Daily Current Affairs – 2019 Sep 8 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(8 Sep 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  8 Sep 2019

முக்கியமான நாட்கள்

 

September 8 – சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) 

  • ஆண்டுதோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச எழுத்தறிவு தினம், அரசாங்கங்கள், சிவில் சமூகம் மற்றும் பங்குதாரர்களுக்கு உலக கல்வியறிவு விகிதங்களில் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தவும், உலகின் மீதமுள்ள கல்வியறிவு சவால்களை பிரதிபலிக்கவும் ஒரு வாய்ப்பாகும்.
  • கல்வியறிவுப் பிரச்சினை என்பது ஐ.நாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் மற்றும் ஐ.நா.வின் 2030 ஆம் ஆண்டின்  நீடித்த வளர்ச்சிக்கானப் பணி நிரலின் முக்கிய அங்கமாகும்.
  • செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேசக் கல்வியறிவு தினமாக யுனெஸ்கோ தனது 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று நடைபெற்ற யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 14வது அமர்வில் அறிவித்தது.இது முதல் முறையாக 1967 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

சர்வதேச எழுத்தறிவு தினம் 2019 தீம் : ‘கல்வியறிவு மற்றும் பன்மொழி’

 

செப்டம்பர் 8 – உலக பிசியோதெரபி (உடல் சிகிச்சை) தினம் (World Physical Therapy Day)

  • இந்தத் தினம் மக்கள் நலமாக வாழ, பயணத்திற்கு ஏற்ற வகையில் மற்றும் சுதந்திரமாகத் தொழில் செய்வதற்கு ஏற்ற வகையில் முக்கிய பங்காற்றுவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளாவிய உடல் சிகிச்சை வல்லுநர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைகின்றது.
  • உடல் சிகிச்சைக்கான உலகக் கூட்டமைப்பு (WCPT – World Confederation of Physical Therapy) 1996 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 ஆம் தேதியை உடல் சிகிச்சை தினமாக அறிவித்தது.
  • 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று WCPT தொடங்கப்பட்டது.
  • இந்த வருடத்திற்கான கருப்பொருள் “நாள்பட்ட வலி” என்பதாகும்.

சிலிநெக்ஸ் 2019

  • இலங்கைக் கடற்படையானது 2019 ஆம் ஆண்டின் சிலிநெக்ஸ் (SLINEX) என்ற கடற் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு 2 கப்பல்களை அனுப்புகின்றது.
  • SLINEX 2019 என்பது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே நடத்தப்படும் இரு நாட்டுக் கடற் பயிற்சியாகும்.
  • 2005 ஆம் ஆண்டு முதல் 6 சிலிநெக்ஸ் கடற் பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.
  • இந்தப் பயிற்சியானது இரு நாடுகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கும் இப்பிராந்தியத்தில் கடற் பாதுகாப்பிற்குப் பங்களிப்பதற்கும் இரு நாட்டுக் கடற் படைகளுக்கும் உதவுகின்றது.

SCO உறுப்பு நாடுகள்

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் (Shanghai Co-operation Organisation – SCO) சேர்ந்த உறுப்பு நாடுகளுக்கான இராணுவ மருந்துகள் மீதான கருத்தரங்கானது புது தில்லியில் நடத்தப்பட இருக்கின்றது.

SCO பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டம் 2019-20ன் கீழ் இந்தியாவினால் நடத்தப்பட விருக்கும் “முதலாவது இராணுவ ஒத்துழைப்புக் கருத்தரங்கு” இதுவாகும்.

2017 ஆம் ஆண்டில் இந்தியா SCOல் உறுப்பு நாடாக இணைந்தது.

இக்கருத்தரங்கானது ஒருங்கிணைக்கப்பட்ட பாதுகாப்புப் பணியாளர் தலைமையகத்தின் கீழ் உள்ள இந்திய ஆயுதப் படையினால் நடத்தப்பட விருக்கின்றது.

திட்டம்

டிஜிட்டல் ஊக்கமளிப்புத் திட்டம்

  • அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட வாக்குறுதி முதலீடுகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு “டிஜிட்டல் ஊக்கமளிப்பு” என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் அனைவருக்கும் நிதியுதவி அளிப்பதற்கான ஒரு திட்டம்.
  • இந்தத் திட்டமானது அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் கூட்டமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்பட விருக்கின்றது. 
  • புதிய தொழிலைத் தொடங்குவதற்காக அமெரிக்காவில் இருக்கும் தமிழ் முதலீட்டாளர்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்தி நிதியுதவியைப் பெற முடியும்.

விருதுகள்

கௌசலாச்சார்யா விருதுகள்

  • 2019 ஆம் ஆண்டின் கௌசலாச்சார்யா விருதுகளை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இந்த விருதானது எதிர்காலத்தில் தயாராக இருக்கக் கூடிய மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதில் தனித்துவப் பங்களிப்புகளை ஆற்றிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களைப் பாராட்டுவதற்காக வழங்கப் படுகின்றது.
  • தொழில் பயிற்சி சூழல் அமைப்பில் திறன் பயிற்சியாளர்கள் அளித்த பங்களிப்பை இது அங்கீகரிக்கின்றது.
  • உலகத் திறன் போட்டியின் வெற்றியாளர்கள், தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களின் (National Skill Training Institutes – NSTIs) பயிற்சியாளர்கள், தொழில் துறை பயிற்சி மையங்கள் (Industrial Training Centres – ITI) ஜன் சிக்சன் சன்ஸ்தன்ஸ் மற்றும் பெருநிறுவனங்களின் பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டு செய்திகள்

யு -19 ஆசிய கோப்பை

  • இலங்கையில் மொரட்டுவாவில் நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை ஒருநாள் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆண்கள் பிரிவு

  • ரஃபேல் நடால் யுஎஸ் ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தி யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இது அவரது நான்காவது யுஎஸ் ஓபன் பட்டமும் 19 வது கிராண்ட்ஸ்லாம் கோப்பையும் ஆகும்.

யுஎஸ் ஓபன் பட்டம் 

  • 19 வயதான பியான்கா ஆண்ட்ரெஸ்கு 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்றார். 1990 ஆம் ஆண்டில் மோனிகா செலெஸுக்குப் பிறகு தனது நான்காவது கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கோப்பையை வென்ற முதல் பெண்  ஆவார். கனடாவிலிருந்து கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை.

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc

 


Download Daily Current Affairs [2019- Sep – 8]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us