TNPSC CURRENT AFFAIRS PDF –27th July 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 27 July 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC July Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Chief Minister M.K. Stalin on July 26, 2021 released a song composed by music director Yuvan Shankar Raja in support of Indian sportspersons taking part in the Tokyo Olympics. Titled Vendru Vaa Veerargale, the composition was supported by the TamilNadu Sports Development Authority and the Tamil Nadu Basketball Association.

26-7-2021 அன்று சென்னை தலைமைச்செயலகத்தில், டோக்கியோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவியுடன் தமிழ்நாடு கூடைப் பந்தாட்டக் கழகத்தால் தயாரிக்கப்பட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவால் இயற்றி இசை அமைக்கப்பட்ட ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

2.The Tamil Nadu government on July 26, 2021 issued a G.O. for the implementation of special reservation within the MBC quota with retrospective effect from February 26, the date on which the State Legislative Assembly passed the Bill in this regard. The Act provides for “special reservation” to the Most Backward Classes (Vanniakula Kshatriya), the Most Backward Classes (Denotified Communities) and the Other Most Backward Classes, at 10.5%, 7% and 2.5% respectively, within the 20% reservation provided for these communities. With the issuance of this order, the special reservation of seats in educational institutions, including private educational institutions in TN, and of appointments or posts in the services under the State to the Vanniyar community (10.5 per cent), within the 20 per cent reservation for Most Backward Classes and Denotified Communities, has been ensured.

அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியருக்கு 10.5 விழுக்காடும், சீர்மரபினருக்கு 7 விழுக்காடும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 2.5 விழுக்காடும் வழங்கும் ‘சிறப்பு இட ஒதுக்கீடு’  சட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

3.Tamil Nadu Governor Banwarilal Purohit presided over the 87th jayanthi celebration of Jayendra Saraswathi Shankaracharya of Kanchimutt at the manimandapam in Orikkai, Kancheepuram, on July 26, 2021. He addressed the gathering in which Vice President M. Venkaiah Naidu participated as chief guest through video conferencing.

ஜூலை 26, 2021 அன்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் அவர்களின் 87வது ஜெயந்தி விழா காஞ்சிபுரம் ஓரிக்கை சங்கராச்சாரியார் மணிமண்டபத்தில் நடைபெற்றது. அதற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தலைமை தாங்கினார். அதில் துணை குடியரசுத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அவர்களும் கலந்துகொண்டார்.

4.Australian Consul-General for South India Ms. Sarah Kirlew called on the Tamil Nadu Chief Minister M K Stalin on July 26, 2021.

தென்னிந்தியாவிற்கான ஆஸ்திரேலியாவின் துணைத் தூதர் சாரா கிர்லேவ் அவர்கள் ஜூலை 26, 2021 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தார்.

India 

5.Kandla SEZ (KASEZ) was awarded IGBC Platinum Rating. KASEZ is the First Green SEZ to achieve the IGBC Green Cities Platinum Rating for Existing Cities.

காண்ட்லா சிறப்புப் பொருளாதார மண்டலம் (KASEZ) க்கு IGBC பிளாட்டினம் மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. IGBC பசுமை நகரங்கள் பிளாட்டினம் மதிப்பீட்டை அடைந்த முதல் பசுமை சிறப்புப் பொருளாதார மண்டலம் காண்ட்லா ஆகும்.

6.The Union Minister for Women and Child Development Smriti Zubin Irani will be launching a 24/7 helpline number for women affected by violence on Tuesday, 27th July, 2021.

ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜூபின் இரானி அவர்கள் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24/7 அவசர உதவி தொலைப்பேசி எண்ணை ஜூலை 27, 2021 அன்று தொடங்கவுள்ளார்.

7.MyGov, the citizen engagement platform, celebrated 7 Years of Participatory Governance with the theme of MyGov Positive – promoting positive use of Social media. It was launched by Prime Minister Narendra Modi on 26th July 2014.

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட ‘MyGov’ இயங்குதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக அரசை கொண்டு செல்ல ‘MyGov’ என்ற இயங்குதளத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். குடிமக்களின் ஈடுபாட்டு தளமான ‘MyGov’, 7 ஆண்டுகால பங்கேற்பு ஆளுகையை மைகோவ் ‘நேர்மறை’ என்ற கருப்பொருளுடன் கொண்டாடியது – இதன்மூலம் சமூக ஊடகங்களின் நேர்மறையான பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.

8.India celebrates Kargil Vijay Diwas on July 26 every year to mark the anniversary of the Indian Army’s victory against Pakistan (Operation Vijay) on July 26, 1999.

பாகிஸ்தானுக்கு எதிராக ஜூலை 26, 1999 அன்று இந்திய ராணுவம் (ஆபரேஷன் விஜய்) பெற்ற வெற்றியை குறிக்கும் வகையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் தேதியை கார்கில் விஜய் திவாஸ் (தினம்) என்று கொண்டாடுகிறது.

9.West Bengal Chief Minister Mamata Banerjee on July 26, 2021 constituted a two-member Commission of Inquiry headed by former Supreme Court judge Justice Madan B. Lokur and former Chief Justice of the Calcutta High Court Justice Jyotirmay Bhattacharya to investigate the allegations pertaining to the Pegasus spyware scandal.

பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க இரண்டு பேர் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்கள் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா அவர்களும் இடம்பெற்றுள்ளார்.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who composed the song titled Vendru Vaa Veerargale for Indian Sports Persons taking part in the Tokyo Olympics?

A.A R Rahman

B.Ilaiyaraja

C.Yuvan Shankar Raja

D.None of the above

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களுக்காக ‘வென்று வா வீரர்களே’ என்ற பாடலை இயற்றியவர் யார்?

A.ஏ ஆர் ரஹ்மான்

B.இளையராஜா

C.யுவன் சங்கர் ராஜா

D.மேற்கூறிய எதுவும் இல்லை

2.Who constituted a two-member Commission of Inquiry to investigate the allegations pertaining to the Pegasus spyware scandal?

A.Madan Lokur

B.Banwarilal Purohit

C.Smriti Irani

D.Mamta Banerjee

பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்க இரண்டு பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை அமைத்தவர் யார்?

A.மதன் லோக்கூர்

B.பன்வாரிலால் புரோகித்

C.ஸ்மிருதி இரானி

D.மம்தா பானர்ஜி

3.Who presided over the 87th jayanthi celebration of Shankaracharya?

A.Madan Lokur

B.Banwarilal Purohit

C.Smriti Irani

D.Mamta Banerjee

சங்கராச்சாரியார் 87 வது ஜெயந்தி விழாவிற்கு தலைமை தாங்கியவர் யார்?

A.மதன் லோக்கூர்

B.பன்வாரிலால் புரோகித்

C.ஸ்மிருதி இரானி

D.மம்தா பானர்ஜி

4.Who is the Australian Consul-General for South India?

A.Antony Blinken

B.Scott Morrison

C.Sarah Kirlew

D.None of the above

தென்னிந்தியாற்கான ஆஸ்திரேலியாவின் துணைத் தூதர் யார்?

A.ஆண்டனி பிளிங்கன்

B.ஸ்காட் மோரிசன்

C.சாரா கிர்லேவ்

D.மேற்கூறிய எதுவும் இல்லை

5.Who launched the 24/7 helpline number for women affected by violence?

A.Madan Lokur

B.Banwarilal Purohit

C.Smriti Irani

D.Mamta Banerjee

வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக 24/7 அவசர உதவி தொலைப்பேசி எண்ணை அறிமுகப்படுத்தியது யார்?

A.மதன் லோக்கூர்

B.பன்வாரிலால் புரோகித்

C.ஸ்மிருதி இரானி

D.மம்தா பானர்ஜி

6.Which is the First Green SEZ to achieve the IGBC Green Cities Platinum Rating?

A.Bangalore SEZ

B.Coimbatore SEZ

C.Kandla SEZ

D.Anantpur SEZ

IGBC பசுமை நகரங்கள் பிளாட்டினம் மதிப்பீட்டை அடைந்த முதல் பசுமை SEZ எது?

A.பெங்களூர் SEZ

B.கோயம்புத்தூர் SEZ

C.காண்ட்லா SEZ

D.அனந்த்பூர் SEZ

7.Kargil Vijay Diwas is celebrated every year on

A.July 24

B.July 25

C.July 26

D.July 27

கார்கில் விஜய் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த தேதியில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூலை 24

B.ஜூலை 25

C.ஜூலை 26

D.ஜூலை 27

8.A two-member Commission of Inquiry formed to investigate the allegations pertaining to the Pegasus spyware scandal is headed by

A.Madan Lokur

B.Banwarilal Purohit

C.Smriti Irani

D.Mamta Banerjee

பெகாசஸ் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட இரண்டு பேர் கொண்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் யார்?

A.மதன் லோக்கூர்

B.பன்வாரிலால் புரோஹித்

C.ஸ்மிருதி இரானி

D.மம்தா பானர்ஜி

9.When was the MyGov platform launched by the Prime Minister?

A.July 24, 2014

B.July 25, 2014

C.July 26, 2014

D.July 27, 2014

MyGov இயங்குதளம் எப்போது பிரதமரால் தொடங்கப்பட்டது?

A.ஜூலை 24, 2014

B.ஜூலை 25, 2014

C.ஜூலை 26, 2014

D.ஜூலை 27, 2014

DOWNLOAD  Current affairs -27 JULY- 2021 PDF

MAY MONTH FULL CURRENT AFFAIR PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: