடம்-குரோஷியா
6வது இடம்-உருகுவே
7வது இடம்-போர்ச்சுகல்
8வது இடம்-சுவிட்சர்லாந்து
9வது இடம் -ஸ்பெயின்
10வது இடம்-டென்மார்க்
101வது இடம்-இந்தியா
4வது இடம்-குரோஷியா
இதேபோல உருகுவே அணி 6வது இடத்துக்கு முன்னேறியது. போர்ச்சுகல் அணி 7வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்த மூன்று இடங்களில் சுவிட்சர்லாந்து (8வது இடம்), ஸ்பெயின் (9வது), டென்மார்க் (10வது) அணிகள் தொடர்கின்றன.
உலக சுகாதார நாள் ஒற்றுமைக்கான மனித சங்கிலி
உலக சுகாதார அமைப்பு (WHO) உடன் இணைந்து சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் உலக சுகாதார நாள் (ஏப்ரல் 7) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒற்றுமைக்கான மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. 2019 உலக சுகாதார நாள் கருப்பொருள்: Universal Health Coverage: Everyone, Everywhere.
ஆதிச்சநல்லூர் கி.மு. 905 முதல் 696 வரையிலான காலப்பகுதி
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் கார்பன் காலக் கணிப்பின் மூலம் இந்த மாதிரிகள் கி.மு. 905 முதல் கி.மு. 696ற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொல் கைவினைப் பொருட்களின் கார்பன் காலக் கணிப்பானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா அனலடிக் பரிசோதனை ஆய்வகத்தில் நடைபெற்றது.
ஒப்பந்தங்கள்
மாஸ்கோ பங்குசந்தையுடன் பிஎஸ்இ, இந்தியா INX ஒப்பந்தம்
BSE மற்றும் இந்திய சர்வதேச பங்குச்சந்தை (INX) மாஸ்கோ பங்குசந்தை (MOEX) உடன் முதலீட்டாளர் சமூகத்தையும் நிறுவனங்களையும் இணைக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மாஸ்கோ பங்குச்சந்தையுடன் ஒப்பந்தமிடும் முதல் இந்தியப் பங்குசந்தை BSE & INX, ஆகும்.
இந்திய கடற்படை CSIR உடன் ஒப்பந்தம்
இந்திய கடற்படை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), இந்திய கடற்படையுடன் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பாதுகாப்பு நிகழ்வுகள்
இராணுவ தளபதிகளின் மாநாடு
ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இராணுவத் தளபதிகளின் மாநாடு புது தில்லியில் ஏப்ரல் 8 ஆம் தேதி துவங்கும். இந்த மாநாட்டை இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் தலைமை தாங்கவுள்ளார்.
பாதுகாப்பு இயக்கவியலின் மேலாண்மை, எதிர்கால பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைத்தல் மற்றும் சாத்தியமான எதிரிகளை எதிர்த்து போர் முனையை அதிகரிப்பது போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் வடக்கு எல்லையுடன் சேர்ந்து திறன் மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பு மேம்பாடு, மூலோபாய இரயில் பாதைகளை ஆய்வு செய்தல், வரையறுக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை மேம்படுத்துவது,வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் நலன்புரிகளில் சிக்கலான குறைபாடுகளை சரி செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
இந்த மாநாடு இந்திய இராணுவத்தின் திட்டமிடல் மற்றும் செயல்திறனுக்கான ஒரு முக்கிய நிகழ்வு ஆகும்.
இந்திய இராணுவம் ஏகே -203 ரக துப்பாக்கி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கட்டுப்படுத்த மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.-203 ரக தாக்குதல் துப்பாக்கிகளை பயன்படுத்த இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது. ஏ.கே.-203 தாக்குதல் துப்பாக்கி ஆயுதப்படை தொழிற்சாலை வாரியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் உள்ள கூட்டு முயற்சியில் உத்தரபிரதேசத்தின் அமேதி உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும்.
விருதுகள்
இந்தியா மல்டி ஸ்போர்ட் விருது
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற பி.வி. சிந்து மற்றும் ஈட்டி எரித்தல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா 2018 ஆம் ஆண்டு ஈஎஸ்பிஎன் இந்தியா மல்டி ஸ்போர்ட்ஸ் விருதுக்கு சிறந்த பெண் மற்றும் ஆண் விளையாட்டு வீராங்கனை, வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம் சாய்னா நேவால் ‘கம்பேக் ஆப் தி இயர்’ விருது பெற்றார்.
அறிவியல் செய்திகள்
நச்சுத்தன்மை நறுமணமுள்ள கலவை பிரிக்கும் யுக்தி கண்டுபிடிப்பு
பெட்ரோலியம் பொருட்களால் மாசுபட்ட மண்ணிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பாக்டீரியத்தின் தனித்துவமான திரிபுகளைப் பயன்படுத்தி, ஐ.ஐ.டி பம்பாய் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுசூழல் நச்சுத்தன்மையிலிருந்து, பென்சோயேட் (சோடியம் பென்சோயேட் உணவுப் பாதுகாப்ப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது), பென்சில் ஆல்கஹால் மற்றும் நப்தலைன் போன்றவற்றை பிரித்தெடுக்கும் யுக்தியை கண்டுபிடித்துள்ளனர்.
பிரம்மோஸ் ஏவுகணை வீச்சு
ரஷ்யா மற்றும் இந்தியா கூட்டு சேர்ந்து தயாரிக்கப்படும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை வீச்சு வரம்பை 400 கிமீ இருந்து 500 கி.மீ. (311 மைல்கள்) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Download Daily Current Affairs [2019- April – 5 to 8]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

