TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 10 Feb 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC February Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
Tamil Nadu
1.Reservation Policy in Tamil Nadu
Why in News?
The Supreme Court on February 8 decided to hear a petition which challenges the constitutionality of a Tamil Nadu State law giving 69% reservation in education and employment. The court is hearing a petition filed by Tamil Nadu resident, Dinesh B., challenging the Tamil Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of Seats in Educational Institutions and of appointments or posts in the Services under the State) Act of 1993.
Key Points
1.The 1993 Act is protected under the Ninth Schedule of the Constitution from judicial review.
2.Section 4 of the Act provides 30% reservation to the Backward Classes, 20% for Most Backward Classes and Denotified Communities, 18% for Scheduled Castes, and 1% for Scheduled Tribes.
3.Tamil Nadu is a pioneer in the implementation of reservations in public employment and education.
4.The policy of reservation has been in practice since 1921 in this State.
5.The statute was enacted on July 19, 1994 with the President’s assent.
தமிழகத்தில் இடஒதுக்கீடு கொள்கை
சமீபத்திய செய்தி
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி 69% இடஒதுக்கீடு வழங்கும் தமிழ் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (கல்வி நிறுவனங்களில் இடங்களை ஒதுக்குதல் மற்றும் மாநிலத்தில் உள்ள சேவைகளில் நியமனங்கள் அல்லது பதவிகள்) சட்டம், 1993 அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த தினேஷ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தொடர்பான முக்கிய விவரங்கள்
1.1993 ஆம் ஆண்டு இடஒதுக்க்கீடு சட்டம் அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையின் கீழ் நீதித்துறை மறுஆய்விலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
2.இந்தச் சட்டத்தின் 4 வது பிரிவு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30% இடத்தையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், குறிக்கப்பட்ட சமூகங்களுக்கும் 20%, பட்டியல் சாதியினருக்கு 18% மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு 1% இட ஒதுக்கீடு அளிக்கிறது.
3.பொது வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னோடி மாநிலம் ஆகும்.
4.இடஒதுக்கீடு கொள்கை தமிழ்நாட்டில் 1921 முதல் நடைமுறையில் உள்ளது.
5.நடைமுறையில் இருந்த இடஒதுக்கீடு கொள்கை ஜூலை 19, 1994 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது.
India
2.The Ministry of Civil Aviation (MoCA) and Directorate General of Civil Aviation (DGCA) have granted conditional exemption to the Board of Control for Cricket in India (BCCI) for the deployment of drones for live aerial cinematography of the India Cricket Season in 2021.
இந்த ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் ட்ரோன்களை பயன்படுத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (BCCI) சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் (MoCA) மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) அனுமதி அளித்துள்ளன. இதனால் போட்டிகளைக் கழுகுப் பார்வையில் இருந்து ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
International
3.The Prime Minister of India, Narendra Modi, will inaugurate the World Sustainable Development Summit 2021 on the 10th of February through video conferencing. The World sustainable development summit will be organized under the theme- ‘Redefining Our Common Future: Safe and Secure Environment for All’. The year will mark the 20th edition of the summit. It will be held between 10th to 12th February 2021. This summit is organized by the Energy and Resources Institute (TERI).
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ‘உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டை’ காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். ‘எங்கள் பொதுவான எதிர்காலத்தை மறுவரையறை செய்தல்: அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் பத்திரமான சூழல்’ என்ற மையப்பொருளின் கீழ் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு உச்சிமாநாட்டின் 20 வது பதிப்பாகும். இது பிப்ரவரி 10 முதல் 12 வரை நடைபெறுகிறது. இந்த உச்சிமாநாட்டை எரிசக்தி மற்றும் ஆதார நிறுவனம் (TERI) ஏற்பாடு செய்கிறது.
4.Denmark has recently given its approval for the plan to construct the first energy field island of the world. The energy island will be constructed in the North Sea.
உலகின் முதல் எரிசக்தி புல தீவை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு டென்மார்க் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. எரிசக்தி தீவு ‘வட கடலில்’ அமைக்கப்படுகிறது.
Sports
5.Ishant Sharma became only the third Indian fast bowler to take 300 Test wickets after dismissing England batsman Daniel Lawrence in his 98th test against England at the MA Chidambaram Stadium on February 8. Kapil Dev and Zaheer Khan are the two pacers ahead of him. He also became the sixth Indian bowler to take 300 wickets in Test cricket. The other five Indian bowlers are Anil Kumble (619), Kapil Dev (434), Ravichandran Ashwin (377), Harbhajan Singh (417), and Zaheer Khan (311).
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் டேன் லாரன்ஸை அவுட் செய்து தன்னுடைய 300-ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ், ஜாகீர் கானுக்கு அடுத்து டெஸ்ட் போட்டியில் 300 ஆவது விக்கெடை எடுத்த 3 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆறாவது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். அனில் கும்ளே (619), கபில் தேவ் (434), ரவிச்சந்திரன் அஸ்வின் (377), ஹர்பஜன் சிங் (417), ஜாகீர் கான் (311) ஆகியோர் மற்ற ஐந்து இந்திய பந்து வீச்சாளர்கள் ஆகும்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.In which year, the Tamil Nadu Reservation Act was passed?
1956
1972
1993
2005
எந்த ஆண்டில், தமிழக இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது?
1956
1972
1993
2005
2.The policy of reservation has been in practice in Tamil Nadu since
1911
1921
1931
1950
இடஒதுக்கீடு கொள்கை தமிழ்நாட்டில் எந்த ஆண்டில் இருந்து இருந்து நடைமுறையில் உள்ளது?
1911
1921
1931
1950
3.How many percent is reserved for Most Backward Classes and Denotified Communities in Tamil Nadu for education and employment by the Tamil Nadu Reservation Act?
10%
18%
20%
30%
தமிழக இடஒதுக்கீடு சட்டத்தின்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டில் உள்ள ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் குறிக்கப்பட்ட சமூகங்களுக்கு’ எத்தனை சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது?
10%
18%
20%
30%
4.What is the theme of the World Sustainable Development Summit 2021?
Sustainable environment
Our environment
Common responsibility to protect the environment
Redefining Our Common Future
2021 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டின் மையப்பொருள் என்ன?
நிலையான சுற்றுசூழல்
நமது சுற்றுசூழல்
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பொதுவான பொறுப்பு
எங்கள் பொதுவான எதிர்காலத்தை மறு வரையறை செய்தல்
5.Which country is constructing the first energy field island of the world?
Norway
Sweden
Finland
Denmark
உலகின் முதல் எரிசக்தி புலம் தீவை எந்த நாடு உருவாக்குகிறது?
நோர்வே
சுவீடன்
ஃபின்லாந்து
டென்மார்க்
6.Which Indian bowler is the leading wicket-taker in International Tests?
Anil Kumble
Ishant Sharma
Harbhajan Singh
Zaheer Khan
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய முன்னணி இந்திய பந்து வீச்சாளர் யார்?
அனில் கும்ப்ளே
இஷாந்த் சர்மா
ஹர்பஜன் சிங்
ஜாகீர் கான்
7.Which institution is organizing the World Sustainable Development Summit 2021?
National Institute of Solar Energy
The Energy and Resources Institute
Solar Energy Corporation of India
Indian Renewable Energy Development Agency
2021 உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்யும் நிறுவனம் எது?
தேசிய சூரிய ஆற்றல் நிறுவனம்
எரிசக்தி மற்றும் ஆதார நிறுவனம்
இந்திய சூரிய ஆற்றல் கழகம்
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம்

