Daily Current Affairs (July 30th – 31st)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : July 30th – 31st
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
கனடிய ஓபன் கோல்ஃப் போட்டி
ஜான்சன் கனடிய ஓபன் கோல்ஃப் போட்டியில் வெற்றி பெற்றார். இது அவரது 19 வது பட்டமாகும்.
கியா சூப்பர் லீக் போட்டி
இந்தியாவின் நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தானா, கியா சூப்பர் லீக் போட்டி பெண்கள் டி20 கிரிக்கெட்டில் 18 பந்துகளில் வேகமாக அரை சதத்தை அடித்து சாதனை புரிந்தார்.
அட்லாண்டா டென்னிஸ் பட்டம்
ஜான் இஸ்னர் என்பவர் ரையன் ஹாரிசனை வீழ்த்தி ஐந்தாவது முறையாக அட்லாண்டா ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார்.
கோல்ப் உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி
கோல்ப் உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக அனிர்பன் லாஹிரி மற்றும் சுபாங்கர் ஷர்மா என இரண்டு இந்தியர்கள் பங்கேற்றனர்.
உலக செய்திகள்
ஆதார் மூலம் பணம்
தெலுங்கானா அரசு, மீ-சேவா மையங்களில் முதன்முதலாக ஆதார் மூலம் பணம் பெறுவதற்கான அமைப்பை அறிமுகப்படுத்தப்படுகிறது.
யுனெஸ்கோ பாரம்பரிய தளம்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்கான அடுத்த முன்மொழிந்த தளம் “ஜெய்ப்பூரின் மதில் சூழ்ந்த நகரம் , ராஜஸ்தான், இந்தியா” ஆகும்.
அறிவியல் செய்திகள்
அரிய வகை இரத்தம் ‘பி நல்’ பீனோடைப் கண்டுபிடிப்பு
மங்களூருவிலுள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி (KMC) ஷமி சாஸ்திரி தலைமையிலான மருத்துவர்கள் குழு, “பிபி” அல்லது “பி நல்” பீனோடைப் என்றழைக்கப்படும் அரிய இரத்த வகையை அடையாளம் கண்டுபிடித்தனர்.
திட்டங்கள்
ஸ்வச் பாரத் இன்டர்ன்ஷிப்
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கான ஸ்வச் பாரத் கோடை இன்டர்ன்ஷிப் – 100 மணிநேர ஸ்வச்தா திட்டத்தை இந்திய அரசு துவக்கியது.
விருதுகள்
3 வது பிரிக்ஸ் திரைப்பட விழா
டர்பன், தென்னாப்பிரிக்காவின் 3வது பிரிக்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்கள் வென்ற விருதுகள்
சிறந்த நடிகை : பானிதா தாஸ், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்
சிறந்த திரைப்படம் : அமித் மசுர்காரின் நியூட்டன்
சிறப்பு ஜூரி விருது : ரிமா தாசின் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்
நிழல் பொம்மலாட்ட கலைஞருக்கு பெல்லோஷிப் விருது
நிழல் பொம்மலாட்ட கலைஞரான ராஜீவ் புளாவர் கலை வடிவத்துக்கும் பாரதப் புழாவுக்கும் இடையிலான உறவைக் கண்டறிய மத்திய கலாச்சார அமைச்சகத்திலிருந்து பெல்லோஷிப் விருது பெற்றார்.
ராஜீவ் காந்தி சத்பாவனா விருது
முன்னாள் மேற்கு வங்க ஆளுநர் கோபால்கிருஷ்ணா காந்தி என்பவர் இனவாத ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஊக்குவித்ததற்காக ராஜீவ் காந்தி சத்பாவனா விருது பெற்றார்.
நியமனங்கள்
விஜய் தாகூர் சிங் என்பவர் வெளிவிவகாரத்துறை அமைச்சக (MEA) செயலாளராக (கிழக்கு) நியமிக்கப்பட்டார்.
யுனெஸ்கோ பாரம்பரிய தளம்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய அங்கீகாரத்திற்கான அடுத்த முன்மொழிந்த தளம் “ஜெய்ப்பூரின் மதில் சூழ்ந்த நகரம், ராஜஸ்தான், இந்தியா” ஆகும்.
ஸ்வச்தா பக்வாடா
முதன்மை தீம் : “புதுமை” மற்றும் “நிலைத்தன்மை“
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MoPNG), எண்ணெய் & எரிவாயு சிபிஎஸ்இ ஜூலை 01 முதல் 15 வரை முழு ஆர்வத்துடன், உற்சாகத்துடன் ஸ்வச்தா பக்வாடாவை கொண்டாடியது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஆண்டு ஜூலை 16-ம் தேதி முதல் 31-ம் வரை மற்றும் நடப்பு ஆண்டில் ஜனவரி 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ‘ஸ்வச்தா பக்வாடா’ எனும் ‘தூய்மை இருவாரவிழா’ திட்டத்தை செயல்படுத்தின.
இந்த நிவையில் தூய்மை இந்தியா திட்டத்தின் முடிவு ஆண்டான அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கழிப்பறை கட்டுவதில் தனது இலக்கை எட்டி முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
Download Daily Current Affairs [2018- July – 30 & 31]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

