Daily Current Affairs – 2019 April 13 to 16 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

(April 2019 – 13 to 16)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  13 to 16 April 2019

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

சிங்கப்பூர்  ஓபன் 2019

சிங்கப்பூர் ஓபன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி பேட்மிட்டன் போட்டியில் உலக சாம்பியனான ஜப்பானின் நோஸ்மி ஒகுஹாரா, இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தேர்வானார். இவர் இறுதி போட்டியில் உலகின் No .1 வீராங்கனையான சீன தைபேயின் தை சூ யிங்கை எதிர்கொள்ள உள்ளார்.

டைகர் உட்ஸ் Master பட்டம்

அமெரிக்க கோல்ஃப் வீரரான டைகர் வுட்ஸ் ஐந்தாவது முறையாக Master பட்டத்தை வென்றுள்ளார். இது இவரின் 81 வது PGA சுற்றுப்பயண வெற்றியாகும்.

ஹீரோ சூப்பர் கோப்பை 2019

ஹீரோ சூப்பர் கோப்பை இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் FC கோவா சென்னையின் FC அணியை தோற்கடித்தது, 2019 ஆண்டிற்க்கான சூப்பர் கோப்பையை வென்றது.

சிங்கப்பூர் ஓபன்

ஆண்கள் இறுதிப்போட்டியில் ஜப்பானின் கெண்டோ மோமோட்டா இந்தோனேசியாவின் அன்டனி சினிகா ஜின்டிங்கை வென்று சிங்கப்பூர் ஓபன் 2019 பட்டத்தை வென்றார் .

பெண்கள் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நோஸோமி ஒகஹாராவை தோற்கடித்து தை ஸு யிங் தனது இரண்டாவது சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றார்.

சீன கிராண்ட் பிரிக்ஸ்

லூயிஸ் ஹாமில்டன் ஃபார்முலா ஒன் 1,000 வது உலக சாம்பியன்ஷிப் பந்தயமான சீன கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த தரவரிசையில் முன்னணி பெற்றுள்ளார்.

உலகக் கோப்பை 2019க்கான இந்திய அணி அறிவிப்பு

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், விஜய் ஷங்கர், எம்.எஸ். தோனி (WK), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யூஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷமி. மே 30 முதல் ஜூலை 14 வரை இங்கிலாந்து வேல்ஸில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதன் மூலம் தோனி தனது 4வது உலக கோப்பை போட்டியில் விளையாடவுள்ளார்.

 

விண்வெளி அறிவியல்

 

நாசாவின் ‘இரட்டையர் ஆய்வு’

நாசாவில் உள்ள விண்வெளி வீரர்களில் ஒருவரான ஸ்கேட் கெல்லி என்பவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று சுமார் ஒரு வருடம் ஆய்வு செய்து பூமிக்கு திரும்பியுள்ளார்.ஸ்காட் மற்றும் மார்க் ஆகிய இருவரும் நாசாவின் முதல் இரட்டையர்கள் என்ற பெருமை பெற்றனர்.

பூமியில் தனது இரட்டைச் சகோதரர் இருந்தபோது விண்வெளியில் ஒரு வருடம் கழித்த யுஎஸ் விண்வெளி வீரர் மனித உடலில் விண்வெளி பயண விளைவுகள் குறித்த நுண்ணறிவுகளை நாசா ‘இரட்டையர் ஆய்வு’ என்னும் பெயரில் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வருடம் செலவிட்டார், அதே நேரத்தில் அவரது இரட்டை சகோதரரான மார்க் கெல்லி (முன்னாள் நாசா விண்வெளி வீரர்), பூமியில் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விருதுகள்

 

இந்திய பிரதமருக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த குடிமகன் விருது

இந்தியா – ரஷ்யா இடையிலான நட்புறவை மேம்படுத்திய  இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் மிகவும் உயர்ந்த குடிமகனுக்கான விருது வழங்கப்படுகிறது.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவின் உயர்ந்த குடிமகன் விருதை இருதரப்பு உறவுகள் பற்றிய முயற்சிகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விருதின் பெயர்  “செயின்ட் ஆன்ட்ரூ அப்போஸ்தலர்” “Order of the Holy Apostle Andrew the First,” ஆகும்.

பிரதமர் மோடிக்கு, வளைகுடா நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின், உயர்ந்த குடிமகனுக்கான ஜாயத் விருது வழங்கப்படுவதாக, அந்நாட்டு அரசு அறிவித்தது.

செயின்ட் ஆன்ட்ரூ அப்போஸ்தலர் விருது குறிப்பு:-

இயேசுநாதரின் திருத்துாதர்களில் ஒருவராக கருதப்படும், செயின்ட் ஆன்ட்ரூ பெயரால், 17ம் நுாற்றாண்டில், அப்போதைய, ரஷ்ய மன்னர் டிசார் பீட்டர் என்பவரால், ‘செயின்ட் ஆன்ட்ரூ அப்போஸ்தலர்’ விருது உருவாக்கப்பட்டது.

