Daily Current Affairs – 2019 February 26 to 28 – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (26 to 28 – Feb 2019)

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  26 to 28 Feb 2019

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை

புதுடில்லியில் நடைபெற்ற நடப்பு ஐ.எஸ்.எஸ்.எப் உலகக் கோப்பை துப்பாக்கிச்சூடு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் ஹங்கேரி வீரர் வெரோனிகா மேஜர் தங்கம் வென்றார்.

கேன்ஸ் சர்வதேச சதுரங்க ஓபன் டிராபி

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில், இந்திய கிராண்ட்மாஸ்டர் அபிஜித் குப்தா கேன்ஸ் சர்வதேச சதுரங்க ஓபன் டிராபியை வென்றார்.

சனத் ஜெயசூரியா கிரிக்கெட்டில் தடை

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் சனத் ஜெயசூரியா கிரிக்கெட்டில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். ஆவணங்கள் அல்லது பிற தொடர்புடைய தகவல்களை மறைத்தல், அழித்தல், விசாரணையைத் தடைசெய்தல் அல்லது தாமதப்படுத்துதல், எதிர்ப்பு ஊழல் ஒத்துழைப்புடன் (ACU) விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தல் என பல பிரிவுகளில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா டி20 தொடர்

ஆஸ்திரேலியா இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.

பெண்கள் கால்பந்து கோப்பை

துருக்கியில் நடைபெறும் பெண்கள் கால்பந்து கோப்பை போட்டியில் இந்தியா உஸ்பெகிஸ்தானிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.

ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை

சௌரப் சவுதாரி மற்றும் மனு பேகர் புது டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

 

முக்கியமான நாட்கள்

 

பயோடெக்னாலஜி துறையின் தொடக்க தினம்

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை, புது தில்லியில் 33வது தொடக்க தினத்தை கொண்டாடியது. தீம் – “Celebrating Biotechnology: Building Indian as an Innovation Nation”.

பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்

இயற்பியலாளர் சி வி ராமன் பிப்ரவரி 28 அன்று ராமன் விளைவு கண்டுபிடித்ததன் நினைவாக தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் அறிவியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவது இதன் நோக்கமாகும். தீம் – ‘மக்களுக்காக அறிவியல் மற்றும் அறிவியலுக்காக மக்கள்’.

 

உலக செய்திகள்

PRANAM ஆணையம்

அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனோவால் பெற்றோரை பொறுப்பாக பார்த்துக்கொள்ளுதல் மற்றும் நெறிமுறைகள் (PRANAM) கமிஷன் மூலம் மாநில அரசு ஊழியர்களின் பெற்றோரைப் பாதுகாப்பதற்காக ஒரு குழுவொன்றை அமைத்தார்.

இந்தத் திட்டம்கமிஷன் மூலம் அசாம் அரசு ஊழியர்கள் தங்கள் வயதான பெற்றோர் மற்றும் உடன்பிறந்த திருமணமாகாத மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்க இயலாது, அசாம் அரசு ஊழியர்கள் இவர்களை புறக்கணிக்காமல் இருப்பதை உறுதி செய்யும்.

புதிய ரயில்வே மண்டலம்

இந்திய ரயில்வேயின் புதிய மண்டலமாக தெற்கு கடற்கரை ரயில்வே இருக்கும். இந்த புதிய 18வது ரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமையும். தற்போது மத்திய தெற்கு மண்டலத்தின் கீழ் வரும் குண்டக்கல், குண்டூர் மற்றும் விஜயவாடா பகுதிகள் தற்போது புதிய மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

இந்திய இரயில்வே தற்போது 17 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, அவை மேலும் துணை பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு மண்டல தலைமையகம் உள்ளது. தற்போது மொத்தம் 73 பிரிவுகளும் உள்ளன.

2002-2003ல், ஏழு புதிய மண்டலங்களும், எட்டு புதிய பிரிவுகளும் உருவாக்கப்பட்டன.

 

மாநாடுகள்

 

இந்தியா–இத்தாலி கூட்டு ஆணையத்தின் 20 வது அமர்வு

பொருளாதார ஒத்துழைப்புக்கான 20-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணையத்தின் (JCEC) கூட்டம் புதுதில்லியில் தொடங்கியது. இருதரப்பு வர்த்தக ஈடுபாட்டிற்காக JCEC எனும் நிறுவனம் இரு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர்கள் மட்டத்தில் இந்த அமர்வை நடத்தியது.

