TNPSC CURRENT AFFAIRS PDF –07th APR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 07 Apr 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC April Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

Tamil Nadu

1.Tamil Nadu recorded an overall voter turnout of 71.79% in the 2021 State Legislative Assembly Election amid the COVID-19 pandemic. Chennai district saw the lowest voter turnout in the state with 59.40%, while Kallakurichi recorded the highest at 78%.

கோவிட் -19 தொற்று நோய்க்கு மத்தியில் நடைபெற்ற 2021 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 71.79% வாக்குகள் பதிவானது. மாநிலத்தில் மிகக் குறைவாக சென்னை மாவட்டத்தில் 59.40% ஆகவும், மிக அதிகமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% ஆகவும் பதிவாகியுள்ளது.

India

2.Election Commission of India hosted the International Virtual Election Visitors Programme (IEVP) 2021 on April 5-6, 2021 for Election Management Bodies (EMBs) /Organisations from 26 countries and three International Organisations during the ongoing elections for Legislative Assemblies of Assam, Kerala, Puducherry, Tamil Nadu and West Bengal.

தற்போது நடைபெற்று வரும் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் சட்டமன்றத் தேர்தலின்போது 26 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் மேலாண்மை அமைப்புகள் (EMBs) மற்றும் மூன்று சர்வதேச அமைப்புகளுக்காக சர்வதேச மெய்நிகர் தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் (IEVP) 2021 ஐ இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 5-6 தேதிகளில் நடத்தியது.

3.The Indian Railways on April 5, 2021, completed the Arch closure of the iconic Chenab Bridge. Chenab Bridge is the World’s Highest Railway Bridge, part of the Udhampur-Srinagar-Baramulla rail link project (USBRL).

ஏப்ரல் 5, 2021 அன்று இந்திய ரயில்வே செனாப் பாலத்தை கட்டி முடித்தது. உலகின் மிக உயர்ந்த ரயில் பாலமான செனாப் பாலம் உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாராமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் (USBRL) ஒரு பகுதியாகும்.

4.A farmer from Rajasthan Shrikishan Suman has developed Sadabahar, a new variety of mangoes. It is resistant to most major diseases and common mango disorders.

ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீகிஷன் சுமன், சதாபஹார் என்ற புதிய வகை மாம்பழத்தை உருவாக்கியுள்ளார். இந்த வகையான மாம்பழம் பெரும்பாலான மாம்பழ நோய்கள் மற்றும் பொதுவான மாம்பழ கோளாறுகளுக்கு எதிர்ப்பு அளிக்கிறது.

5.Defence Research and Development Organisation (DRDO) has developed an Advanced Chaff Technology to safeguard the naval ships against enemy missile attack. Defence Laboratory Jodhpur (DLJ), a DRDO laboratory, has indigenously developed three variants of this critical technology namely Short Range Chaff Rocket (SRCR), Medium-Range Chaff Rocket (MRCR) and Long Range Chaff Rocket (LRCR) meeting Indian Navy’s qualitative requirements.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) எதிரி ஏவுகணை தாக்குதலுக்கு எதிராக கடற்படைக் கப்பல்களைப் பாதுகாக்க ஒரு மேம்பட்ட சாஃப் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. ஜோத்பூரில் உள்ள டி.ஆர்.டி.ஓ பாதுகாப்பு ஆய்வகம் (DLJ) இந்த முக்கியமான தொழில்நுட்பத்தின் மூன்று வகைகளை உள்நாட்டில் உருவாக்கியுள்ளது, அவை குறுகிய ரேஞ்ச் சாஃப் ராக்கெட் (SRCR), நடுத்தர-ரேஞ்ச் சாஃப் ராக்கெட் (MRCR) மற்றும் தொலைதூர ரேஞ்ச் சாஃப் ராக்கெட் (LRCR) ஆகும். இவை இந்திய கடற்படையின் தரமான தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

6.India hosted a meeting of BRICS Finance Ministers and Central Bank Governors virtually on April 6. The meeting, jointly chaired by Finance Minister Nirmala Sitharaman and Reserve Bank of India Governor Shaktikanta Das, was the first meeting of the BRICS Finance Ministers and Central Bank Governors under India’s chairship in 2021.

