TNPSC – Tamil Nadu Budget 2025
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025-26
✅ Tamil Nadu Budget 2025 – Key Highlights for TNPSC Exam Preparation
- Article : 202
- தாக்கல் : தமிழக நிதி அமைச்சர் : தங்கம் தென்னரசு
- Date: 14 March 2025
- பட்ஜெட் உரை : 2 மணி 38 நிமிடங்கள்
மேற்கோள்கள்
- பிரெஞ்சு பொருளாதாரப் பேராசிரியர் தாமஸ் பிக்கட்டி – “Inequality is a choice, but we can choose a different path”
- சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
- கோடாமை சான்றோர்க்கு அணி
– ( குறள் – 118)
- 2025 – 26 நிதி ஆண்டில் 40,000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்
- கடந்த 4 ஆண்டுகளில் 78,882 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
மகளிர் தொழில் முனைவோர்
- அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் – மகளிர் தொழில் முனைவோராக
- திட்டம்.
- 20 % மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கி கடன் வழங்கப்படும்
- திறன் மேம்பாட்டு பயிற்சிகள் & ஆலோசனைகள் வழங்கப்படும்
- மானிய நிதி : ரூ. 225 கோடி
அன்புச்சோலை
- மூத்த குடிமக்களுக்காக ரூ.10 கோடி மதிப்பில் 25 மையங்கள் அமைக்கப்படும்
- இடங்கள் : மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர் & திண்டுக்கல்
- தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் துணையுடன் பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.
பதிவு கட்டணம்
- ரூ. 10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்கள் (Immovable properties) மகளிர்
- பெயரில் பதிவு செய்தால் பதிவு கட்டணம் – 1 % குறைவு
- நடைமுறை : 01 April 2025
கால்நடை இனப்பெருக்க கொள்கை
- தமிழ்நாட்டில் கால்நடை இனப்பெருக்க கொள்கை உருவாக்கப்படும்.
- நோக்கம் : தமிழகத்தில் கால்நடை வளத்தை அதிகரித்தல் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரித்தல்.
- 100 கால்நடை மருத்துவமனைகளில் நாய்களுக்கான கருத்தடை அறுவை
- சிகிச்சை செய்யும் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு (Earned Leave) சரண் நடைமுறை
- கொரோனா பரவிருந்த காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.
- தற்போது இது மீண்டும் நடைமுறைக்கு வந்தது
- ஈட்டிய விடுப்பு நாள்களில் 15 நாள்கள் வரை சரண் செய்து பணம்
- பெறலாம்,
- நடைமுறை : 01 April 2026
அரசு ஊழியர் வாரிசுகளுக்கு சலுகைகள்
- அரசு அலுவலர்கள் விபத்தில் இறந்தால் /
- நிரந்தர ஊனம் அடைந்தால் தனிநபர் விபத்து
- காப்பீட்டு தொகை : ரூ. 1 கோடி
- பணிக்காலத்தில் இயற்கை மரணம் அடைந்தால் : ரூ. 10 லட்சம்
- வழங்கப்படும்
- கல்லூரியில் உயர்கல்வி பயிலும் மகள்களுக்கு உதவித்தொகை : ரூ. 10
- லட்சம் வரை
- அவர்களது மகள்கள் திருமண செலவிற்கு ரூ. 5 லட்சம் வீதம் நிதி உதவி
- ( ரூ. 10 லட்சம் வரை)
பழுதடைந்த வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள்
- 2001 ஆண்டுக்கு முன் பல்வேறு அரசு திட்டங்கள் மூலம் ஊரகப்
- பகுதிகளில் வாழும் விளிம்பு நிலை மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகள்
- சீரமைக்க முடியாமல் பழுதடைந்து இருக்கும் வீடுகளுக்கு மாற்றாக
- 25,000 புதிய வீடுகள் கட்டப்படும்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் : 2024
- 2030 ஆண்டுக்குள் தமிழகத்தின் ஊரக பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட்
- வீடுகள் கட்டித் தரப்படும்.
- 2024 தொடங்கப்பட்டு ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டும் பணிகள்
- நடைபெறுகின்றன.
- 2025 – 26 நிதியாண்டு ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும்.
தமிழ்நாடு சுற்றுலா ஊக்குவிப்பு வசதி சட்டம்
- 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய தமிழ்நாடு இலக்கு – 2030
- இதற்காக 18 துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
- அவற்றில் ஒன்று சுற்றுலாத்துறை
- சுற்றுலா பயணிகள் வரும் பகுதிகள் மேம்படுத்தப்படும்.
- பகுதிகள் : மாமல்லபுரம், திருவண்ணாமலை, ராமேஸ்வரம்,
- கன்னியாகுமரி, திருச்செந்தூர், பழனி & வேளாங்கண்ணி
- சுற்றுலா பூங்கா : நீலகிரி மாவட்டம் உதகையில் அமைக்கப்படும்
- உதகையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரேஸ் கோர்ஸ் பகுதியில்
- இது அமைக்கப்படும்.
- இங்கு – நறுமண பொருட்கள் தோட்டம், நகர்ப்புற வனவியல் மற்றும்
- பறவை காட்சி பகுதிகளில், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும்.
கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
- தமிழ்நாட்டில் 14 வயதுட்பட்ட அனைத்து சிறுமிகளுக்கும் தடுப்பூசி
- மனித பாப்பிலோமா வைரஸ் (HPV – Human Papilloma Virus) எதிரான தடுப்பூசி.
- சோதனை திட்டம் : 2024 – விழுப்புரம் – 9 – 14 வயது சிறுமிகளுக்கு வழங்கப்பட்டது.
கோயில்களில் திருப்பணி
- 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளப்படும்.
- இதற்காக 2025 – 26 நிதியாண்டு ரூ. 125 கோடி நிதி ஒதுக்கீடு.
- 2021 முதல் நான்காண்டுகளில் 2662 திருக்கோயில்களில் திருப்பணிகள்
- நிறைவு
விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம்
- ஒதுக்கீடு : ரூ.50 கோடி
- 3 ஆண்டுகள் பழமையான சாதாரண விசைத்தறிகளை நவீன
- விசைத்தறியாக மேம்படுத்த மானியம் வழங்கப்படும்.
- ஆண்டுதோறும் 3000 தறிகளை மேம்படுத்த நிதி உதவி பல்கலைக்கழகம்.
- சர்வதேச தரவரிசையில் அண்ணா பல்கலை. இடம்பெற செயல் திட்டம்
- அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களின்
- தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற செயல் திட்டம்.
- ஆசியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில்
- இடம்பெறச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
- Qs தரவரிசைப் பட்டியலில் முதல் 150 இடங்களுக்குள் அண்ணா
- பல்கலைக்கழகத்தை இடம் பெற செயல் திட்டம்.
- திறன்மிகு வகுப்பறைகள், நவீன தொழில்நுட்ப ஆய்வகங்கள், புதிய
- ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் முதலியன அமைக்கப்படும்.
வேட்டைப் பறவைகள் ஆராய்ச்சி அமைப்பு
- அழிந்து வரும் கழுகு, வல்லூறு இனங்களைக் காக்க இது அமைக்கப்படும்
- அவற்றின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படும்.
- இந்த பறவைகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
கடல்சார் வள அறக்கட்டளை
- தமிழகம் 1,076 கி.மீ. தொலைவுடைய கடற்கரையை கொண்டுள்ளது
- இங்கு அலையாத்தி காடுகள், பவளப் பாறைகள், கடல் புற்கள் போன்ற
- அமைப்புகள் உள்ளன.
- இதைப் பாதுகாக்க கடல் சார் வள அறக்கட்டளை அமைக்கப்படும்.
திருக்குறள்
- இதுவரை திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும் 35 உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- இதைத் தொடர்ந்து, 45 பல்வேறு உலக மொழிகளில் கூடுதலாக மொழிபெயர்க்க 133 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
- இந்த மொழிபெயர்ப்புத் திட்டத்தை, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றும்.
அரசு அலுவலர்களுக்கு குறைந்த வாடையிலான குடியிருப்பு
- 190 குடியிருப்புகள் கட்டுப்படும்
- இடம் : தாடண்டர் நகர், சைதாப்பேட்டை, சென்னை
மீண்டும் கணினி
- 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி (Tablet)
- அல்லது மடிக்கணினி வழங்கப்படும்
- அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் கைக்கணினி அல்லது
- மடிக்கணினி வழங்கப்படும்
- நிதி ஒதுக்கீடு : ரூ. 2000 கோடி
- சென்னைக்கு அருகே புதிய நகரம்
- 2000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்
- தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிதி நுட்ப வணிக மண்டலங்கள்,
- ஆராய்ச்சி & மேம்பாட்டு மையங்கள் முதலியனவை அமைக்கப்படும்
- பன்னடுக்கு கட்டடங்கள் கொண்டதாக இந்த நகரங்கள் அமையும்.
- .சென்னை மாநகரை இந்த புதிய நகரத்துடன் இணைக்க சாலை வசதிகள் & மெட்ரோ ரயில் விரிவாக்கம் உருவாக்கப்படும்
- அமைக்கும் அமைப்பு : TIDCO
- TIDCO Tamilnadu Industrial Development Corporation
குமரியில் படகு இயக்கம்
- சின்ன முட்டம் – கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வரை பயணியர்
- படகு இயக்க நடவடிக்கை.
- புதிய விமான நிலையங்கள்
- ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்
- இடம் : ராமேஸ்வரம், ராமநாதபுரம் மாவட்டம்
- சேலம் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள்
- நடைபெற்று வருகின்றன
கடல் போக்குவரத்துக் கொள்கை
- தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை – 2025 அறிமுகம்
- செய்யப்படும்
- கப்பல், படகுகள் வடிவமைப்பு, கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய
- துறைகளில் புதிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.
- இதன் மூலம் கடலூர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 30 ஆயிரம்
- வேலை வாய்ப்புகள் உருவாக்க முடியும்.
பதிப்பகத்துறை
- தேர்ந்தெடுக்கப்பட்ட 500 தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.
- புகழ்பெற்ற முன்னணி பதிப்பகங்களுடன் இணைந்து தமிழ்நாடு பாடநூல் & கல்வியியல் பணிகள் கழகம் இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
- அடுத்த 5 ஆண்டுகளில், ஆண்டிற்கு 100 நூல்கள் வீதம் (500) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்.
- உயர்தொழில்நுட்ப நூல்களை, தமிழ் மொழியில் பதிப்பாக்கம் செய்திட 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
- பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், அரிய ஆவணங்கள் – மின் பதிப்பாக்கம்
- செய்திட, வரும் நிதியாண்டில் 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
- தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புத்தக கண்காட்சிகள் இந்த ஆண்டு முதல் நடத்தப்படும்
- இந்தியாவில் – புதுதில்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா. திருவனந்தபுரம்
- வெளிநாட்டில் – சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் துபாய்
உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி
- பரிசுத்தொகை : 1 கோடி ரூபாய்
- கணினி வழி தேர்வு முறையில் போட்டி நடத்தப்படும்.
- இது உலகத் தமிழ் மையங்களில் பயின்றிடும் மாணவர்கள் பங்கேற்கும்
- வகையில் நடத்தப்படும்.
- அகரம் – மொழிகளின் அருங்காட்சியகம்
- மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில் அமைக்கப்படும்
- தமிழ் மொழிக்கும் பிற மொழிக்கும் உள்ள உறவு, தமிழ் மொழியின்
- நீண்ட பயணம் முதலிய பதிவுகள் இங்கு இடம் பெறும்.
2025 – 26 தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள்
- 8 இடங்களில் தமிழ்நாட்டில் அகழாய்வு
- சிவகங்கை மாவட்டம் – கீழடி
- தூத்துக்குடி மாவட்டம் – பட்டணமருதூர்
- தென்காசி மாவட்டம் – கரிவலம்வந்த நல்லூர்
- நாகப்பட்டினம் மாவட்டம் – நாகப்பட்டினம்
- கடலூர் மாவட்டம் – மணிக்கொல்லை
- கள்ளக்குறிச்சி மாவட்டம் – ஆதிச்சனூர்
- கோயம்புத்தூர் மாவட்டம் – வெள்ளளூர்
- சேலம் மாவட்டம் – தெலுங்கனூர்
- அண்டை மாநிலங்களில் – பாலூர் (ஒடிசா), வெங்கி (ஆந்திரா), மஸ்கி (கர்நாடகா)
ஆழ்கடல் அகழாய்வுகளை தமிழ்நாட்டின் கடற்கரை பகுதியில் மேற்கொள்ள திட்டம்
- முதல் கட்டமாக : காவிரிப்பூம்பட்டினம் – நாகப்பட்டினம் வரை மேற்கொள்ளப்படும்.
- நொய்யல் அருங்காட்சியகம் ஈரோடு மாவட்டத்தில் அமைக்கப்படும்.
- கொடுமணல் அகழாய்வுகளை காட்சிப்படுத்தும் பொருட்டு அமைக்கப்படும்.
நாவாய் அருங்காட்சியம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்படும்
- சங்ககால பாண்டியரின் கடல் வழி வணிக சிறப்பை விளக்கிடும் வகையில் அமைக்கப்படும்.
சிந்துவெளி பண்பாட்டு அரங்கம்
- இடம் : சென்னை எழும்பூர் அருங்காட்சியகம்
- சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பில் நூற்றாண்டு நிறைவையொட்டி அமைக்கப்படும்.
- மரபுசார் கட்டடக்கலை வடிவமைப்புடன் கூடிய காட்சி அரங்கம்
- இது சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்படும்.
- எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன்னால் உருவான 2000 மேற்பட்ட செப்பு திருமேனிகள் உள்ளன
- இதனை வெளிநாட்டவர்கள் கண்டு வியக்க இந்த அரங்கம் அமைக்கப்படும்.
தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள்
- இடம் : மாமல்லபுரம் மற்றும் திருவண்ணாமலை
- நோக்கம் : பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு
- தமிழரின் தொன்மை தொடர்பாக விளக்குதல்.
இரும்பின் தொன்மை
- தமிழ் நிலப்பரப்பில் 5300 ஆண்டுகளுக்கு முன்னரே
- இரும்பு உருக்கும் தொழில்நுட்பம் அறிமுகம்
- இந்திய துணை கண்டத்தின் வரலாறு – தமிழ் நிலப்பரப்பிலிருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும்.
விடியல் பயணத்தின் வெற்றி
- முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாளில் கையெழுத்திட்ட திட்டம்
- பேருந்து பயணம் செய்பவர்களில் பெண்களின் சதவீதம் 40 – 65 % ஆக
- உயர்ந்துள்ளது
- தினமும் 50 லட்சம் மகளிர் பயணம் மாதம் ஒன்றுக்கு ரூ.888 ஒவ்வொருவருக்கும் சேமிக்க முடிகிறது.
தோழி பணிபுரியும் மகளிர் விடுதிகள்
- ஏற்கனவே 13 இடங்களில் இது இயங்குகின்றன
- தற்போது மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்படுத்தும் வகையில் கட்டப்படும்.
டைடல் தொழில்நுட்ப பூங்கா
- ஓசூர் மற்றும் விருதுநகரில் அமைக்கப்படும்
- இதன்மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
- ஓசூரில் அறிவு சார் தொழில்நுட்ப தடம் அமைக்கப்படும்.
நீலக்கொடி சான்றிதழ்
- 6 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி
- சென்னை : திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி
- தூத்துக்குடி : குலசேகரபட்டினம்
- விழுப்புரம் : கீழ்புதுப்பட்டு
- கடலூர் : சாமியார்பேட்டை
வீட்டுமனை பட்டா
- ஆட்சேபமற்ற புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும்
- மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்
- சொந்த வீடு அற்ற & நிலமற்ற மக்களுக்கு வழங்கப்படும்
- 2025 – 26 ஆண்டு 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா
- வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்கால மானியம்
- ஒவ்வொரு மீனவருக்கும் ரூ.8,000 வீதம் வழங்கப்படுகிறது.
- மத்திய அரசின் பங்களிப்பு : ரூ.1,500
- மாநில அரசின் கூடுதல் பங்களிப்பு : ரூ, 6,500
- இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு
- வழங்கப்பட்ட ரூ.350 தின உதவித்தொகை ரூ.500 ஆக
- உயர்த்தப்பட்டுள்ளது.
- முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு கூடுதலாக 3000 வீடுகள்
- கட்டி தரப்படும்.
Regional Rapid Transit System ( RRTS)
- வட மாநிலங்களில் அமைக்கப்பட்டுவரும் RRTS ரயில்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும்
- RRTS – விரைவான மண்டல ரயில் போக்குவரத்து முறை
- இந்த திட்டம் மூலம் முக்கிய நகரங்களை புறநகரங்களில் இணைக்க முடியும்.
தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் – 2030
- இது 5 ஆண்டு கால திட்டம்
- ரூ. 500 கோடி மதிப்பீட்டில் அறிமுகம் செய்யப்படும்.
- செமி கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு & பரிசோதனை மையம் – சென்னையில் அமைக்கப்படும்
- கோவை சூலூர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பிலும் பல்லடம் அருகே 100
- ஏக்கர் பரப்பிலும் செமி கண்டக்டர் உற்பத்தி இயந்திர தொழில் பூங்கா அமைக்கப்படும்.
- அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தைவான் நிறுவனங்கள் இதை சேர்ந்து அமைக்கும்.
வியன் திறன்மிகு மையம் (Viyan – Centre of Excellence)
- இடம் : சென்னை
- வியன் (Viyan) AVGC-XR Hub எனும் பெயரில் உருவாக்கப்படும்
- AVGC-XR Hub – Animation, Visual Effects, Gaming, Comics and Extended Reality
- இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு, சித்திரக் கதைகள் மற்றும்
- விரிவாக்கப்பட்ட மெய்நிகர்
காலனி உற்பத்தி தொழில் பூங்காக்கள்
- கடலூர் & மதுரை மாவட்டம் – மேலூர் ஆகிய இரண்டு இடங்களிலும்
- அமைக்கப்படும்
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலனி திறன் பயிற்சி மையம்
- அமைக்கப்படும்.
10 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும்
- இடங்கள் : குன்னூர், நத்தம், ஆலந்தூர், விக்கிரவாண்டி, செய்யூர்,
- மானாமதுரை, பெரம்பலூர், ஒட்டப்பிடாரம்
- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் – மாணவர்கள்
- விரும்பி தேர்ந்தெடுக்கும் பாடப்பிரிவுகளுக்கு கூடுதலாக 15,000 இடங்கள்
- தொடங்கப்படும்.
- 2025 – 26 கல்வி ஆண்டு முதல் இது தொடங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அறிவிப்பு
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும்
- மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனப் பிரதிநிதித்துவம்
- இதற்கான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.
- தனியார் நிறுவனங்கள் 10 மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தி
- இருந்தால் –
- மாறும் தோறும் ஒரு நபருக்கு 2000 ரூபாய் வீதம் ஊதிய மானியம் 1 ஆண்டுக்கு அரசு வழங்கும்.
- தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும்
- இது சென்னையில் அமைக்கப்படும்
- மாநில அளவிலான வெப்ப அலை செயல்திட்டம் தயாரிக்கப்படும்.
நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம்
- நோக்கம் : ஆதிதிராவிடர் & பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்
- விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக உயர்த்துதல்
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க நடவடிக்கை
- 10 இடங்களில் இவை அமைக்கப்படும்
- திருநெல்வேலி மாவட்டம் – திசையன்விளை
- அரியலூர் மாவட்டம் – தா.பழூர்
- ராமநாதபுரம் மாவட்டம் – திரு உத்திரகோசமங்கை
- திருச்சி மாவட்டம் – மணப்பாறை
- புதுக்கோட்டை மாவட்டம் – ஏம்பல்
- காஞ்சிபுரம் மாவட்டம் – சாலவாக்கம்
- மயிலாடுதுறை மாவட்டம் – செம்பனார்கோவில்
- திருப்பூர் மாவட்டம் – காங்கேயம்
- தென்காசி மாவட்டம் – குறுக்கள்பட்டி
- நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோடு
- இதனால், ஆண்டொன்றுக்கு கூடுதலாக 1,308 மாணவ, மாணவிகள் பயிற்சி
- பெற்றுப் பயனடைவர்.
விடுதி வசதிகளுடன் தொழிற்பயிற்சி
- நோக்கம் : கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் தொழிற்கல்வி
- பெறுதல்.
- கட்டுமானத் தொழிலாளர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் விடுதி
- வசதிகளுடன் தொழில் பயிற்சி மையங்கள்.
- 7 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தலா 6 தொழிற்பிரிவுகளுடன்
- தொடங்கப்படும்
மருத்துவ பரிசோதனை அட்டை
- 40 வயதுக்கு மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முழு உடல்
- பரிசோதனை
- கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள
- தொழிலாளர்களுக்கு இந்த திட்டம்.
2,000 தொழிலாளர்களுக்கு மின் வாகனம் வாங்க மானியம்
- தமிழகத்தில் இணையம் சார்ந்த சேவைப் பணித் தொழிலாளர்களுக்கு
- வழங்கப்படும்.
- 2 ஆயிரம் பேருக்கு புதிதாக இரு சக்கர மின் வாகனம் வாங்குவதற்காக
- தலா ரூ.20 ஆயிரம் மானியம்.
- தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நல
- நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்களுக்கு வழங்கப்படும்
- 5 லட்சம் தொழிலாளர்களுக்கு விபத்து மரணம் மற்றும் இயலாமை
- இழப்பீட்டுக்கான குழு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
- இவர்களுக்கு ஓய்வுக் கூடங்கள் சென்னை, கோவை உள்ளிட்ட
- பெருநகரங்களில் உருவாக்கப்படும்
பசுமை ஆற்றல்
- தமிழகத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட
- மாநிலமாக்க இலக்கு – 2030
- இதற்கு மின் தேவை தற்போதைவிட இரு மடங்கு அதிகமாகும்
- 100 பில்லியன் யூனிட் புதுப்பித்தக்க பசுமை ஆற்றலை கூடுதலாக
- உற்பத்தி செய்ய புதிய செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும்
- வெள்ளிமலை – ஆழியாறில் ரூ.11,721 கோடியில் நீரேற்று மின் திட்டங்கள்
- வெள்ளிமலைப் பகுதியில் – 1,100 மெகாவாட் திறன் நீரேற்று மின் திட்டம்
- ஆழியாறு பகுதியில் – 1,800 மெகாவாட் திறன் நீரேற்று மின் திட்டம்
- மலைப்பகுதிகளில் 14 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்
- 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம்
- உயர்த்தப்படும்
மாபெரும் நூலகங்கள்
- இடங்கள் : சேலம், கடலூர், திருநெல்வேலி
- தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் மாபெரும் நூலகங்கள் அமைக்கப்படும்
- மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு இதுவரை 15 லட்சத்துக்கும்
- மேற்பட்ட வாசகர்கள் வருகை.
- கோவை மற்றும் திருச்சியில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும்
- பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை அறிவியல் மையம்
- சிங்கப்பூர் அறிவியல் மையத்துடன் இணைந்து உருவாக்கப்படும்.
- இந்த மையத்தில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப்
- புலங்கள், விண்வெளி, வானவியல் துறைகளின் மெய்நிகர் மாதிரிகள்
- இடம் பெற்றிருக்கும்.
- பள்ளி உடற்கல்வி பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு
- 2 சர்வதேச செஸ் சாம்பியன்கள் தமிழ்நாட்டில் இருந்து
- உருவாகியுள்ளனர். ( விஸ்வநாதன் ஆனந்த் & டி. குகேஷ் )
- 31 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ் மண்ணிலிருந்து உருவாகியுள்ளனர்.
‘முதல்வர் படைப்பகம்‘
- தமிழகம் முழுவதும் 30 இடங்களில் தலா ரூ.5 கோடியில் முதல்வர்
- படைப்பகங்கள் அமைக்கப்படும்.
- போட்டித் தேர்வுகளுக்கான நூலகம், கட்டணமில்லா இணைய வசதி,
- குளிரூட்டப்பட்ட ஆலோசனைக் கூடங்கள் அமைக்கப்படும்.
கணினி கட்டமைப்புடன் கூடிய அலுவலக வசதி அமைக்கப்படும்
- போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு
- அறிவார்ந்த சூழலை ஏற்படுத்துதல்.
- புத்தொழில் முனைவோருக்கான பகிர்ந்த பணியிட சேவை (Co working space) வசதிகளை வழங்குதல்.
- சென்னை – கொளத்தூரில் தொடங்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்‘ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது
- விண்வெளி தொழில்நுட்ப ஆய்வகம் சென்னையில் ஏற்படுத்தப்படும்.
- விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் புத்தொழில்
- நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- செயற்கைக்கோள் சோதனைகளுக்கு தேவையான முன் மாதிரி தயாரிப்பு
- ஆய்வகம், விண்வெளி பரிசோதனை வசதிகள் முதலியன
2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
- 2,676 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ரூ.65 கோடியில் அமைக்கப்படும்.
- 2025-26-இல் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடும் பொருட்டு ரூ,1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 2 ஆயிரம் பள்ளிகளுக்கு ரூ.160 கோடி மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.
- அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயின்று வரும் பள்ளிகளில் 880 உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் தரம் உயர்த்தப்படும்.
2025 – 26 நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்யப்படும்.
- மேலும் பயன்பாட்டுக்கு உகந்த 750 பேருந்துகள் முற்றிலும் புதுப்பிக்கப்படும்.
- காற்று மாசுபாட்டை குறைக்க : 1,125 மின் பேருந்துகள்.
- உலக வங்கி & ஜெர்மன் வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
சென்னை மாநகரத்துக்கு 950 மின் பேருந்துகள்
- கோவை மாநகரத்துக்கு 75 மின் பேருந்துகள்
- மதுரை மாநகரத்துக்கு 100 மின் பேருந்துகள்.
- போக்குவரத்து துறையில் 700 டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு
- (சிஎன்ஜி) மூலம் இயங்கும் பேருந்துகளாக மறுசீரமைப்பு செய்யப்படும்.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திட்டம்
- உயர்கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தவருக்கும் மாதம் ரூ.1,000
- வழங்கப்படும்
- புதுமைப் பெண் & தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை ஈடுபடுத் திட்டமிடப்பட்டுள்ளது.
- முதல்கட்டமாக – 50 மூன்றாம் பாலினத்தவர்களைக் காண்டு, சென்னை,
- தாம்பரம், ஆவடி மாநகரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை
- முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் இந்த உதவி தொகை வழங்கப்படும்.
- வறிய நிலையில் 50 ஆயிரம் குடும்பங்களில் குழந்தைகள் தங்களின் இரண்டு பெற்றோரையும இழந்து வாழ்கின்றனர்.
- இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை
- நோக்கம் : 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு வரை
- இடைநிற்றல் இன்றி பயிலுதல்
- அடிப்படை அறிவியல் மற்றும் கணித ஆராய்ச்சி மையங்கள்
- சென்னை & கோவையில் இவை ஏற்படுத்தப்படவுள்ளன.
- Indian Institute of Science, Tata Institute of Fundamental Research CLIП6m
- நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படும்.
நான் முதல்வன் திட்டம்
- இதுவரை38 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
- கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற மாணவர்களில்04 லட்சம் மாணவர்கள்
- வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
- ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கும் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
- UPSC ஊக்கத் தொகை
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- மத்திய குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் 10
- மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படுகிறது.
- முதல்நிலைத் தேர்வில் (Preliminary exam) தேர்ச்சி பெற்றவர்களுக்கு
- ரூ.25,000 வழங்கப்படுகிறது.
- முதன்மைத் தேர்வில் (Mains) வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு
- தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
சிட்கோ தொழிற்பேட்டை
- காஞ்சிபுரம் மாவட்டம் – திருமுடிவாக்கம்
- விழுப்புரம் மாவட்டம் – சாரம் மற்றும் நாயனூர்
- கரூர் மாவட்டம் – நாகம்பள்ளி
- திருச்சி மாவட்டம் – சூரியூர்
- மதுரை மாவட்டம் – கருத்தபுளியம்பட்டி
- ராமநாதபுரம் மாவட்டம் – தனிச்சியம்
- தஞ்சாவூர் மாவட்டம் – நடுவூர்
- திருநெல்வேலி மாவட்டம் – நரசிங்கநல்லூர்
- தமிழ்நாடு சிறுதொழில் முன்னேற்றக் கழகத்தால் (சிட்கோ) புதிய
- தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
- SIDCO Small Industries Development Corporation
- இதன் வாயிலாக 17,500 பேருக்கு பணி வாய்ப்பு கிடைக்கும்.
எட்டையபுரம் பாரதி இல்லம்
- எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் இல்லம் உள்பட 17 புராதனக்
- கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும்.
- சென்னை பல்கலைக்கழக மெரீனா வளாகத்தில் உள்ள – கீழைக்
- கலையியல் ஆய்வு நிறுவன புராதனக் கட்டடம்.
- ராணிப்பேட்டை – தேசிங்கு ராஜா ராணி நினைவகம்
- கோவை – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையம்
- திருச்சி – ராணி மங்கம்மாள் கோட்டை வளாக அலுவலகங்கள்
- தூத்துக்குடி – எட்டையபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்லம்
4 வழித்தட உயர்நிலை சாலை
- திருவான்மியூர் – உத்தண்டி இடையே 4 வழித்தட உயர்நிலை சாலை
- அமைக்கப்படும்
- அமைக்கும் அமைப்பு : தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம்
- வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை
- – 3 km நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்படும்.
- கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரயில்வே துறையுடன் இணைந்து அமைக்கப்படும்.
சென்னையின் குடிநீர் தேவைக்கு ரூ.350 கோடியில் புதிய நீர்த்தேக்கம்
- செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைக்கப்படும்
- கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு நிலையம் அமைக்கப்படும்.
- இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம் அமைக்கப்படும்.
- தானியங்கி பொருள் மீட்பு மையம் ( Automatic Material Recovery Facility) அமைக்கப்படும்
- 21 MW திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்
- பணி தொடங்கப்படும்.
- தாம்பரம் மாநகராட்சியில் – திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும்
- ஆலை அமைக்கப்படும்.
- இதன்மூலம் 1500 மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவு மூலம் தினமும்
- 15 – 18 MW மின்சாரம் தயாரிக்கப்படும்
முதன்மை சுற்றுக் குழாய் திட்டம்
- தற்போது – சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் 5 நீர் சுத்திகரிப்பு
- நிலையங்கள் & 3 கடல் நீரை குடிநீர் ஆக்கும் நிலையங்கள் உள்ளன.
- தேவைப்படும்போது ஒரு பகுதியின் உபரி நீரை, பற்றாக்குறை உள்ள
- மற்றொரு பகுதிக்கு மாற்று இயலவில்லை.
- எனவே முதன்மை சுற்றுக் குழாய் திட்டம் மூலம் அனைத்து
- பகுதிகளுக்கும் சமமான அளவில் குடிநீர் வழங்கப்படும்.
- இந்த திட்டம் 3 ஆண்டு காலத்துக்குள் நிறைவேற்றப்படும்.
பல்லுயிர் பூங்காக்கள்
- 7 மழை நீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள்
- (Sponge park) சென்னை பெருநகர பகுதியில் அமைக்கப்படும்.
- நோக்கம் : பருவ நிலை மாற்றத்தில் இருந்து மீட்பதற்காக.
இருமொழிக் கொள்கை
- தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்றுக் கொள்ளாததால் ரூ.2,152
- கோடியை மத்திய அரசு தமிழகத்துக்கு விடுவிக்கவில்லை.
- தமிழக மாநில அரசே தனது சொந்த நிதியை விடுவிக்கும்.
தமிழக அரசால் நடத்தப்பட்ட சர்வதேச போட்டிகள்
- 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022
- கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் – 2023
- தெற்காசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் – 2024
- ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை – 2023
பிற முக்கிய தகவல்கள்
- அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டம் – இந்த திட்டத்தின் கீழ் 2025-26 நிதியாண்டில் ரூ.65 கோடி நிதி ஒதுக்கப்படும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உலகளாவிய
- கல்வி வாய்ப்புகளை வழங்குகின்ற திட்டம்.
- வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கு தமிழ்மொழி மற்றும் நாட்டுப்புறக் கலைகள் பயிற்றுவிக்கப்படும்
- 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களைக் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்திடப்படும்
- அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்குத் பயிற்றுவிக்கப்படும்.
- ராமேசுவரம் தீவில் அமைந்துள்ள தனுஷ்கோடி பகுதியை பூநாரை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- திருவண்ணாமலை – செங்கம் நிலப்பரப்பின் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க பல்லுயிர்ப் பூங்கா அமைக்கப்படும்.
- சென்னை மெட்ரோ : 2025 டிசம்பர் முதல் பூந்தமல்லி – போரூர் இடையே மெட்ரோ ரயில் இயக்கம் தொடங்கப்படும்.
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை புரியும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்– வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- 2025-26-இல் 1,721 முதுநிலை ஆசிரியர்கள் & 841 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
- 2025-2026 நிதியாண்டு ஒரு லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,500 கோடி கல்விக் கடன்
- வெளிநாட்டிலுள்ள பல்கலைக்கழங்களில் தமிழக மாணவர்கள் பயின்றிட ரூ.10 கோடி நிதி.
- நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் நீட்டிக்கப்படும்.
- 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்கப்படும்
- 2025 – 26 நிதியாண்டு முதல் ஒருங்கிணைந்த நீர்வள மேம்பாட்டுத் திட்டம்
- முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26-இல்
- 6,100 கி.மீ. நீளமுள்ள கிராமச் சாலைகள் மேம்படுத்தப்படும்
