Daily Current Affairs – 2019 April 21 to 25 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

(April 2019 – 21 to 25)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  21 to 25 April 2019

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

மான்டே  கார்லோ டென்னிஸ்

  • மொனாக்கோவில் நடைபெற்று வந்த மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் பேபியோ போக்னி சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று 13-ம் நிலை வீரரான இத்தாலியின் பேபியோ போக்னி, 48-ம் நிலை வீரரான செர்பியாவின் டசன் லஜோவிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் பேபியோ போக்னி 6-3, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
  • இதன் மூலம் மொனாக்கோ டென்னிஸ் போட்டியில் சுமார் 51 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்ற முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை பெற்றார் பேபியோ போக்னி. கடைசியாக 1968-ம் ஆண்டு அந்த நாட்டைச் சேர்ந்த நிக்கோலா பீட்டர்ஏஞ்சலி பட்டம் வென்றிருந்தார்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2019

  • கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
  • 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை அன்னுராணி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
  • 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதரி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • ஆண்களுக்கன டிரிபிள் ஜம்ப் போட்டியில், சித்திரவேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆசிய பளுதூக்கும் போட்டி

  • ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போவில் நடைபெறுகிறது. இந்தியாவின் லால்ரின்னுன்கா ஜெரேமி  புதிய உலக இளைஞர் மற்றும் ஆசிய சாதனையைப் படைத்தார்.
  • மிசோரத்தை சேர்ந்த 16 வயதே ஆன லால்ரின்னுன்கா ஆடவர் 67 கிலோ எடைப்பிரிவில் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 297 கிலோ (134+163 கிலோ) தூக்கி புதிய சாதனையைப் படைத்தார்.
  • ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜிலி தலபெஹெரா பெண்களுக்கான 45 கிலோ பிரிவில்  2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்ற (மொத்தம் 167 கிலோ) இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கி வைத்தார்.
  • பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் சீனாவின் ஹோ ஸிஹூய் தங்கப்பதக்கமும் (208 கிலோ), தென்கொரியாவின் ரி சாங்-கம் (200 கிலோ) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

சந்தோஷ் டிராபி 2019

  • பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் குரு நானக் ஸ்டேடியத்தில் ,சந்தோஷ் டிராபி தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் 73வது சீசன் நடந்தது. இதன் பைனலில் பஞ்சாப், சர்வீசஸ் அணிகள் மோதின.
  • சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரில் சர்வீசஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • ஆட்டநேர முடிவில் சர்வீசஸ் அணி , பிகாஷ் தபா ஒரு கோலடித்ததால்  1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 6வது முறையாக கோப்பை வென்றது. பஞ்சாப் அணி இதற்கு முன், 1960–61, 2011–12, 2012–13, 2014–15, 2015–16 சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஒன்பதாவது முறையாக கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த பஞ்சாப் அணி, 8வது முறையாக 2வது இடம் பிடித்தது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி

  • 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.
  • இதில்   மகளிருக்கான  800 மீட்டர் ஒட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் இந்தியாவில் தமிழ்நாட்டை சார்ந்த  கோமதி மாரிமுத்து பந்தய இலக்கை 2 நிமிடம் 2.70 விநாடிகளில் கடந்தார்.ஆசிய தடகள சாம்பியன்ஷிப்  2019-ல் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமை கோமதி மாரிமுத்து பெற்றார்.
  • மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் எம்.பி.பூவம்மா, மகளிர் 5000 மீட்டர் ஓட்டத்தில் பருல் சவுதாரி, ஆண்கள் 10000 மீட்டர் ஓட்டத்தில் கவித் முரளி குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
  • ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், 100 மீட்டர்தடை ஓட்டம் உள்பட 7 பிரிவுகளை உள்ளடக்கிய ஹெப்டத்லானில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் (SwapnaBarmanமொத்தம் 5,993 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
  • உஸ்பெகிஸ்தான் வீராங்கனை எகடெரினா வோர்னினா 6,198 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் பெற்றார். மேற்கு வங்காளத்தை சேர்ந்த 22 வயதான ஸ்வப்னா பர்மன் இரண்டு கால்களிலும் தலா 6 விரல்களை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை பி.யூ.சித்ரா 4 நிமிடம் 14.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
  • இதன் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கத்தை (3 நிமிடம் 43.18 வினாடி) கைப்பற்றினார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23.24 வினாடிகளில் 3-வதாக வந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டம் இரண்டிலும் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதில் ஆண்கள் அணியில் இடம் பெற்ற 4 பேரில் தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவும் ஒருவர்

குண்டு எறிதல்

ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீரர் தேஜிந்தர் பால்சிங் 20.22 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.  

ஈட்டி எறிதல்

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் 86.23 மீட்டர் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

மகளிர் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி 60.22 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 

ஹர்டில்ஸ் போட்டி

ஜபிர் மடரி பல்லியாலில் மற்றும் சரிதா கயக்வத் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 400 மீட்டர் ஹர்டில்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

ஸ்டீபிள்சேஸ் பிரிவு

ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் அவினாஷ் சப்லே 8 நிமிடம், 30.19 வ��நாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார்.

தடை ஓட்டம்

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஜபிர் மதாரியும், பெண்கள் பிரிவில் சரிதா பென்னும் வெண்கலம் பெற்றனர்.

 

முக்கியமான நாட்கள்

 

ஏப்ரல் 21 – தேசிய குடிமை பணிகள் தினம்

ஒவ்வொரு ஏப்ரல் 21ம் தேதியும் இந்தியக் குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அதிகாரிகளுக்கு சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மூன்று பிரிவுகளில் இவ்விருது வழங்கப்படுகிறது. தனி நபர், குழு மற்றும் அமைப்பு என்ற அடிப்படையில் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்திய குடிமைப் பணியின் தந்தை என அழைக்கப்படுபவர் சார்லஸ் கார்ன்வாலிஸ் ஆவார்.

ஏப்ரல் 21 -உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21 அன்று உலகப் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கத் தினமானது (WCID – World Creativity and Innovation Day) அனுசரிக்கப்படுகின்றது.

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைதல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் படைப்பாற்றல் மூலம் தீர்வு காண்பதற்கு வேண்டி மக்களுக்கு உதவுவதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று முதலாவது WCID தினமானது ஐ.நா.வினால் அனுசரிக்கப்பட்டது.

ஏப்ரல் 22 – உலக புவி தினம்

கலிபோர்னியாவின் கடற்கரையிலிருந்து 3500 க்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்ட 1969 சாண்டா பார்பரா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பேரழிவைப் பார்த்த அமெரிக்க செனட்டர் கய்லார்ட் நெல்சன் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஆதரவை நிரூபிக்க முதல் புவி தினத்தை உருவாக்கினார். 2019 தீம் : ‘Protect Our Species’

ஏப்ரல் 23 – உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் (World Book and Copyright Day )

முதன் முதலாகக் இந்த தினம் 1995-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும் என அந்த யுனெஸ்கோவின் 28-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று யுனெஸ்கோ (UNESCO) அமைப்பும், பிற சர்வதேச அமைப்புகளும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியை உலக புத்தக தலைமையகமாக (World Book Capital)  ஓர் ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கும்.

இந்த வகையில், யுனெஸ்கோ அமைப்பானது 2018-ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் (Athens)  நகரை உலக புத்தக தலைநகராக (World Book Capital for 2018) அறிவித்துள்ளது.

உலக புத்தக தலைநகரம் 2019 : ஷார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ஏப்ரல் 23 – ஆங்கில மொழி தினம் (English Language Day)

ஐ.நா.வால் ஆங்கில மொழி தினம் ஏப்ரல் 23 அன்று பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது, இது வில்லியம் ஷேக்ஸ்பியரின் இறந்த மற்றும் பிறந்த தேதி என்பது குறிப்பிடத்தக்கது. பொது தகவல் துறையால் 2010 ஆம் ஆண்டில், ஐ.நா.சபையில் உள்ள 6 அலுவலக மொழிகளுக்கும் மொழி தினம் கொண்டாட வேண்டும் என்பதன் விளைவாக இந்த ஆங்கில மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 24 – உலக ஆய்வக விலங்குகள் தினம் 2019 (World Day For Animals In Laboratories அல்லது World Lab Animal Day)

உலக அளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள் மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஐ  உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தனர்.

ஏப்ரல் 24 -தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் ( National Local Self-Government day )

  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் (தேசிய உள்ளூர் சுயநிர்ணய நாள்) இந்தியாவின் தேசிய தினமாக ஆண்டுதோறும் 24 ஏப்ரல் மாதம் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் கொண்டாடப்படுகிறது.
  • பிரதம மந்திரி மன்மோகன் சிங் முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை 2010 இல் திறந்து வைத்தார்.முதல் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 2010 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமானது 1992 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 73வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் சட்டம் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்ததை குறிப்பதற்காக கொண்டாடப்படுகின்றது.
  • இந்தியாவின் வரலாற்றில் ஓர் முக்கியமான அதிகாரப் பகிர்வு தருணத்தை (Power devolution moment) 73-வது அரசியல் சாசன திருத்தச் சட்டம் உண்டாக்கியது.
  • வேர் நிலை அளவில் அரசியல் அதிகாரத்தின் பரவலாக்கலுக்கு (decentralization of political power) இத்திருத்தச் சட்டம் உதவியது.
  • 1994 ல், அரசியலமைப்பின் 73 வது திருத்தம் காரணமாக, பஞ்சாயத்துகளின் இடங்களில் பெண்கள் 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
  • இதுவரை, ஏப்ரல் 24 ம் தேதி மகளிர் அரசியல் அதிகாரம் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஏப்ரல் 25 – தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான சர்வதேச தினம்(International Girls in ICT Day)

  • தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பெண்களுக்கான சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் 4-வது வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு ஏப்ரல் 25 அன்று இத்தினமானது கடைபிடிக்கப்பட்டது.
  • இது தகவல் தொடர்பு தொழில்நுட்பத் துறையில் வளர்ந்து வரும் ஆய்வுகள் மற்றும் வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்த இளம்பெண்கள் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் ஊக்குவித்தலை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது 2012 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தொலைத்தொடர்பு கழகத்தின் (International Telecommunication Union) உறுப்பு நாடுகளால் அனுசரிக்கப்படுகின்றது.

ஏப்ரல் 25 -உலக மலேரியா தினம்( World Malaria Day-WMD )  

  • உலக மலேரியா தினம் மே 2007 இல் உலக சுகாதார சபையின் 60 வது அமர்வு மூலம் நிறுவப்பட்டது. இதன்பிறகு உலக மலேரியா தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு உலக மலேரியா தினத்தை ஏற்று நடத்தும் நகரமாக பாரிஸ் தேர்வு செய்யப்படுள்ளது
  • இந்தத் தினமானது மலேரியாவை கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளை அங்கீகரிக்கின்றது.
  • உலக மலேரியா தினமானது 2017 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உயர்மட்ட அமைப்பான உலக சுகாதார கூடுகையின் 60-வது அமர்வில் தொடங்கப்பட்டது.
  • உலக மலேரியா தினம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக ஏப்ரல் 25 அன்று ஆப்ரிக்க மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டு வந்தது.
  • 2019 ஆம் ஆண்டின் உலக மலேரியா தினத்தின் கருத்துருவானது, “மலேரியா இல்லாமை என்னிடமிருந்துத் தொடங்கிறது” என்பதாகும்.

2019 தீம் : Zero malaria starts with me”.

நிழல் இல்லாத தினம்

  • சென்னை 25.05.19 அன்று நிழல் இல்லாத தினத்தைக் கடைபிடித்தது.
  • இந்த நாளன்று சூரியனானது மிகச்சரியாக தலைக்கு மேலாக இருக்கும்.
  • இது ஏறத்தாழ எந்தவொரு பொருளின் நிழலையும் தரையில் ஏற்படுத்தாது.
  • இது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நிகழும்
  • சூரியனின் கதிர்கள் புவிப்பரப்பின் மீது உள்ள பொருளின் மீது செங்குத்தாக விழுவதால் இது நிகழ்கிறது.
  • எனவே அந்தப் பொருளின் நிழலானது அதன் கீழ்ப்பகுதியிலேயே இருக்கும்.
  • உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் இந்நிகழ்வு நிகழ்கின்றது.
  • பொதுவாக, இந்தியாவில் இது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிகழும்.
  • கடக ரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றிற்கு உட்பட்ட இடங்களில் மட்டுமே இது  நிகழும்.
  • எனவே இந்தியாவில் கடக ரேகைக்கு அப்பால் அமைந்துள்ள டெல்லி, அலகாபாத், ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் இந்த நிழல் இல்லாத தினம் நிகழ்வதில்லை.

அறிவியல் செய்திகள்

 

புரதங்களை உயிரணுக்களில் செலுத்துதல்

பெங்களூருவின் இந்திய அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் (IISC) புரதங்களை நேரடியாக பாலூட்டிகளின் அணுவுக்குள் செலுத்தும் ஒரு நாவல் முறையை கையாண்டுள்ளனர். புரதங்கள் பெரிய மூலக்கூறுகள் ஆகையால் அவை அணுகளுக்குள் தானாக உள்ளே நுழைய முடியாது. ஆகையால் கோவிந்தசாமி முகேஷ் தலைமையிலான குழு புரதத்தில் உள்ள ஒரு ஹைட்ரஜன் அணுவுக்கு பதிலாக ஒரு அயோடின் அணுவை சேர்த்துள்ளது, இதன் மூலம் அணுக்களில் உள்ள புரதம் ஆறு மடங்கு அதிகரிக்கிறது.

 

நியமனங்கள்

 

இந்தியா ட்விட்டரின் புதிய  நிர்வாக இயக்குநராக (MD) திரு மனிஷ் மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.

மனிஷ் மஹேஷ்வரி இதற்கு முன்பு நெட்வொர்க்18 நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்துள்ளார்.

உலக செய்திகள்

 

உலகின் 50 சிறந்த தலைவர்களின் பட்டியல் – அருணாச்சலம் முருகானந்தம்

அமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்றான ஃபார்ட்டுயூன், ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.தங்கள் தயாரிப்பின் மூலம் சமூக மாற்றத்தையும், வித்தியாசத்தையும் கொண்டு வந்த வர்த்தக நிறுவனங்களை தேர்வு செய்து இந்த பட்டியலை ஃபார்ட்யூன் வெளியிடுகிறது.

அமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

கோவையை சேர்ந்த பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45-வது இடத்தை பிடித்துள்ளார். இவர், ஏழை, எளிய பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவான விலையில் நாப்கினை தயாரித்து உலகத்தையே தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இவரது இந்த கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு, பத்மஶ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

அதுமட்டுமல்லாமல், இவரது வாழ்க்கைக் கதையை இந்தி திரைப்பட இயக்குனர் ஆர்.பால்கி ‘பேட்மேன்’ என்கிற பெயரில் திரைப்படமாக‌ எடுத்துள்ளார். மேலும், இவர் நடித்துள்ள ஒரு ஆவணப்படத்திற்கு (Period. End of Sentence.) 2018-ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கரி நிலங்கள்

அண்மையில் கென்யாவில் நைரோபியில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் கூடுகையில் (United Nations Environment Assembly) கரிநிலம் மீதான முதலாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உத்வேகம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கரிநிலம் என்பது ஒருவகை சதுப்பு நிலமாகும்.

இது கரி மண் மற்றும் அதன் மேல் வளரும் சதுப்புநில வாழிடத்தைக் குறிக்கின்றது.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- April – 21 to 25]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading