Daily Current Affairs
(April 2019 – 26 to 30)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 26 to 30 April 2019
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
FINA உலக சாம்பியன்ஷிப் 2019
இந்திய நீச்சல் வீரரான எஸ்.பீ. லிக்கித் 62 வது மலேசிய ஓபன் நீச்சல் சாம்பியன்ஷிப் ஆண்கள் 100 மீட்டர் போட்டியில் தங்கம் வென்றதை அடுத்து 2019 FINA உலக சாம்பியன்ஷிப்பிற்கான ‘பி’ தகுதித் தரத்தை அடைந்துள்ளார்.
ISSF துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை 2019
பெய்ஜிங்கில் நடந்த ISSF துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை 2019ல் கலப்பு ஏர் ரைபிள் மற்றும் கலப்பு ஏர் பிஸ்டல் ஆகிய இரண்டு போட்டிகளில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் தங்கம் வென்றனர்.
10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பாக்கர் மற்றும் சௌத்ரியும், ஏர் ரைபிள் போட்டியில் அஞ்ஜூம் மௌத்கில் மற்றும் திவ்யாஞ்ச் சிங் பன்வார் ஆகியோர் தங்கம் வென்றனர்.
முதல் பெண் நடுவர்
ஆடவர் கிரிக்கெட் வரலாற்றில் நடுவர்களாக ஆண்களே இதுவரை இருந்துவந்தனர். கிளாரி போலோசாக் (31 வயது) என்னும் பெண் நடுவர் ஆண்களுக்கான ஒரு நாள் சர்வதேச போட்டியில் நமீபியா – ஒமான் அணிகள் மோதிய போட்டியில் முதல் பெண் நடுவராக பங்கேற்கவுள்ளார். 2017 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆண்கள் ஒரு நாள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் உலகின் முதல் பெண் கள நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2019
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது.
ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் தென்கொரியாவின் கிம் இங்குவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
பெண்களுக்கான 81 கிலோ பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பூஜா ராணி 3-2 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் வாங் லினாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அரியானாவை சேர்ந்த பூஜாராணி இந்த போட்டியில் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.
49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் தீபக் சிங் 2-3 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்ஜோன் மிர்ஜாமிடோவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
56 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவிந்தர் சிங் பிஸ்த் 0-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் மிராஜிஸ்பிக்கிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
75 கிலோ பிரிவில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் துர்சிபாயிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
64 கிலோ பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் 0-5 என்ற கணக்கில் நடப்பு உலக சாம்பியனான டு டானிடம் (சீனா) தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
2019 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இரண்டு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்கள் உள்ளப்பட மொத்தம் 13 பதக்கங்கள் வென்றுள்ளது.
உலக பாரா நீச்சல் போட்டி 2019
2019 உலக பாரா நீச்சல் ஆண்கள் 200m IM (SM7 வகுப்பு) பிரிவில் இந்திய நீச்சல் வீரர் நிரஞ்சன் முகுந்தன் குறைந்தபட்ச நுழைவு நேரத்தை (MET) அடைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
உலக டேபிள் டென்னிஸ் போட்டி – 2024
இந்தியாவின் டேபிள் டென்னிஸ் சம்மேளனம் (TTFI) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் 2024ம் ஆண்டிற்கான போட்டியை நடத்த விண்ணப்பித்துள்ளது. இதற்கு முன்பு 1987ல் இந்தியா ஒரு உலக சாம்பியன்ஷிப்பை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
முக்கியமான நாட்கள்
ஏப்ரல் 26 – உலக அறிவுசார் சொத்துரிமை தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 அன்று உலக அறிவுசார் சொத்துரிமை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியானது உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் (World Intellectual Property Organization WIPO) 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 அன்று உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பை அமைப்பதற்கான பிரகடனமானது நடைமுறைக்கு வந்தது.
மக்களின் அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும் இத்தினம் 2001ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருத்துருவானது, “தங்கத்தை எட்டுதல்” என்பதாகும்.
2019 கருப்பொருள்: Reach for Gold: IP and Sports.
ஏப்ரல் 26 – சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம் International Chernobyl Disaster Remembrance Day
ஏப்ரல் 26 அன்று உலகம் முழுவதும் சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஏப்ரல் 26 ஆம் தேதியை சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
இத்தினமானது 1986 ஆம் ஆண்டில் உக்ரைனின் செர்னோபில் அணுசக்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தை அனுசரிக்கின்றது.
மூன்று நாடுகளில் உள்ள ஏறத்தாழ 8.4 மில்லியன் மக்கள் இந்தக் கதிர்வீச்சினால் பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டனர்.
உலக கால்நடை தினம் World Veterinary Day – ஏப்ரல் 27
உலக கால்நடை தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 27 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகின்றது.
இது உலகளாவிய அளவில் உள்ள கால்நடை மருத்துவர்கள் செய்யும் உயிர் காக்கும் பணியினை ஊக்குவிக்கவும் முன்னிலைப்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.
உலக கால்நடை தினமானது 2000 ஆம் ஆண்டில் உலக கால்நடை சங்கத்தால் உருவாக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டிற்கான உலக கால்நடை தினத்தின் கருத்துருவானது “தடுப்பூசிகளின் மதிப்பு” என்பதாகும்.
The theme 2019 : the Value of Vaccination.
விண்வெளி அறிவியல்
செவ்வாய் கிரகத்தில் முதல் ‘நிலநடுக்கம்’ பதிவு
செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாக நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த நில அதிர்வு 2 அல்லது 2.5 ரிக்டர் அளவுகோலாக உள்ளது.
செவ்வாய் கிரகத்தின் இன்ஸ்லைட் லாண்டர் எனப்படும் நாசாவின் ரோபோ முதன்முறையாக “செவ்வாய் நிலநடுக்கத்தை” பதிவு செய்துள்ளது.இன்சைட் வாகனம் செவ்வாய் கிரகத்தில் உள்ள காற்று மற்றும் செவ்வாய் கிரகம் எப்படி உருவானது உள்ளிட்ட தகவல்களை திரட்டி அனுப்பி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதை ஆவணப்படுத்துவது முதல்முறையாகும்
ஏப்ரல் 28 – வேலையில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான உலக தினம் (World Day for Safety and Health at Work)
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28 ஆம் நாள் பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினமாக அனுசரிக்கப்படுகிறது.
பணியாளர்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய பணியிட விபத்துக்கள் மற்றும் நோய்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
இந்தத் தினமானது உலகளாவிய அளவில் தொழில்சார் விபத்துகள் மற்றும் நோய்கள் தடுப்பினை ஊக்குவிப்பதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பால்(ILO) உருவாக்கப்பட்டது.
இந்த தினமானது 2003 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பால்(ILO) அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் கருத்துருவானது “எதிர்காலத்தில் பாதுகாப்பும் சுகாதாரமும் பணியின் முக்கியப் பகுதி” என்பதாகும்.
ஏப்ரல் 29 – சர்வதேச நடன தினம் International Dance Day
1982ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனத்தின் கலாட்சார ஊக்குவிப்பின் கீழ் சர்வதேச நடன சபையால் [International Dance Council (CID)] இந்த தினம் ஏற்படுத்தப்பட்டது. இச்சபையின் மூலமாகவே உலக நடன தின ஏற்பாடுகள் 2003ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜீன்-ஜார்ஜஸ் நோவெர்ர் (1727-1810) பிறந்த தினமான ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது.இவர் நவீனக் கூட்டு நடனத்தை உருவாக்கியவராவார்.
இத்தினமானது சர்வதேச மேடை நிறுவனத்தின் (ITI – International Theatre Institute) நடனக் குழுவின் முன்னெடுப்பாகும்.1982 ஆம் ஆண்டில் இத்தினத்தின் முதலாவது கொண்டாட்டமானது நிகழ்த்தப் பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் நடனத் தினத்தின் போது தலை சிறந்த நடனப் பயிற்சியாளர் அல்லது நடனக் கலைஞரின் தகவலானது உலகம் முழுவதும் பரப்பப் படுகின்றது.அந்த நபர் அந்த ஆண்டின் தகவல் கலைஞராக தேர்ந்தெடுக்கப் படுகின்றார்.இந்தியாவைச் சேர்ந்த ஒரே தகவல் கலைஞர் இந்திய நடனக் கலைஞரான சேத்னா ஜலன் ஆவார்.1986 ஆம் ஆண்டில் இவர் நடன தினத் தகவலை உலகம் முழுவதும் அனுப்பினார்.
இத்தினமானது உலகம் முழுவதும் நடனக் கலையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 தீம் – Dance and Spirituality
பாதுகாப்பு செய்திகள்
சைபர் ஏஜென்சி
இந்தியாவில் தலைநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு மே மாதம், பாதுகாப்பு சைபர் ஏஜென்சி (டி.சி.ஏ) அமைக்கப்பட உள்ளது. மூத்த கடற்படை அலுவலக ரியர் அட்மிரல் மோஹித் குப்தா DCA இன் முதல் தலைவராக பதவி வகிக்க உள்ளார்.
விருதுகள்
PFA பிளேயர் ஆஃப் தி இயர் விருது
டச்சு நாட்டின் விர்ஜில் வான் டிஜிக் மற்றும் விவியானே மெய்டிமா ஆகியோர் 2018-19 ஆண்டிற்கான தொழில்முறை கால்பந்து வீரர்களின் சங்க விருதை பெற்றனர். ஆண்களுக்கான, ஆண்டின் சிறந்த இளம் வீரர் விருதை மான்செஸ்டர் சிட்டி அணியின் ஸ்டெர்லிங் வென்றார்.
கேல் ரத்னா விருது 2019
தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.
கேல் ரத்னா விருதுக்கு இந்திய மல்யுத்த பெடரேசன் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.
இந்திய ஹாக்கி அமைப்பு, கேல் ரத்னா விருதுக்கு வீரர்களை பரிந்துரை செய்துள்ளது.இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜீஸ், ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதேபோல, அர்ஜூனா விருதுக்கு, சிங்லென்சனா சிங் கங்குஜம், ஆகாஷ்தீப் சிங், இந்திய மகளிர் அணியை சேர்ந்த தீபிகா தாகூர் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு இந்திய தடகள சம்மேளனம் பரிந்துரை செய்துள்ளது.
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- April – 26 to 30]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

