Daily Current Affairs – October 9th to 10th – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (Oct 9th to 10th)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  October 9th to 10th

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி

3-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடந்து வருகிறது.

பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான உருளை தடி எறிதல் (கிளப் துரோ) போட்டியில் இந்திய வீராங்கனை ஏக்தா பியான் 16.02 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். அரியானாவை சேர்ந்த ஏக்தா பியான் விபத்தில் சிக்கி முதுகு தண்டு மற்றும் தோள்பட்டையில் பாதிப்பு அடைந்தவர் ஆவார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீரர் மனிஷ் நார்வால் தங்கப்பதக்கம் வென்றார். டெல்லியை சேர்ந்த மனிஷ் நார்வால் வலது கை ஊனம் ஆனவர்.

ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் தாகுர் நாராயண் 14.02 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். 16 வயதான நாகுர் நாராயண் இடது காலில் குறைபாடு உடையவர் ஆவார்.

குண்டு எறிதலில் இந்திய வீரர் விரேந்தர், உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ராம்பால், வட்டு எறிதலில் இந்திய வீரர் சுரேந்தர் அனீஷ்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

இந்திய வீரர்கள் மோனு சாங்காஸ் (குண்டு எறிதல்), ஆனந்தன் குணசேகரன் (200 மீட்டர் ஓட்டம்), சுந்தர்சிங் குர்ஜர் (வட்டு எறிதல்), பிரதீப் (வட்டு எறிதல்) வீராங்கனை ஜெயந்தி பெஹெரா (200 மீட்டர் ஓட்டம்) ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

ஹர்விந்தர் சிங் ஆண்கள் தனி ரீகர்வ் பிரிவில் [வில்வித்தை] தங்கம் வென்றார். ஆடவர் வட்டு எறிதல் போட்டி F11 பிரிவில் மோனு கங்காஸ் வெள்ளி வென்றார், முகம்மது யாசீர் ஆண்கள் குண்டு எறிதல் F46 பிரிவில் வெண்கலத்தை வென்றார்.

நாராயண் தாகூர் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டத்தில், தூப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனிஷ் நர்வால் தங்கம் வென்றனர்.

ஆண்கள் வட்டு எறிதலில் சுரேந்தர் அனீஷ் குமார், ராம் பால் ஆண்கள் உயரம் தாண்டுதலில் மற்றும் குண்டு எறிதலில் விரேந்தர் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு

அர்ஜென்டினா நாட்டில் இளைஞர் ஒலிம்பிக் போட்டி நடந்தது.

ஜெர்மி லால்ரிநுண்கா ஆண்கள் 62 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கம் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்தார் . அவர் மொத்தம் 274 கிலோ (124 மற்றும் 150) எடையை தூக்கி பிடித்து தங்கம் வென்று முதல் இடத்தை பிடித்தார். இந்த வருடம் தொடக்கத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு ஒரு வெள்ளி (இளைஞர்) மற்றும் ஒரு வெண்கலம் (இளையோர்) என 2 பதக்கங்களை வென்றுள்ளார். இதில் இரண்டு தேசிய சாதனைகளையும் அவர் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் துருக்கி நாட்டை சேர்ந்த டாப்டாஸ் கேனர் 263 கிலோ (122 மற்றும் 141) எடையை தூக்கி வெள்ளி பதக்கம் வென்று இரண்டாம் இடம் பிடித்தார். இதேவேளையில், கொலம்பியா நாட்டின் வில்லார் எஸ்டீவன் ஜோஸ் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றுள்ளார்.

மிசோராமின் எய்சவால் நகரை சேர்ந்த லால்ரினங்கா உலக இளைஞர் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.

ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் சந்தீப் சௌதிரி, 1500 மீட்டர் பெண்கள் ஓட்டத்தில் ராஜு ரக்ஷிதா, ஆண்கள் 50 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியில் ஜாதவ் சுயாஷ் நாராயண் தங்க பதக்கம் வென்றனர்.

சுல்தான் ஜோகர் கோப்பை

மலேஷியாவில்  ஜோகர் பாஹ்ரூ நகரில் சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது.

மலேசியாவில் சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய ஆண்கள் ஜூனியர் அணி தகுதி பெற்றது.

சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.  முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தானை எதிர் கொண்டது. அசத்தலாக ஆடிய இந்திய வீரர்கள் 5-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தனர்.

கிராண்ட்மாஸ்டர் – ஹர்ஷா

ஹர்ஷா பரத்கோடி தெலுங்கானாவின் இரண்டாவது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

 

முக்கியமான நாட்கள்

 

அக்டோபர் 9 – உலக அஞ்சல் தினம்

சுவிஸ் தலைநகர் பெர்னில் 1874 ஆம் ஆண்டில் யுனிவர்சல் தபால் யூனியன் நிறுவப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ம் தேதி உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. டோக்கியோ, ஜப்பானில் 1969ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.யு. காங்கிரஸில் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் 10 – உலக மன நல தினம்

உலக மனநல தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ம் தேதி உலகம் முழுவதும் மனநல சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மன ஆரோக்கியத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சிகளின் ஒட்டுமொத்த நோக்கத்துடன் அனுசரிக்கப்படுகிறது.

 

உலக செய்திகள்

 

கோவா சர்வதேச திரைப்பட விழா

ஜார்கண்ட் மாநிலம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அதன் பண்பாடு மற்றும் சாதகமான திரைப்படத்தை வெளிப்படுத்தும் வகையில் கூட்டணி சேர்ந்துள்ளது.

தேர்தல் ஆணையம் – இளஞ்சிவப்பு [பிங்க்] சாவடிள்

தேர்தல் ஆணையம் ,மத்தியப் பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில்  500 இளஞ்சிவப்பு[பிங்க்] சாவடிகளை நிறுவுகிறது.

மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களுக்கு “மஞ்சள்’ நிறம், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்களுக்கு(ஒன்றிய வார்டு) “பச்சை’ நிறம், பஞ்சாயத்து தலைவர்களுக்கு “இளஞ்சிவப்பு(பிங்)’ நிறம், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு “வெள்ளை’ நிறங்களில் ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்படுகிறது.ஒரு ஓட்டுச் சாவடியில் இரண்டு ப���்சாயத்து வார்டு உறுப்பினர் இருப்பின் ஒன்று “வெள்ளை’ நிறம், மற்றொன்று “இளம் நீலம்’ நிறத்தில் ஓட்டுச் சீட்டுகள் அச்சிடப்படுகிறது. ஓட்டுச் சீட்டுகளுக்கான பேப்பர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF)

சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் 2018 ஆம் ஆண்டில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது:-

பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி., வங்கிகளின் கடன் சுமை போன்றவற்றால் கடந்த ஆண்டு சரிவடைந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016 ஆம் ஆண்டு 7.1 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2017 ஆம் ஆண்டு 6.6 சதவீதமாக சரிவடைந்தது.

ஆனால் தெற்காசியாவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசம் உள்ளது. இதன் வளர்ச்சி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 7% விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா 2018 ஆம் ஆண்டில் 4 சதவீதமாகவும் 2019 ல் 4.5 சதவீதமாகவும், நேபாளம் 2018-ல் 5 சதவீதமாகவும், 2019-ல் நான்கு சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையில் பாக்கிஸ்தான் இடம் பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக, உலகின் வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியமாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கிய இயந்திரமாகவும் ஆசியா தொடர்கிறது. ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாராக் கடனை குறைத்து, நிதிநிலையை உயர்த்த நடவடிக்கை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்து வருகின்றன. ஜி.எஸ்.டி-யால் வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வளரச்சி பாதையை நோக்கி செல்கிறது. இந்த ஆண்டு (2018) 7. 2 சதவீதமாகும், அடுத்த ஆண்டு (2019) 7.4 சதவீதமாகும் உயரும் எனக் கூறப்பட்டு உள்ளது.

2017-ல் 6.7 சதவிகிதம் தான் வளர்ச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது’2017 ஆம் ஆண்டு, சீனாவின் வளர்ச்சி இந்தியாவினுடையதை விட, 0.2 சதவிகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு, 6.9 சதவிகிதமாக வளர்ச்சி இருந்தது. இது நடப்பு ஆண்டுக்கு, 6.6 சதவிகிதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டுக்கு 6.2 சதவிகிதமாக குறையும் என்றும் கணித்துள்ளது ஐ.எம்.எஃப்.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2018-ல் 2.9 சதிவிகிதமாகவும், 2019 ஆம் ஆண்டு, 2.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயர் தர இராணுவ ட்ரோன்கல்

சீனா அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு 48 உயர்தர இராணுவ ட்ரோன்களை விற்க திட்டம்.

 

மாநில செய்திகள்

 

தீன் பந்து சர் சோட்டு ராம் சிலை

ஹரியானா மாநிலம்,ரோஹ்தக் நகர் சம்ப்லா கிராமத்தில், தீன்பந்து சோட்டு ராமின் 64 அடி உயர சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

ஆங்கிலோர் ஆட்சிக்காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடியவரும், விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களை வடிவமைக்க முன்னோடியாக இருந்தவர் தீன்பந்து சோட்டு ராம் ஆவார்.

முதல் மின்சார பேருந்து

உத்தரகண்ட் மாநில முதல்வர் த்ரிவேந்திர சிங் ராவத் மாநிலத்தின் முதல் மாசற்ற மின்சார பேருந்தின் சோதனை ஓட்டத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம்

இலங்கை ரூபாய் மதிப்பில் 30 கோடி செலவில் இந்திய நிதி உதவியுடன் கட்டப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம் இலங்கையில் மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலுக்கு டிட்லி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு டிட்லி என பெயர் வைத்தது பாகிஸ்தான் என தெரியவந்துள்ளது. டிட்லி என்பது உருது மொழி பெயராகும்.

டிட்லி என்றால் பட்டாம் பூச்சி என அர்த்தம்.

 

திட்டங்கள்

 

உயர் மட்ட மூலோபாய கொள்கை குழு அமைப்பு

தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உதவுவதற்காக மூலோபாயக் கொள்கைக் குழு (SPG) அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்களுக்கான ஆலோசனையை பிரதமரக்கு வழங்கும்.

தங்க பொன் பத்திரங்களை வெளியிடத் திட்டம்

இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்து தங்க பொன் பத்திரங்களை 2018-19 ஐ வெளியிட முடிவு.

தங்கப் பத்திரம் வெளியிடும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், இத்திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதை குறைக்கும் வகையில், உள்நாட்டில் உள்ள தங்கத்தைப் பெற்று அதற்கு ஈடாக தங்கப் பத்திரங்களை வெளியிட மத்திய அரசு ஏற்கெனவே திட்டம் ஒன்றை அறிவித்தது. இதன்படி, பொதுமக்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை ஒப்படைத்து பத்திரங்களை வாங்கினால் முதிர்ச்சிகாலம் நிறைவடைந்ததும் அன்றைய விலையில் பணமாக வழங்கப்படும். இதன்மூலம், வீட்டில் பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்டுள்ள தங்கத்திற்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சவுபாக்யா திட்டம்

பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா – “சவுபாக்யா” திட்டம் ஒடிசாவில் உள்ள ஏழை மக்களின் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மின்சாரம் இல்லாத குடும்பங்களுக்கும் கடைசி மைல் இணைப்பு மற்றும் மின் இணைப்பு ஆகியவற்றால் அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மனிதநேய முயற்சிகளுக்கான இந்தியா

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புது தில்லியில் மனிதநேய முயற்சிகளுக்கான இந்தியாவை அறிமுகப்படுத்தினார்.

‘மனித நேயத்திற்கான இந்தியா’ உலகத்தின் பல நாடுகளில் செயற்கை மூட்டு சிகிச்சை முகாம்களை கடந்த ஒரு ஆண்டு காலமாக நடத்தி வருகிறது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் இடையே ஒப்பந்தம்

அரசியல் உறவுகள், மூலோபாய ஆராய்ச்சி, விவசாயம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாரம்பரிய மருத்துவம், விண்வெளி தொழில்நுட்பம், இளைஞர் விவகாரங்கள், கலாச்சாரம் மற்றும் பேரழிவு மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே அமைச்சகம், 12 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்தது.

தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET)

தேசிய கல்வி கழகத்தின் தேசிய கவுன்சிலிங் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NSDA) ஆகியவற்றை NCVET ஐ இணைப்பதன் மூலம், தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) அமைக்க மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

ரயில்வே அமைச்சகம், 12 லட்சம் அரசிதழ் பதிவுபெறாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் அளித்தது.

தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET)

தேசிய கல்வி கழகத்தின் தேசிய கவுன்சிலிங் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (NSDA) ஆகியவற்றை NCVET ஐ இணைப்பதன் மூலம், தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) அமைக்க மத்திய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உயர் தர இராணுவ ட்ரோன்கல்

சீனா அதன் நட்பு நாடான பாகிஸ்தானுக்கு 48 உயர்தர இராணுவ ட்ரோன்களை விற்க திட்டம்.

 

நியமனங்கள்

 

மக்களவை எம்.பி. கணேஷ் சிங் என்பவர்  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் நலன் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

துஷார் மேத்தா என்பவர்  இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

சுனில் பாஸ்கரன் – புதிய ஏர் ஆசியா இந்திய தலைவராக நியமிக்கப்பட்டார்.

 


 

 Download Daily Current Affairs [2018- Oct – 9 & 10]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us