நாட்டுக்கு மிகச்சிறப்பான சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில், ரஷ்யா இந்த விருதை வழங்குகிறது.சிறிது காலம் நிறுத்தப்பட்ட இந்த விருது, 1998 முதல், மீண்டும் வழங்கப்படுகிறது.

நாசா விருது

அல்பமாவில் உள்ள அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் மையம்( NASA )நடத்திய ஹியூமன் எக்ஸ்ப்ளோரேஷன் ரோவர் சேலஞ் (Human Exploration Rover Challenge) போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த மாணவ குழு, நான்கு விருதுகளை வென்றுள்ளது.

உத்தரபிரதேசத்தின் கஜியாபாத்தில் உள்ள KIET இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனத்தின் குழு “AIAA நீல் ஆம்ஸ்ட்ராங் சிறந்த வடிவமைப்பு விருது” ஐ வென்றுள்ளது.

மகாராஷ்டிரா மும்பையில் உள்ள முகேஷ் படேல் ஸ்கூல் ஆப் டெக்னாலஜி மேனேஜ்மென்ட் மற்றும் பொறியியல், “ஃபிராங்க் ஜோ செக்டோன் மெமோரியல் பிட் க்ரூ விருது” ஐ வென்றுள்ளது.

முகேஷ் படேல் ஸ்கூல், நாசாவின் அமெரிக்க விண்வெளி மற்றும் ராக்கெட் மையம் நடத்திய போட்டியில் சிஸ்டம் சேப்டி சேலஞ் விருதை வென்றுள்ளது.

பஞ்சாப், பக்வராவில் உள்ள லவ்லி ப்ராஜெக்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு குழு, “STEM Engagement விருது” ஐ வென்றுள்ளது.

புலிட்சர் பரிசு 2019

நியூயார்க் நகரில் புலிட்சர் விருதுகள் குறித்த அறிவிப்பை நிர்வாக அதிகாரி டானா கேண்டி அறிவித்தார்.

அரீத்தா பிராங்க்ளின் அமெரிக்க இசை மற்றும் கலாச்சாரம் பிரிவில் அவரது பங்களிப்புக்காக “கெளரவமான புலிட்சர் பரிசு பெற்றுள்ளார்.

சிறந்த விமர்சனத்துக்காக வாஷிங்டன் போஸ்ட்டின் கார்லோஸ் லொசோடா புலிட்சர் விருது வென்றுள்ளார்.

ஏமன் உள்நாட்டுப் போர் குறித்த சர்வதேச செய்திக்காக அசோஸியேடட் ப்ரஸ் பத்திரிகையாளர்கள் மாட்-அல்-ஜிர்கி (வீடியோ), மேகி மைக்கேல் (நிருபர்), நாரிமன் (புகைப்படம்) ஆகிய மூவருக்கும் சர்வதேச செய்தி பிரிவின் கீழ் புலிட்சர் விருது வென்றுள்ளனர்.

சர்வதேச செய்திப் பிரிவின் கீழ் கடந்த 2018-ம் ஆண்டு மியான்மரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் க்யா சோ ஊ மற்றும் வா லோன்,கமென்ட்ரி பிரிவில் டோனி மெசேஞ்சருக்கு ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டது.

வரலாறு பிரிவில் டேவிட் ப்ளைட், புனைவு கதைக்காக ரிச்சர்டு பவர்ஸ், வாழ்கை வரலாறு பிரிவில் ஜெஃப்ரி ஸ்டீவர்ட், ஃபிக்‌ஷன் அல்லாத பிரிவில் எலிசா கிரிஸ்வேர்ல்டு, கவிதைக்காக ஃபாரெஸ்ட் கேண்டர் ஆகியோருக்கு புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

பாதுகாப்பு நிகழ்வுகள்

 

இந்திய விமானப்படை மராத்தான்

இந்திய விமானப்படையின் (MIAF) புகழ்பெற்ற பறக்கும் கிராஸ் (DFC) என்று புகழ்பெற்ற மார்ஷல் அர்ஜன் சிங்கின் 100 வது பிறந்த நாளின் அடையாளமாக 14 ஏப்ரல் 2019 அன்று பகுதி மராத்தான் டெல்லியில் நடத்தப்பட்டது.

உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் சோதனை

பிரபல கணிப்பொறி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ கம்பெனியை 1975- ஆண்டில் பில் கேட்ஸ் உடன் இணைந்து கூட்டாக தொடங்கியவர் பால் ஆல்லென். 2011-ம் ஆண்டில் ‘ஸ்டிராட்டோலான்ச்’ என்ற புதிய நிறுவனத்தை பால் ஆல்லென் தொடங்கினார்.

கலிபோர்னியாவில் உள்ள மோஜவே பாலைவனத்தில் உலகின் மிகப்பெரிய விமானம், முதன்முறையாக சோதனை செய்யப்பட்டது. இது Stratolaunch Systems Corp. ஆல் உருவாக்கப்பட்ட கார்பன் கலப்பு விமான வகையின் முதல் விமானம் ஆகும். உலகின் மிகப்பெரிய விமானம் வெள்ளை வானூர்தி ராக் என்றழைக்கப்படுகிறது, இரண்டு விமானங்களை ஒன்றாக இணைத்துள்ளது போன்ற தோற்றத்தில் உள்ள இந்த ஸ்ட்ராடோலான்ச் விமானம்,  385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம் சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும்.அமெரிக்க கால்பந்து மைதானத்திற்கு இணையான நீலம் மற்றும் அகலத்தைக் கொண்ட அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் 2011-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு பறந்துள்ளது.

சோதனை ஒட்டத்தின் போது ஸ்ட்ராடோலான்ச் விமானம் அதிகபட்சமாக 17,000 அடி உயரம் வரை பறந்துள்ளது. ஒரு மணி நேரத்தில் 302.4 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்துள்ளது.

ஸ்ட்ராடோலான்ச் விமானத்தில் மொத்தம் 6 எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறு செயற்கைக்கோள்களை இந்த விமானம் மூலமாகக் கொண்டு சென்று விண்வெளிக்கு ஏவலாம் .

பால் ஜி ஆல்லென் கடந்த 15-10-2018 அன்று தனது 65-வது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்

 

இந்தியா- பொலிவியா இடையே ஒப்பந்தம்

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா- பொலிவியா இடையே மண்ணியல் மற்றும் தாது வளங்கள் தொடர்பான துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2019ல் பொலிவியாவில் கையெழுத்தானது.

இந்தியா – கம்போடியா இடையே ஒப்பந்தம்

பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – கம்போடியா இடையே தகவல் தொலைத் தொடர்புத்துறையில் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2019ல் கம்போடியாவில் கையெழுத்தானது.

இந்தியா – டென்மார்க் இடையே ஒப்பந்தம்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கும், டென்மார்க் அரசின் எரிசக்தி மற்றும் பருவநிலை துறைக்கும் இடையே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கடலோர காற்றாலை மின்சக்தித் துறைகளில் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியா மற்றும் கொரியா குடியரசு ஒப்பந்தம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய  அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – கொரியா குடியரசு இடையே பிப்ரவரி 2019ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையும், கொரிய குடியரசும் இணைந்து,  “கொரியாவின் ராணி ஹூ ஹேவாங்-ஓக்” என்ற தலைப்பிலான அஞ்சல் தலை ஒன்றை வெளியிட பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளன.இந்த கூட்டு அஞ்சல் தலைகள், 2019 இறுதியில்,  இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் தேதியில் வெளியிடப்படும்.

கரு :- “Queen Hur Hwang-ok of Korea”

இந்தியா மற்றும் பிரேசில் இடையே ஒப்பந்தம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – பிரேசில் இடையே மே 2018-ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா – பிரேசில் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் கையெழுத்திடப்பட்டுள்ளது. உயிரி மருத்துவம் மற்றும் சுகாதாரம், குறிப்பாக, உயிரி தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு, வேளாண்மை, உயிரி எரிபொருள் மற்றும் உயிரி எரிசக்தி, நானோ தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும் இந்த ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

GSLV யின் 4வது கட்டம்  அமைச்சரவை ஒப்புதல்

2021-2024 காலப்பகுதியில் ஐந்து ஜி.எஸ்.எல்.வி விமானங்களை உள்ளடக்கிய ஜியோசிச்க்ரோனஸ் சேட்டிலைட் மார்க்கெட்டிங் பயிற்சி திட்டத்தில் நான்காவது கட்டத்தை தொடர மத்திய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

புதிய யூரியா கொள்கை -2015க்கு கால நீட்டிப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), புதிய யூரியா கொள்கைக் காலத்தை நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.எரிவாயு மூலம் இயங்கும் யூரியா ஆலைகளுக்கான புதிய யூரியா கொள்கை 2015-இன் காலத்தை நீட்டிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யூரியா அலகுக்குக்கான புதிய யூரியா கொள்கை -2015ஐ 2019 ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து கால நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.

நியமனம்

 

பெல்ஜியத்திற்கான கெளரவ தூதர்

டாக்டர் ரெட்டிஸ் ஆய்வுக்கூடத்தின் இணை தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.வி. பிரசாத்தை பெல்ஜியத்திற்கான கெளரவ தூதராக ஹைதராபாத்தில் நியமனம் செய்துள்ளது.

 


Download Daily Current Affairs [2019- April – 13 to 16]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading