Daily Current Affairs – 2019 February 1st – Important Current Affairs For All Exams

Daily Current Affairs (1 Feb 2019 )

தினசரி நடப்பு நிகழ்வுகள்

 இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic :  Daily Current Affairs 

Date  :  01-02-2019

தினசரி நடப்பு நிகழ்வுகள்

விளையாட்டு செய்திகள்

 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விளம்பர பங்குதாரர் :-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council (ICC)) அமைப்பின் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான (2019-2023) விளம்பர பங்குதாரர் நிறுவனமாக ‘கொகோகோலா’ (Coca-Cola) நிறுவனம் தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

 

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் :-

நெதர்லாந்தில் விஜிக் ஆன் ஜீ நகரில் நடைபெற்ற டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டியில் 13-ஆவது மற்றும் கடைசி ஆட்டத்தின் முடிவில் விஸ்வநாதன் ஆனந்த் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து இந்தப் போட்டியில் 7.5 புள்ளிகளைப் பெற்ற ஆனந்த், தற்போது உலகத் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கிறார்.

மேக்னஸ் கார்ல்சென் பட்டத்தை வென்றார். மாக்னஸ் கார்ல்சென், ஹொலாந்தின் அனீஷ் கிரியுடனான ஆட்டத்தை டிரா செய்து, போட்டியில் வெற்றி பெற்றார்.அனிஸ் கிரிக்கு எதிரான போட்டியில் அவர் வெற்றி தோல்வி எதுவுமின்றி போட்டியை முடித்ததன் மூலம் இது அவரது 7-வது டாடா ஸ்டீல் சதுரங்கப் பதக்கமாகும்.அவர் மொத்தமாக இப்போட்டியில் 9 புள்ளிகள் பெற்றிருந்தார்.

அவருடன் மோதிய அனீஷ் கிரி 8.5 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தார்.

 

உலக செய்திகள்

 

இஸ்ரேல் ஏரோஃஸ்பேஸ்’ நிறுவனம் ஒப்பந்தம் :-

நடுத்தர தரையிலிருந்து வான் இலக்கினைத்தாக்கும் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்காக ‘இஸ்ரேல் ஏரோஃஸ்பேஸ்’ நிறுவனமும் (Israel and Aerospace Industries) இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல்கட்டும் நிறுவனமும் 93 மில்லியன் டாலர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

 

BARC இந்தியாவின் புதிய தலைவர் :-

பார்வையாளர் ஒளிபரப்பு ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவின் (Broadcast Audience Research Council of India – BARC) புதிய தலைவராக ஜீ பொழுதுபோக்கு நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான புனித் கோயங்கா நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

BARC அமைப்பின் ஒரு நிறுவனத் தலைவராக புனித் கோயங்கா அந்த அமைப்பை நிறுவனப்படுத்துதலில் முக்கிய பங்கு ஆற்றியிருக்கின்றார்.

ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரதார ஊடக நிறுவனங்கள் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளால் 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட BARC இந்தியா ஒரு தொழிற்துறை சார்ந்த ஒத்துழைப்பு நிறுவனமாகும்.

BARC இந்தியா, 197 மில்லியன் தொலைக்காட்சி கொண்ட வீடுகளில் சந்தாதாரர்களின் வழக்கங்களை ஆய்வு செய்கின்றது. இந்த வகையில் இது உலகின் மிகப்பெரிய தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை ஆய்வு செய்யும் சேவையாகும்.

முதல் செயற்கைத் தரை விரிப்பு கால்பந்து மைதானம் :-

நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ நாகாலாந்தின் கோஹிமாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் முதலாவது செயற்கைக் தரைவிரிப்பு கால்பந்து மைதானத்தைத் துவக்கி வைத்தார்.

இந்த மைதானம் பழம்பெரும் கால்பந்து வீரரான டாக்டர் அஓ என்பவரது 100வது பிறந்த தின அனுசரிப்பின் நிகழ்ச்சியில் துவக்கி வைக்கப்பட்டது.

செயற்கைத் தரை விரிப்பு என்பது ஒரு மைதானத்திற்கு பிபா அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அளவு 105×66 மீட்டர்கள் என்ற அளவைக் கொண்டிருக்கின்றது.

 

பருவநிலை மற்றும் நீடித்த மேம்பாட்டு மையம் :-

இத்தாலிய பிரதம மந்திரி கியுசெப்பி காண்டி ரோம் நகரத்தில் பருவநிலை மற்றும் நீடித்த மேம்பாட்டிற்கான ஆப்பிரிக்க மையத்தைத் திறந்து வைத்தார்

இந்த மையம் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UN Development Programme – UNDP) மற்றும் உணவு விவசாய அமைப்பு (Food & Agricultural Organisation – FAO) ஆகியவற்றுடன் இணைந்து இத்தாலிய அரசால் நிறுவப்பட்டிருக்கின்றது.

இந்த மையம் பாரீஸ் ஒப்பந்தத்தாலும் 2030 தீர்மானத்தாலும் ஏற்படுத்தப்பட்ட இலக்குகளை அடைய G7 நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் பொதுவான முயற்சிகளுக்கான ஒத்துழைப்பை நல்கும்.

 

முக்கிய தினங்கள்

 

தனிம வரிசை அட்டவணை ஆண்டு :-

சர்வதேச வேதிப்பொருட்களுக்கான தனிம வரிசை அட்டவணை ஆண்டாக (International Year of the Periodic Table of Chemical Elements 2019) 2019 ஆம் ஆண்டை ’யுனெஸ்கோ’ (UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization) அறிவித்துள்ளது.

1869 ஆம் ஆண்டு வேதிப்பொருட்களுக்களுக்கான தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய நவீன வேதியலின் தந்தை என அழைக்கப்படும், ரஷியாவைச் சேர்ந்த டிமிட்ரி மெண்டலீவ் (Dmitri Mendeleev)  150 வது நினைவு ஆண்டை 2019 தனிம வரிசை அட்டவணை ஆண்டாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

தமிழக செய்திகள்

 

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் :-

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் 31-1-2019 வெளியிடப்பட்டது.

அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் சென்னையும், 2-வது இடத்தில் காஞ்சீபுரமும், 3-வது இடத்தில் திருவள்ளூரும் உள்ளன.

குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக அரியலூர் உள்ளது. அங்கு மொத்தம் 5 லட்சத்து 5 ஆயிரத்து 685 வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டசபை தொகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி விளங்குகிறது.

குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி சென்னையில் உள்ள துறைமுகம் தொகுதி ஆகும்.

தமிழகத்தில் தற்போது 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 2 கோடியே 92 லட்சம் பேர் ஆண்கள், 2 கோடியே 98 லட்சம் பேர் பெண்கள், 5,472 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்கள்.

 

மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண்:-

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மரம் வளர்க்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பாடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம் மேல்நிலை வகுப்புகளில் ஆறு பாடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளது.  இந்த மதிப்பெண்கள் மாணவர்களின் அகமதிப்பீட்டுத் தேர்வுகளில் வழங்கப்படும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுத் தேர்வுகளில் வழங்கப்படும்.

 

ஸ்மார்ட் குப்பைத்தொட்டி:-

பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில், தமிழகத்தில்  தமிழக அரசு ஒரு முயற்சியை மேற்கொண்டு உள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் வகையில், அதனை நவீன முறையில் மறுசுழற்சி செய்யும் ஸ்மார்ட் குப்பைத்தொட்டி திட்டத்தை (Smart Dustbin (Reverse Vending Machine) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 31-1-2019 அன்று தொடங்கி வைத்துள்ளார்.

ஸ்மார்ட் குப்பைத்தொட்டி திட்டம் பிளாஸ்டிக் பாட்டில்களை அழிக்கும் வகையில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நவீன பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பொது இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் குப்பைத் தொட்டி மூலம் பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் மறுசுழற்சி குப்பைத்தொட்டியில் பொதுமக்கள் போட வேண்டும். அப்படி இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை, இந்த எந்திரத்தில் போடும்போது, அவர்களின் தொலைபேசி எண்ணை இந்த இயந்திரம்  பதிவு செய்து கொள்ளும்.

மேலும் அவருக்கு ஒரு பரிசு கூப்பன் ஒன்றையும் இந்த ஸ்மார்ட் குப்பை தொட்டி இயந்திரம் வழங்கும். அந்த கூப்பனை பயன்படுத்தி குறிப்பிட்ட வணிக மையங்களில், விலை தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மாநில செய்திகள்

 

குழந்தைகள் இறப்பைத் தடுக்க சிறப்புத் திட்டம் – மகாராஷ்டிரா :-

மகாராஷ்டிரா மாநில அரசானது குழந்தைகள் இறப்பைத் தடுப்பதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கின்றது.

இத்திட்டம் ஆரம்ப சுகாதார மையங்களிலும் அரசு மருத்துவமனைகளிலும் பிறந்துள்ள குழந்தைகளுக்கு உடல்நலம் காப்பதற்கான உபகரணங்களை வழங்கி ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டம் பெற்றோர்களின் முதல் குழந்தைக்கு மட்டுமே பொருந்தும்.

ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பே குழந்தை இறப்பு விகிதமாகும்.

இந்த பரிசுப் பெட்டகத்தில் போர்வை, சிறிய மெத்தை, துண்டு, தெர்மாமீட்டர், குழந்தைக்கான எண்ணெய், ஷாம்பூ, விளையாட்டுப் பொருட்கள், நகம் வெட்டி, கையுறைகள், காலுறைகள் மற்றும் சில பொருட்கள் இருக்கும். இந்தப் பெட்டகம் சுமார் ரூ.2000 மதிப்பிலானது.

 

ராக் ராக் மெய்ன் கங்கா பயணக் கட்டுரை :-

மத்திய நீர்வளத் துறை, நதி மேம்பாடு மற்றும் கங்கைப் புனரமைப்பு அமைச்சர் நிதின் கட்காரி தூர்தர்ஷனில் ராக் ராக் மெய்ன் கங்கா என்ற பயணக் கட்டுரையையும் மேரி கங்கா என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி கங்கை நதியைப் புத்துயிரூட்டுவதற்கான தேவை பற்றிய செய்தியையும் அந்நதியை சுத்தப்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சிகளை ஒரு புதுமையான மற்றும் சுவாரசியமான முறையில் வெளிப்படுத்தும் தகவலையும் ஒளிபரப்பியது.

நியமனங்கள்

 

தேசிய மாணவர் படை ஜெனரல் :-

லெப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா ’தேசிய மாணவர் படையின்’ (National Cadet Corps) இயக்குநர் ஜெனரலாக  நியமிக்கப்பட்டுள்ளார்.

 

மலேசியாவில் புதிய மன்னர்:-

மலேசியாவில் புதிய மற்றும் 16-வது மன்னராக  சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா பதவி ஏற்றார்.இவர் பெஹாங் மாநிலத்தைச் சேஜெனரல்ர்ந்தவர். தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற விழாவில் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மன்னராக பதவி ஏற்றார். அதே விழாவில் நாட்டின் துணை மன்னராக சுல்தான் நஸ்ரின் ஷா பதவி ஏற்றார்.

மலேசியா மன்னராக கடந்த 2016 ஆம் ஆண்டு இறுதியில் பதவியேற்ற மன்னர் 5 ஆம் சுல்தான் முகமது ஆவார். முன்னாள் ரஷ்ய அழகியை காதலித்து திருமணம் செய்துகொண்டதால் தனது பதவியை இராஜினாமா செய்தார். தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே இவர் கடந்த 6 ஆம் தேதி பதவி விலகினார்.

