TNPSC CURRENT AFFAIRS PDF –24th MAR 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 24 Mar 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC March Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 TAMIL BOOK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN TELEGRAM GROUP 4 EXAM

Download TNPSC App:

Tamil Nadu

1.Winners from Tamil Nadu in 67th National Film Awards

  1. Best Tamil Movie – Asuran
  2. Best Actor – Dhanush (Asuran)
  3. Special Jury Award: Oththa Seruppu Size 7
  4. Best Music Direction: D. Imman (Viswasam)
  5. Best Supporting Actor – Vijay Sethupathi (Super Deluxe)
  6. Best Child Artist: Naga Vishal (KD)

67 வது தேசிய திரைப்பட விருதுகள் – தமிழ்நாட்டிலிருந்து வென்றவர்கள்

1. சிறந்த தமிழ் திரைப்படம் – அசுரன்

2. சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)

3. சிறப்பு ஜூரி விருது: ஒத்த செருப்பு அளவு 7

4. சிறந்த இசை இயக்கம்: டி. இமான் (விஸ்வாசம்)

5. சிறந்த துணை நடிகர் – விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்)

6. சிறந்த குழந்தை நட்சத்திரம்: நாக விஷால் (கே.டி)

2.MGM Healthcare hospital has become the third hospital in Chennai and one of the 39 hospitals in India to have received accreditation by Joint Commission International (JCI), a US-based non-profit organization that accredits hospitals across the globe based on their quality and patient safety standards.

சென்னையில் உள்ள எம்.ஜி.எம் சுகாதார மருத்துவமனை அமெரிக்காவைச் சேர்ந்த JCI அமைப்பின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதன்மூலம், JCI அமைப்பின் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் 39வது மருத்துவமனையாகவும், சென்னையின் மூன்றாவது மருத்துவமனையாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை ஆகியுள்ளது. JCI அமைப்பு மருத்துவமனைகளின் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு தரநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

India

3.The Union Cabinet, chaired by the Prime Minister, Shri Narendra Modi, has approved the signing of a Memorandum of Understanding (MoU) between Union Public Service Commission (UPSC), India and Independent Administrative Reforms and Civil Services Commission (IARCSC), Afghanistan. The MoU will facilitate sharing of experience and expertise in the area of recruitment between IARCSC and UPSC.

இந்தியாவின் மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் (UPSC) மற்றும் ஆப்கானிஸ்தானின் சுதந்திர நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் குடிமைப் பணிகள் ஆணையம் (IARCSC) ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. IARCSC மற்றும் UPSCக்கு இடையில் குடிமைப் பணிகள் தேர்வில் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்ள இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும் என கூறப்பட்டுள்ளது.

4.As part of Atma Nirbhar Bharat Abhiyan, the Ministry of Food Processing Industries has launched an all India centrally sponsored scheme “PM Formalisation of Micro food processing Enterprises (PMFME) Scheme” for providing financial, technical, and business support for up-gradation of existing micro food processing enterprises. The Scheme adopts One District One Product (ODOP) approach to reap the benefit of scale in terms of procurement of inputs, availing common services and marketing of products.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் தற்போதுள்ள உணவு முறைப்படுத்தும் குறு நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நிதி, தொழில்நுட்பம் மற்றும் வணிக ஆதரவை வழங்குவதற்காக “உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் (PMFME)” என்கிற அகில இந்திய மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP) என்னும் அணுகுமுறையை பின்பற்றுகிறது.

5.The Ministry of Home Affairs (MHA) issued an Order on March 23 with Guidelines for effective control of COVID-19, which will be effective from April 1, 2021, and remain in force up to April 30, 2021.

இந்தியாவில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, மாநிலங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரை அமலில் இருக்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6.The Lokpal of India organized a Webinar on ‘Bringing Synergies in Anti-Corruption Strategies’ which was presided over by the Chairperson of the Lokpal of India Justice Pinaki Chandra Ghose.

இந்திய லோக்பால் அமைப்பு ‘ஊழல் எதிர்ப்பு உத்திகளில் ஒருங்கிணைப்பு கொண்டுவருதல்’ என்ற தலைப்பில் இணையவழிக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இது இந்திய லோக்பால் தலைவர் நீதியரசர் பினாகி சந்திர கோஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

7.The Power Grid Corporation of India Limited (POWERGRID), a central PSU under the Ministry of Power has established an e-Tendering Portal-PRANIT which will lead to less paperwork and ease of operation, making the tendering process more transparent. It has been certified by Standardisation, Testing and Quality Certification Directorate (STQC), Ministry of Electronics and Information Technology, Government of India.

மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான POWERGRID ‘பிரநித்’ என்கிற மின்-ஒப்பந்த போர்ட்டல் ஒன்றை உருவாக்கியுள்ளது, இது ஒப்பந்த செயல்முறையில் மின்-ஆளுமை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும். இதற்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘தரநிலைப்படுத்தல், சோதனை மற்றும் தர சான்றிதழ் இயக்குநரகம் (STQC)’ சான்றிதழ் அளித்துள்ளது.

8.The Reserve Bank of India (RBI) on March 22 set up a Standing External Advisory Committee (SEAC), which will evaluate applications for universal banks and small finance banks (SFBs). The committee has five members, with former RBI deputy governor Shyamala Gopinath as the chairperson. The panel will have a tenure of three years.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உலகளாவிய வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளுக்கான (SFBs) விண்ணப்பங்களை மதிப்பீடு செய்ய மார்ச் 22 அன்று நிலையான வெளி ஆலோசனைக் குழு (SEAC) ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழுவில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர். இந்த குழுவின் தலைவராக முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஷியாமலா கோபிநாத் உள்ளார். இந்த குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

9.The Andhra Pradesh Government has decided to set up “India’s first government-run ambulance network for animals.”

“இந்தியாவின் முதல் அரசு விலங்குகள் அவசர ஊர்தி அமைப்பை” ஆந்திர மாநில அரசு உருவாக்க உள்ளது.

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who bagged the best child artist award in 67th National Film Awards?

Anikha

Naga Vishal

Rithvik

Ashwanth

67 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர் யார்?

அனிகா

நாக விஷால்

ரித்விக்

அஸ்வந்த்

2.Which movie won the best Tamil movie award in 67th National Film Awards?

Super Deluxe

KD

Asuran

Viswasam

67 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் திரைப்பட விருதை வென்ற படம் எது?

சூப்பர் டீலக்ஸ்

கே.டி.

அசுரன்

விஸ்வாசம்

3.Which state has decided to set up India’s first government-run ambulance network for animals?

Andhra

Kerala

Karnataka

Punjab

விலங்குகளுக்காக இந்தியாவின் முதல் அரசு ஆம்புலன்ஸ் அமைப்பை அமைக்க எந்த மாநிலம் முடிவு செய்துள்ளது?

ஆந்திரா

கேரளா

கர்நாடகா

பஞ்சாப்

4.Who is the Chairperson of the Standing External Advisory Committee of RBI?

Shyamala Gopinath

Biswamohan Mahapatra

Dinesh Kumar Khara

Bhanu Pratap Sharma

ரிசர்வ் வங்கியின் நிலையான வெளி ஆலோசனைக் குழுவின் தலைவர் யார்?

ஷியாமலா கோபிநாத்

பிஸ்வாமோகன் மகாபத்ரா

தினேஷ் குமார் காரா

பானு பிரதாப் சர்மா

5.PRANIT portal was established by

GAIL

BHEL

POWERGRID

NTPC

PRANIT போர்ட்டல் யாரால் நிறுவப்பட்டது?

GAIL

BHEL

POWERGRID

NTPC

6.What is the tenure of the Standing External Advisory Committee of RBI?

2 years

3 years

4 years

5 years

ரிசர்வ் வங்கி அமைத்த நிலையான வெளி ஆலோசனைக் குழுவின் பதவிக்காலம் என்ன?

2 ஆண்டுகள்

3 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

5 ஆண்டுகள்

7.Which organisation certified the PRANIT portal?

STQC

QCI

NPCI

FICCI

PRANIT போர்ட்டலுக்கு எந்த அமைப்பு சான்றளித்தது?

STQC

QCI

NPCI

FICCI

8.PM Formalisation of Micro food processing Enterprises (PMFME) Scheme was launched by

1. Ministry of Health and Family Welfare

2. Ministry of Food Processing Industries

3. Ministry of Finance

4. Ministry of Commerce

PMFME திட்டம் எந்த அமைச்சகத்தால் துவங்கப்பட்டது?

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம்

நிதி அமைச்சகம்

வர்த்தக அமைச்சகம்

9.Who is the Chairperson of the Lokpal of India?

R F Nariman

P C Ghose

N V Ramana

D Y Chandrachud

இந்திய லோக்பால் அமைப்பின் தலைவர் யார்?

R F நாரிமன்

P C கோஸ்

N V ரமணா

D Y சந்திரசூத்

10.PRANIT portal is related to

Environment

Education

Health

Tender

PRANIT போர்ட்டல் கீழ்காணும் எதனோடு தொடர்புடையது?

சுற்றுச்சூழல்

கல்வி

ஆரோக்கியம்

ஒப்பந்தம்

 

 

athiyaman book store

DOWNLOAD  Current affairs -24 MAR- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us