Daily Current Affairs – 2019 May 1 to 3 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

(May 2019 – 1 to 3)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  1 to 3 May 2019

 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி

ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த அரையிறுதிக்கான முதல் சுற்றுப் போட்டியில் பார்சிலோனா (ஸ்பெயின்), லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் மோதின.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடருக்கான அரையிறுதியின் முதல் சுற்றுப் போட்டியில் பார்சிலோனா அணி 3–0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வென்றது.

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி

நியூஸிலாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.  இந்தப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணைகள் ரோஹன் கபூர் – குஹு கார்க் மற்றும் சிவம் சர்மா – ராம் பூர்விஷா இணை இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஐசிசி டெஸ்ட், ஒருநாள் தரவரிசை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)  வெளியிட்ட தரவரிசைப்பட்டியலில் ஒருநாள் அணியில் இங்கிலாந்து அணி முதலிடமும், டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.2016-17, 2017-18 ஆண்டில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையி்ல இந்த தரவரிசைப்பட்டியலை ஐசிசி வடிவமைத்துள்ளது.

ஒருநாள் தரவரிசையைப் பொறுத்தவரை இங்கிலாந்து அணி 123 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2-வது இடத்தை இந்திய அணி 121 புள்ளிகளுடனும், மூன்றாவது இடத்தில் இருந்த நியூஸிலாந்தை 4-வது இடத்துக்கு தள்ளி தென் ஆப்பிரிக்கா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 115 புள்ளிகளுடனும், நியூஸிலாந்து 113 புள்ளிகளுடன் உள்ளன

டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 116 புள்ளிகளுடன் இந்தியாவும், 108 புள்ளிகளுடன் நியூஸிலாந்து இரண்டாவது இடத்திலும், 105 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும், 104 புள்ளிகளுடன் இங்கிலாந்து 4-ஆவது மற்றும், ஆஸ்திரேலியா 5-ஆவது இடத்திலும் உள்ளன. அவற்றுக்கு பின் இலங்கை, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளன.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை

  1. இந்தியா
  2. நியூஸிலாந்து
  3. தென் ஆப்பிரிக்கா
  4. இங்கிலாந்து
  5. ஆஸ்திரேலியா

ஐசிசி ஒருநாள் தரவரிசை

  1. இங்கிலாந்து
  2. இந்தியா
  3. தென் ஆப்பிரிக்கா
  4. நியூஸிலாந்து
  5. ஆஸ்திரேலியா

முக்கியமான நாட்கள்

 

மே 01 – உலக தொழிலாளர் தினம் World Labor Day

1886ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி ஒன்றுபட்ட வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அமெரிக்காவின் தொழில் நகரங்களில் 8 மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்காக தொழிலாளர்கள் போராடினர்.

அப்போதுதான் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் உலகின் முதல் தொழிலாளர் இயக்கம் உருவாக்கப்பட்டது. தொடர் போராட்டத்தால் 1890ஆம் ஆண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை அமெரிக்க அரசு ஏற்றது.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தமிழகத்தில்தான் முதன் முதலாக தொழிலாளர் தினம் 1923-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

சர்வதேச தொழிலாளர் தினம் 2019 தீம் “அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம்: சமூக பங்குதாரர்களின் பங்கு“.

மே 3 – உலக பத்திரிகை சுதந்திர தினம்

உலக பத்திரிகை சுதந்திர தினம் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2019 தீம் “Media for Democracy: Journalism and Elections In Times of Disinformation”

 

அறிவியல் செய்திகள்

 

சந்திராயன்  2

நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்ய சந்திராயன் 2 செயற்கைகோள், வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.உலகிலேயே முதன்முறையாக சந்திரனின் தென் துருவத்தில் சந்திராயன்-2 விண்கலம் தரையிறங்கவுள்ளது.

செப்டம்பர் 6-ந்தேதி அல்லது அதற்கு முன்னதாக ரோவர் வாகனத்தை நிலாவில் தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு நிலாவை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை அனுப்பியது.அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்தது. அப்போது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்து படம் எடுத்து அனுப்பியது. இதனால் ரூ.800 கோடி செலவில் அனுப்பப்பட்ட சந்திராயன்-1 திட்டம் வெற்றி பெற்றது.

சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட்ட பிறகு முதலில் அது தனது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வரும். அதன் பிறகு நிலவின் சுற்றுப்பாதைக்கு அந்த விண்கலம் மாறும். அதன் பிறகு நிலவின் மேற்பரப்பில் அந்த விண்கலத்தின் ரோவர் வாகனம் தரை இறக்கப்படும். ‘சந்திரயான் – 2 விண்கலம் ஆர்பிட்டர், லேண்டர் (விக்ரம்), ரோவர் (பிரக்யான்) ஆகிய மூன்று தொகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்பிட்டர் சாதனம் சந்திராயன்-2 விண்கலத்தை சுற்று பாதை மாற்றுவதற்கு உதவி செய்யும். லேண்டர் கருவி நிலாவில் தரை இறங்குவதற்கு உதவியாக இருக்கும். ரோவர் வாகனம் நிலாவின் மேற்பகுதியை ஆய்வு செய்யும்.

ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் 2 செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரை இறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திராயன் 2 பூமியிலிருந்து ஏவப்பட்டவுடன் ஆர்பிடர் ப்ரபல்ஷன் மூலம் நிலவை சென்றடையும்.சந்திராயன்-2 மூலம் நிலவில் உள்ள தாதுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்படும்.

அடுத்த ஆண்டு முதல் பாதியில் இந்தியாவின் இஸ்ரோ மையம் சூரியனை ஆராயும் வகையில் ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் சூரியனை பற்றி இதுவரை தெரியாத பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்.

ஃபானி புயல்

வங்கக் கடலில் உருவாகி ஒடிஸா மாநிலம் புரி அருகே கரையைக் கடந்த ஃபானி புயலின் கண் பகுதி கரையைக் கடந்த போது மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகக் கூறப்படுகிறது.

இதனை தமிழகத்தை சமீபத்தில் தாக்கிய புயல்களோடு ஒப்பிட்டால் தமிழகப் புயல்கள் ஒன்றுமே இல்லை.

தானே புயல் (கடலூர்) – மணிக்கு 140 கி.மீ.

கஜா புயல் (வேதாரண்யம்) – மணிக்கு 130 கி.மீ.

வர்தா புயல் (சென்னை) – மணிக்கு 120 கி.மீ.

 

விருதுகள்

 

செவாலியர் விருது

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமாருக்கு பிரான்ஸ் அரசு, கலாச்சாரத் துறை சார்பில் வழங்கப்படும் அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வழங்கி கெளரவித்துள்ளது.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய கிரண் குமார், கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராக பதவி வகித்தார்.

இந்த காலக்கட்டத்தில்  இஸ்ரோ முன்னாள் தலைவராக இருந்த கிரண் குமார் விண்வெளி துறையில் இந்தியா, பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த சிறப்பாக பங்காற்றியுள்ளார்.

இந்த நிலையில் கிரண் குமாரை கெளரவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மேக்ரான் சார்பில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்ஸாண்டர் விருதை கிரண் குமாருக்கு வழங்கி கெளரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ஜான்-ஈவ்- லகால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது

விஜயநகரத்தில் நர்த்தனசாலா நடன அகாடமியால் புகழ்பெற்ற குச்சிப்புடி நடன கலைஞரும், பத்ம ஸ்ரீ விருது பெற்றவருமான சோபா நாயுடுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் விருது

6 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகழ்பெற்ற கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றுள்ளனர்.

கோல்டுமேன் விருதானது “பசுமை நோபல் விருது” என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த விருது 6 கண்டங்களைச் சேர்ந்த 6 சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதானது அமெரிக்காவைச் சேர்ந்த நன்கொடையாளர்களான ரோடா மற்றும் ரிச்சர்டு கோல்டுமேன் ஆகியோரால் 1989 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

புகழ்பெற்ற சமூக ஆர்வலரான மேத்தா பட்கர் இந்த விருதை 1992 ஆம் ஆண்டில் பெற்றார்.குஜராத்தில் உள்ள நர்மதை பள்ளத்தாக்கு வளர்ச்சித் திட்டத்திற்கு எதிராக போராடியதற்காக இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் :

 

      வெற்றியாளர்                                             நாடு

 

பாயர்ஜர்கால் அக்வாண்ட் செரீன்   –  மங்கோலியா

அல்பெர்ட் ப்ரௌன்வெல்                   – லைபீரியா

அல்பெர்டோ குராமில்                        –  சிலி

ஜாக்குலின் எவான்ஸ்                          – குக் தீவுகள்

லிண்டா கார்சியா                               –  அமெரிக்கா

அனா கோலோவிக் லெசோஸ்கா   – வட மாசிடோனியா

 

நியமனங்கள்

 

மருத்துவ சேவைகள் இயக்குநர்

மாநில மருத்துவ சேவைகள் இயக்குநராக டாக்டர் மோகனன் பொறுப்பேற்றுள்ளார்.

மாநில தொழிலாளர்கள் ஈட்டுறுதிக் காப்பீட்டுத் திட்டத்தின் (இஎஸ்ஐ) இயக்குநராக உள்ள  மோகனனுக்கு, கூடுதலாக மருத்துவ சேவைகள் இயக்குநர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

உலக செய்திகள்

 

உக்ரைன் மக்களுக்கு ரஷிய குடியுரிமை

உக்ரைனைச் சேர்ந்தவர்களுக்கு விரைவில் ரஷிய குடியுரிமை அளிக்கும்  சட்டத்தில் அதிபர் விளாதிமீர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.

தாய்லாந்து மன்னர் வஜ்ரலாங்கோர்ன்

66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் 2016ம் ஆண்டு அவரது அன்பு தந்தை இறந்த பின்னர் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.இதற்கு முன்னால் மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ள இவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளன.

தற்போது இவர்  சுதிடா என்ற பெண் மெய்காப்பாளரை மணந்து அரசியாக்கினார்.அரசு  குடும்பத்தின் பகுதியாக அரச பட்டத்தையும், தகுதியையும் அவர் கொண்டிருப்பார் என்றும் அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

ஜப்பான் மன்னர்  பதவியேற்பு

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ (வயது 85) வயோதிகம், உடல் நலக்குறைவு  காரணமாக பதவி விலகினார்.

126வது ஜப்பான் மன்னராக ஜப்பான் மன்னர் அகிஹிடோவின் மகனும் பட்டத்து இளவரசருமான நருஹிடோ டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில்  பதவியேற்றார். அகிஹிட்டோ அமர்ந்த ‘கிறிசாந்தமம்’ அரியணை நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 

 


Download Daily Current Affairs [2019- May – 1 to 3]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading