TNPSC CURRENT AFFAIRS PDF –19th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 19 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

India

1.The Ministry of Women and Child Development is celebrating Poshan Pakhwada from 16th to 31st March 2021. Poshan Abhiyaan was launched by Prime Minister Shri Narendra Modi on 8th March 2018.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் மார்ச் 16 முதல் மார்ச் 31, 2021 வரை ‘போஷன் பக்வாடா’ கொண்டாடப்படுகிறது. ‘போஷன் அபியான்’ பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மார்ச் 8, 2018 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

2.The Hindu Publishing Group Director N. Ram has released the book “Locking Down the Poor: The Pandemic and India’s Moral Centre” written by the human rights activist Harsh Mander.

மனித உரிமை ஆர்வலர் ஹர்ஷ் மந்தர் அவர்கள் எழுதிய “ஏழைகளின் முழு அடைப்பு: பெருந்தொற்று மற்றும் இந்தியாவின் தார்மீக மையம்” என்ற புத்தகத்தை இந்து பதிப்பகக் குழு இயக்குநர் என்.ராம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

International

3.As China’s increasing aggressiveness to undermine European unity through a ‘divide and rule policy continues, the Central and Eastern Europe (CEE) member countries have responded by accepting their own way to deal with the increasing threat of China’s influence, known as the ‘Sinatra Doctrine’.

‘பிரித்து ஆளும் கொள்கை’-இன் மூலம் ஐரோப்பிய ஒற்றுமையை குறைப்பதற்கு சீனா உட்படுத்தும் ஆக்கிரமிப்பு செயல்களை எதிர்கொள்ள மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய (CEE) உறுப்பு நாடுகள் ‘சினாட்ரா கோட்பாடு’ என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

4.The European Commission is proposing to create a ‘Digital Green Certificate’ to facilitate safe free movement inside the EU during the COVID-19 pandemic. The Digital Green Certificate will be proof that a person has been vaccinated against COVID-19, received a negative test result, or recovered from COVID-19. It will be available, free of charge, in digital or paper format.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்பவர்களை சோதனை செய்ய ‘டிஜிட்டல் பசுமை சான்றிதழ்’ என்ற ஒன்றை ஐரோப்பிய ஆணையம் உருவாக்க உள்ளது. இதன்மூலம், ஒரு நபர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளாரா, எதிர்மறையான சோதனை முடிவைப் பெற்றுள்ளாரா அல்லது கொரோனாலிருந்து மீண்டுவந்துள்ளாரா உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இதை ஐரோப்பிய ஆணையம் டிஜிட்டல் மற்றும் காகித வடிவத்தில் இலவசமாக வழங்க உள்ளது.

5.Union Minister for Health and Family Welfare Dr. Harsh Vardhan has been appointed as the Chairman of the international body Stop TB Partnership Board.

சர்வதேச அமைப்பான காசநோய் தடுப்பு கூட்டு வாரியத்தின் தலைவராக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

6.Italy has signed the framework agreement of the International Solar Alliance on March 17, 2021, to join the International Solar Alliance (ISA).

சர்வதேச சூரிய கூட்டணியில் (ISA) சேர மார்ச் 17, 2021 அன்று சர்வதேச சூரிய கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இத்தாலி கையெழுத்திட்டுள்ளது.

7.The Sixth India-Brazil-South Africa (IBSA) Women’s Forum meeting was held virtually on 16th March 2021. Led by the Ministry of Women and Child Development, Government of India, the event witnessed participation of Ministers and officials responsible for Women Affairs of IBSA Countries.

ஆறாவது இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா (IBSA) மகளிர் மன்றக் கூட்டம் மார்ச் 16, 2021 அன்று இணைய வழியில் நடைபெற்றது. இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையில், IBSA நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Poshan Pakhwada is celebrated by

1. Ministry of Health and Family Welfare

2. Ministry of Women and Child Development

3. Ministry of Environment

4. Ministry of Education

போஷன் பக்வாடா எந்த அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது?

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

சுற்றுச்சூழல் அமைச்சகம்

கல்வி அமைச்சகம்

2.When was Poshan Abhiyan launched?

2016

2017

2018

2019

‘போஷன் அபியான்’ எப்போது தொடங்கப்பட்டது?

2016

2017

2018

2019

3.The book ‘Locking Down the Poor: The Pandemic and India’s Moral Centre’ is written by

Harsh Vardhan

K.V. Kamath

Ramachandra Guha

Harsh Mander

‘ஏழைகளின் முழு அடைப்பு: பெருந்தொற்று மற்றும் இந்தியாவின் தார்மீக மையம்’ என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

ஹர்ஷ் வர்தன்

கே.வி. காமத்

ராமச்சந்திர குஹா

ஹர்ஷ் மந்தர்

4.Which organisation has proposed to create ‘Digital Green Certificate’?

WHO

UNICEF

European Commission

UNESCO

‘டிஜிட்டல் பசுமைச் சான்றிதழை’ உருவாக்க எந்த அமைப்பு முன்மொழிந்துள்ளது?

WHO

UNICEF

ஐரோப்பிய ஆணையம்

யுனெஸ்கோ

5.Which countries have created ‘Sinatra Doctrine’?

West Asian Countries

Southeast Asian Countries

Central and East European Countries

West European Countries

எந்த நாடுகள் ‘சினாட்ரா கோட்பாட்டை’ உருவாக்கியுள்ளன?

மேற்கு ஆசிய நாடுகள்

தென்கிழக்கு ஆசிய நாடுகள்

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள்

மேற்கு ஐரோப்பிய நாடுகள்

6.Which one of the following countries is not in the IBSA group?

Italy

India

Brazil

South Africa

பின்வரும் நாடுகளில் எது IBSA குழுவில் இல்லை?

இத்தாலி

இந்தியா

பிரேசில்

தென்னாப்பிரிக்கா

7.Which country has joined the International Solar Alliance on March 17, 2021?

Italy

India

Brazil

South Africa

மார்ச் 17, 2021 அன்று சர்வதேச சூரிய கூட்டணியில் எந்த நாடு இணைந்தது?

இத்தாலி

இந்தியா

பிரேசில்

தென்னாப்பிரிக்கா

8.Who is the Chairman of the Stop TB Partnership Board?

Harsh Vardhan

K.V. Kamath

Ramachandra Guha

Harsh Mander

காசநோய் தடுப்பு கூட்டு வாரியத்தின் தலைவர் யார்?

ஹர்ஷ் வர்தன்

கே.வி. காமத்

ராமச்சந்திர குஹா

ஹர்ஷ் மந்தர்

 

athiyaman book store

DOWNLOAD  Current affairs -19 MAR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading