TNPSC CURRENT AFFAIRS PDF –05th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 05 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

Tamil Nadu

1.A three day defence expo, which will see the participation of more than 400 micro, small,and medium enterprises (MSMEs), will be held between March 19 and 21 at the Chennai Trade Centre. The expo is being organised by Swatantra Foundation, a Chennai based policy research and advocacy institution, and the Aerospace Industry Development Association of Tamil Nadu (AIDAT).

400 க்கும் மேற்பட்ட மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) பங்கேற்கும் மூன்று நாள் பாதுகாப்பு கண்காட்சி மார்ச் 19 முதல் 21 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை சென்னையை சேர்ந்த கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான ஸ்வாதந்திர அறக்கட்டளை மற்றும் தமிழகத்தின் விண்வெளி தொழில் மேம்பாட்டு சங்கம் (AIDAT) ஏற்பாடு செய்துள்ளன.

2.The Tamil Nadu Chief Minister Edappadi K. Palaniswami handed over a cheque of ₹75 lakh to the organisers of the Chennai International Film Festival (CIFF) on February 4. The 18th edition of the film festival is scheduled to be held from February 18 to 25, 2021.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் (CIFF) அமைப்பாளர்களுக்கு 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலையை வழங்கினார். சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 18 வது பதிப்பு சென்னையில் பிப்ரவரி 18 முதல் 25 வரை நடைபெற உள்ளது.

India

3.The Government has launched a campaign namely Kalam Program for Intellectual Property Literacy and Awareness Campaign (KAPILA) for Intellectual Property Literacy and creating patent awareness on 15th October, 2020.

அறிவுசார் சொத்து எழுத்தறிவு மற்றும் காப்புரிமை விழிப்புணர்வை ஏற்படுத்த ‘கலாம் அறிவுசார் சொத்து எழுத்தறிவு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் (KAPILA)’ என்கிற பிரச்சாரம் ஒன்றை அக்டோபர் 15 அன்று இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது.

4.The 13th edition of Aero India 2021, Asia’s largest Aerospace and Defence Exhibition is being held at Air Force Station, Yelahanka, Bengaluru between February 03-05, 2021. Aero India is a biennial air show and aviation exhibition. It is organised by the Defence Exhibition Organisation, Ministry of Defence. The first edition of the air show was held in 1996.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி ‘ஏரோ இந்தியா 2021’ இன் 13 வது பதிப்பு, பிப்ரவரி 3 முதல் 5 வரை பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் நடைபெறுகிறது. ‘ஏரோ இந்தியா’ நிகழ்வு இரண்டாண்டிற்கு ஒரு முறை நடைபெறும் விமான காட்சி மற்றும் கண்காட்சி ஆகும். இது பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு கண்காட்சி அமைப்பால்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 1996 இல் நடைபெற்றது.

5.Indian Navy conducted a seminar on Building Collective Maritime Competence towards Security and Growth for All in the Region (SAGAR) on 4th February, 2021, during the ongoing Aero India 2021.

‘​​பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை நோக்கி கூட்டு கடல்சார் திறனை வளர்ப்பது (SAGAR)’ குறித்த கருத்தரங்கம் பிப்ரவரி 4 ஆம் தேதி ‘ஏரோ இந்தியா 2021’ நிகழ்வில் இந்திய கடற்படையால் நடத்தப்பட்டது.

International

6.The Indian Ocean Region Defence Ministers’ Conclave was hosted by India on February 4, 2021. The event took place in the backdrop of Aero India 2021. The theme of the Indian Ocean Region Defence Ministers’ Conclave is ‘Enhanced Peace, Security, and Cooperation in the Indian Ocean’.

இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை பிப்ரவரி 4, 2021 அன்று இந்தியா நடத்தியது. இந்த நிகழ்வு ‘ஏரோ இந்தியா 2021’ இன் ஒரு பகுதியாக நடந்தது. ‘இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டின்’ மையப்பொருள் ‘இந்தியப் பெருங்கடலில் – மேம்படுத்தப்பட்ட அமைதி, பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு’.

7.India slipped two places to 53rd position in the 2020 Democracy Index’s global ranking, according to The Economist Intelligence Unit, which said the “democratic backsliding” by authorities and “crackdowns” on civil liberties has led to a further decline in the country’s ranking. Out of 167 countries, the Democracy Index classifies 23 countries as full democracies, 52 as flawed democracies, 35 as hybrid regimes and 57 as authoritarian regimes. India has been classified as a ‘flawed democracy’ along with countries such as the US, France, Belgium and Brazil. The 1st, 2nd, 3rd, 4th and the 5th ranks have been secured by Norway, Iceland, Sweden, New Zealand and Canada respectively in the index.

2020 ஜனநாயக குறியீட்டின் உலகளாவிய தரவரிசையில் இந்தியா இரண்டு இடங்கள் சரிந்து 53 வது இடத்தில் உள்ளது என்று ‘தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட்’ அமைப்பு தெரிவித்துள்ளது, இது அதிகாரிகளின் “ஜனநாயக பின்னடைவு” மற்றும் சிவில் உரிமைகள் மீதான “ஒடுக்குமுறைகள்” நாட்டின் தரவரிசையில் மேலும் சரிவுக்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் குறியீடு, 167 நாடுகளை 23 நாடுகள் முழு ஜனநாயக நாடுகளாகவும், 52 குறைபாடுள்ள ஜனநாயக நாடுகளாகவும், 35 கலப்பின ஆட்சிகளாகவும், 57 சர்வாதிகார ஆட்சிகளாகவும் வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், பிரேசில் போன்ற நாடுகளுடன் இந்தியா ஒரு ‘குறைபாடுள்ள ஜனநாயகம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. நார்வே, ஐஸ்லாந்து, சுவீடன், நியூசிலாந்து மற்றும் கனடா ஆகியவை குறியீட்டில் முதல் ஐந்து இடங்களை முறையே பெற்றுள்ளன.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is organising the three day Chennai Defence Expo in March 2021?

Swatantra Foundation

Aerospace Industry Development Association of Tamil Nadu

Both 1 and 2

Neither 1 nor 2

மார்ச் 2021 இல் மூன்று நாள் சென்னை பாதுகாப்பு கண்காட்சியை ஏற்பாடு செய்வது யார்?

ஸ்வதந்திர அறக்கட்டளை

தமிழகத்தின் விண்வெளி தொழில் மேம்பாட்டு சங்கம்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

2.The 18th edition of Chennai International Film Festival is scheduled to be held from

February 15

February 16

February 17

February 18

சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 18 வது பதிப்பு எப்போது நடைபெற உள்ளது?

பிப்ரவரி 15

பிப்ரவரி 16

பிப்ரவரி 17

பிப்ரவரி 18

3.The Asia’s largest Aerospace and Defence Exhibition ‘Aero India’ is

An annual event

A biennial event

A triennial event

None of the above

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி ‘ஏரோ இந்தியா’ எத்தனை ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது?

1

2

3

மேற்கூறிய எதுவும் இல்லை

4.What is the rank of India in 2020 Democracy Index?

52nd

53rd

54th

55th

2020 ஜனநாயக குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை எண் என்ன?

52 வது

53 வது

54 வது

55 வது

5.Where is the 13th edition of ‘Aero India 2021’ held?

Delhi

Chennai

Bangalore

Mumbai

‘ஏரோ இந்தியா 2021’ இன் 13 வது பதிப்பு எங்கே நடைபெறுகிறது?

டெல்லி

சென்னை

பெங்களூர்

மும்பை

6.Which Country hosted the Indian Ocean Region Defence Ministers’ Conclave in 2021?

India

Sri Lanka

Maldives

Myanmar

2021 இல் இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டை நடத்திய நாடு எது?

இந்தியா

இலங்கை

மாலத்தீவுகள்

மியான்மர்

7.The awareness campaign KAPILA is related to

Healthcare

Education

Intellectual Property

Nutrition

KAPILA என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் எதனோடு தொடர்புடையது?

உடல்நலம்

கல்வி

அறிவுசார் சொத்து

ஊட்டச்சத்து

8.When was the first edition of the ‘Aero India’ held?

1994

1995

1996

1997

‘ஏரோ இந்தியா’வின் முதல் பதிப்பு எப்போது நடைபெற்றது?

1994

1995

1996

1997

 

                                                      DOWNLOAD  Current affairs -05 FEB- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us