CURRENT AFFAIRS –09 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 9
- தேசிய அளவிலான இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நடத்திய eat right challenge phase- 2 போட்டியில் எந்த மாவட்டம் முதலிடம் பிடித்தது?
A.திருவனந்தபுரம்
B.பனாஜி
C.விஜயவாடா
Dகோவை
குறிப்பு:
- இப்போட்டியில் தேசிய அளவில் 231 மாவட்டங்கள் கலந்து கொண்டது.
- இந்த போட்டியானது பாதுகாப்பான, தரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்தல் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை மக்களிடையே கொண்டு சேர்த்தல் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டது.
- மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான இந்திய மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உணவு பாதுகாப்பு குறியீட்டின் 2023- 2024 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது?
A.பஞ்சாப்
B.கேரளா
C.தமிழ்நாடு
D.ஆந்திரா
குறிப்பு:
- இந்த தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடத்தையும் பஞ்சாப் இரண்டாம் இடத்தையும் தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
3.கீழ்க்கண்டவற்றுள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச்செல்லும் நவீன ஏவுகணையின் பெயர் என்ன?
A.அக்னி ஃபயர்
B.அக்னி பிரைம்
C.அக்னி பவர்
D.அக்னி ஷார்ப்
குறிப்பு:
- அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் நவீன அக்னி ஃப்ரைம் ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
- இந்த ஏவுகணை ஏற்கனவே மூன்று முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்காக முதன்முறையாக இரவு நேரத்தில் ஏவப்பட்டு ஏவுகணையின் துல்லியம், செயல்முறையின் நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
4.எந்த மாநிலத்தில் அதிக அளவு லித்திய படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
A.ராஜஸ்தான்
B.கர்நாடகா
C.ஒடிசா
D.பீகார்
குறிப்பு:
- காஷ்மீரைத் தொடர்ந்து நமது நாட்டின் தேவையில் 80 சதவீதம் லித்திய படிமம் ராஜஸ்தான் மாநிலத்தில் ரேவந்த் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான miss world உலக அழகிப் போட்டி எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
A.இந்தியா
B.கிரீஸ்
C.போலாந்து
D.ரஷ்யா
குறிப்பு:
- இந்தியாவில் இந்த Miss World உலக அழகி போட்டியானது கடைசியாக 1996 இல் பெங்களூரில் நடைபெற்றது. தற்பொழுது 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இப்போட்டி நடைபெற உள்ளது.
- இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை உலக அழகி போட்டி அமைப்பின் தலைவரான ஜூலியா மோர்ணலி தெரிவித்தார்.
- இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக தற்போதைய Miss india world சினி ஷெட்டி கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தியா இந்த போட்டியில் ஆறு முறை பட்டம் வென்றிருக்கிறது.
- ரீட்டா பிரியா 1966
- ஐஸ்வர்யா ராய் 1994
- டயானா ஹைடன்1997
- யுக்தா முகி 1999
- பிரியங்கா சோப்ரா 2000
- மனுஷி சில்லர் 2017
6.கீழ்க்கண்டவற்றுள் மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரை எவ்வாறு மாற்றம் செய்துள்ளது?
A.அப்துல்லா நகர்
B.அஹில்யா நகர்
C.அக்ஷித் நகர்
D.இப்ரஹாம் நகர்
குறிப்பு:
- பதினெட்டாம் நூற்றாண்டில் மராட்டிய ராணி அஹில்யாபாய் ஹோல்கர் மால்வா மாகாணத்தை ஆட்சி செய்து வந்தார்.
- அப்போது அந்நகரில் அதிக புனித வழிபாட்டு தளங்களையும், பெண்கள் முன்னேற்றத்திற்கான சீர்திருத்தங்களையும் கொண்டு வந்தார்.
- அவரை நினைவு கூறும் விதமாக மகாராஷ்டிரா மாநில அரசு அந்நகருக்கு அஹில்யா நகர் என பெயர் சூட்ட உள்ளது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 09 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

