CURRENT AFFAIRS –15 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 15
1 உலக காற்று தினம் இன்று இன்று கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 15
B.ஜூன் 17
C.ஜூன் 16
D.ஜூன் 18
குறிப்பு:
- Theme: harnessing power of nature.
- காற்று ஆற்றலை கொண்டாடவும் அதன் திறனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலகளாவிய காற்று தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
- இது 2007 இல் ஐரோப்பாவில் முதல் முறையாக காற்று தினம் கொண்டாடப்பட்டது.
2.சிக்கன்குனியா நோய் பாதிப்புக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியின் பெயர் என்ன?
A.VLA – 1553
B.MLA -1553
C.SLA- 1553
D.DLA- 1553
குறிப்பு:
- சிக்கன்குனியா நோய் பாதிப்புக்கு ஒரே தவணையில் செலுத்தக்கூடிய வி எல் ஏ 1553 தடுப்பூசி பாதுகாப்பானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட சோதனையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தடுப்பூசியை செலுத்திய உடன் நோய் எதிர்ப்பு சக்தி சிறந்த அளவில் அதிகரிப்பதாகவும் திடீரென சிக்கன் குனியா நோய் அதிக அளவில் பரவினால் அதைக் கட்டுப்படுத்தவும் இந்த தடுப்பூசி உதவும் என்றும் வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் வி எல் ஏ 1553 தடுப்பூசி நிறுவனத்தின் மேலாளர் மாற்றினால் சைனர் தெரிவித்தார்.
- ஒருமுறை செலுத்தப்பட்ட தடுப்பூசியிலேயே 99 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது.
- இந்த தடுப்பூசியை பிரான்சை சேர்ந்த பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜி 20 மூன்றாவது மகளிர் மாநாடு எங்கு நடைபெறுகிறது?
A.சென்னை
B.மும்பை
C.கல்கத்தா
D.ஜெய்ப்பூர்
குறிப்பு:
- சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜி20 மகளிர் மாநாடு இன்று தொடங்குகிறது.
- இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 158 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி,மாற்றம், செழிப்பு மற்றும் முன்னேற்றம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.
- இந்த மாநாட்டில் பெண் சாதனையாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் கண்காட்சி மற்றும் எட்டு அமர்வுகள் நடைபெற உள்ளது.
- மேலும் இந்த மாநாட்டை தலைவர் சந்தியா புராச்சே தலைமை ஏற்று நடத்துகிறார்.
4.நேட்டோ உறுப்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எவ்வாறு பதில் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற போர் பயிற்சி எந்த பெயரில் நடைபெற்று வருகிறது?
A.ஏரோநாட்டிக்கல் 2023
B.ஏர் டிஃபேன்டர் 2023
C.ஏர்லைன்ஸ் 2023
D.எர்லைன்ஸ் 2024
குறிப்பு:
- நேட்டோ உறுப்பு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால் எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற போர் பயிற்சி ஏர் டிபேன்டர் 2023 என்ற பெயரில் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜூன் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
- இதில் 25 நாடுகளைச் சேர்ந்த 250 போர் விமானங்கள் மற்றும் பத்தாயிரம் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
- இதற்காக அமெரிக்க விமானப்படையின் எஃப் 16 விமானம் ஜெர்மனியில் உள்ள ஸ்பெங்தலம் விமானப்படைத் தளத்தில் நேற்று புறப்பட்டு சென்றது.
- நிகழாண்டின் சிறந்த ரிசர்வ் வங்கி ஆளுநருக்கான விருதை வென்றவர் யார்?
A.D. சுப்புராவ்
B.ரகுராம் ராஜன்
C.சக்தி காந்த தாஸ்
D.உர்சித் பட்டேல்
குறிப்பு:
- சிறந்த நிகழாண்டின் சிறந்த ஆளுநருக்கான விருதை சென்ட்ரல் பாங்கிங் என்ற அமைப்பு தற்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்தி காந்த தாசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- கடினமான காலங்களில் இந்திய பொருளாதாரத்தை உறுதியாக நடத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
6.உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு நாள் என்று கொண்டாடப்படுகிறது
A.ஜூன் 15
B.ஜூன் 17
C.ஜூன் 18
D.ஜூன் 13
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 15 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

