Daily Current Affairs
தினசரி நடப்பு நிகழ்வுகள்
(19 & 20 Oct 2019 )
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : 19-20 Oct , 2019
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
முக்கியமான நாட்கள்
அக்டோபர் 20 – உலக புள்ளிவிவர தினம்
- ஐ.நா பொதுச் சபை 69/282 தீர்மானத்துடன் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒரு நாள் கொண்டாட முடிவு செய்தது.
- முதல் உலக புள்ளிவிவர தினம் 2010 இல் கொண்டாடப்பட்டது. கடைசியாக இந்த நாள் 2015 இல் கொண்டாடப்பட்டது.
- அடுத்த உலக புள்ளிவிவர தினம் 2020 அக்டோபர் 20 அன்று கொண்டாடப்படும்.
- ஐக்கிய நாடுகளின் புள்ளியியல் ஆணையமானது இத்தினத்தை அறிவித்தது.அடுத்த உலக புள்ளியியல் தினமானது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று கொண்டாடப்பட உள்ளது.
2015 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று இரண்டாவது உலக புள்ளியியல் தினமானது “சிறந்த தரவு, சிறந்த வாழ்வு” என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
- 2015 ஆம் ஆண்டின் தீம் :-Better Data, Better Lives
திட்டம்
உணவுப் பாதுகாப்பு மித்ரா – FSSAI
- வியாபாரத்தை எளிதாக்கும் முயற்சியில், உணவுத் தரத்தினைக் கண்காணிக்கும் அமைப்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India – FSSAI) ஆனது உணவுப் பாதுகாப்பு மித்ரா என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
- இந்தத் திட்டமானது உணவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்க சிறு மற்றும் நடுத்தர உணவு வணிகங்களை ஆதரிக்கும்.உணவுப் பாதுகாப்பு மித்ரா என்பது FSSAI ஆல் சான்றளிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட தொழில்முறை திட்டமாகும்.
- அந்தந்த பணி நோக்கம் மற்றும் பொறுப்புகளைப் பொறுத்து அவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
- டிஜிட்டல் மித்ரா, பயிற்சியாளர் மித்ரா அல்லது சுகாதார மித்ரா.
வன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டம்
- மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா என்பவர் மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியப் பழங்குடியினக் கூட்டுறவுச் சந்தையிடல் வளர்ச்சிக் கூட்டமைப்பினால் (Tribal Cooperative Marketing Development Federation of India – TRIFED) ஏற்பாடு செய்யப்பட்ட “வன் தன் உள்ளிருப்புப் பயிற்சித் திட்டத்தைத்” தொடங்கி வைத்தார்.
- வாழ்வாதார ஊக்குவிப்பு, என்.டி.எஃப்.டி என்பதன் மீதான மதிப்புக் கூட்டல், அதைச் சந்தைப்படுத்துதல் மற்றும் அதற்கான கடன் இணைப்புகள் குறித்த TRIFEDன் நடவடிக்கைகளுக்கு அவை ஆதரவளிக்கும்.
குறியீடு
உலகக் கொடை அளித்தல் குறியீடு
- ‘அறப்பண்பு கொண்ட நாடுகள்’ பட்டியலில், அறக்கட்டளை உதவி அமைப்பினால் (Charities Aid Foundation – CAF) 128 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தியா 82வது இடத்தில் உள்ளது.
- கடந்த பத்தாண்டுகளில் (2009 முதல் 2018 வரை) உலகளவில் 1.3 மில்லியன் மக்களை CAF ஆய்வு செய்துள்ளது. இது உலகக் கொடை அளித்தல் குறியீடாக (World Giving Index – WGI) ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- WGI இன் தரவுகளின் படி, அமெரிக்கா முதலிடத்திலும் மியான்மர், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அதற்கடுத்த இடங்களிலும் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
- இந்தக் குறியீட்டில் இலங்கை, நேபாளம் (53), பாகிஸ்தான் (69), மெக்ஸிகோ (73), பிரேசில் (74) ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா(75) உள்ளது.
தேசிய செய்திகள்
பிராண்ட் நிதியியல் தேசிய வணிக அடையாளங்கள் 2019
- பிராண்ட் நிதியியல் தேசிய வணிக அடையாளங்கள் – 2019 என்ற மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலிமையான தேசிய வணிக அடையாளங்கள் குறித்த ஒரு ஆண்டு அறிக்கையானது பிராண்ட் பைனான்ஸ் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
- வணிக அடையாள மதிப்பில் 18.7 சதவிகித வளர்ச்சியுடன் இந்தியா 2018 ஆம் ஆண்டில் 9வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- இந்தப் பட்டியலில் வணிக அடையாள மதிப்பில் 7.2% வளர்ச்சியுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- சிங்கப்பூர் உலகின் வலிமையான தேசிய வணிக அடையாளமாக உருவெடுத்துள்ளது.
தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் – நூற்றாண்டு ஆண்டு விழா
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (Indian Council of Medical Research – ICMR) கீழ் உள்ள ஒரு பழமையான நிறுவனம் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் ஆகும்.
- ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (National Institute of Nutrition – NIN) சிறப்பு நினைவு அஞ்சல் முத்திரையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெளியிட்டார்.
- இந்திய அஞ்சல்துறையின் “கார்ப்பரேட் மை ஸ்டாம்ப்” என்ற திட்டத்தின் கீழ் இந்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
- தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு ஆண்டு விழாவிற்கான கருப்பொருள் “ஊட்டச்சத்தின் மூலம் தேசத்தை மேம்படுத்துதல்” என்பதாகும்.
இந்தியாவில் ஊட்டச்சத்து அறிவியலின் தந்தை
- தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை நினைவு கூரும் வகையில் நிறுவப்பட்ட “ICMR-NIN-நூற்றாண்டு விருது” என அழைக்கப்படுகின்ற ஒருமுறை வழங்கப்படும் விருதானது மருத்துவர் சி.கோபாலனுக்கு அவருடைய மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
- சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவரும், சென்னை எம்.எம்.சியின் பழைய மாணவருமான மருத்துவர் கோபாலன் இந்தியாவில் ஊட்டச்சத்து அறிவியலின் தந்தையாக கருதப்படுகிறார்.
- அவருக்கு 2002 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
தரவரிசை
ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டுத் தரவரிசை 2019
- சமீபத்திய 2019 ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டுத் தரவரிசை வெளியிடப்பட்டது.
- தற்போது இந்த அறிக்கையில், இந்தியா 2019 ஆம் ஆண்டில் 86வது இடத்தில் உள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் அதன் முந்தைய தரவரிசையான 81வது இடத்திலிருந்து 5 இடங்கள் பின்தங்கியுள்ளது .
- ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று இருப்பதன் மூலம் மிகவும் சக்திவாய்ந்த கடவுச் சீட்டை அவை வைத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.
- இந்த ஆய்வு ஹென்லி நிறுவனம் & அதன் பங்குதாரர்களால் நடத்தப்பட்டது.
தர வரிசை நாடுகள்
1 ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்
2 தென் கொரியா, ஜெர்மனி மற்றும் பின்லாந்து
3 டென்மார்க், இத்தாலி மற்றும் லக்சம்பர்க்
86 இந்தியா
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc
Download Daily Current Affairs [2019- Oct – 19 to 20]
Group 2 & 2a Video Course Group 2,2a Test Batch SI Video Course SI Test Batch
NTPC Video Course RRR Test Batch RRB Video Course Other Video Course
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள். தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