சுல்தான் அப்துல்லா பஹாங் மாநிலத்தின் தலைவராவர். இவருக்கு 59 வயது என்பது குறிப்பிடத்தக்கது

விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சுல்தான் அப்துல்லா, ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளார். உலகக் கால்பந்து அமைப்பான ஃபிஃபாவிலும் சுல்தான் உறுப்பினராக உள்ளார்.மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவராகவும் சுல்தான் பொறுப்பு வகித்துள்ளார்.

பாகிஸ்தான் உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதி:-

பாகிஸ்தானில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக முதல் முறையாக இந்து பெண் சுமன் குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். சுமன், கம்பார் ஷாதத்காட் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் ஐதராபத்தில் சட்ட இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் கராச்சியின் சபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை பட்டம்  பெற்றார்.

பாகிஸ்தானில்  இந்து சமூகத்தின் முதல் நீதிபதி பொறுப்பு வகித்தவர்  ராணா பகவான்தாஸ் என்பவர் 2005-2007 கால கட்டத்தில் நீதிபதியாக இருந்தார். இதனையடுத்து தற்போது முதல் முறையாக ஒரு இந்துப் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் சட்டமன்றத்தில் ஒரு இடத்தை வென்ற முதல் முஸ்லீம் அல்லாத பெண்மணி கிருஷ்ண குமாரி கோலி ஆவார்.

 

திட்டங்கள்

 

தூய்மை காற்று-தேசியத் திட்டம் :-

தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் என்பது அடுத்த ஐந்து வருடங்களில் காற்றின் தரத்தை 20 முதல் 30 சதவிகிதம் அளவிற்கு உயர்த்திட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஒரு புதிய ஆய்வில் தூய்மையான காற்றுக்கான தேசியத் திட்டம் டெல்லி காற்று மாசானது 25 சதவிகித அளவிற்கு குறைக்கப்பட்டால் டெல்லியில் உள்ள மக்களின் வாழ்நாள் ஆயுட்காலமானது ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அதிகரிக்கும் என்று தெரிவித்திருக்கின்றது.

இத்திட்டம் 2017 ஆ���் ஆண்டை காற்றின் தரத்தை உயர்த்துவதற்காக அடிப்படை ஆண்டாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.

 

தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை பெயர்மாற்றம்:-

மத்திய அரசின், வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறைக்கு (Department for promotion Of Industry and Internal Trade)   ’தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை’ ( Department of Industrial Policy and Promotion (DIPP)) எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

தரவரிசை

 

ஊழல் நாடுகள் பட்டியல்:-

உலக அளவில் ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 78 வது இடத்தில் உள்ளது.

ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் (Transparency International) என்ற அமைப்பு உலகம் முழுவதும் ஊழல் அதிகம் உள்ள 180 நாடுகளின் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2018 ம் ஆண்டிற்கான பட்டியல் ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு  வெளியிடப்பட்டது.

இந்த பட்டியலில் இந்தியா 78 வது இடத்திற்கு உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 81வது இடத்தில் இருந்தது. அதே சமயம் ஊழல் மிகுந்த டாப் 20 நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறி உள்ளது. இதில் சீனா 87 வது இடத்திலும், பாகிஸ்தான் 117 இடத்திலும் உள்ளன.

100 புள்ளிகளுக்கு 88 புள்ளிகளைக் குவித்து டென்மார்க் உலகின் மிகக் குறைவான ஊழல் கொண்ட நாடாகவும் அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தும் பின்லாந்தும் ஆகிய நாடுகள் உள்ளன.

சோமாலியா 10 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் அதனையடுத்து தெற்கு சூடான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளும் உள்ளன.

ஊழல் மிகக்குறைந்த நாடுகளில் டென்மார்க், நியூஸிலாந்து ஆகிய நாடுகள் முதலிரண்டு இடத்தையும், சிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்திலும் உள்ளது.

 

Download Daily Current Affairs [2019- Feb -1]

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: