Daily Current Affairs in Tamil October 17 to 18 – 2019

Daily Current Affairs 

தினசரி நடப்பு நிகழ்வுகள்

(17 & 18 oct 2019 )

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  : 17-18 Oct , 2019

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம்

 • உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்டோபர் 17 ஆம் தேதி அன்று முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது. அன்று, 1948 ஆம் ஆண்டில் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கையெழுத்திடப்பட்ட பாரிஸில் உள்ள ட்ரோகாடெரோவில் தீவிர வறுமை, வன்முறை மற்றும் பசியால் பாதிக்கப்பட்டவர்களை அங்கீகரிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.

2019 தீம் :- “Acting together to empower children, their families and communities to end poverty”

மாநில செய்திகள்

காவல் துறை ஆணையம்

 •  1969, 1989, 2006 ஆம் ஆண்டுகளில் மூன்று காவல் துறை ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 • இந்த ஆணையங்கள் முறையே ஆர்.ஏ. கோபால்சாமி, பி. சபாநாயகம், ஆர். பூர்ணலிங்கம் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டன.
 • தற்போது  நான்காவது காவல் துறை ஆணையம் அமைக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அரசு அறிவித்துள்ளது.
 • ஓய்வு பெற்ற அதிகாரியான எம் ஷீலா பிரியா இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷீலா பிரியா ஆணையமானது பின்வருபவை குறித்து ஆராய இருக்கின்றது.

 1. நுண்ணறிவுத் தகவல் சேகரிப்பு
 2. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்
 3. இணைய வழிக் குற்றங்கள், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு
 4. மூன்றாவது ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து இந்த ஆணையம் ஆராயும்.
 • வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரான வி.பி.பி பரமசிவம், தமிழ்நாடு அரசின் ஓய்வு பெற்ற இணைச் செயலாளர் எம்.அறச்செல்வி ஆகியோர் இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் ஆவர்.
 • இணைய வழிக் குற்றப் பிரிவு காவல் துறையின் கூடுதல் தலைமை இயக்குனரான ஜி. வெங்கட்ராமன்.

 திட்டம்

பீஹைவ் திட்டம்

 • இராணுவத்தின் மின்னணு மற்றும் எந்திரவியல் பொறியாளர்கள் குழுவானது (Electronics and Mechanical Engineers – EME) “பீஹைவ் திட்டம்” என்ற புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

குறிக்கோள்:- 

 • இது படைப் பிரிவின் அதிக இயந்திரமயமாக்கத்தை அடைவதையும் அதன் அனைத்துப் பட்டறைகளையும் நிகழ்நேரத்  தரவுப் பகுப்பாய்வுத் திறன்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த சிறந்த அமைப்புடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • பீஹைவ் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த WASPகள் அல்லது பட்டறைகள் மையப்படுத்தப்பட்ட பீஹைவ்களாக செயல்பட இருக்கின்றன.
 • பீஹைவ் திட்டமானது செப்டம்பர் 1 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது. இது 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 15க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

தரக்குறியீடு

உலகளாவிய கண்காணிப்புக் குறியீடு

 • இங்கிலாந்தில் உள்ள காம்பரிடெக் நிறுவனமானது 47 நாடுகளில் கண்காணிப்பின் தனியுரிமை மற்றும் அதன் நிலை குறித்து மதிப்பிட்டு, உலகளாவிய கண்காணிப்புக் குறியீட்டை வெளியிட்டுள்ளது.

நாடுகள் பின்வருவனவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

 1. அரசியலமைப்புப் பாதுகாப்பு,
 2. தனியுரிமை அமலாக்கம்,
 3. பயோமெட்ரிக் தகவல்கள்,
 4. தரவுப் பகிர்வு போன்றவை.
 • காம்பரிடெக்கின் உலகளாவிய கணக்கெடுப்பின் படி, உலகின் முதல் மூன்று கண்காணிப்பு நாடுகளில் இந்தியாவும் உள்ளது.
 • இந்தக் குறியீட்டில் நாட்டின் கண்காணிப்புக் கட்டமைப்பு என்று வரும்போது ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. 
 • இந்தியாவானது “தனியுரிமை பாதுகாப்புகளைப் பராமரிக்கும் முறையில் தோல்வி கொண்ட நாடு” என்று அழைக்கப்படுகின்றது.
 • ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில், அயர்லாந்து, பிரான்சு, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் போதுமான பாதுகாப்பு வசதிகளுடன் முதல் நான்கு இடங்களில் உள்ளன.

முதலாவது இந்திய புத்தாக்கக் குறியீடு

 • சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதி ஆயோக்கின் முதலாவது புத்தாக்கக் குறியீட்டில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் புத்தாக்கங்களில் முதல் ஐந்து இடங்களில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
 • இது உலகளாவிய புத்தாக்கக் குறியீட்டின் (Global Innovation Index – GII) வரிசையில் உருவாக்கப் பட்டுள்ளது.
 • வடகிழக்கு மாநிலங்களில் சிக்கிம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை இந்தக் குறியீட்டில் முதலிடங்களில் உள்ளன.
 • ஒன்றியப் பிரதேசங்களில் தில்லி, சண்டிகர் மற்றும் கோவா ஆகியவை முதலிடங்களில் உள்ளன.
 • சத்தீஸ்கர், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகியவை இந்தக் குறியீட்டில் கடைசி இடங்களில் உள்ளன.
 • இந்தக் குறியீடானது நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் காந்த் ஆகியோரால் வெளியிடப்பட்டுள்ளது.

பயிற்சி

ஷின்யு மைத்ரி 2019 

 • இந்திய விமானப் படையானது 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி முதல் அக்டோபர் 23 ஆம் தேதி வரை ஜப்பானிய விமானத் தற்காப்புப் படையுடன் (Japanese Air Self Defence Force – JASDF) ‘ஷின்யு மைத்ரி’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளது.
 • இந்த கூட்டுப் பயிற்சியானது மேற்கு வங்கத்தின் பனகர் நகரில் உள்ள அர்ஜன் சிங் விமானப் படை நிலையத்தில் நடைபெற இருக்கின்றது.
 • IAFன் (இந்திய விமானப் படை) சிறப்பு நடவடிக்கைப் படையின் C-130 J என்ற விமானம் மற்றும் JASDF இன் தந்திரோபாய விமானப் படைகளின் C-130 H என்ற விமானம் ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்க இருக்கின்றன.
 • இதுபோன்ற முதலாவது இருதரப்பு இராணுவப் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டில் ஆக்ராவின் விமானப் படை நிலையத்தில் நடத்தப்பட்டது.

விருதுகள் 

இந்திரா காந்தி விருது

 •  இந்திரா காந்தி விருதானது மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக காங்கிரஸ் கட்சியால் நிறுவப்பட்டுள்ளது.
 • பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் சிப்கோ இயக்கத்தின் முன்னோடியுமான சாந்தி பிரசாத் பட் என்பவருக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.
 • “நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய சேவைகளுக்காக” 2017 மற்றும் 2018 ஆண்டுகளுக்கான இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
 • இவர் சமூகத் தலைமைத்துவத்திற்காக 1982 ஆம் ஆண்டில் ரமோன் மாக்சேசே விருதும் 1986 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2005 ஆம் ஆண்டில் பத்ம பூசண் விருதையும் 2013 ஆம் ஆண்டில் காந்தி அமைதிப் பரிசையும் பெற்றுள்ளார்.

குறிப்பு 

அவர் தஷோலி கிராம் ஸ்வராஜ்ய சங்கத்தின் கூட்டுறவு அமைப்பை நிறுவியதோடு, 1973 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் மண்டலில் முதலாவது சிப்கோ இயக்கத்தை வழிநடத்தினார்.

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

 

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, rrb current affairs pdf, tntet current affairs notes, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, current affairs quiz, online test for all exams..etc


Download Daily Current Affairs [2019- oct – 17 to 18]

Group 2 & 2a Video Course         Group 2,2a Test Batch          SI  Video Course                     SI  Test Batch

NTPC Video Course                       RRR Test Batch                     RRB Video Course                   Other Video Course

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
  0
  Your Cart
  Your cart is emptyReturn to Shop
  Whatsapp us
  %d bloggers like this: