Daily Current Affairs (Oct 11th to 13th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : October 11th to 13th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
ஆசிய பரா விளையாட்டு:-
தீபா மாலிக் மகளிர் F51 / 52/53 பிரிவு தட்டு எறிதல் போட்டியில் 10.71 மீட்டர் எறிந்து வெண்கல பதக்கம் வென்று புதிய ஆசிய சாதனையை படைத்தார்.
இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு:-
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சௌரப் சௌத்ரி தங்கம் வென்றார்.
பாரா ஆசிய விளையாட்டு:-
சுந்தர் சிங் குர்ஜர் ஈட்டி எறிதல் ஆண்கள் F46 பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.
சர்வதேச நட்பு கால்பந்து போட்டி:-
76 வது இடத்தில் இருக்கும் சீனாவிற்கு எதிராக சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்க இந்திய கால்பந்து அணி சீனா பயணம் சென்றது.
நேரு டிராபி படகு போட்டி:-
கேரளாவின் புகழ்பெற்ற நேரு டிராபி படகு போட்டிகள் நவம்பர் 10 ம் தேதி ஆலப்புழாவின் குட்டநாட்டில் நடைபெறும்.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்தப்போட்டி இரண்டு மாதங்கள் தாமதமாகி விட்டன.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்:-
ஜகர்த்தா – இந்தோனேசியாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டி நடைப்பெற்றது.
இதில் ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் இந்தோனேசியாவின் உகுன் ருகெண்டியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
மேலும் ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் இந்தியாவின் தருண் சீனாவின் யுயாங் காவோவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.
இளைஞர் ஒலிம்பிக்ஸ் போட்டி:-
அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸ் நகரில் 2018 ஆம் ஆண்டுக்கான இளைஞர் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி தொடங்கியது.
இதில் இளைஞர் ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் சீனாவின் லீ ஷிஃபெங்கிடம் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரரான லக்ஷியா சென் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜூடோக்கா தபாபி தேவிக்குப் பின்னர் இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியராக மானு பேக்கர் சாதனை படைத்தார்.
முக்கியமான நாட்கள்
அக்டோபர் 11 – சர்வதேச பெண் குழந்தை தினம்
சர்வதேச பெண் குழந்தை தினம் ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சர்வதேச அனுசரிப்பு தினமாகும்; இது பெண்கள் தினம் மற்றும் சர்வதேச பெண்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
2018 தீம் – With Her: A Skilled Girl Force
அக்டோபர் 12 – உலக முட்டை நாள்
மனித ஊட்டச்சத்தின் முட்டைகளின் நன்மைகளையும் அவற்றின் முக்கியத்துவத்தையும் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
அக்டோபர் 13 – உலக பேரழிவு குறைப்பு தினம்
ஐநா பொதுச் சபை 1990 களை இயற்கை பேரழிவு குறைபாட்டிற்கான சர்வதேச தசாப்தமாக (IDNDR) அறிவித்தது.
நிலநடுக்கம், ஆழிப்பேரலை, வெள்ளம், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், வறட்சி, வெட்டுக்கிளி படையெடுப்பு மற்றும் பிற இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் பாதிப்புக்குள்ளாகிற உயிரிழப்பு, சொத்து அழிவு மற்றும் சமூக மற்றும் பொருளாதார இடையூறுகள் போன்றவற்றின் இழப்பைக் குறைப்பதே இதன் அடிப்படை நோக்கமாகும்.
உலக செய்திகள்
ரோ-ரோ வசதி:-
மஜூலி தீவு மாவட்டத்தில் அசாம் அரசுடன் கூட்டணி சேர்ந்து இந்தியாவின் உள்நாட்டு நீர்வழங்கல் ஆணையம் புதிய ரோ-ரோ வசதி ஒன்றை துவக்கியுள்ளது. அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் ரோ-ரோ சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு:-
ஆன்லைன் உத்தரவாதக் கண்காணிப்பு அமைப்பை (OAMS) பாராளுமன்ற விவகாரத்துறை, புள்ளிவிவரம் மற்றும் நிகழ்ச்சித் திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் விஜய் கோயெல் திறந்துவைத்தார்.
எத்தனால் உயிர் சுத்திகரிப்பு நிலையம்:-
ஒடிசாவின் ஆளுநர் பேராசிரியர் கணேஷ் லால் அவர்களால் பர்கார் மாவட்டம் பாலசிங்கா கிராமத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் இரண்டாம் தலைமுறை (2 ஜி) எத்தனால் உயிர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
வாஜ்பனி ஸ்தூபி திறப்பு விழா:-
லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (LAHDC), தலைவர் மற்றும் தலைமை நிர்வாக கவுன்சலர் (CEC), கார்கில் வாஜ்பனி ஸ்தூபியை கர்கோனில் திறந்து வைத்தார்.
இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர்:-
மகாராஷ்டிரா மாநிலம் சார்ந்த அன்னபூர்ணா தேவி, புகழ்பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் 91 வயதில் மறைந்தார்.
அன்னபூர்ணா தேவி ஹிந்துஸ்தானி பாரம்பரிய இசையின் இந்திய சுர்பாகர் வாசிப்பாளர் ஆவார். இவர் அலாவுதீன் கானின் மகள் மற்றும் சீடர் ஆவார். அவர் சிதார் மேஸ்ட்ரோ பண்டிட் ரவி ஷங்கருடன் திருமணம் செய்து கொண்டார்.
உலகின் மிக நீண்ட விமானம் :-
சிங்கப்பூருக்கும், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் இடையில���ன விமானப் போக்குவரத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடங்கியது.
உலகின் மிக நீண்ட விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது
சிங்கப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 18 மணி நேர பயணம் செய்து நியூயார்க்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்து.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உலகின் மிக நீண்ட வணிக விமானம் எனும் சாதனை படைத்துள்ளது.
2013 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட இந்த பாதையில் மீண்டும் இந்த பயணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.சிங்கப்பூர் – நியூயார்க் நகரங்களுக்கு இடையே 4 என்ஜின்களைக் கொண்ட ஏ340-500 ரக விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்கி வந்தது. எனினும், அந்த விமானங்களுக்கு அதிக அளவில் எரிபொருள் தேவைப்பட்டதால் அந்த சேவை 2013-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், தொலைதூரப் பயணங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, குறைந்த எரிபொருளில் நீண்ட தொலைவு செல்லக் கூடிய ஏ350-9000 யுஎல்ஆர் விமானம் மூலம் தற்போது மீண்டும் அந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வெற்றி:-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம்பெறுவதற்கான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதற்கு மேலும் 5 நாடுகளை தேர்வு செய்வதற்கு ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. 97 வாக்குகளை பெறுவதன் மூலம் மனித உரிமை அவைக்கு உறுப்பி னராக தேர்வாக முடியும். இதில் 18 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை அவையில் ஐந்து இடங்கள் உண்டு.
ஆசிய பசிபிக் நாடுகளுக்கான பிரிவில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் இந்தியாவுக்கு மொத்தமுள்ள 193 நாடுகளில் 188 நாடுகளின் வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்று இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
2019 ஜனவரி முதல் மூன்றாண்டுகளுக்கு இந்த அவையில் இந்தியா உறுப்பினராக இருக்கும். இது தொடர்பாக ஐ.நா.விக்கான இந்தியாவின் தூதுவர் சையது அக்பருதீன், “ஆதரவளித்தவர்களுக்கு நன்றி! மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பக்ரைன், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ் மற்றும் பிஜி நாடுகளும் உறுப்பி னராக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாநாடுகள்
மொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32வது உலக மாநாடு
ஹரியானாவிலுள்ள குருகிராமில் WUWM மொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32 வது உலக மாநாட்டை விவசாய மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் புரூஷோத்தம் ரூபல் திறந்து வைத்தார்.
முதல் தடவையாக இந்தியாவில் WUWM மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீம் :- The Wholesale Markets in the Digital Era: Challenges and Opportunities.
புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)
இந்தியா லெபனான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
விவசாய மற்றும் அதன் கூட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் லெபனான் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா ருமேனியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் ருமேனியா இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா பின்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மீது இந்தியா மற்றும் பின்லாந்து இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்தியா-அஜர்பைஜான் இடையே ஒப்பந்தம்
வர்த்தகம் மற்றும் பொருளாதார, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றிய இந்தியா-அஜர்பைஜான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அறிவியல் செய்திகள்
ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ்
டெங்கு, சிக்குன்குனியாவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உருவாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது.