இந்திய நாட்டின் சார்பாக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, இரண்டு நாள் அமர்வுக்கு தலைமை தாங்கினார். கடந்த இந்திய-இத்தாலியின் 19 வது அமர்வு JCEC, ரோமில் 11 -12-மே 2017 அன்று நடைபெற்றது.

‘ஏவியேசன் கான்க்ளேவ் 2019′

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்தியாவின் விமானநிலைய அதிகாரசபை, AAICLAS மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றோடு இணைந்து 2019 ஆம் ஆண்டு ‘ஏவியேசன் கான்க்ளேவ்’-ஐ புது தில்லியில் ஏற்பாடு செய்துள்ளது.

தீம் :-  Flying for All

வெப்ப அலை ஆபத்து குறைப்பு குறித்த தேசிய ஒர்க்ஷாப்

தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை அமைப்பு (NDMA), 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27-28 ம் தேதி அன்று வெப்ப அலை ஆபத்து குறைப்பு குறித்த இரண்டு நாள் தேசிய ஒர்க்ஷாப் ஒன்றை நடத்துகின்றது. மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் இணைந்து நாக்பூரில் இந்த ஒர்க்ஷாப் நடைபெற்றது.

தேசிய மின் – ஆளுமை மாநாடு

21வது தேசிய மின் – ஆளுமை மாநாடு,  ஹைதராபாத்தில் பிப்ரவரி 26 & 27ல் நடைபெறுகிறது.

கருப்பொருள்  :- Technology for Accelerating Development

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU)

 

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒப்பந்தம்

இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL), எரிபொருட்களுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், மசகு எண்ணெய், எல்பிஜி, இயற்கை எரிவாயு மற்றும் வேறு தொடர்புடைய எரிபொருள் மற்றும் வாயு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இந்தியாவுக்கும் புரூணை தருசலாமிற்கும் இடையே ஒப்பந்தம்

இந்தியா மற்றும் புரூணை தருசலாம் இடையே புதுதில்லியில் தகவல் பரிமாற்றம், வரி வசூல் செய்ய ஒத்துழைப்பு (TIEA) வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் வரி விதிப்புகளுக்கு வங்கி மற்றும் உரிமையாளர் தகவல் உட்பட தகவல் பரிமாற்றத்தை வழங்க வழிவகுக்கும்.

 

பாதுகாப்பு செய்திகள்

QRSAM ஏவுகணை

ஒடிசா கடற்கரை ITR சண்டிபூரில் உள்நாட்டில் தயாரான அதிவேக (வான் பாதுகாப்பு ஏவுகணை) ஏவுகணையை (QRSAM), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது. இரண்டு ஏவுகணைகள் வெவ்வேறு உயரத்திற்கும் நிலைகளுக்கும் சோதிக்கப்பட்டன.

 

விருதுகள்

 

காந்தி அமைதி விருது

  • காந்தி அமைதி விருதானது அஹிம்சை மற்றும் இதர காந்திய வழிகளின் மூலம் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் தங்கள் பங்களிப்பை ஆற்றிய தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றது.
  • மத்திய கலாச்சார அமைச்சகமானது இவ்விருதுகளை வழங்குவதற்கான பரிந்துரைகளை ஏற்கும் பொறுப்புடைய நிறுவனமாகும்.
  • இந்த விருது முதன்முறையாக 1995 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டதில் இருந்து நான்காண்டுகளுக்கான விருது பெறுபவர்களை அறிவித்தது இதுவே முதல் முறையாகும்.
  • இவ்விருதானது 1 கோடி நிதி, சான்றிதழ் மற்றும் ஒரு கைவினைப் பொருள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • 2015, 2016, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குப் பின்வரும் அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • கிராமப்புற வளர்ச்சி, கல்வி, இயற்கைவள மேம்பாடு ஆகியவற்றில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காக கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரா 2015-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவெங்கிலும் உள்ள பல மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்ததில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காக அக்சய பாத்திர அறக்கட்டளை மற்றும் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவதை ஒழிப்பது மற்றும் துப்புரவு நிலையை மேம்படுத்துவதில் தனது பங்களிப்பை ஆற்றியது ஆகியவற்றிற்காக பணியாற்றிய சுலப் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் ஆகிய இரண்டும் கூட்டாக 2016-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா முழுவதுமான மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில், கிராமப்புற மேம்பாடு, பாலின மற்றும் சமூக சமத்துவம் ஆகியவற்றிற்கு தனது பங்களிப்பை ஆற்றியதற்காகவும் கிராமப்புற மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியை அளித்தலில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காகவும் ஏகல் அபியான் அறக்கட்டளை 2017-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • உலகெங்கிலும் மற்றும் இந்தியா முழுவதிலும் தொழுநோய் ஒழிப்பில் தனது பங்களிப்பை ஆற்றியதற்காக யோஹேய் சசாகாவா 2018-ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இந்த வருடாந்திர விருதானது மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தின் நினைவாக இந்திய அரசாங்கத்தால் 1995-ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

தேசிய மின்–ஆளுமை விருதுகள் 2019

பிரதம மந்திரி அலுவலகத்தின் மாநில அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புது தில்லியில் 2019 தேசிய மின்-ஆளுமைக்கான விருதுகளை வழங்கினார். மின்-ஆளுமைத் திட்டங்களை செயல்படுத்துவதில் சிறந்து விளங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படுகிறது.

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

  • சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது இந்தியாவில் தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியை கௌரவிக்க இளம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய தேசிய அங்கீகாரம் ஆகும்.
  • 1957 ஆம் ஆண்டு முதல் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன இயக்குநரான டாக்டர் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் நினைவாக, சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளிலும் மேற்கொள்ளப்படும் சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா 2019

புதுதில்லி விஞ்ஞான்பவனில் நடைபெற்ற தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா விருதுகள் 2019-ன் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர்  திரு நரேந்திர மோடி பங்கேற்றார். தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா 2019க்கான விருதுகளையும், சான்றிழ்களையும் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் வழங்கினார்.

 

திட்டங்கள்

 

‘ISL அகராதியின் 2 வது பதிப்பு’

  • சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இந்திய சைகை மொழி அகராதியின் (ISL – Indian Sign Language) 2-வது பதிப்பை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த அகராதியானது மாற்றுத் திறன் உடையவர்களுக்கான அதிகாரமளிப்புத் துறையின் கீழ் இயங்கும் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தினால் (ISLRTC – Indian Sign Language Research and Training Centre) ஏற்படுத்தப்பட்டது.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 50.71 இலட்சம் மக்கள் சரிவர காது கேளாதவர்களாக உள்ளனர்.
  • இது ISL-ன் பயன்பாட்டை பரவச் செய்தலுக்கு உதவுவதையும் சரிவர காது கேளாதவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவ���ய்ப்புகளில் சிறந்தவர்களாக விளங்கச் செய்வதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

ஸ்ரேயாஸ் திட்டம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தொழிற்துறை தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்காக தொழிற்பயிற்சி மற்றும் திறன்களை உயர் கல்வி இளைஞர்களிடம் வளர்ப்பதற்காக (SHREYAS) திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

 

அறிவியல் செய்திகள்

 

சிக்னல்சிப்[SIGNALCHIP]

4G / LTE மற்றும் 5G NR மாடல்களுக்கான இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரான முதல் செமிகண்டக்டர் சிப்ஸ் பெங்களூரைச் சார்ந்த அரைக்கடத்திகள்[செமிகண்டக்டர்] நிறுவனம் சிக்னல்சிப்[SIGNALCHIP] புது தில்லியில் வெளியிட்டது.

கிரீன்ஹவுஸ் வாயு அகற்றுதல்

விஞ்ஞானிகள் கார்பன் டை ஆக்சைடை மீண்டும் நிலக்கரியாக மாற்றியுள்ளனர், இது உலகின் முதல் வெற்றியாகும், இது சுத்தமான காற்று கிடைக்க வழிவகுக்கும்.

ஆஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழக ஆராய்ச்சி அணி தலைமையில் “மாற்று பாதை”யில் பாதுகாப்பாக நிரந்தரமாக நமது வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுவை நீக்க புதிய நுட்பத்தை உருவாக்கினர்.

கார்பன் பிடிப்பு மற்றும் சேமிப்பிற்கான தற்போதைய தொழில்நுட்பம் CO2 ஐ ஒரு திரவ வடிவில் சுருக்கவும், பொருத்தமான இடத்திற்கு கொண்டுசெல்லவும் மற்றும் அது நிலத்தடியில் உட்செலுத்துவதற்கும் கவனம் செலுத்துகிறது.

நியமனங்கள்

  • நைஜீரியா ஜனாதிபதியாக  முகமது புஹாரி நியமிக்கப்பட்டார்.

 


Download Daily Current Affairs [2019- Feb – 26 to 28]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading