TNPSC CURRENT AFFAIRS PDF –13th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 12 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

 

1.The U.S. Consulate honoured Tamil Nadu based anti-caste activist and human rights defender Gowsalya Shankar with the International Woman of Courage (IWOC) Award in Chennai on March 11.

சென்னையில் செயல்பட்டு வரும் அமெரிக்க தூதரகம் தமிழகத்தைச் சேர்ந்த சாதி எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆர்வலர் கௌசல்யா சங்கர் அவர்களுக்கு மார்ச் 11 அன்று சர்வதேச தைரியமான பெண் (IWOC) விருது வழங்கி கௌரவித்துள்ளது.

India

2.The Amrit Mahotsav is organised at the 75 locations for 75 weeks across the country to mark the 75 years of India’s Independence from the British rule. The Prime Minister, Shri Narendra Modi flagged off the ‘Padyatra’ (Freedom March) from Sabarmati Ashram, Ahmedabad on March 12 and inaugurated the curtain raiser activities of the ‘Azadi Ka Amrit Mahotsav’ (India@75).

இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி வருகிறது. நமது நாட்டின் இந்த 75-வது சுதந்திர தினவிழா ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் 75 இடங்களில் 75 வாரங்கள் கொண்டாடப்படுகிறது. இதை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். தண்டி யாத்திரையின் நினைவு தினமான மார்ச் 12 அன்று அதை நினைவு கூரும் வகையில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 81 பேர் தண்டிக்கு யாத்திரையாக புறப்பட்டனர். இதற்கு மத்திய கலாசார மற்றும் சுற்றுலா துறை மந்திரி பிரஹலாத்சிங் படேல் தலைமை தாங்கினார். இதை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

3.The Supreme Court on March 12 held that independent persons and not bureaucrats should be appointed State Election Commissioners.

மத்திய, மாநிலங்கள் சார்ந்த அரசாங்க அதிகாரிகளை மாநில தேர்தல் ஆணையர்களாக நியமிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாநில தேர்தல் ஆணையர்கள் சுதந்திரமாக செயலாற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத் தன்மையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

4.The BRICS Contact Group on Economic and Trade Issues (CGETI) leaders held their first meeting under India’s Chairship from 9-11 March 2021. The theme of BRICS this year is -“BRICS@15: Intra BRICS Cooperation for Continuity, Consolidation, and Consensus”.

பொருளாதாரம் மற்றும் வர்த்தக சிக்கல்கள் குறித்த பிரிக்ஸ் தொடர்பு குழு (CGETI) தலைவர்களின் முதல் சந்திப்பு மார்ச் 9-11 தேதிகளில் இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டின் மையப்பொருள்: “பிரிக்ஸ் @ 15: தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கு பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு ”.

5.The Central Government on March 12 launched a mobile app ‘Mera Ration’. This app will benefit especially those ration card holders who move to new areas for livelihoods. It can be used for identifying the nearest fair price shop, check details of their entitlement and recent transactions. The android-based mobile application, developed by the National Informatics Centre (NIC).

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு பயனளிக்கும் விதமாக ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது மேரா ரேஷன் ஆப் (என் ரேஷன் ஆப்) என்ற செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த மேரா செயலியின் சிறப்பம்சங்கள் என்னவென்றால், பக்கத்தில் உள்ள நியாய விலைக் கடையை தெரிந்துகொள்ளலாம், உணவு தானியங்களை எவ்வளவு பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றிய தகவல்கள், சமீபத்தில் வாங்கிய பொருட்கள் மற்றும் பரிவர்த்தனைகள், ஆதார் இணைப்பு நிலவரம், புலம்பெயர் தொழிலாளர்கள் புலம் பெயரும் போது செயலியில் பதிவு செய்துகொள்ளலாம். இந்த செயலியை தேசிய தகவல் மையம் (NIC) உருவாக்கியது.

 

Sports

6.Mithali Raj has become the first Indian batter, and only the second overall, to score 10,000 runs in women’s international cricket.

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை எனும் பெருமையை, வரலாற்றை மிதாலி ராஜ் இன்று படைத்தார். இதன் மூலம் ஒருநாள் , டெஸ்ட், டி20 ஆகிய 3 பிரிவுகளிலும் சேர்த்து 10 ஆயிரம் ரன்களை எட்டிய உலகில் 2-வது வீராங்கனை எனும் பெருமையையும் மிதாலி ராஜ் படைத்துள்ளார்.

7.The Indian Chess player Koneru Humpy from Andhra Pradesh has won the BBC Indian Sportswoman of the Year award (ISWOTY) for 2020, following a public vote.

மக்களின் அதிகப்படியான வாக்குகளைப்பெற்று, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இந்திய சதுரங்க வீராங்கனையான கொனேரு ஹம்பி, இந்த ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதைப் பெறுகிறார்.

 

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

 

  1. Who has been given the International Woman of Courage (IWOC) Award by the U.S. consulate?

  1. Esther Shanthi

  2. Manjula Krishnan

  3. Gowsalya Shankar

  4. Sumithra Prasad

அமெரிக்க தூதரகத்தினால் சர்வதேச தைரியமான பெண் (IWOC) விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. எஸ்தர் சாந்தி

  2. மஞ்சுளா கிருஷ்ணன்

  3. கௌசல்யா சங்கர்

  4. சுமித்ரா பிரசாத்

 

  1. Who became the first Indian Cricket player to score 10,000 runs in women’s international cricket?

  1. Mithali Raj

  2. Smriti Mandhana

  3. Jhulan Goswami

  4. Poonam Yadav

பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

  1. மிதாலி ராஜ்

  2. ஸ்மிருதி மந்தனா

  3. ஜூலன் கோஸ்வாமி

  4. பூனம் யாதவ்

 

  1. Who should not be appointed as State Election Commissioners as per the recent Supreme Court judgment?

  1. Politicians

  2. Judges

  3. Bureaucrats

  4. Lawyers

சமீபத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி யார் மாநில தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட கூடாது?

  1. அரசியல்வாதிகள்

  2. நீதிபதிகள்

  3. அரசு அதிகாரிகள்

  4. வழக்கறிஞர்கள்

 

  1. A mobile app ‘Mera Ration’ is related to

  1. Mega Food Park Scheme

  2. SAMPADA Yojana

  3. One Nation One Ration Card Scheme

  4. None of the above

‘மேரா ரேஷன்’ என்ற மொபைல் செயலி கீழ்கண்ட எந்த திட்டத்துடன் தொடர்புடையது?

  1. மெகா உணவு பூங்கா திட்டம்

  2. சம்பதா யோஜனா

  3. ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு திட்டம்

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. Who won the BBC Indian Sportswoman of the Year award (ISWOTY) for 2020?

  1. Saina Nehwal

  2. Dipa Karmakar

  3. P.V. Sindhu

  4. Koneru Humpy

2020 ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை (ISWOTY) வென்றது யார்?

  1. சாய்னா நேவால்

  2. தீபா கர்மக்கர்

  3. பி.வி. சிந்து

  4. கொனேரு ஹம்பி

 

  1. A mobile app ‘Mera Ration’ is developed by

  1. CSIR

  2. DRDO

  3. NIC

  4. None of the above

‘மேரா ரேஷன்’ என்ற மொபைல் செயலி யாரால் உருவாக்கப்பட்டது?

  1. CSIR

  2. DRDO

  3. NIC

  4. மேற்கூறிய எதுவும் இல்லை

 

  1. Koneru Humpy is an Indian

  1. Cricket Player

  2. Chess Player

  3. Badminton Player

  4. Tennis Player

கொனேரு ஹம்பி என்பவர் இந்திய

  1. கிரிக்கெட் வீராங்கனை

  2. சதுரங்க வீராங்கனை

  3. பூப்பந்து வீராங்கனை

  4. டென்னிஸ் வீராங்கனை

 

1

2

3

4

5

6

7

C

A

C

C

D

C

B

athiyaman book store

DOWNLOAD  Current affairs -13 MAR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading