CURRENT AFFAIRS –14 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 14
1.உலக ரத்ததான நாள் என்று கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 14
B.ஜூன் 13
C.ஜூன் 15
D.ஜூன் 16
குறிப்பு:
- Theme: give blood, give plasma,share life, share often.
- ரத்த வகைகளை கண்டறிந்த மருத்துவரும் அறிவியல் வல்லுநரும் ஆன காரல் லேன்ஸ்டீனர் என்பவரின் பிறந்தநாளே ரத்த கொடையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது
2.சமுத்திர சக்தி 23 என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை போர் பயிற்சி?
A.இந்தியா இந்தோனேஷியா
B.இலங்கை இந்தியா
C.ஆஸ்திரேலியா இந்தியா
D.அமெரிக்கா இந்தியா
குறிப்பு:
- சமுத்திர சக்தி 23 என்பது இந்தியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையிலான கடற்படை போர் பயிற்சி ஆகும்.
- இந்தப் போர் பயிற்சி ஆனது இந்தோனேஷிய கடற் பகுதியில் நடைபெற்றது.
3.இந்தியாவில் எந்த திட்டத்தின் மூலம் 100க்கும் மேற்பட்ட பின் தங்கிய மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?
A.முன்னேறும் மாவட்டங்கள்
B.சிறப்பான முன்னேற்ற மாவட்டங்கள்.
C.சிகரத்தை தொடு மாவட்டங்கள்
D.முன்னேற துடிக்கும் மாவட்டங்கள்
குறிப்பு:
- இந்தியாவில் மாவட்டங்களின் வளர்ச்சிக்கான திட்டம் முன்னெடுக்கப்பட்ட வருகிறது.
- இந்த திட்டமானது முன்னேற துடிக்கும் மாவட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 100க்கும் மேற்பட்ட பின் தங்கிய மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- இந்த மாவட்டங்கள் இப்பொழுது நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளன.
4.தமிழகத்தில் ஈரக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்துக்கு என்ன பெயரிட்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது?
A.செழுமை
B.பசுமை
C.செழிப்பு
D.வளம்
- தற்போது நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் யார்?
A.தாமரைக்கண்ணன்
B.ஆர்.பிரியா குமார்
C.திருமலை முத்து
D.முகமது ஷகீல் அக்தர்
குறிப்பு:
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அந்தந்த துறைகளின் பொது தகவல் அலுவலர்கள் பதிலளிக்காத பட்சத்தின் மேல் தகவல் ஆணையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்த ஆணையத்தில் ஒரு தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆறு தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
- இந்நிலையில் தகவல் ஆணையராக இருந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால் மற்றும் தகவல் ஆணையர் 4 பேரின் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது இதை அடுத்து புதிய தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி தலைமையில் அமைக்கப்பட்டது.
- அதன் பெயரில் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு ஓய்வு பெற்ற டிஜிபி முகமது ஷிகில் அக்பர் பெயரை ஆளுநருக்கு முதல்வர் மு க ஸ்டாலின் பரிந்துரைத்தார்.தற்போது மாநில தலைமை தகவல் ஆணையராக முகமது ஷகீல் அக்தரை நியமித்து அத்துடன் மற்ற நான்கு தகவல் ஆணையர் பதவி இடங்களுக்கு ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி தாமரைக்கண்ணன், வழக்கறிஞர் ஆர் பிரியகுமார் ஓய்வு பெற்ற ஐ சி எல் எஸ் அதிகாரி கே திருமலை முத்து, பேராசிரியர் எம் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இதில் தமிழக தலைமை தகவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முகமது ஷிகில் அக்தர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.
- தற்போதைய தங்க உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
A.சீனா
B.இந்தியா
C.ஆஸ்திரேலியா
D.பிரான்ஸ்
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 14 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

