Daily Current Affairs (02 Feb 2019 )
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 02-02-2019
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்
ஐசிசியின் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா முதலிடத்தை பிடித்தார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்து இந்த தொடரின் சதம் மற்றும் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்தார் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தானா.
நியூஸிலாந்து அணியின் கேப்டன் எமி சாட்டர்வைட் 10 இடங்கள் முன்னேறி 4-ஆவது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் எல்லிஸ் பெர்ரி 2ம் இடமும், மேக் லேனிங் 3ம் இடமும் பிடித்துள்ளனர். இந்தியாவின் மிதாலி ராஜ் 5ம் இடத்தில் உள்ளார்.
பவுலிங்கில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி 4வது இடத்திலும், பூனம் யாதவ் 8வது இடத்திலும், தீப்தி ஷர்மா 9வது இடமும் பிடித்துள்ளனர்.
ஆட்ட நாயகன் விருது
தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 ஆட்டம் கேப் டவுனில் நேற்று நடைபெற்றது.பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் ஃபீல்டிங்குக்காக தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.
டி20 ஆட்டத்தில் 4 கேட்சுகள் பிடித்து ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு மூன்று வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்கள்.
1986 சாம்பியன் டிராபி போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் – பாகிஸ்தான் இடையிலான போட்டியில் சிறந்த ஃபீல்டிங்குக்காக ஆட்ட நாயகன் விருது பெற்றார் கஸ் லோகி.
1989-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று கேட்சுகள் பிடித்த ரிச்சர்ட்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 1993-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 5 கேட்சுகள் பிடித்த ஜாண்டி ரோட்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
டேவிஸ் கோப்பை:
கொல்கத்தாவில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி தொடங்கியது.
இத்தாலிக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.
டேவிஸ் கோப்பை புதிய முறையின்படி வரும் நவம்பர் மாதம் மாட்ரிட்டில் உலக குரூப் பைனல்ஸ் போட்டி நடக்கும். இதில் தேர்வு பெறுவதற்கான தகுதி ஆட்டங்கள் உலகம் முழுவதும் பிப்ரவரி 1, 2 தேதிகளில் 12 நகரங்களில் நடக்கிறது.
மகளிர் 3-ஆவது ஒரு நாள் போட்டி
ஹாமில்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முதலிரண்டு ஒரு நாள் ஆட்டங்களையும் வென்று 2-0 என தொடரை கைப்பற்றியது. இதனால் இந்தியாவுக்கு வெற்றிக் கோப்பை வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தான தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி
இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்), ஒடிஸா மாநில அரசு இணைந்து நடத்தும் நான்கு நாடுகளுக்கான ஹீரோ தங்கக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகள் வரும் 9 முதல் 15-ஆம் தேதி வரை இப்போட்டிகள் புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் நடக்கும்.
இந்த போட்டி தான் முதன் முறையாக இந்தியாவில் மகளிர் கால்பந்து சர்வதேச போட்டி நடத்தப்படுகிறது.
புரோ வாலிபால் லீக் போட்டி
ருபே புரோ வாலிபால் லீக் போட்டிகள் கொச்சியில் பிப்ரவரி 9 அன்று தொடங்குகிறது.முதல் ஆட்டத்தில் கொச்சி புளு ஸ்பைக்கர்ஸ் அணியும்-யு மும்பை வாலி அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் கொச்சி ப்ளு ஸ்பைக்கர்ஸ், பிளாக் ஹாக்ஸ் ஹைதராபாத், அகமதாபாத் டிஃபென்டர்ஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், காலிகட் ஹீரோஸ், யு மும்பா வாலி ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.
முதல் கட்ட போட்டி கொச்சி ராஜிவ் காந்தி உள் விளையாட்டரங்கில் நடக்கிறது. இரண்டாம் கட்டப் போட்டி பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது.
கொச்சி ஸ்பைக்கர்ஸ் அணியின் கேப்டனாக தமிழக வீரர் உக்ர பாண்டியன் உள்ளார். யு மும்பா வாலி அணியின் கேப்டனாக டிபேஷ் சின்ஹா தலைமை தாங்கி உள்ளார்.
உலக செய்திகள்
துருவ சுழற்சி – அமெரிக்கா
துருவ சுழற்சி என்று கூறப்படும் கொடும் பனிப் பொழிவு அமெரிக்காவில் பொழிந்தது.
அமெரிக்காவில் பெரும் பகுதிகளில் மைனஸ் 17 டிகிரி செல்ஷியஸ் தட்ப நிலை நிலவும் நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தாரில் ஆவின் பால் விற்பனை
ஆவின் தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இது தமிழ்நாடு அரசின் பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் பொதுத்துறை நிறுவனம் ஆகும்.
தமிழக அரசு சிங்கப்பூர், ஹாங்காங்கை தொடர்ந்து கத்தார் நாட்டிலும் ஆவின் பால் விற்பனையை தொடங்கியுள்ளது. இதனை பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.
அல்ட்ரா பேஸ்காரியாக்கம் முறையில் கொதிக்க வைக்கப்படும் ஆவின் பால் 6 மாதம் வரை கெடாது.
பாலை குறிப்பிட்ட வெப்பநிலையில் அல்ட்ரா பேஸ்காரியாக்கம் முறையில் சூடாக்கி, அதனை டெட்ரா பேக்குகளில் அடை���்து அனுப்பப்படுகிறது.
திட்டங்கள்
நூறு நாள் வேலை திட்டம்
நூறு நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் கடந்த 2005-ல் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், ஆறுகள், வாய்க்கால்களை தூர் வாருதல், குளம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நூறு நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி தமிழகத்தில் 205 ரூபாயில் இருந்து 224 ஆக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மெகா பென்ஷன் திட்டம்
நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மெகா ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.
60 வயதுக்குப்பிறகு மாதந்தோறும் 3,000 ரூபாய் பென்ஷன் கிடைக்க இத்திட்டம் வகை செய்கிறது.
ரூய்து பந்து திட்டம் மற்றும் பிரதான் மந்திரி கிஷன் சமன் நிதி திட்டம்
தெலங்கானா மாவட்டம் ரூய்து பந்து திட்டம் மற்றும் மத்திய அரசின் ’பிரதான் மந்திரி கிஷன் சமன் நிதி’ திட்டம் வெளியிட்டுள்ளது.
தெலங்கானா வேளாண்மை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தகுதி பெற்றுள்ள விவசாயிகளுக்கு மாநில அரசின் ரூ. 10 ஆயிரம் பணமும், மத்திய அரசின் ரூ. 6 ஆயிரம் தொகையும் நிதியாக கிடைக்கும்.
வணிக செய்திகள்
பசு இனங்களின் பாதுகாப்பு
2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சரும் ரயில்வே அமைச்சருமான பியூஷ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நாட்டு பசு இனங்களின் பாதுகாப்புக்காக ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்ட நிதி கால்நடை நலம் மற்றும் பராமரிப்புத் துறையின் கீழ் செயல்படும் ராஷ்ட்ரிய கோகுல் மிஷனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
Download Daily Current Affairs [2019- Feb -2]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