ஏப்ரல் 6 ம் தேதி பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தை இந்தியா நடத்தியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோரின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

International

7.The World Health Day is a global health awareness day celebrated on 7 April every year. The Theme of World Health Day 2021: “Building a fairer, healthier world for everyone”.

உலக சுகாதார தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி கொண்டாடப்படும் உலகளாவிய சுகாதார விழிப்புணர்வு தினமாகும். 2021 ஆண்டில் உலக சுகாதார தினத்தின் மையப்பொருள்: “அனைவருக்கும் சிறந்த, ஆரோக்கியமான உலகத்தை உருவாக்குவது”.

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1. Which district is the highest voter turnout in the Tamil Nadu legislative assembly election?

Chennai

Madurai

Coimbatore

Kallakurichi

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்களித்த மாவட்டம் எது?

சென்னை

மதுரை

கோவை

கள்ளக்குறிச்சி

2. International Virtual Election Visitors Programme in 2021 was hosted by

1. Election Commission of Japan

2. Election Commission of India

3. Election Commission of Australia

4. Election Commission of Germany

2021 இல் சர்வதேச மெய்நிகர் தேர்தல் பார்வையாளர்கள் திட்டம் யார் நடத்தியது?

ஜப்பானிய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம்

ஜெர்மனி தேர்தல் ஆணையம்

3. Which district is the lowest voter turnout in the Tamil Nadu legislative assembly election?

Chennai

Madurai

Coimbatore

Kallakurichi

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குப்பதிவு பெற்ற மாவட்டம் எது?

சென்னை

மதுரை

கோவை

கள்ளக்குறிச்சி

4. Which is the World’s Highest Railway Bridge?

Dhola Sadiya Bridge

Bhupen Hazarika Setu

Chenab Bridge

Bogibeel Bridge

உலகின் மிக உயர்ந்த ரயில் பாலம் எது?

தோலா சாடியா பாலம்

பூபன் ஹசாரிகா சேது

செனாப் பாலம்

போகிபீல் பாலம்

5. Sadabahar is a new variety of

Brinjal

Potato

Apple

Mango

சதாபஹார் ஒரு புதிய வகை

கத்திரிக்காய்

உருளைக்கிழங்கு

ஆப்பிள்

மாம்பழம்

6. Advanced Chaff Technology was recently developed by

ISRO

DRDO

CSIR

ICMR

மேம்பட்ட சாஃப் தொழில்நுட்பம் சமீபத்தில் யாரால் உருவாக்கப்பட்டது?

ISRO

DRDO

CSIR

ICMR

7. Who were the chairmen of the first meeting of BRICS Finance Ministers and Central Bank Governors?

Nirmala Sitaraman

Shaktikanta Das

Both 1 and 2

Neither 1 nor 2

பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தின் தலைவர்கள் யார்?

நிர்மலா சீதாராமன்

சக்தி காந்த தாஸ்

1 மற்றும் 2 இரண்டும் சரி

1 மற்றும் 2 இரண்டும் தவறு

8. The World Health Day is celebrated every year on

1. April 5

2. April 6

3. April 7

4. April 8

உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் என்று கொண்டாடப்படுகிறது?

1. ஏப்ரல் 5

2. ஏப்ரல் 6

3. ஏப்ரல் 7

4. ஏப்ரல் 8

9. Which country hosted the first meeting of BRICS Finance Ministers and Central Bank Governors?

Brazil

India

Russia

China

பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தை நடத்திய நாடு எது?

பிரேசில்

இந்தியா

ரஷ்யா

சீனா

 

           

DOWNLOAD  Current affairs -07 APR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us