TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 11 JUNE 2023

CURRENT AFFAIRS –11 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

 

CURRENT AFFAIRS JUNE – 11

1.திருவள்ளுவருக்கு நாட்டிலேயே முதல்முறையாக  தமிழ் எழுத்துக்களால் ஆன சிலை எங்கு நிறுவப்பட உள்ளது?

A.மதுரை

B.கோவை

C.சென்னை

D.விருதுநகர்

ANS – B

குறிப்பு:

  • தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துக்களால் ஆன சிலை கோவை மாவட்டம் குறிச்சி குளம் என்ற இடத்தில் நிறுவப்பட உள்ளது.

2.அரபிக் கடலில் இந்திய கடற்படையின் சார்பாக  நடைபெற்ற பிரம்மாண்ட போர்ப் பயிற்சியில் எத்தனை விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டது?

A.2

B.4

C.3

D.1

ANS – A

குறிப்பு:

  • அண்மை காலமாகவே சீனா இந்திய பெருங்கடலில் முனைப்பு காட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடுகளான மியான்மார், பாகிஸ்தான், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் துறைமுகம் மேம்பாட்டு திட்டங்கள் என்ற பெயரில் மறைமுகமாக சீனாவின் கடற்படை தளங்களை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது.
  • சீனாவின் சதித்திட்டங்கலான ராஜ்ய மற்றும் ராஜதந்திர நிகழ்வுகளை இந்தியா முறியடித்து வருகிறது.
  • இந்தச் சூழலில் சீனாவுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியா அரபிக் கடலில் நேற்று பிரம்மாண்ட போர்ப்பயிற்சியில் ஈடுபட்டது .
  • இந்தப் போர் பயிற்சியில் இரண்டு போர் விமானதாங்கி போர்க்கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டது. இதில் ஐ என் எஸ் விக்ரமாதித்யா ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டது.
  • ஐ என் எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் உள்நாட்டு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
  1. எந்த அண்டை நாட்டுடன் அடுத்த பத்து ஆண்டுக்கான 10,000 மெகாவாட் மின்சார இறக்குமதிக்கான ஒப்பந்தம் கையப்பமானது?

A.வங்காளதேசம்

B.மியான்மார்

C.நேபாளம்

D.ஆப்கானிஸ்தான்

ANS – C

குறிப்பு:

  • அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நேபாள பிரதமர் பிரசண்டா டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • அப்போது இந்தியா வழியாக வங்கதேசத்துக்கு நேபாளம் மின்சார விநியோகம் செய்வதற்கான ஒப்புதல் இந்திய தரப்பில் அழைக்கப்பட்டது.
  • மேலும் நேபாளத்திடமிருந்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கான பத்தாயிரம் மெகாவாட் மின்சார இறக்குமதிக்கான ஒப்பந்தமும் கையொப்பமானது.
  • நீர்மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிப்பதால் உலக மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலனடைவர்.
  • குறிப்பாக நேபாளத்தின் மின் உற்பத்தி மேம்பாட்டுக்கு அதிக கவனம் அளிக்கப்பட்டால் இந்தியா, வங்காளதேசம் போன்ற அண்டை நாடுகள் மிகுதியான பலனடையும்.
  1. சாலை விபத்துக்களை குறைப்பதற்காக கேரள மாநிலம் எந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது?

A.விபத்துக்கள் அற்ற கேரளம்

B.விபத்து இல்லா மாநிலம்

C.பாதுகாப்பான கேரளம்

D.மக்களை பாதுகாக்கும் கேரளம்.

ANS- C

குறிப்பு:

  • கேரளத்தில் பாதுகாப்பான கேரளம் என்ற திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாகன இயக்கங்களின் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.
  • சாலைகளில் சேர்க்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டதன் மூலமாக கடந்த ஐந்தாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை மட்டும் 3,52,730 சாலை விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
  • கேரளத்தில் சராசரியாக தினசரி 12 சாலை விபத்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்த பின் உயிரிழப்பு எண்ணிக்கை 5 முதல் 8 ஆக குறைந்துள்ளது.

5.இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை நடத்திய நீரழிவு நோய் பாதிப்பு குறித்த ஆய்வு முதல் இடம் பிடித்த மாநிலம் எது?

A.தமிழ்நாடு

B.கோவா

C.கர்நாடகம்

D.உத்திரபிரதேசம்

ANS – B

குறிப்பு :

  • இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய நீரழிவு நோய் பாதிப்பு குறித்த ஆய்வை லான் சென்ட் மருத்துவ இதழ் வெளியிட்டது.
  • இந்தியாவில் மட்டும் 10 கோடியே 10 லட்சம் பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
  • அதில் கோவா4% என முதல் இடத்திலும் முதலிடத்திலும் , உத்திரபிரதேசம்4.8% கடைசி இடத்திலும் உள்ளது.
  • தமிழ்நாடு நீரழிவு நோய் பாதிப்பு ஆய்வறிக்கையில்4% என ஆறாவது இடத்தையும், பெற்றுள்ளது.
  • இந்த ஆய்வில் வட இந்தியாவை விட தென்னிந்தியா மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

6.பிரான்சில் நடைபெற்ற பாரிஸ் டைமண்ட் லிக் தடகளப் போட்டியில் நீளம் தாண்டுதல் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்த வீரர் யார்?

A.கிரீஸ்- மிலிடியடிஸ் டேன்டோக்கலு

B.சுவிட்சர்லாந்து- சைமன் யகா

C.இந்தியா -முரளி ஶ்ரீ ஷங்கர்

D.நீரஜ்சோப்ரா- இந்தியா

ANS – C

குறிப்பு:

  • நடப்பு டைமண்ட் லீக் சீசனின் நான்காவது பகுதி போட்டி பாரிஸில் நடைபெற்றது. ஒலிம்பிக் சாம்பியனும் உலகின் நம்பர் ஒன் வீரருமான கிரீஸ் மிலிட்டியாடிஸ் டேன்டோக்கலு முதலிடமும், சுவிட்சர்லாந்தின் சைமன் இரண்டாம் இடமும், இந்தியாவின் முரளி சங்கர் மூன்றாம் இடத்தையும் பிடித்தார.
  • மூன்றாம் இடம் பிடித்த முரளி டைமன்ட் லீக் போட்டியில் 3 இடங்களுக்கு உள்ளாக வந்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

7.இண்டர்காண்டி டேண்டல் கோப்பை கால்பந்து போட்டியின் முதலாவது ஆட்டம் எங்கு நடைபெற்றது?

A.ஒரிசா

B.மங்கோலியா

C.பாரிஸ்

D.ரஷ்யா

ANS-A

குறிப்பு:

  • இன்டர்கான்டிடென்டல் கால்பந்து போட்டி இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் புவனேஸ்வரத்தில் நடைபெற்றது.
  • இந்த ஆட்டத்தில் இந்தியா மற்றும் மங்கோலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது போட்டியில் மங்கோலியாவை வீழ்த்தி இந்தியா வென்றது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் வானட்டுவாவை திங்கட்கிழமை சந்திக்கிறது.
  1. பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை யார்?

A.இகா ஸ்வியாடெக்

B.கரோலின் முசோவா

C.கார்னர்ஸ் அல்காரஸ்

D.ஜோகோவிச்

ANS – A

குறிப்பு:

  • பிரென்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்றது. இப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகில் நம்பர் ஒன் வீராங்கனை ஆன போலந்தின் இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை பெற்றார்.
  • இதன் மூலம் இகா ஸ்வியாடெக் தனது நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும், பிரான்ச் ஓபனில் மூன்றாவது கோப்பையையும் வென்றிருக்கிறார்.
  • மேலும் பிரெஞ்ச் ஓபனில் 2007 க்கு பிறகு நடப்பு சாம்பியன் ஆகப் பங்கேற்று கோப்பையை தக்க வைத்த முதல் வீராங்கனை என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
  1. சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்விட பகிர்வு குறித்த ஆய்விற்கான உயரிய விருதைப் பெற தகுதி பெற்றவர் யார்?

A.சுனைத்திரகுப்தா

B.ஜோயிதா குப்தா

C.ஜெனிபர் தவுடா

D.ஜோகன் மன்சூர்

குறிப்பு:

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோயிதா குப்தா டச்சு நோபல் பரிசு எனப்படும் ஸ்பின்னிசோ விருதுக்கு தேர்வாகி இருக்கிறார். இது நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
  • சுற்றுச்சூழல் தொடர்பான வாழ்விட பகிர்வு குறித்த ஆய்வுக்கு இந்த விருதுதை பெறவிருக்கிறார்

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 11 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading