Daily Current Affairs (Oct 5th to 6th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : October 5th to 6th
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
36 வது தேசிய விளையாட்டு
கோவாவில் 36 வது தேசிய விளையாட்டு 2019ல் மார்ச் 30 முதல் ஏப்ரல் 14 வரை நடைபெறும்.
U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட்
டாக்காவில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நுழைந்தது.
இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர்
சச்சின் டெண்டுல்கருக்குப்பின் டெஸ்ட் போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்று சாதனை படைத்தார் பிருத்வி ஷா.
விரைவாக 24 டெஸ்ட் சதத்தை எடுத்த கிரிக்கெட் வீரர்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து டொனால்ட் பிராட்மேனிற்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 24 சதங்களை அடித்து இந்தியாவின் கேப்டன் விராட் கோஹ்லி சாதனை படைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் எதிராக இந்தியா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸ்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், நடப்பு சம்பியனான மெர்சிடஸ் பென்ஸ் அணியின் லீவிஸ் ஹெமில்டன், முதலிடம் பிடித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா-1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும்.இதன்படி, நடப்பு ஆண்டின் 17ஆவது சுற்றான ஜப்பான் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, நேற்று சுசுகா ஓடுதளத்தில் நடைபெற்றது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 17 சுற்றுகள் முடிவில், இங்கிலாந்தின் லீவிஸ் ஹெமில்டன் 331 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, ஜேர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 264 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பின்லாந்து வீரரான வால்டரி பொடாஸ்;, 207 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
லெவிஸ் ஹாமில்டன் ஜப்பானிய கிராண்ட் பிரிக்ஸில் 80-வது துருவ நிலை பட்டத்தை பதிவு செய்தார்.
செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாடில் ஆண்களுக்கான போட்டியில் இந்திய ஆண்கள் ஆறாவது இடத்தையும் பெண்களுக்கான போட்டியில் இந்திய பெண்கள் எட்டாவது இடத்தையும் பிடித்தனர்.
முக்கியமான நாட்கள்
அக்டோபர் 4 முதல் அக்டோபர் 10 வரை – உலக விண்வெளி வாரம்
உலக விண்வெளி வாரம் ஐரோப்பா மற்றும் ஆசியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 4-10 முதல் ஆண்டு விடுமுறை தினமாகக் கருதப்படுகிறது. உலக விண்வெளி வாரம் “சர்வதேச விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் கொண்டாட்டத்திற்காகவும், மனிதனின் நலனுக்கான அவற்றின் பங்களிப்பிற்காகவும் அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5 – உலக ஆசிரியர்கள் தினம்
அக்டோபர் 5 உலக ஆசிரியர்கள் தினம், சர்வதேச ஆசிரியர் தினமாகவும் அறியப்படுகிறது.
1994 இல் நிறுவப்பட்டது, “உலகின் கல்வியாளர்களை பாராட்டுவது, மதிப்பிடுதல், மேம்படுத்துதல்”
ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
அக்டோபர் 5 – உலக புன்னகை தினம்
உலக புன்னகை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
வர்செஸ்டர், மாஸசூசெட்ஸில் இருந்த ஒரு வணிக ரீதியான கலைஞரான ஹார்வி பால் என்பவரால் தொடங்கப்பட்டது.
உலகின் முதல் உலக புன்னகை தினம் 1999 ஆம் ஆண்டு நடைபெற்றது.
உலக செய்திகள்
பிரதான பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் பெண் – ரீதா பரன்வால்
முக்கிய இந்திய அமெரிக்க அணுசக்தி நிபுணரான ரீதா பரன்வால் அணுசக்திப் பிரிவின் தலைவராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பால் பரிந்துரைக்கப்பட்டார்.
அமெரிக்காவின் அதிநவீன அணு உலைகளின் மேம்பாட்டுக்கான புதிய சட்டம் ஒன்றில் ஜனாதிபதி டிரம்ப், கடந்த வாரம் கையெழுத்து போட்டார். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் எரிசக்தி துறையின் கீழ் உள்ள அணுசக்தி பிரிவுக்கு புதிய தலைவர் தேர்வு நடந்தது.
இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் அதிகாரி ரீட்டா பரன்வாலை டிரம்ப் பரிந்துரைத்துள்ளார். இவரை செனட் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்தார்கள்.
இதில் அவரது நியமனம் உறுதியானால், அமெரிக்காவின் அணுசக்தி தொழில்நுட்ப ஆய்வு, மேம்பாடு மற்றும் நிர்வாகத்துக்கு ரீட்டாவே பொறுப்பாவார் என வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டு உள்ளது. இவர் தற்போது அமெரிக்க அணுசக்தி துறையில் விரைவான கண்டுபிடிப்புக்கான திட்டத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
திட்டங்கள்
சவுதி அரேபியாவின் பாகிஸ்தான் திட்டம்
பாகிஸ்தான் தென்மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்காக சவுதி அரேபியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மெதனோல் சமையல் எரிபொருள் திட்டம்
இந்தியாவின் முதல் மெதனோல் சமையல் எரிபொருள் திட்டம் வடகிழக்கு மற்றும் அசாம் பெட்ரோ-கெமிக்கல்ஸ் மூலம் அசாமில் தொடங்கப்பட���டது.
தரவரிசை & குறியீடு
ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2018
1) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி [தொடர்ந்து 11 வது வருடம்]
2) விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி
3) ஆர்சலார் மிட்டல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மிட்டல்
இந்திய பணக்காரர்கள் பட்டியல்
ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கணக்கெடுப்பு மற்றும் பட்டியல்களுக்கு பெயர் பெற்றது. இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் அறிவிக்கும். இந்த வருட அறிவிப்பிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார் முகேஷ் அம்பானி. அவருடை சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.
Forbes India Rich List 2018 என்று வெளியிடப்பட்ட பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி. அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அர்செலோர் மித்தல் குழுமத்தின் தலைவர் லக்ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் ஹிந்துஜா சகோதரர்கள் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் நான்காவது இடத்தில் இருக்கின்றனர். ஐந்தாவது இடத்தில் பல்லோஜி மிஸ்ட்ரி 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் சொத்துக்களை வைத்திருக்கிறார்.
அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் ஷிவ் நாடார் (14.6 பில்லியன் டாலர்கள்), கோத்ரேஜ் குழுமம் (14 பில்லியன் டாலர்கள்), திலீப் சங்வி (12.6 பில்லியன்), குமார் பிர்லா (12.5 பில்லியன் டாலர்கள்) மற்றும் கௌதம் அதானி (11.9 பில்லியன் டாலர்கள்) உள்ளனர்.
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த பெண்கள்
100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதில் மிகவும் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா. அவரின் சொத்து மதிப்புகள் கடந்த ஒரு வருடத்தில் 66.7% என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. அவர் இப்பட்டியலில் 39வது இடம் பிடித்துள்ளார்.
புவிசார் குறியீடு(ஜி.ஐ.) – அல்போன்சா மாம்பழம்
இந்தியாவில் விளையும் அல்பான்சோ மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ரத்னகிரி, சிந்து துர்கா, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் விளையும் அல்போன்சா ரக மாம்பழத்துக்கு ‘புவிசார் குறியீடு’ வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 2004-ம் ஆண்டில் முதன்முதலாக டார்ஜிலிங் தேயிலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுவரை 325 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளன. அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று, கர்நாடகா முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது.
புவிசார் அடையாளம் கொண்ட பொருட்கள் என்பது விவசாயம், இயற்கை மற்றும் கைவினை, தொழில்துறை சார்ந்து அந்தந்தப் பகுதிகளில் மட்டுமே கிடைக்கக் கூடியதாகும். அவை அந்தப் பகுதிகளின் பாரம்பரியப் பொருட்களாகவும் இருக்கும். அந்தப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதன் மூலம் அதன் தரம் மற்றும் தனித் தன்மை பாதுகாக்கப்படுகிறது. இதன் காரணமாகவே புவிசார் குறியீடு அளிக்கப்படுகிறது.
டார்ஜிலிங் தேயிலை, மைசூரு சில்க், குல்லு ஷால், மதுரை மல்லிகை, பங்கனப்பள்ளி மாம்பழம், பனாரஸ் புடவைகள், திருப்பதி லட்டு உள்ளிட்ட சில பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றவையாகும்.
மாநாடுகள்
IORA புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மந்திரிகள் கூட்டம்
தில்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற இரண்டாவது IORA புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மந்திரிகள் கூட்டத்தில் இந்திய பெருங்கடல் ரிம் சங்கத்தில்[IORA] உள்ள ஏறத்தாழ 21 நாடுகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மீதான தில்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
ரயில்வே மற்றும் மெட்ரோ திட்டங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச மாநாடு (IC-TRAM 2018)
புது தில்லியில் ரயில் மற்றும் மெட்ரோ திட்டங்களில் (IC-TRAM 2018) தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச மாநாட்டை இரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சர் பியுஷ் கோயல் திறந்து வைத்தார்.
உறுப்புகளுக்கான கூட்டணி சுகாதார படை மாநாடு
உறுப்புகளுக்கான கூட்டணி சுகாதார படை மாநாடு – அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான ஒரு படி’யை அமைச்சர் எஸ்.எம்.டி. அனுப்ரியா படேல் துவக்கிவைத்தார்.
பாதுகாப்பு செய்திகள்
சஹ்யோக் [Sahyog HOP TAC-2018] பயிற்சி
இந்தியா மற்றும் வியட்நாம் கடலோரக் காவலர்கள் இணைந்து சஹ்யோக்[Sahyog HOP TAC-2018] பயிற்சி நடத்தினர்.
இது அவர்களுக்கு இடையேயான பணிநிலை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டு சென்னையில் நடந்தது.
