CURRENT AFFAIRS –18 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 18
- தமிழகத்தில் தேசிய நெல் திருவிழா எந்த மாவட்டத்தில் நடைபெற்றது?
A.மயிலாடுதுறை
B.தஞ்சை
C.நாகப்பட்டினம்
D.திருவாரூர்
குறிப்பு:
- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு சங்கம் சார்பில் உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
- இந்தத் திருவிழா இயற்கை வேளாண்மை மற்றும் பாராம்பரிய நெல் வகைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
- கார்பன் நியூட்ரல் மாவட்டங்களாக எத்தனை மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
A.2
B.3
C.4
D.5
குறிப்பு:
- தஞ்சை,திருவாரூர்,நாகை, மயிலாடுதுறையில் உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்கள் கார்பன் நியூட்ரல் மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
- திருவாரூர் மாவட்டம் ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த விழாவில் பேசிய அவர் ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யும் நெற்பயிர்கள் சுமார் பத்து டன் கார்பன் டை ஆக்சைடு எடுத்துக்கொண்டு வளர்கின்றன.
- இதனால் சாகுபடி செய்யும் விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தஞ்சை,திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் உள்ளடக்கிய டெல்டா மாவட்டங்களை கார்பன் நியூட்ரல் மாவட்டங்களாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.
- கார்பன் நியூட்ரல் என்பது பூமியிலிருந்து வெளியேற்றப்படும் கார்பனின் அளவும் உறிஞ்சப்படும் கார்பனின் அளவும் சமநிலையில் இருப்பதே (கார்பன் சமநிலை)கார்பன் நியூட்ரலாகும்.
- அந்த வகையில் ஒரு ஏக்கர் சாகுபடி செய்யும் நெல் வயல்களில் 10 டன் கார்பன் டையாக்சைடு உறிஞ்சப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கின்றன எனக் கூறினார்.
3.ஐநா கூட்டமைப்புகளின் சம்மேளன துணைத் தலைவராக எந்த நாட்டைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்?
A.இந்தியா
B.அமெரிக்கா
C.ரஷ்யா
D.சீனா
குறிப்பு:
- உலக ஐநா கூட்டமைப்புகள் சம்மேளன துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் இந்திய நாட்டைச் சார்ந்த மூத்த வழக்கறிஞரான சுரேஷ் ஸ்ரீ வாஸ்தவா என்பவர் ஆவார்.
- சூப்பர் சாணிக் ஏவுகணையை கொண்டுள்ள முதலாவது நாடு என்ற பெருமைக்குரிய நாடு எது?
A.உக்ரைன்
B.சீனா
C.ரஷ்யா
D.இந்தியா
5.தமிழகத்தில் பதிவு துறையின் சேவைகளை மேம்படுத்த எந்த திட்டம் விரைவில் அமல்படுத்த உள்ளது?
A.ஸ்டார் 2.0
B.ஸ்டார் 3.0
C.ஸ்டார் 4.0
D.ஸ்டார்.0
குறிப்பு:
- பதிவு துறையின் சேவைகளை மேம்படுத்த ஸ்டார்0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
- பொது மக்களின் நலன் கருதி இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
- மேலும் தற்போது எதிர்கொள்ளப்படும் சிறு கால தாமதங்கள் கூட இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க ஸ்டார்0 மென்பொருள் பயன்படும். பொதுமக்கள் வழிகாட்டி மதிப்பின்படியான அடிப்படையில் தங்களது சொத்துக்களின் மதிப்பை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை மட்டும் செலுத்தி ஆவணங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
- எந்த மாநிலத்தில் புதியதாக பாதுகாப்பு தொழில் துறை வழித்தடம் கட்டப்பட்டு வருகிறது?
A.மகாராஷ்டிரா
B.உத்திரபிரதேசம்
C.பீகார்
D.ஒரிசா
குறிப்பு:
- உத்தரபிரதேசத்தின் ஆக்ரா, அலிகர்,ஜான்சி, கான்பூர், லக்னோ உள்ளிட் 6 பகுதிகளை ஒன்றிணைத்து பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
- இந்த தொழில் வழித்தடத்தில் லக்னோவில் 300 கோடி செலவில் 80 ஹெக்டர் பரப்பளவில் பிரம்மோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை கட்டப்பட்டு வருகிறது.
- அடுத்த ஆண்டில் புதிய ஆலையை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுதோறும் நூறு பிரம்மோஸ் சூப்பர் சாணிக் ஏவுகணைகளை தயாரிக்க முடியும்.
- அதோடு உத்தரப்பிரதேச பாதுகாப்பு வழித்தடத்தில் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) தயாரிக்கும் பல்வேறு ஆலைகளும் தொடங்கப்பட்டு வருகின்றன.
- பாதுகாப்பு துறை சார்ந்த ஆயுதங்கள் தளவாடங்களை தயாரிப்பது தொடர்பாக இதுவரை 108 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- உத்தரப்பிரதேச பாதுகாப்பு வழித்தடம் சுமார் 1700 ஹெக்டர் பரப்பளவில் அமைகிறது அதிநவீன பிரம்ம சேவுகணைகள் ட்ரோன்கள் தயாரிக்கப்பட உள்ளன இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்களின் மூலம் முப்படைகளும் நவீனப்படுத்தப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சரான ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார்.
- இருமுனை பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தலை இந்தியா எதிர் கொண்டு வருகிறது இந்த சூழலில் ஆயுத தேவைக்கு வெளிநாடுகளை சார்ந்து இருக்காமல் உள்நாட்டிலேயே ஆயுத உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் நரேந்திர மோடி தீவிரம் காட்டி வருகிறார்.
- ஒரு காலத்தில் இந்தியாவுக்கு ஆயுதங்களை வழங்க சில நாடுகள் மறுத்தன ஆனால் இப்போது இந்தியா பேசுகிறது அதை ஒட்டுமொத்த உலகமும் கேட்கிறது என ராஜ்நாத் சிங் பேசினார்
7.சென்னையில் நடைபெற்ற ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் எந்த நாடு சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது?
A.எகிப்து
B.மலேசியா
C.இந்தியா
D.ஜப்பான்
குறிப்பு:
- உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் எகிப்து நாடு சாம்பியன் பட்டத்தை பெற்று முதலிடத்தையும், மலேசியா இரண்டாமிடத்தையும் இந்தியா மற்றும் ஜப்பான் புள்ளிகளின் அடிப்படையில் மூன்றாவது இடத்தையும் பெற்றது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 18 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

