Daily Current Affairs (Oct 7th to 8th)
தினசரி நடப்பு நிகழ்வுகள்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Daily Current Affairs
Date : October 7th to 8th – 2018
தினசரி நடப்பு நிகழ்வுகள்
விளையாட்டு செய்திகள்
IBSF உலக U-16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ,சர்வதேச பில்லியார்ட்ஸ் & ஸ்னூக்கர் கூட்டமைப்பு நடத்திய U–16 ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியாவின் கீர்த்தனா பாண்டியன் பெண்கள் பட்டத்தை வென்றார்.
இவர் பெலாரசின் அல்பினா லேசுக்கை 3-1 என்ற கணக்கில் வென்று சாம்பியனானார். இது சர்வதேச அளவில் கீர்த்தனா பாண்டியன் வெல்லும் முதல் சாம்பியன் பட்டமாகும். இதேபோல சிறுவர்களுக்கான பிரிவில், பெல்ஜியத்தின் பென் மார்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
U-19 ஆசியா கோப்பை கிரிக்கெட்
U19 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை,ஹாங்காங், நேபால், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 8 நாடுகள் விளையாடின.
இறுதிப்போட்டிக்கு இந்திய அணி மற்றும் இலங்கை அணி முன்னேறின. இதற்கான இறுதிப்போட்டி, வங்கதேசம் டாக்காவில் நடைபெற்றது.
இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 144 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதில், இந்திய அணியை சேர்ந்த ஜெய்ஸ்வல், அனுஜ், பிரப் சிம்ரன் சிங், ஆயுஷ் படோனி ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
இந்தியாவின் பிரீமியர் சைக்ளோத்தான்
சாக்ஷம் பெடல் புது தில்லியில் நடைபெற்ற இந்தியாவின் பிரீமியர் சைக்ளோத்தான் 40 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான போட்டியில் டெபோரா ஹெரால்ட் தங்கப் பதக்கத்தை வென்றார். ஆண்கள் 50 கிலோ மீட்டர் பிரிவில் ஸ்ரீதர் சாவனுர் வென்றார்.
சீன ஓபன் டென்னிஸ்
பெய்ஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவும் சாம்பியன் வென்று அசத்தினர்.கரோலின் வோஸ்னியாக்கி தனது 30 வது WTA ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடால் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோûஸ தோற்கடித்தார்.
சீன ஓபனில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் நடால், இந்தாண்டில் ஒட்டுமொத்தமாக 6-வது பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார் .
களிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியா தனது இறுதிச் சுற்றில் 6-4, 7-6 (3) என்ற நேர் செட்களில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை தோற்கடித்தார்.
கடந்த வாரம் உஹான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கார்ஸியா, இப்போது சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகள்
அர்ஜெண்டினா தலைநகர் பியூனோ ஏர்சில் யூத் ஒலிம்பிக் போட்டி நடந்தது. இதில் 206 நாடுகள் பங்கு பெற்றன.இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 47 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான ஜூடோ போட்டியின் 44 கிலோ உடல் எடைப் பிரிவில் இறுதிபோட்டியில் இந்திய வீராங்கனை தங்ஜம் தபாபி தேவி 0-11 என்ற புள்ளியில் மரியா கிமின்சிடம் தோல்வி அடைந்தார். இருந்தும் தங்ஜம் தபாபி தேவி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
இப்போட்டியில் இந்தியர் ஒருவர் பதக்கம் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் இந்திய வீரர் துஷர் மானே 247.5 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்று திறனாளிகள் கலந்து கொள்ளும் இதில் இன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டி ஒன்றில் இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி 60.01 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
அவருக்கு அடுத்த இடத்தில் இலங்கையின் சமிந்தா சம்பத் ஹெட்டி 59.32 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார். ஈரான் நாட்டின் ஒமிடி அலி 58.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார். .
ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் சரத் குமார் தங்கப் பதக்கம் வென்றார். 26 வயதான சரத் குமார் 1.90 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 49 கிலோ பவர் பளுதூக்கும் போட்டியில் பர்மன் பாசா வெள்ளிப்பதக்கமும், பரம்ஜித் குமார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
ரியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் 1.67 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தையும், வருண் பாத்தி 1.82 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்கள் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை பிரிவில்[நீச்சல்] தேவன்ஷி சதிஜா வெள்ளி வென்றார், ஆண்கள் 200 மீட்டர் தனி நபர் மெட்லே பிரிவில் சுயாஷ் ஜாதவ் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
ஆடவருக்கான பாட்மிண்டனில் எஸ்எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதி சுற்றில் 21-19, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் யுகுன் ருகேன்டியை வீழ்த்தி தங்கம் வென்றார். இதேபோல் எஸ்எல் 4 பிரிவில் நடைபெற்ற பாட்மிண்டனில் இந்தியாவின் தருண் 21-16, 21-6 என்ற நேர் செட்டில் சீனாவின் யுயங் காவோவை வீழ்த்தி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
ஒட்டுமொத்தமாக இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 33 வெண்கலம் என 72 பதக்கங்கள் குவித்து பட்டியலில் 9-வது இடம் பிடித்து தொடரை நிறைவு செய்தது. கடந்த2014-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் இந்தியா 3 தங்கம், 14 வெள்ளி,16 வெண்கலத்துடன் மொத்தம் 33 பதக்கங்களே கைப்பற்றியிருந்தது.
உலக மல்யுத்த சாம்��ியன்ஷிப்
சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா தலைமையிலான 30 உறுப்பினர்கள் குழு ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட்டில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி சார்பாக களமிறங்குகின்றனர்.
முக்கியமான நாட்கள்
அக்டோபர் 8 – இந்திய விமானப்படை 86 வது ஆண்டு நிறைவு விழா
இந்திய விமானப்படை (IAF) இந்திய ஆயுதப்படைகளின் விமானப் பிரிவு ஆகும். இது உலகின் விமானப்படைகளில் நான்காவது இடத்தில் உள்ளது. இது பிரிட்டிஷ் பேரரசின் ஒரு துணை விமானப் படையாக 8 அக்டோபர் 1932 அன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.
அக்டோபர் 8 – அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்டின் 18 வது நிறைவு தின கொண்டாட்டம்
நாட்டில் ஒரே கூட்டு முப்படை சேவை செயல்பாட்டு கமெண்ட்[Command], அந்தமான் மற்றும் நிக்கோபார் கமாண்ட், அதன் 18 வது நிறைவு தினத்தை கொண்டாடியது. இந்தியாவின் மூலோபாய நலன்களைப் பாதுகாப்பதற்காக 2001 ஆம் ஆண்டில் கூட்டுத் தந்திர சேவை செயல்திட்டம் மூலம் இந்த கமாண்ட் உருவாக்கப்பட்டது.
உலக செய்திகள்
நாகலாந்து காந்தி – நட்வர் தக்கர்
மஹாராஷ்டிரா மாநிலத்தின் தஹானு பகுதியில் பிறந்தவரான நட்வர் தக்கர் காந்தியக் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடுள்ளவர். அவற்றைப் பரப்புவதையே தனது வாழ்நாள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தவர்.
1955-ஆம் ஆண்டு தனது வேலை நிமித்தம் நாகாலாந்தின் சுச்சுயும்லங் பகுதிக்கு வந்தவர், தொடர்ந்து அப்பிராந்திய மக்களின் மேம்பாட்டிற்காக தன்னை அர்பணித்துக் கொண்டு செயல்பட்டு வந்தார்.
அத்துடன் அவருக்கு ‘நாகாலாந்தின் காந்தி’ என்ற அடைமொழி அவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் அவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
உடல்நலக் குறைவால் 07.10.2018 அன்று மரணமடைந்தார்.
இந்தியா திறன் போட்டி 2018
2018 ஆம் ஆண்டு இந்தியா திறன் போட்டி புது தில்லியில் நடைபெற்று முடிவடைந்தது.
2022- ஆம் ஆண்டுக்கு முன்பாக சுமார் 40 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியால் 2015-ஆம் ஆண்டு திறன் இந்தியா இயக்கம் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும், ஆட்டோ மொபைல், கணினி அறிவியல், சுகாதாரம் மற்றும் சுகாதார நலம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான போட்டியில், சுகாதாரம் மற்றும் சுகாதார நலம் போட்டிப் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த தஸ்லீம் மொஹிதீன் என்ற சென்னை மாணவி தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு தங்கப் பதக்கமும், ரூ.1 லட்சம் ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
வெப்பமண்டல புயல் மைக்கேல்
வெப்பமண்டல புயல் “மைக்கேல்” வடமேற்குக் கரையோரத்தில் உருவாகுவதற்கும், அமெரிக்க வளைகுடா கடற்கரைக்கு கடுமையான மழைப்பொழிவுகளையும், பலத்த மழையையும் கொண்டுவரக்கூடும் எனக்கணிப்பு.
இந்த கணிப்பின்படி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தை நெருங்கும் மைக்கேல் புயல், மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய 4 ஆம் நிலைப் புயலாக வலுப்பெற்றது.
வலு குறையாமல் கரையைக் கடக்கும் பட்சத்தில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. மணிக்கு 210 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், 13 அடி வரை கடலில் அலைகள் எழ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் செய்திகள்
நாசா ப்ரோப் திட்டம்
நாசாவின் நியூ ஹரிஸன்ஸ் ப்ரோப், இந்த புத்தாண்டில் பூமியில் இருந்து 6.6 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல்டிமா துலே என்றழைக்கப்படும் குய்பர் பெல்ட் பொருளுக்கு அருகில் பறக்கவிருக்கிறது. ஒரு விண்கலம் விஜயம் செய்த மிக தொலைதூரப் பொருளுக்கான சாதனையை இந்த நிகழ்வு அமைக்கும்.
நீரை மாசுபடுத்துபவைகளை பிடிக்க சிறிய கோளங்கள்
விஞ்ஞானிகள் பிஸ்ஃபெனால் ஏ (பிபிஏ)ஐ பிடித்து அழிக்கக்கூடிய சிறிய கோளங்களை உருவாக்கியிருக்கிறார்கள், இது பெரும்பாலும் நீரை மாசுபடுத்தும் பிளாஸ்டிக்குகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை வேதியியல்.
திட்டங்கள்
சஷக்த் கிசான் திட்டம் மற்றும் கிருஷி சமுஹ் திட்டம்
அருணாச்சல பிரதேச அரசு முதலமைச்சரின் சஷக்த் கிசான் திட்டம் [வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் விவசாயி-இயந்திரமயமாக்கல் திட்டம்] மற்றும் முதலமைச்சரின் கிருஷி சமுஹ் திட்டம் [விவசாயிகளுக்கு கூட்டுறவு அணுகுமுறை மூலம் அதிகாரம்] ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.
அருணாச்சலப்பிரதேச அரசு அண்மையில், முதலைமைச்சரின் சஷக்த் கிசான் யோஜனா (SKY) மற்றும் கிருஷி சமூஹ் யோஜனா (KSY) என்ற திட்டங்களை இடாநகரில் தொடங்கியது. இந்த SKY திட்டம், முதலைமைச்சரின் வேலைவாய்ப்புத் திட்டம், வேளாண் – பொறிமயமாக்கல் திட்டம் மற்றும் தேயிலை மற்றும் ரப்பர் திட்டம் என மூன்று மீச்சிறப்பு திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. கூட்டுறவு அணுகுமுறையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது KSY திட்டத்தின் நோக்கமாக உள்ளது.
பாதுகாப்பு செய்திகள்
JIMEX 18
இந்தியா மற்றும் ஜப்பான் கடற்படைகளுக்கு இடையிலான “JIMEX – 18” என்னும் போர்ப்பயிற்சி அக்.7 அன்று, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. 8 நாள் நடைபெறும் இந்தப் பயிற்சியின் நோக்கம், இரு நாட்டு கடற்படைகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை பரஸ்பரம் உள்வாங்கிக்கொள்ளுதலாகும்.
ஜப்பானிய கடற்படைத் துணைத்தலைவருக்கு அடுத்த நிலையிலுள்ள அதிகாரி தத்சுயா ஃபகுடா தலைமையிலான ஜப்பானிய போர் கப்பல்கள், மூன்றாவது முறையாக நடக்கும் இக்கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுவுள்ளன. இந்தப் பயிற்சியில் இந்தியாவின் ஆயுதம் தாங்கிய போர் கப்பலான INS சாத்புரா, நீர்மூழ்கி எதிர்ப்புத் திறன்கொண்ட INS கத்மாத் மற்றும் ஏவுகணைகளை செலுத்தும் INS சக்தி உள்ளிட்ட போர் கப்பல்களும், உலங்குவானூர்திகளும் ஈடுபடுகின்றன.
ஷங்க்நாத் [Shankhnaad]
வீர் மஹார் படையினரின் வீரத்தை வெளிப்படுத்தும் ஷங்க்நாத் என்ற இராணுவ இசையை, இராணுவ வீரர்களின் தலைவரான ஜெனரல் பிபின் ராவத் நாட்டிற்காக அர்ப்பணித்தார். இந்த இசையை பிரிகேடியர் விவேக் சோஹல் (ஓய்வு பெற்றவர்) எழுதி, டாக்டர் (திருமதி) தன���ஜ�� நஃப்தே இசை அமைத்துள்ளார்.
விருதுகள்
பொருளாதார அறிவியலுக்கான 2018 நோபல் பரிசு – வில்லியம் டி. நோர்தாஸ் [அமெரிக்கா] & பால் எம். ரோமர் [அமெரிக்கா]
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு ௮.௧௦.௨௦௧௮ அன்று அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகிய 2 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்விற்காக இவர்களுக்கு இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு காங்கோ நாட்டை சேர்ந்த டென்னிஸ் முக்வேஜாவுக்கும், ஈராக்கின் குர்தீஷ் இனத்தை சேர்ந்த நாடியா முராத் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போர் மற்றும் உள்நாட்டு போரின் போது நடத்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக போராடியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
வில்லியம் நார்தாஸ் :-
அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நாதர்ஸ், ’யேல் பல்கலைக்கழகத்தில்’ சுற்றுச்சூழல் பொருளாதார துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதிகரித்து வரும் மக்கள் தொகையும், அதனால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
பால் எம் ரோமர் :-
அமெரிக்காவில் பிரபல பொருளாதார நிபுணராக இருந்து வரும் பால் எம். ரோமர், ’நியூ யார்க் பல்கலைக்கழகத்தில்’ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் தொழில்நுட்ப கண்டிபிடிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.
மாநாடுகள்
இந்தியப் பிராந்தியத்துக்கான காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு
அசாம் தலைநகர் கெளகாத்தியில் இந்தியப் பிராந்தியத்திற்கான காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு அக்.7 அன்று தொடங்கியது. இம்மாநாட்டில் வடகிழக்குப் பகுதிக்கான அவைத் தலைவர் ஆராய்ச்சி முன்னோட்டத்தை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தொடங்கிவைக்கிறார். 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பொருளாதாரம், திறன் மேம்பாடு மற்றும் போக்குவரத்து இணைப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மொபைல் செயலிகள்
‘சிவிஜில்‘ [CVigil]
அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஆகியோரால் தவறு செய்ததற்கான சான்றை பகிர்ந்து கொள்ள குடிமக்களுக்கான “சிவிஜில்” மொபைல் செயலியை விரைவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு பயன்படுத்த திட்டம்.
தேர்தல்களின் போது நடைபெறும் நடத்தை விதிமீறல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய ஏதுவாக, “cVIGIL” எனப்படும் செல்போன் செயலியை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஓ. பி. ராவத், தேர்தல் ஆணையர்கள் திரு. சுனில் அரோரா, திரு. அசோக் லவாசா ஆகியோர் ஜூலை 3 , 2018 அன்று தொடங்கி வைத்தனர்.
நியமனங்கள்
பிரட் கவாநாக் என்பவர் அமெரிக்க உச்ச நீதி மன்றத்தின் 114 வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
Download Daily Current Affairs [2018- Oct – 7 & 8 ]
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