ஜிகா வைரஸ் (Zika virus, ZIKV) ஃபிளாவிவைரஸ் பேரினத்தின் ஃபிளாவிவிரிடேவைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நச்சுயிரி ஆகும்; இதனை ஏடிஸ் கொசுக்கள் பரப்புகின்றன. மனிதர்களில், இது ஜிகா காய்ச்சல் என்ற மிதமான நோயை உருவாக்குகின்றன.
இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ‘ஜிகா’ வைரஸ் தாக்கியது.
அதன்பின்னர், இந்த வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பரவியது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ஜிகா வைரஸ் (Zika virus):-
ஜிகா வைரஸ், ஏடிஸ் (Aedes) என்ற கொசுவால் பரவக்கூடியது. டெங்குக் காய்ச்சலை உருவாக்கும் அதே கொசுதான். இந்தக் கொசு, நன்னீரில் வாழும். கிட்டத்தட்ட டெங்கு வைரஸுக்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தும். நம் உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது, வைரஸை உள்ளே செலுத்தி விடும். இது, பகலிலும் கடிக்கும்.
ஜிகா வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகள்:-
முதுகுவலி, கண் வலி, காய்ச்சல், இடுப்புவலி, வாந்தி, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படும்.
இதன் அறிகுறிகள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் மாதிரியே இருக்கும். இரண்டு முதல் ஐந்து நாள்கள் வரை அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
நியமனங்கள்
சச்சின் சதுர்வேதி, ரேவதி அய்யர் என்பவர் இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அசிம் முனிர் என்பவர் பாகிஸ்தானின் புதிய ஐஎஸ்ஐ[ISI] தலைவராக நியமிக்கப்பட்டார்.
பொருளாதாரம்
ஸ்ப���ஸ்ஜெட் விரைவில் விமானங்களில் WiFi வசதியை வழங்கத்திட்டம்
ஸ்பைஸ் ஜெட் அதன் பயணிகள் இணையத்தளத்தை பயன்படுத்த அதன் விமானத்தில் WiFi வசதியை வழங்கத்திட்டம். ஏர்லைன் சிஎம்டி அஜய் சிங் தனது முதல் போயிங் 737 MAX 8 விமானத்தை அறிமுகப்படுத்தும் ஒரு விழாவில் இதை அறிவித்தார், இது செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சாதனத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
விருதுகள்
இளம் கண்டுபிடிப்பாளர் விருது :-
ஹைதராபாதில் இருந்து இளம் சமூக கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜவ்வாத் கிஜார் பட்டேல் இந்திய அரசாங்கத்தால் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய இளைஞர் விருதினைப் பெற்றார்.
பெல்காமின் சந்தோஷ் காவேரி விவசாய துறையில் தனது பங்களிப்புக்காக இவ்விருதினை பெற்றார்.
மொபைல் செயலிகள்
ஆண்ட்ராய்டு செயலி ‘ரயில் பார்ட்னர்‘:-
ரயில்கள் வரும் தகவல், இருக்கை விவரம், பி.என்.ஆர். விவரம், பல்வேறு உதவி எண்கள் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகளை உள்ளடக்கிய ‘ரயில் பார்ட்னர்’ எனும் புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய ரயில் பார்ட்னர் என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குருஷேஸ்த்திரா தொடங்கி வைத்தார்.
இந்த ஆப்பை பார்வை சவால் கொண்டவர்களும்கூட எளிதல் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் ஃபோன்கள் மூலம் டாக் பேக் வசதியைப் பயன்படுத்தி இந்த ஆப்பை அவர்கள் உபயோகிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் 20 விதமான ஹெல்ப்லன்களை அழைக்க இந்த ஆப்பில் டைரக்ட் கால் வசதி உள்ளது. இந்த அப்ளிகேஷனை ப்ளே ஸ்டோரில் டவுன்லோடு செய்து ஒரு முறை ரெஜிஸ்டர் செய்துவிட்டால் போதும் இதை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது ஆன்லைன், ஆஃப்லைனில் வேலை செய்யும்.
Download Daily Current Affairs [2018- Oct – 11 & 13]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

