TNPSC CURRENT AFFAIRS PDF –06th Feb 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 06 Feb 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC February Daily Current Affairs 2021

TNPSC Daily Current Affairs 2021

Tamil Nadu

1.The Tamil Nadu Higher Education Department has issued an order directing colleges to reopen for all students from February 8. The order has said the colleges will function for six days.

வரும் 8ந்தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் நிலையில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

India

2.The Governor of Reserve Bank of India, Shaktikanta Das, has announced that the central bank will set up a 24*7 helpline platform in order to strengthen the digital payment services in India.

இந்தியாவில் டிஜிட்டல் கட்டண சேவைகளை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி 24 * 7 மொபைல் உதவி சேவையை அமைக்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

3.The Ministry of Housing and Urban Affairs (MoHUA) has signed a memorandum of understanding (MoU) with Zomato under the Prime Minister Street Vendor’s Atma Nirbhar Nidhi (PM-SVANidhi) Scheme for empowering street food vendors with new digital technology and to provide greater income-earning opportunities on the food delivery platform.

தெரு உணவு விற்பனையாளர்களை புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்துவதற்கும், உணவு விநியோக வாய்ப்புகள் மூலம் அதிக வருமானத்தை வழங்குவதற்கும் ‘பிரதமர் தெரு விற்பனையாளரின் ஆத்மநிர்பார் நிதி (PM-SVANidhi)’ திட்டத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoHUA) Zomato நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டுள்ளது.

4.The Delhi Chief Minister Arvind Kejriwal has launched ‘Switch Delhi’, an electric vehicle mass awareness campaign, to sensitize citizens about the benefits of switching to electric vehicles on February 4, 2021.

மின்சார வாகனங்களுக்கு மாறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘ஸ்விட்ச் டெல்லி’ என்கிற விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் பிப்ரவரி 4, 2021 அன்று டெல்லியில் தொடங்கிவைத்தார்.

5.The Union government has informed the Supreme Court that it is “agreeable” to give the UPSC aspirants, who appeared in the Civil Services Exam – 2020 as their “last permissible attempt” but are not age-barred, another crack at the exam in Civil Services Preliminary Exam 2020.

கடந்த ஆண்டு (2020) மத்திய குடிமைப் பணிகள் ஆணையம் நடத்திய ‘குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வில்’ தோன்றிய தேர்வர்கள் அவர்களின் “கடைசி அனுமதிக்கப்பட்ட வாய்ப்பில்” எழுதியவர்கள் என்றால் அவர்களுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்க ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது, ஆனால் அந்த வாயப்பை பெறவுள்ளவர்கள் தேர்வுக்கான வயது வரம்பு உள்ளவர்களாகவும், கடந்த (2020) முதல்நிலைத்தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.The High-speed 4G internet services were restored on Friday in the whole of Jammu & Kashmir in view of the “overall security situation” in the Union territory. The Internet services across J&K were completely shut down on August 5, 2019 in the wake of the revocation of the special status of J&K and subsequently restored at 2G speed.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்தது மத்திய அரசு. அதிலிருந்து ஜம்மு காஷ்மீரில் அதிவேக இன்டெர்நெட் 4ஜி தொடர்பு மாநிலம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குப் பின் 2 ஜி சேவையும், கடந்த ஆகஸ்ட்டில் 2 மாவட்டங்களில் மட்டும் 4ஜி சேவையும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் மின்துறை முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் வெளியிட்டுள்ள தகவலில், ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி மொபைல் இன்டர்நெட் சேவை மீண்டும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

International

7.The International Day of Human Fraternity was celebrated on February 4, 2021 by the United Nations. The theme for the year 2021 is: ‘A Pathway to the Future’.

சர்வதேச மனித சகோதரத்துவ தினம் பிப்ரவரி 4, 2021 அன்று ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டாடப்பட்டது. 2021 ஆம் ஆண்டிற்கான மையப்பொருள்: ‘எதிர்காலத்திற்கான பாதை’.

8.The Military regime in Myanmar has announced the establishment of a new State Administrative Council. The council headed by the Army Chief General Min Aung Hlaing has eleven members out of which 8 are from the military.

மியான்மரில் இராணுவ ஆட்சி புதிய மாநில நிர்வாக சபை ஒன்றை நிறுவுவதாக அறிவித்துள்ளது. இராணுவத் தலைவர் ஜெனரல் மின் ஆங் லேங் தலைமையிலான சபையில் பதினொரு உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களில் 8 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.The Ministry of Housing and Urban Affairs (MoHUA) has signed a memorandum of understanding (MoU) with which company under the ‘Prime Minister Street Vendor’s Atma Nirbhar Nidhi’ Scheme?

Facebook

Zomato

WhatsApp

Telegram

‘பிரதம மந்திரி தெரு விற்பனையாளரின் ஆத்மா நிர்பர் நிதி’ திட்டத்தின் கீழ் எந்த நிறுவனத்துடன் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MoHUA) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது?

Facebook

Zomato

WhatsApp

Telegram

2.The awareness campaign ‘Switch Delhi’ was recently launched by

Shivraj Singh Chauhan

Arvind Kejriwal

K. Palaniswami

Bhupesh Baghel

விழிப்புணர்வு பிரச்சாரம் ‘ஸ்விட்ச் டெல்லி’ சமீபத்தில் யாரால் தொடங்கப்பட்டது?

சிவ்ராஜ் சிங் சௌகான்

அரவிந்த் கெஜ்ரிவால்

கே.பழனிசாமி

பூபேஷ் பகேல்

3.When the International Day of Human Fraternity is celebrated?

1. February 1

2. February 2

3. February 3

4. February 4

சர்வதேச மனித சகோதரத்துவ தினம் என்று கொண்டாடப்படுகிறது?

1. பிப்ரவரி 1

2. பிப்ரவரி 2

3. பிப்ரவரி 3

4. பிப்ரவரி 4

4.The Reserve Bank of India has recently announced to set up a 24*7 helpline for

Currency Exchange

Loan Approval

Digital Payments

Banking Frauds

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்த 24 * 7 மொபைல் உதவி சேவை எந்த பயன்பாட்டிற்காக?

நாணய மாற்றம்

கடன் ஒப்புதல்

டிஜிட்டல் கட்டணம்

வங்கி மோசடிகள்

5.The awareness campaign ‘Switch Delhi’ is related to

Metro Trains

CNG Buses

Electric Vehicles

Bicycles

விழிப்புணர்வு பிரச்சாரம் ‘ஸ்விட்ச் டெல்லி’ கீழ்காணும் எதனோடு தொடர்புடையது?

மெட்ரோ ரயில்கள்

சி.என்.ஜி பேருந்துகள்

மின்சார வாகனங்கள்

மிதிவண்டிகள்

6.What is the theme of International Day of Human Fraternity for the year 2021?

A Gateway to the future

A Pathway to the future

An idea for the future

Peace for the future

2021 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித சகோதரத்துவ தினத்தின் மையப்பொருள் என்ன?

1. எதிர்காலத்திற்கான நுழைவுவாயில்

2. எதிர்காலத்திற்கான பாதை

3. எதிர்காலத்திற்கான ஒரு யோசனை

4. எதிர்காலத்திற்கான அமைதி

7.In which country, a new State Administrative Council was recently established by the military regime?

Nepal

Sri Lanka

Myanmar

Maldives

சமீபத்தில் எந்த நாட்டில், ஒரு புதிய மாநில நிர்வாக சபை இராணுவ ஆட்சியால் நிறுவப்பட்டது?

நேபாளம்

இலங்கை

மியான்மர்

மாலத்தீவுகள்

 

                                                      DOWNLOAD  Current affairs -06 FEB- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading