CURRENT AFFAIRS –12 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 12
1.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A.ஜூன் 12
B.ஜூன் 11
C.ஜூன் 8
D.ஜூன் 10
ANS – A
குறிப்பு:
- Theme: week of action against labour.
- Slogan:social justice for all.end child labour.
2.தமிழக அரசு எந்த ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகத்தை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது?
A.2025
B.2024
C.2027
D.2030
ANS – A
குறிப்பு:
- குழந்தைகள் பணியில் அமர்த்தபடுவதை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- காலைச் சிற்றுண்டி எனும் காலை உணவு திட்டத்தின் மூலம் குழந்தைகளின் கல்வி மேலும் ஊக்கப்படுத்தப்படுகிறது.
3.இந்தியா தனிநபர் வருமான குறியீட்டில் எந்த இடத்தில் உள்ளது?
A.141
B.145
C.142
D.143
ANS -C
குறிப்பு:
- இந்திய பொருளாதாரம் 21ஆம் நூற்றாண்டில் 7 சதவீதத்துக்கு மேல் வளர்ச்சி பெற்றது.
- மீண்டும் 2010களில் வீழ்ச்சியடைய தொடர்ந்தது. தற்போது மீண்டும் வளர்ச்சி அடைந்து பொருளாதாரத்தில் ஐந்தாம் இடம் வகிக்கிறது.
- ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதும், வீழ்ச்சி அடைவதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
- 2047 ஆம் ஆண்டுகள் இந்தியா வளர்ச்சி பெற்ற பொருளாதார நாடாக மாற தனி நபர் வருமானம் 13,000 டாலராக இருந்தால் மட்டுமே உயர முடியும் ஆனால் தற்பொழுது தனிநபரின் வருமானம் வெறும் 2000 டாலர் மட்டுமே.
- ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அனைத்து மக்களின் வளர்ச்சியே ஆகும்.
4.கீழ்க்கண்டவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ள எந்த மாவட்டத்தில் 22 சென்டிமீட்டர் நீளமுள்ள கற்கருவி கிடைத்துள்ளது?
A.தர்மபுரி
B.சேலம்
C.விருதுநகர்
D.தூத்துக்குடி
ANS -A
குறிப்பு:
- தற்போது தமிழகத்தில் நடந்து வரும் அகழாய்வில் தர்மபுரி மாவட்டம் புதிநத்தம் என்னும் ஊரில் சுமார் 3000 மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 22 சென்டிமீட்டர் நீளமுள்ள கற்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்த கற்கருவி டோலராய்டு எனும் கல் வகையைச் சார்ந்தது.
- இந்த கற்கருவி கலப்பையின் கொழுவாகவோ அல்லது மரங்களை வெட்டுவதற்கு கோடாரியாகவோ பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.
- கீழ்க்கண்டவற்றுள் எந்த மாநிலம் சக்தி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
A.கேரளா
B.மணிப்பூர்
C.ஒரிசா
D.கர்நாடகா
ANS -D
குறிப்பு:
- இத்திட்டமானது கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்க ஏற்படுத்தப்பட்டதாகும்.
- இத்திட்டத்தினை கர்நாடக முதல்வர் சீதராமையா தொடங்கி வைத்தார்.
- இத்திட்டத்திற்காக சக்தி ஸ்மார்ட் கார்டு எனும் கார்டை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- இந்த கார்டை பெற பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் இந்த கார்டை ஆவணமாக பயன்படுத்தி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
6.இந்தியாவில் அதிக அளவு முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் எந்த நாடு முதலிடத்தில் உள்ளது?
A.சிங்கப்பூர்
B.மொராசியஸ்
C.ஐக்கிய அரபு அமீரகம்
D.அமெரிக்கா
ANS -A
குறிப்பு:
- இந்தியாவில் முதலீடு செய்யும் நாடுகளின் வரிசையில்2 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
- அடுத்தபடியாக1 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு மொராசியஸ் இரண்டாவது இடத்திலும், 6 பில்லியன் டாலர் முதலீட்டைக் கொண்டு அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
- சேவை,கடல்சார் போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா கடந்த ஆண்டு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டது.
- இதையடுத்து இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
- கடந்த ஆண்டு ஏழாம் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
7.பாரிஸில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான சேம்பியன் பட்டம் வென்றவர் யார்?
A.கேஸ்பர்ட் ட்ரூட்
B.நோவாக் ஜோகோவிச்
C.ராபைல் நடால்
D.முரளி ஸ்ரீ சங்கர்
ANS -B
குறிப்பு:
- 2023 ஆடவர்களுக்கான பிரான்ஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ்சில் நடைபெற்றது.
- அதில் செர்பியா வீரரான நோவக் ஜோகோவிச் கேஸ் புரோக்ரூட் நார்வே வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.
- மேலும் நோவக் ஜோகோவிச் 23 வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பெற்ற வீரர் என்ற சாதனையும் படைத்திருக்கிறார்.
- இப்போட்டியில் இந்த கிராண்ட்ஸ்லாம் பட்டமானது பிரென்ச் ஓபன் டென்னிசில் பெரும் மூன்றாவது பட்டமாகும்.
- கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றது?
A.ஆஸ்திரேலியா
B.இந்தியா
C.பாகிஸ்தான்
D.பங்களாதேஷ்
ANS -A
குறிப்பு:
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்கான கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
- இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் வென்றதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் வென்ற முதல் அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியாஅணி பெற்றது.
- ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பைக்கான சாம்பியன்ஷிப் வென்ற நாடு எது?
A.தென்கொரியா
B.ஆஸ்திரேலியா
C.இந்தியா
D.சீனா
ANS -C
குறிப்பு:
- ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பைகான ஹாக்கி போட்டி ஜப்பானில் கஹாரா என்ற இடத்தில் நடைபெற்றது.
- அதில் முதல் முறையாக இந்திய அணி நான்கு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தென்கொரியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 12 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