விருதுகள்
அமைதிக்கான நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசை காங்கோ டாக்டர் டெனிஸ் முக்விகே, யாஜிடி உரிமை ஆர்வலர் நாடியா முராட் [போர் மற்றும் ஆயுத மோதலின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு] ஆகியோர் பெற்றனர்.
விசிஷ்ட புரஸ்காரம் விருது
டாக்டர் ராமினேனி ஃபவுண்டேஷன் மூலம் 2018 ‘விசிஷ்ட புரஸ்காரம்‘ என்ற விருதை பேட்மின்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் பெற்றார்.
அறிவியல் செய்திகள்
இந்திய சர்வதேச அறிவியல் விழா
நான்கு நாள் இந்திய சர்வதேச அறிவியல் விழா (ஐஐஎஸ்எஃப்) 2018 உத்தரப் பிரதேசம் லக்னோவில் தொடங்கியது.
தீம்: – “Science for transformation”
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெற்ற நான்காவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் நிகழ்வில் பள்ளி மாணவர்கள் 550 பேர் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்தனர் .
லக்னோவில் கடந்த ஐந்தாம் தேதி முதல் இந்திய சர்வதேச அறிவியல் விழா தொடங்கி நடைபெற்றது. இந்திராகாந்தி பிரதிஷ்டானில் நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியாக டிஎன்ஏவை தனியாகப் பிரித்து எடுக்கும் நிகழ்ச்சி ஜிடி கோயங்கா பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அப்பள்ளியைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சுமார் 550 பேர் பங்கேற்று வாழைப்பழத்தில் இருந்து டிஎன்ஏவை பிரித்தெடுக்கும் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வை கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் அமைப்பின் கல்வியாளர் ரிஷிநாத், தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சரோஜா காந்த் பாரிக் ஆகியோர் பார்வையிட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலர் டாக்டர் ரேணு ஸ்வரூப் தொடங்கிவைத்தார்.
நாசாவின் பார்கர் சூரிய ஆய்வு
முதன்முதலாக சூரியனை ஆய்வு செய்ய ‘பார்கர் சோலார் புரோப்’ என்ற விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்டது .
சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது. சூரியனை பற்றி இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலம் வழங்கும் என்று நாசா கூறியுள்ளது.
இதன் எடை 612 கிலோ, நீளம் 9 அடி, 10 இன்ச் 1,400 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கார்பனால் ஆன வெளித்தகடு பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு 6.9 லட்சம் கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை. திங்களன்று பார்கர் சூரியனில் இருந்து 26.6 மில்லியன் மைல்கள் (4.3 கோடி கிலோமீட்டர்) தூரத்திற்கு பயணம் செய்து 1976 ல் ஹீலியோஸ்-2 விண்கலத்தின் சாதனையை முறியடித்தது.
அடுத்த ஏழு ஆண்டுகளில் சூரியனுக்கு நெருக்கமாக 24 மணி நேரமும் சூரியனை கண்காணிக்கும்.
பொருளாதார செய்திகள்
மார்பக புற்றுநோய்க்கான USFDA ஒப்புதல்
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமிடமிருந்து (USFDA) மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக Exemestane மாத்திரைகள் சந்தைப்படுத்த மருந்து தயாரிப்பு நிறுவனமான சைதஸ் கடீலா ஒப்புதல் பெற்றுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (The Food and Drug Administration (FDA or USFDA)) என்பது அமெரிக்க செயலவையின் கீழ், நல மற்று மனித வள திணைக்களத்தின் ஒரு முகமை ஆகும். இந்த நிறுவனம் உணவு, மருந்துப் பொருட்களை சட்டக் கட்டுப்பாடுகள் ஊடாகவும், கண்காணிப்பு மேற்பார்வை ஊடாகவும் நிர்வாகித்து பொது மக்களின் நலத்தைப் பாதுகாப்பதையும் மேம்படுத்துவதையும் நோக்காகக் கொண்டது. அமெரிக்காவில் விற்கப்படும் எந்தவொரு மருந்தும் இந்த நிறுவனத்தின் அனுமதியைப் பெறவேண்டும்.
ஒப்பந்தங்கள்
இந்தியா- ரஷ்யா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்திய இரயில்வே ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அடல் புதுவழி திட்டம் – சீரியஸ் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான புதுமையான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக, இந்தியாவின் அடல் புதுவழி மிஷன் (AIM) மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் SIRIUS கல்வி அறக்கட்டளை இடையே புது தில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறப்பட்டது.
நியமனங்கள்
சஞ்சய் வர்மா – ஸ்பெயினுக்கான இந்தியா தூதர்
ஸ்ரீனிவாசன் கே. சுவாமி – சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAA) உலகத் தலைவர்
நீதிபதி சூர்யா கந்த் – இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பங்கஜ் சர்மா – ஐ.நா. பற்றிய மாநாடுகளின் இந்தியாவின் தூதர்
Download Daily Current Affairs [2018- Oct – 5 & 6 ]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

