Daily Current Affairs (August 8th – 10th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : August 8th – 10th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
ஆசிய விளையாட்டு திறப்பு விழா
இந்தோனேசியாவில் நடக்க உள்ள 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழாவில், இந்திய தேசியக் கொடியை ஏந்திச் சென்று அணியை வழிநடத்தும் கவுரவம், 20 வயதாகும் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
U-19 கிரிக்கெட் ஒரு நாள் தொடர்
இந்தியா இலங்கையை வீழ்த்தி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் U-19 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.
உலக செய்திகள்
பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உடன்படிக்கை
பாகிஸ்தான் துருப்புக்கள் ரஷ்ய இராணுவ பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற அனுமதிக்க பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
நோக்கம் : இவை இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை அதிகரிக்க மேற்கொள்ள நடவடிக்கை.
11 வது உயிர்க்கோளக் காப்பகம்
யுனெஸ்கோவின் உயிர்க்கோள காப்பகத்தின் உலக நெட்வொர்க்கில் (WNBR) கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் இந்தியாவில் இருந்து 11 வது உயிர்க்கோளக் காப்பகமாக சேர்க்கப்பட்டுள்ளது.
டோக்கியோ 2020
அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதல் ஒலிம்பிக்ஸ் டோக்கியோ 2020.
முக்கியமான நாட்கள்
ஆகஸ்ட் 9 – 76 வது “வெள்ளையனே வெளியேறு “ஆண்டு விழா
1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, மகாத்மா காந்தி, நாட்டிலிருந்து வெள்ளையர்களை வெளியேற்றுவதற்காக அனைத்து இந்தியர்களுக்கும் “செய் அல்லது செத்து மடி” என்ற தெளிவான அழைப்பை விடுத்தார்.
அந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் “ஆகஸ்ட் க்ரான்தி” தினமாகக் கருதப்படுகிறது.
ஆகஸ்ட் 9 – நாகசாகி தினம்
1945ஆம் ஆண்டில் இந்த நாளில் ஜப்பான் மீது இரண்டாவது அணுகுண்டு நாகசாகியில் வீசப்பட்டது, இதன் விளைவாக ஜப்பான் நிபந்தனையின்றி சரணடைந்தது.
ஆகஸ்ட் 9 – உலகின் உள்நாட்டு குடிமக்களின் சர்வதேச தினம்
1982 ஆம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள உள்நாட்டு மக்கள்தொகைக்கான ஐக்கிய நாடுகளின் பணிக்குழுவின் முதல் கூட்டத்தை அங்கீகரிப்பதற்காக ஆகஸ்ட் 9 உலகின் உள்நாட்டு குடிமக்களின் சர்வதேச தினமாக நினைவுகூரப்படுகிறது.
தீம் : “உள்நாட்டு மக்கள் குடியேற்றம் மற்றும் இயக்கம்”.
உலக உயிரி எரிபொருள் தினம் – ஆகஸ்ட் 10
உலக உயிரி எரிபொருள் தினம் நோக்கம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10 அன்று வழக்கமான புதைபடிவ எரிபொருளுக்கு ஒரு மாற்றாக படிமம் அல்லாத எரிபொருள்களின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
உலக உயிரி எரிபொருள் தினம் கடந்த மூன்று ஆண்டுகளாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் அனுசரிக்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான ஒப்பந்தம்
சுகாதார ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையேயான ஒப்பந்தம்
இந்தியா-கனடா நாடுகளில் உள்ள பட்டய கணக்காயர் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள இன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவிற்கும் கொரியாவிற்கும் இடையேயான ஒப்பந்தம்
வர்த்தக தீர்வு ஒத்துழைப்பு குறித்து இந்தியா மற்றும் கொரியா இடையே சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை செயல்பாட்டிற்குப் பிந்தைய ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கூட்டு
“இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 20 வருட உத்திசார் கூட்டாண்மை” என்ற தலைப்பில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா கூட்டாக இணைந்து அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது
இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையேயான ஒப்பந்தம்
மத்திய அமைச்சரவை, இந்தியா – இந்தோனேசியா இடையிலான அறிவியல் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
பழங்குடியினர் நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கிடையே ஒப்பந்தம்
பழங்குடிப் பள்ளிகளில் மாணவர்களின் நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக பழங்குடியினர் நலத்துறை மற்றும் சுகாதார அமைச்சகங்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
TRIFED மற்றும் தேசிய மூலிகைச் செடிகள் மேம்பாட்டு வாரியத்திற்கும் இடையே ஒப்பந்தம்
பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மூலிகைச் செடிகள், நறுமணப் பொருள் தாவரங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தை மேம்பாட்டு இணையம் (TRIFED) தேசிய மூலிகைச் செடிகள் மேம்பாட்டு வாரியம் (NMPB) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திட்டங்கள்
12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்பும் PMGSY திட்டம்
12-ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு பின்பும் பிரதமர் கிராமசாலைகள் திட்டம் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
புத்தகங்கள்
கலாச்சார அமைச்சர் (I/C), டாக்டர் மகேஷ் ஷர்மா, 3 புத்தகங்களை வெளியிட்டார்
நகை என்ற புத்தகம் டாக்டர் குலாப் கோத்தாரி என்பவரால் வெளியிடப்பட்டது.
பனாரஸின் குகைகள் என்ற புத்தகம் டாக்டர் சச்சிதானந்த் ஜோஷி என்பவரால் வெளியிடப்பட்டது.
ஒளிபரப்பப்படாத கதை என்ற புத்தகம் டாக்டர் கௌதம் சாட்டர்ஜி என்பவரால் வெளியிடப்பட்டது.
மாநாடுகள்
“ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி” உச்சி மாநாடு
இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் லக்னோவில் நடைபெறும் “ஒரு மாவட்டம் ஓர் உற்பத்தி” என்ற தலைப்பிலான உச்சி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்.
“பிரதிபந்தித் சாஹித்திய மெயின் ஸ்வதாந்திரதா சங்க்ரம்”கண்காட்சி
தேசிய காப்பக வளாகத்தில் “பிரதிபந்தித் சாஹித்திய மெயின் ஸ்வதாந்திரதா சங்க்ரம்” (தடைசெய்யப்பட்ட இலக்கியம் மூலம் சுதந்திர இயக்கம்) என்ற தலைப்பில் ஒரு கண்காட்சி துவங்கியது.
இதனை கலாச்சார அமைச்சர், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மந்திரியுமான டாக்டர் மகேஷ் ஷர்மா புது தில்லியில் தொடங்கிவைத்தார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
நிதி ஆயோக், உள்துறை அமைச்சகத்துடன், அந்தமான் & நிக்கோபார் மற்றும் லச்சத்தீவுகள் யூ.டி. நிர்வாகங்களுடனும், தீவுகளின் புனித வளர்ச்சிக்க்காக முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றை ஆகஸ்டு 10 2018 அன்று புதுடில்லி ப்ரவசி பாரதீய கேந்திராவில் நடத்தியது.
நியமனங்கள்
மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா கர்சஸ் (ஈக்வடார்) என்பவர் ஐக்கிய நாடுகளின் 73 வது அமர்வுக்கான பொதுச் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஸ்ரீ ஹரிவன்ஷ் என்பவர் ராஜ்யசபை துணைத் தலைவராக பதிவியேற்றார் .
எஸ்.குருமூர்த்தி & சதீஷ் காசிநாத் மராத்தி என்பவர் பகுதிநேர அதிகாரப்பூர்வமற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
பாதுகாப்பு செய்திகள்
ஆபரேஷன் ‘மதத்‘
09 ஆகஸ்ட் 2018 அன்று கொச்சி நகரில் தென்னிந்திய கடற்படையால் (SNC) ஆபரேஷன் ‘மதத்’ தொடங்கி வைக்கப்பட்டது
நோக்கம் : கேரளாவின் பல பகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத வெள்ளம் காரணமாக, மாநில நிர்வாகத்திற்கு உதவ மற்றும் பேரழிவு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு .
இராணுவப்பயிற்சி SCO அமைதி மிஷன் 2018
SCO அமைப்பின் அமைதி மிஷன் இராணுவப்பயிற்சி SCO உறுப்பு நாடுகளுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான கூட்டு பயிற்சி ரஷ்ய மத்திய இராணுவ ஆணையம் 22 ஆகஸ்ட் முதல் ஆகஸ்ட் 29 ,2018 வரை ரஷ்யாவில் (செபார்குல், செல்யாபின்ஸ்க்) நடைபெறும்.
மொபைல் செயலிகள்
இ – மார் மென்பொருள்
மருத்துவமனையில் இறப்பு அறிக்கை அமைப்புகளை வலுப்படுத்த மரணங்களை வகைப்படுத்துவதற்கான பொருத்தமான கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இறப்புகளை வகைப்படுத்துவதற்கும் மரணத் தணிக்கைகளை மேம்படுத்துவதற்காக இ-மார் மென்பொருள் பயன்படுகிறது.
இது இடைவெளியை குறைத்து, இந்தியாவில் நல்ல மரண புள்ளிவிவரங்கள் மற்றும் கண்காணிப்புக்கு வழிவகுக்கும்.
மொபைல் செயலி நிர்யத் மித்ரா
புது தில்லியில் வர்த்தகம், கைத்தொழில் மற்றும் விமானத்துறையின் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (FIEO) மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் செயலி நிர்யத் மித்ராவைத் தொடங்கி வைத்தார்.
இது சர்வதேச வர்த்தகம் மேற்கொள்ள தேவையான பரந்த தகவல்களை வழங்க உருவாக்கப்பட்டது.
இணைய போர்ட்டல்
“பரிவேஷ்”
சுற்றுச்சூழல், வனம், வனவிலங்கு மற்றும் சி.ஆர்.சி. அனுமதிகளை வழங்கும் “பரிவேஷ்” என்ற சுற்றுச்சூழல் ஒற்றை சாளர மையம், பிரதமர் மோடியால் துவக்கி வைக்கப்பட்டதாகும்.
பென்சில் ஆன்லைன் போர்ட்டல்
குழந்தை தொழிலாளர் சட்டம் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் (NCLP) திட்டத்தின் பயனுள்ள அமலாக்கத்திற்கு பென்சில் ஆன்லைன் போர்ட்டல் திட்டம் தொடங்கப்பட்டது
Download Daily Current Affairs [2018- Aug- 8 & 10]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

