CURRENT AFFAIRS –10 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 10
1.தமிழ்நாட்டில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியை இஸ்ரோ எந்த மாவட்டத்தில் தொடங்கியுள்ளது?
A.தூத்துக்குடி
B.திருநெல்வேலி
C.விருதுநகர்
D.வேலூர்
குறிப்பு:
- இந்தியாவில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்திலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- நம் நாடு விண்வெளி திட்டங்களில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டு வருகிறது.
- அதற்கான விண்வெளி ஏவு தளத்தின் தேவையும் அதிகமாக உள்ளது. எனவே நம் நாட்டில் கூடுதலாக விண்வெளி ஏவுதள த்தை ஏற்படுத்த முடிவு செய்தது.
- விண்வெளி ஏவுதளம் அமையும் இடமானது காற்றின் வேகம் மணிக்கு முப்பது கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், மழை மின்னல் புயல் போன்றவற்றின் தாக்கம் குறைவாக உள்ள இடமாகவும் இருத்தல் வேண்டும்.
- அந்த வகையில் ராக்கெட் ஏவுதலமானது அமைப்பதற்கு ஏற்ற இடமாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கண்டறியப்பட்டது.
- மத்திய அரசு அணைகளை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான தேசிய மையத்தினை எங்கு தொடங்க உள்ளது?
A.தமிழ்நாடு
B.ராஜஸ்தான்
C.ஒரிசா
D.உத்திர பிரதேசம்
குறிப்பு:
- இந்தியாவில் 55,000 மேற்பட்ட சிறு பெரு அணைகள் உள்ளது.
- இந்த மையத்தின் இந்தியாவில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும்,மேலும் அணைகளை நிலநடுக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான தொழில் நுட்ப அறிவை பெறுவதற்காகவும் வாழ்வியல் தேசிய தொழில்நுட்பக் கல்வி கழகம் ஜெய்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைத்து புல்லட் ரயில் அமைக்கும் திட்டத்தை எந்த மாவட்டம் தொடங்க உள்ளது?
A.புனே
B.ஜெய்பூர்
C.தானே
D.அகமதாபாத்
- முத்தரப்பு கடல்சார் கூட்டுப் பயிற்சி ஓமன் வளைகுடாவில் எந்த மூன்று நாடுகளுக்கு இடையே நடைபெற்றது?
A.இந்தியா பிரான்ச் ஆஸ்திரேலியா
B.பிரான்ஸ் இந்தியா ஆப்பிரிக்கா
C.ஆஸ்திரேலியா இந்தியா மியான்மர்
D.இந்தியா பிரான்ஸ் ஐக்கிய அரபு அமீரகம்.
- வாக்காளர் அடையாள அட்டையை இனி எந்த ஆணையத்தின் மூலம் மட்டுமே பெற முடியும்?
A.தேர்தல் ஆணையம்
B.இ சேவை மையம்
C.இதர இணைய சேவைகள் மையம்
D.மேலே கூறப்பட்ட அனைத்து இடங்களிலும்
குறிப்பு:
- வாக்காளர் அடையாள அட்டைகளை ஆதார் அட்டைகள் பெறுவதைப் போன்று இணைய சேவை மையங்களில் பெரும் வழிமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
- ஆனால் இணைய சேவை மையங்களில் வழங்கும் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
- ஏனெனில் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை தவிர்ப்பதற்காக பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
- அதன்படி இதுவரை வாக்காளர் அடையாள அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹெலோகிராம் அட்டைக்கு உள்ளே பொருத்தப்படுகிறது
- வாக்காளர் அட்டையில் கோஸ்ட் இமேஜ் என்ற புதிய அம்சம் சேர்க்கப்பட்டு அச்சிடப்படுகிறது இதன் மூலம் அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யும்போது அல்லது வேறு பயன்பாட்டுக்கு அளிக்கும் போது படத்தின் அசல் தன்மை மாறாதபடி இருக்கும்.
- ஆள்மாறாட்டம் செய்ய முடியாது இத்துடன் கியூ ஆர் குறியீடும் அச்சிடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை இனி தேர்தல் ஆணையம் மட்டுமே அச்சிட்டு வழங்கும்.
- எந்த மாநிலத்தில் கே எஸ் ஓ என் என்ற இணைய சேவை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
A.கேரளா
B.தமிழ்நாடு
C.ஆந்திரா
D.கர்நாடகா
குறிப்பு:
- இந்தியாவில் ஜியோ வோடபோன் ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் bsnl என்ற மத்திய அரசின் நிறுவனமும் மக்களுக்கு இணைய சேவை வழங்கி வருகிறது.
- கேரள பைபர் ஓபன் நெட்வொர்க் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கும் கிடைக்கும் மலிவான இணைய சேவை ஆகும். இத்திட்டத்தை கேரளா முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்தின் மூலம்மாநிலத்தின் பொருளாதாரத்தில் பின் தங்கிய 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மலிவான விலையில் இணைய சேவை வழங்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் மிஸ்ஸிங் சில்ட்ரன் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
A.டிஜிபி சைலேந்திரபாபு
B.முதல்வர் மு க ஸ்டாலின்
C.காவல் உதவி ஆணையர் எஸ் பி லாவன்யா
D.காவல் கண்காணிப்பாளர் ஆர் ராஜவேல்.
குறிப்பு:
- இத்திட்டத்தின் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன குழந்தைகளின் பட்டியலை ஆய்வு செய்த கண்டுபிடிக்கப்படாத குழந்தைகளை கண்டுபிடித்தல்.
- குழந்தைகளை கண்டுபிடித்த 24 மணி நேரத்தில் பெற்றோரிடம் ஒப்படைத்தல் திட்டத்தின் கூடுதல் சிறப்பு.
8.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் அறை சதம் கடந்த முதல் இந்திய வீரர்?
A.ஷர்துல் தாக்கூர்
B.அஜிங்கிய ரகானே
C.ரவீந்திர ஜடேஜா
D.ஸ்ரீதர் பரத்
குறிப்பு:
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்றது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 10 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

