TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 24 Feb 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC February Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
Tamil Nadu
1.The Tamil Nadu Deputy Chief Minister and Finance Minister O. Panneerselvam presented the interim Budget on February 23.
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிப்ரவரி 23 அன்று தாக்கல் செய்தார்.
2.In the interim budget, the Deputy Chief Minister announced that the Computer Science subject will be taught to students from 6th to 10th standard.
மேல்நிலைப் பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
3. Deputy Chief Minister O. Panneerselvam on February 23 announced an integrated project to restore the absorptive capacity of Pallikaranai marshland in Chennai at a tentative cost of ₹816.80 crores. The Conservation Authority of Pallikaranai Marshland was constituted in 2012 to function as the apex technical advisory body for developing and maintaining the Pallikaranai Marsh Lands in a self-sustaining manner.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இடைக்கால பட்ஜெட்டில் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்க ரூ. 816.80 கோடி செலவில் ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பராமரிப்பதற்கும் அதற்கு உச்ச தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவாக செயல்படவும் ‘பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம்’ என்ற ஒன்று 2012 இல் அமைக்கப்பட்டது.
4.The Madurai Airport has secured the second rank in overall passenger satisfaction among 12 airports in the country that handle more than 10 lakh passengers a year. The second round of the customer satisfaction survey was conducted between July and December 2020. Udaipur airport came first.
ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாளும் விமான நிலையங்கள் பிரிவில் ஒட்டுமொத்த பயணிகள் திருப்தியில் மதுரை விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர் திருப்தி கணக்கெடுப்பின் இரண்டாவது சுற்று ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரை நடத்தப்பட்டது. இதில் உதய்ப்பூர் விமான நிலையம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
India
5.The Government of India, the Government of Nagaland, and the World Bank on February 23 signed a $68 million project to enhance the governance of schools across Nagaland as well as to improve teaching practices and learning environments in select schools.
நாகலாந்து முழுவதும் உள்ள பள்ளிகளின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் கற்றல் சூழல்களை மேம்படுத்துவதற்கும் 68 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசு, நாகாலாந்து அரசு மற்றும் உலக வங்கி பிப்ரவரி 23 அன்று கையெழுத்திட்டன.
6.The National Urban Digital Mission (NUDM) was launched by the Ministry of Housing and Urban Affairs along with the Ministry of Electronics and Information Technology on February 23. The NUDM will create a shared digital infrastructure for urban India, working across the three pillars of people, process, and platform to provide holistic support to urban governance for cities and towns.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகமும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் இணைந்து தேசிய நகர்ப்புற டிஜிட்டல் மிஷன் (NUDM) என்ற ஒன்றை பிப்ரவரி 23 அன்று தொடங்கியன. இது நகர்ப்புற இந்தியாவுக்கான பகிரப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்கும், மேலும் இது மக்கள், செயல்முறை மற்றும் தளம் என்கிற மூன்று தூண்களில் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கான நகர்ப்புற நிர்வாகத்திற்கு உதவவுள்ளது.
7.The India Urban Data Exchange (IUDX) has been developed in partnership between the Smart Cities Mission and the Indian Institute of Science (IISc), Bengaluru. IUDX is an open-source software platform which facilitates the secure, authenticated, and managed exchange of data amongst various data platforms, 3rd party authenticated and authorised applications, and other sources.
ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் (IISc) ஆகியவை இணைந்து இந்தியா நகர தரவு பரிமாற்றம் (IUDX) என்ற மென்பொருள் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளன. IUDX என்ற இந்த திறந்த மூல மென்பொருள் தளம் பல்வேறு தரவுகளை பரிமாறிக்கொள்ள உதவுகிறது.
8.Smart Code is a platform that enables all ecosystem stakeholders to contribute to a repository of open-source code for various solutions and applications for urban governance.
ஸ்மார்ட் கோட் என்னும் தளம் நகர்ப்புற நிர்வாகத்திற்கு தேவைப்படும் பயன்பாடுகளுக்கான திறந்த மூலக் குறியீட்டின் களஞ்சியமாகும்.
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.The Tamil Nadu Government presented its interim budget in 2021 on
1. February 22
2. February 23
3. February 24
4. February 25
2021 ஆண்டுக்கான தமிழக அரசு அதன் இடைக்கால பட்ஜெட்டை என்று தாக்கல் செய்தது?
1. பிப்ரவரி 22
2. பிப்ரவரி 23
3. பிப்ரவரி 24
4. பிப்ரவரி 25
2.The Conservation Authority of Pallikaranai Marshland was constituted in
2011
2012
2013
2014
பள்ளிக்கரணை சதுப்பு நில பாதுகாப்பு ஆணையம் எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
2011
2012
2013
2014
3.Which airport has secured the second rank in overall passenger satisfaction in India?
Udaipur
Raipur
Trichy
Madurai
ஒட்டுமொத்த பயணிகள் திருப்தியில் இந்தியாவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த விமான நிலையம் எது?
உதய்ப்பூர்
ராய்ப்பூர்
திருச்சி
மதுரை
4.The Government of India, Government of Nagaland and the World Bank recently signed a project to enhance the
1. Governance of colleges
2. Governance of villages
3. Governance of schools
4. Governance of urban local bodies
இந்திய அரசு, நாகலாந்து அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை சமீபத்தில் கையெழுத்திட்ட திட்டம் எதனோடு தொடர்புடையது?
கல்லூரிகளின் ஆளுகை
கிராமங்களின் ஆளுகை
பள்ளிகளின் ஆளுகை
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் ஆளுகை
5.Recently, the Deputy Chief Minister of Tamil Nadu announced that the Computer Science subject will be extended to
1. 6th to 8th standard
2. 6th to 10th standard
3. 6th to 12th standard
4. 11th & 12th standard
தமிழக துணை முதல்வர் சமீபத்தில் கணினி அறிவியல் பாடத்தை எந்த வகுப்புகளுக்கு விரிவுபடுத்தி அறிவித்தார்?
1. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை
2. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை
3. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை
4. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு
6.The National Urban Digital Mission (NUDM) was launched by
Ministry of Housing and Urban Affairs
Ministry of Electronics and Information Technology
Both 1 and 2 correct
Neither 1 nor 2 correct
தேசிய நகர்ப்புற டிஜிட்டல் மிஷன் (NUDM) யாரால் தொடங்கப்பட்டது?
வீட்டுவசதி மற்றும் நகர விவகார அமைச்சகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
1 மற்றும் 2 இரண்டும் சரியானவை
1 மற்றும் 2 இரண்டும் தவறானவை
7.The India Urban Data Exchange (IUDX) was developed by
Smart Cities Mission
Indian Institute of Science
Both 1 and 2 correct
Neither 1 nor 2 correct
இந்தியா நகர்ப்புற தரவு பரிவர்த்தனை (IUDX) யாரால் உருவாக்கப்பட்டது?
ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன்
இந்திய அறிவியல் நிறுவனம்
1 மற்றும் 2 இரண்டும் சரியானவை
1 மற்றும் 2 இரண்டும் தவறானவை
8.Smart Code Platform is related to
Rural governance
Urban governance
School governance
College governance
ஸ்மார்ட் கோட் இயங்குதளம் கீழ்காணும் எதனோடு தொடர்புடையது?
கிராம நிர்வாகம்
நகர நிர்வாகம்
பள்ளி நிர்வாகம்
கல்லூரி நிர்வாகம்

