TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 25 Mar 2021
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC March Daily Current Affairs 2021
TNPSC GROUP 4 TAMIL BOOK
POTHU TAMIL BOOKS PRE – ORDER LINK
Tamil Nadu
1.Chief of Defence Staff General Bipin Rawat on March 24 commissioned the Indian Coast Guard Ship (ICGS) Vajra in Chennai. The ship is the sixth in the series of seven Offshore Patrol Vessels (OPVs) constructed by Larsen & Toubro Ltd.
சென்னையை அடுத்த காட்டுப்பள்ளியில் 7 ரோந்து கப்பல்கள் கட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் பணி ஆணை வழங்கப்பட்டிருந்தது. இங்கு L&T நிறுவனம் உருவாக்கிய 6வது ரோந்து கப்பலான ‘வஜ்ரா கப்பல்’ இந்தியக் கடலோரக் காவல் படையில் இணைக்கும் நிகழ்வு மார்ச் 24 அன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத், வஜ்ரா கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
2.The Rajya Sabha member and former Minister A. Mohammedjan died of heart attack at his residence in Ranipet on March 23.
தமிழ்நாட்டின் மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான முகமது ஜான் மார்ச் 23 அன்று ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார்.
India
3.Delhi University on March 23 (Shaheed Diwas) organised a programme to commemorate 90 years of martyrdom of Bhagat Singh, Sukhdev and Rajguru at which Minister of Education Ramesh Pokhriyal inaugurated the “Shaheed Bhagat Singh Smarak” (Shaheed Bhagat Singh Memorial) and “Shaheed Smriti Pustakalaya” (Shaheed Smriti Library).
டெல்லி பல்கலைக்கழகம் மார்ச் 23 அன்று (தியாகி தினம்) பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தியாகத்தின் 90 வது ஆண்டை நினைவு கூறும் வகையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது, இதில் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொண்டு “ஷாஹீத் பகத் சிங் ஸ்மாரக்” (தியாகி பகத் சிங் நினைவு மண்டபம்) மற்றும் “ஷாஹீத் ஸ்மிருதி புஸ்தகலயா ” (தியாகி நினைவு நூலகம்) ஆகியவற்றை திறந்து வைத்தார்.
4.India and the U.S. have agreed to re-establish the U.S.- India Homeland Security Dialogue, the Department of Homeland Security (DHS) has announced, following a discussion between India’s Ambassador to the United States, Taranjit Singh Sandhu, and U.S. Secretary of Homeland Security Alejandro N. Mayorkas.
அமெரிக்கா-இந்தியா உள்நாட்டு பாதுகாப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ளதாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHA) அறிவித்துள்ளது. இது அமெரிக்காவின் இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் அலெஜான்ட்ரோ என். மயோர்கஸ் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
5.The Information and Broadcasting Minister Prakash Javadekar, following a Cabinet decision, has announced that all those above 45 years will be eligible for the COVID-19 vaccine from April 1.
மத்திய அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் 1 முதல் கோவிட் -19 தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்துள்ளார்.
6.Indian and Pakistani delegations held the 116th Meeting of the Permanent Indus Commission on March 23-24 in New Delhi after a gap of more than two and half years . The Indian delegation is led by Pradeep Kumar Saxena. The Pakistan delegation is led by its Indus Commissioner Syed Muhammad Meher Ali Shah.
2 ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர சிந்து நதி ஆணையத்தின் 116 வது கூட்டம் மார்ச் 23-24 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இந்திய தூதுக்குழுவிற்கு இந்தியாவின் சிந்து நதி ஆணையர் பிரதீப் குமார் சக்சேனா தலைமை தாங்கினார். பாகிஸ்தான் தூதுக்குழுவிற்கு பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையர் சையத் முகமது மெஹர் அலி ஷா தலைமை தாங்கினார்.
International
7.The UN Human Rights Council (UNHRC) in Geneva on March 23, 2021 adopted the resolution titled ‘Promotion of Reconciliation Accountability and Human Rights in Sri Lanka’ against Sri Lanka’s human rights record. India abstained from voting on a resolution.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் (UNHRC) கொண்டு வரப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்க பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ தீர்மானம் மார்ச் 23, 2021 அன்று நிறைவேறியது. இந்தியா இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
8.World Meteorological Day was celebrated on March 23, 2021. The theme for 2021 is “The ocean, our climate and weather”.
உலக வானிலை தினம் மார்ச் 23, 2021 அன்று கொண்டாடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு உலக வானிலை தினத்தின் மையப்பொருள் “கடல், நமது காலநிலை மற்றும் வானிலை”
MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)
1.ICGS Vajra was constructed by
HSL
CSL
MDL
L&T
ICGS வஜ்ரா யாரால் கட்டப்பட்டது?
HSL
CSL
MDL
L&T
2.Who is Chief of Defence Staff in India?
Karambir Singh
Rakesh Kumar Singh
Manoj Mukund Naravane
Bipin Rawat
இந்தியாவின் முப்படை தலைமை தளபதி யார்?
கரம்பீர் சிங்
ராகேஷ் குமார் சிங்
மனோஜ் முகுந்த் நாரவனே
பிபின் ராவத்
3.Which University recently inaugurated the Shaheed Smriti Pustakalaya?
Jawaharlal Nehru University
Madras University
Delhi University
Hindustan University
ஷாஹீத் ஸ்மிருதி புஸ்தகலாயாவை சமீபத்தில் திறந்து வைத்த பல்கலைக்கழகம் எது?
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
டெல்லி பல்கலைக்கழகம்
இந்துஸ்தான் பல்கலைக்கழகம்
4.What is ICGS Vajra?
Battle Tank
Patrol Ship
Missile
Container Ship
ICGS வஜ்ரா என்பது என்ன?
கவச வாகனம்
ரோந்து கப்பல்
ஏவுகணை
சரக்கு கப்பல்
5.What is Shaheed Bhagat Singh Smarak?
Library
Statue
Memorial
None of the above
ஷாஹித் பகத் சிங் ஸ்மரக் என்பது என்ன?
நூலகம்
சிலை
நினைவகம்
மேற்கூறிய எதுவும் இல்லை
6.Who is India’s Ambassador to the United States?
Taranjit Singh Sandhu
Syed Muhammad Meher Ali Sha
Pradeep Kumar Saxena
Bipin Rawat
அமெரிக்காவுக்கான இந்தியாவின் தூதர் யார்?
தரஞ்சித் சிங் சந்து
சையத் முஹம்மது மெஹர் அலி ஷா
பிரதீப் குமார் சக்சேனா
பிபின் ராவத்
7.World Meteorological Day is celebrated on
1. March 23
2. March 24
3. March 25
4. March 26
உலக வானிலை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
1. மார்ச் 23
2. மார்ச் 24
3. மார்ச் 25
4. மார்ச் 26
8.Who is the Indus Commissioner of India?
Taranjit Singh Sandhu
Syed Muhammad Meher Ali Sha
Pradeep Kumar Saxena
Bipin Rawat
இந்தியாவின் சிந்து ஆணையர் யார்?
தரஞ்சித் சிங் சந்து
சையத் முஹம்மது மெஹர் அலி ஷா
பிரதீப் குமார் சக்சேனா
பிபின் ராவத்

