TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 13 JUNE 2023

CURRENT AFFAIRS –13 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

 

CURRENT AFFAIRS JUNE – 13

1.தமிழ்நாட்டில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட பிஸ்கட் எந்த மாவட்டத்தில் தமிழக அரசு தொடங்கியுள்ளது?

A.சேலம்

B.விழுப்புரம்

C.தர்மபுரி

D.வேலூர்

குறிப்பு:

  • ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி ஊட்டச்சத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்னும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் உள்ளனர்.
  • இவர்களின் உடல் எடை ,உயரம் போன்றவற்றை மருத்துவம் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் கண்காணித்ததில்40 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டது.
  • அதனால் ஆறு மாதங்கள் முதல் ஆறு வயது வரை உள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் தாய்க்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்ட நிலையில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள இணை உணவு வழங்கப்பட்டு அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.
  • புதிதாக அமைக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரையின் பெயரில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவையை நிறைவு செய்யும் வகையில் சத்து மாவுக்கு பதிலாக செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கத் திட்டம் விழுப்புரத்தில் ஜூன் 12-ம் தேதி திங்கட்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

2.தேசிய அளவில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இடைநிலைக்கல்வி மாணவர்கள் இடைநிற்றல் விகிதசராசரி எத்தனை சதவீதமாக உள்ளதென தெரிவித்துள்ளது?

A.12.6%

B.11%

C.15%

D.14.1%

குறிப்பு:

  • குஜராத் ,பீகார், கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் தேசிய சராசரி விட அதிகமாக உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தி வரும் சமக்ர சிஷா திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
  • மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் கடந்த மார்ச் முதல் மே மாதம் வரையில் பல்வேறு கட்டங்களாக ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
  • அதில் தேசிய அளவில் கடந்த 2021- 22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் இடைநிலை கல்வி அளவில் மாணவர்களின் இடை நிற்றல் விகிதம் சராசரியாக6 சதவீதமாக குறிப்பிட்டுள்ளது. முக்கியமாக மாநிலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பீகாரில் இடைநிலை கல்வி மாணவர்களின் இடைநிற்றல் விகிதம்46 ஆகவும், குஜராத்தில் 17.185, ஆகவும் அசாமில் 20.3, ஆகவும் ஆங்கிலத்தில், 16.7 ஆகவும், பஞ்சாபில் 17.2 ஆகவும் மேகாலயத்தில்,21.7 ஆகவும் கர்நாடகத்தில் 14.6 ஆகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பள்ளியளவில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 2030 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதத்தை எட்ட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வீட்டில் உள்ள பணிகள் காரணமாக மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் தேசிய அளவில் 33 சதவீதமாக உள்ளது என யுனிசெப் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • பள்ளியில் இருந்து இடை நிக்கும் மாணவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறுவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது.

3.தமிழகத்தில் என்று முதல் முறையாக நகர்ப்புற உள்ளாட்சிகளில் பகுதி நேர சபை கூட்டங்கள் நடைபெற்றது?

A.மே 12022

B.அக்டோபர் 1 2022

C.நவம்பர் 1 2022

D.ஜனவரி 26 2022

4.தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகிய புயலுக்கு வங்கதேச நாடு பைஜர்பாய் என பெயரிட்டது.  கீழ்க்கண்டவற்றுள் இப்பெயருக்கான பொருள் எது?

A.பெரும்பயல்

B.சிறுபுயல்

C.பேரழிவு

D.சிறு பாதிப்பு

  1. ஜூனியர் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான 23 வது 2023வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற்றது?

A.அர்ஜென்டினா

B.உருகுவே

C.ஆஸ்திரேலியா

D.பிரிட்டன்

குறிப்பு:

  • அர்ஜென்டினாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான யு-20 23வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே 1 to 0 கோல் கணக்கு இத்தாலியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
  • இந்த போட்டியில் உருகுவே சாம்பியன் ஆனது இதுவே முதல் முறையாகும்.

6.சர்வதேச புரோ லிக் ஹாக்கி போட்டியில் எந்த நாடு வெற்றி பெற்றுள்ளது?

A.இந்தியா

B.அர்ஜென்டினா

C.பிரிட்டன்

D.ஆஸ்திரேலியா

குறிப்பு:

  • சர்வதேச ஹாக்கி ப்ரோ லிக் போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.
  • தற்போதைய நிலையில் 16 ஆட்டங்களில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.
  • பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 13 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading