Daily Current Affairs – 2019 April 9 to 12 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

(April 2019 – 9 to 12)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  9 to 12 April 2019

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

கிங் கோப்பை ஜூன் 2019

இந்திய கால்பந்து அணி ஜூன் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.

குண்டு எறிதலில் ஆசிய சாம்பியன் மன்பிரீத் கவு

தேசிய ஊக்க மருந்து ஏஜென்சி ஒழுங்குமுறை குழு, ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக குண்டு எறிதலில் ஆசிய சாம்பியனான மன்பிரீத் கவுருக்கு நான்கு வருடம் விளையாட தடை விதித்துள்ளது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி

கோலாலம்பூரில் நடந்த இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி மலேசியாவை 4-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.

பெல்லோஷிப் விருது

ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் தீபா மாலிக் “ஊக்கப்படுத்தும் சாதனைகள்” என்னும் அங்கீகாரம் பெற்ற நியூசிலாந்து பிரதம மந்திரி சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றார்.

48 வயதான தீபா, 2016 ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் குண்டு எரித்தலில் வெள்ளி பதக்கம் வென்றார்.

விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் 2019

விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் 2019ஆம் ஆண்டு பதிப்பின் “ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதுகளை” இந்தியாவின் விராட் கோலி, ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளனர்.

5 சிறந்த வீரர்களைத் விஸ்டன் கிரிக்கெட்டர்ஸ் அல்மனாக் தேர்வு செய்துள்ளது.  இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்து வீராங்கனை டாமே பியாமவுன்ட், இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், சாம் கரண், ரோரி பர்ன்ஸ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விராட் கோலி தவிர்த்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனாவும் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2019-ம் ஆண்டின் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2016-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 4-வது ஆண்டாக விராட் கோலி விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதைப் பெற்று வருகிறார். 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை பெற்ற முதல் இந்திய வீரர் எனும் பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.

இதுவரை 3 முறைக்கு மேல் விஸ்டன் விருதுகளை டான் பிராட்மேன்(10முறை), ஜேக் ஹாப்ஸ்(8 முறை) மட்டுமே வென்றுள்ளனர். இந்த இரு வீரர்களுக்குப்பின் கோலி இப்போது வென்றுள்ளார்.

 

உலக செய்திகள்

 

மாசு கட்டுப்பாட்டு கட்டணம் வசூலிக்கும் முதல் நகரம்

காற்று மாசுபடுவதை தடுக்க, உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நகரத்தின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும் எனவும் அப்படி இல்லாவிட்டால் அன்றாடம் அபராதம் விதிக்கப்படும் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அல்ட்ரா குறைந்த உமிழ்வு மண்டலம் (ULEZ) என்னும் திட்டத்தை செயல்படுத்தும் முதல் நகரம் லண்டன் ஆகும். இங்கு உமிழ்வு தரங்களை பூர்த்தி செய்யாத பழைய வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் நாட்டில் ‘கென்னெசெட்’ என்றழைக்கப்படும் 120 இருக்கைகள் கொண்ட பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

இதில் இஸ்ரேலின் 69 வயதுடைய பெஞ்சமின் நேதன்யாகு 5-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2009 முதல் தொடர்ந்து நாட்டை வழிநடத்தி வருகிறார், இவரின் ஆட்சி காலம் 13 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்திற்கு தடை

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை திரையிட தடை விதித்துள்ளது. நடிகர் விவேக் ஓபராய் பிரதமர் திரு நரேந்திர மோடி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சி

இந்தியாவின் மக்கள்தொகை வளர்ச்சியின் வருடாந்திர சராசரி 1.2% வீதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது: ஐநா அறிக்கை

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.

மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அவை வருமாறு:-

*1969-ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை 541.5 மில்லியனாக இருந்தது. 1994-ல் இது, 942.2 மில்லியனாக அதிகரித்தது. தற்போது (2019) இந்திய மக்கள் தொகை 136 கோடி ஆகும்.

* 2010-2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.

* சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. 1994-ல் இது 123 கோடியாக இருந்தது. 1969-ல் 803.6 மில்லியனாக இருந்தது.

2010-2019 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்து வந்துள்ளது.

கறுப்பு துளையின் முதல் படம் வெளியீடு

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் வானவியல் வல்லுநர்கள் கருப்பு துளை முதல் புகைப்படத்தை வெளியிட்டனர். கறுப்பு துளை என்பது பிரபஞ்சம் முழுவதும் சிதறி, பரவியிருக்கும் விண்மீன்களில் ஒன்றாகும் மற்றும் இது துல்லியமற்ற புவி ஈர்ப்பு கேடயங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜாலியன்வாலா பாக் சம்பவ நூற்றாண்டு நினைவு புகைப்பட கண்காட்சி

ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டின் நினைவுதினத்தின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிராந்திய அவுட்ரீச் பணியகம், சண்டிகரில், ஏப்ரல் 11-13, 2019 வரை மூன்று நாள் புகைப்பட கண்காட்சியை அமைத்துள்ளது. ஜாலியன்வாலா பாக் கண்காட்சிக்கு சுதந்திர போராட்டத்தின் புகைப்பட கண்காட்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

பொருளாதார நிகழ்வுகள்

 

உலக வங்கி அறிக்கை  2018 

வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள்  முதலிடம் பிடித்துள்ளதாக உலக வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் 79 பில்லியன் டொலர் பணம் அனுப்பி உள்ளனர்.

இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2வது இடத்தில் உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டொலர்கள் அனுப்பி உள்ளனர்.

மெக்சிகோ 36 பில்லியன் டொலர்களுடன் 3வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் டொலர்களுடன் 4வது இடத்திலும், எகிப்து 29 பில்லியன் டொலர்களுடன் 5வது இடத்திலும் உள்ளன.

 

பாதுகாப்பு நிகழ்வுகள்

 

Bofors பீரங்கி துப்பாக்கி (தனுஷ்)

இந்திய இராணுவ படைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக, தனுஷ் பீரங்கி இன்று இந்திய இராணுவத்தில் அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்படுகிறது.

உள்நாட்டிலேயே முதல் முறையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தனுஷ் 155 மிமீ / 45 காலிபர் டோவ்டு கன் தொழில்நுட்ப பீரங்கி இந்திய இராணுவத்திடம்  ஒப்படைக்கப்படுகிறது.இது மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது.

தி ஆர்டின்ஸ் தொழிற்சாலை வாரியம் (OFB) ஆறு Bofors பீரங்கித் துப்பாக்கிகளின் முதல் தொகுதி இராணுவத்திற்கு அளித்தது. 1980 களில் சேகரிக்கப்பட்ட ஸ்வீடிஷ் போஃபர்ஸ் துப்பாக்கியின் தனித்தன்மையான துப்பாக்கியே தனுஷ் ஆகும்.

கடற்படை முதலீட்டு விழா 2019

2019 ம் ஆண்டிற்க்கான கடற்படை முதலீட்டு விழா மும்பையின் மேற்கு கடற்படையின் (WNC) ஹெலிகாப்டர் கப்பல் தளமான ஐஎன்எஸ் ஷிக்ராவில் நடைபெற்றது. விழாவில் கடற்படை டாக்யார்ட் (வைசாக்) மற்றும் ஐஎன்எஸ் துவார்கா ஆகியவையின் பசுமை சுற்றுச்சூழல் முயற்சிகளுக்காக ‘சிறந்த பசுமை நடைமுறைக்கான சிஎன்எஸ் டிராபி’ வழங்கப்பட்டது.

இந்தோ-சிங்கப்பூர் கூட்டு பயிற்சி

12 வது இந்தியா – சிங்கப்பூர் கூட்டு இராணுவ பயிற்சி ஏப்ரல் 11, 2019 அன்று பாபினா இராணுவ நிலையத்தில் நிறைவுற்றது.

 

ஒப்பந்தங்கள்

 

SBI உடன் PAISALO கூட்டுறவு கடன் ஒப்பந்தம்

PAISALO, டிஜிட்டல் லிமிடெட், விவசாயம், MSME பிரிவு மற்றும் சிறிய வியாபாரங்களை அதிகரிக்க ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் தனது முதல் கூட்டுறவு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 

விருதுகள்

சரஸ்வதி சம்மன் 2018

தெலுங்கு கவிஞரான சிவ ரெட்டி என்பவரின் “பகாகி ஒட்டிகிலிட்டி” என்ற தலைப்பு கொண்ட கவிதையின் தொகுப்பிற்காக 2018 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற சரஸ்வதி சம்மான் விருதுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த விருதானது ரூ.15 இலட்சம் நிதியையும் ஒரு சான்றிதழையும் ஒரு பதக்கத்தையும் கொண்டுள்ளது.

இந்த விருதானது கே.கே. பிர்லா அறக்கட்டளையினால் 1991 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

இந்த விருதானது எந்தவொரு இந்திய மொழியிலும் கடந்த 10 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தலைசிறந்த இலக்கியப் பணிக்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

சரஸ்வதி சம்மான் விருதினைப் பற்றி

சரஸ்வதி சம்மான் விருது ஆண்டுதோறும் கடைசி பத்தாண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த கவிதைகள் அல்லது கவிதை இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படுகிறது .

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் எட்டில் (Schedule VIII) குறிப்பிடப்பட்டிருக்கும் இருபத்து இரண்டு மொழிகளில் எழுதப்படும் கவிதை இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கல்வியின் கடவுளான சரஸ்வதியின் பெயரால் வழங்கப்படும் இவ்விருது இலக்கிய உலகில் மிக உயரியதாக கருதப்படுகிறது.

சரஸ்வதி சம்மன் விருது கே.கே.பிர்லா அமைப்பால் 1991 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

  1. பிர்லா அறக்கட்டளையானது ஹிந்தி எழுத்தாளர்களுக்கு வியாஸ் சம்மான் விருதினையும் (Vyas Samman), ராஜஸ்தானி எழுத்தாளர்கள் மற்றும் ஹிந்தி எழுத்தாளர்களுக்கு பிஹாரி புரஸ்கார் விருதினையும் (Bihari Puraskar) வழங்குகின்றது.

புத்தகம் 

 

டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் புத்தக தொகுப்பு

பிரசார் பாரதி தலைவர், சூர்யா பிரகாஷ் புது தில்லியில், ‘டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உரைகள்’ என்ற கையேட்டை வெளியிட்டார்.

 

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி(ADIBF 2019 )

இந்த மாதம் 24 முதல் 30 வரை நடைபெறும் அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில், ADIBF 2019 இல், இந்தியாவை கெளரவ விருந்தினராக யுஏஇ அறிவித்துள்ளது. இந்த கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் வளமான பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி அதன் நம்பகத்தன்மை நவீனத்துவம்,கலாச்சார மற்றும் இலக்கிய வெளியீட்டை வெளிப்படுத்துகிறது.


Download Daily Current Affairs [2019- April – 9 to 12]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us