TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 19 JUNE 2023

CURRENT AFFAIRS –19 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

CURRENT AFFAIRS JUNE – 19

  1. கீழ்க்கண்ட மாவட்டங்களில் எந்த மாவட்டத்தில் 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நவகண்ட நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது?

A.செங்கல்பட்டு

B.தர்மபுரி

C.சென்னை

D.காஞ்சிபுரம்

குறிப்பு:

  • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த இந்தளுரில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் நவகண்ட நடுகல்லை தொல்லியல் ஆய்வாளர்களான சி .சந்திரசேகர் ரா.ரமேஷ் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த நடுகல் குறித்து அவர்கள் கூறியதாவது இந்த நடுக்கல்லில் உள்ள வீரன் ஒரு அரசனாக இருந்திருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் உள்ள சைவ பிரிவை சேர்ந்துள்ள காளான் சமூகத்தவர்கள் தன்னை கடவுளுக்காக அர்ப்பணிக்க கூடிய ஒரு நிகழ்வு தான் நவகண்டம்.
  • அதாவது தன் தலையை தானே வெட்டி எடுத்து கடவுளுக்கு படைப்பது நவகண்டம் அல்லது அரசர் போருக்கு செல்வதற்கு முன் மன்னரின் மெய்க்காவல் படையில் இருக்கும் ஒரு வீரன் போரில் மன்னர் வெற்றி பெறுவதற்காக வேண்டிக் கொண்டு தன் தலையை தானே வெட்டி எடுத்து கடவுளுக்கு படைப்பதும் நவகண்டம் தான்.
  • இந்த நடுகல் உருவத்தின் தலையின் மேல் ஒரு கிரீடம் உள்ளது எனவே நிச்சயமாக அந்த பகுதியை சேர்ந்த குறுநில மன்னராகவோ அரசராகவோ இருப்பதற்கு வாய்ப்புண்டு என கூறினார்கள்.

 

  1. ஆசியா சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி எங்கு நடைபெற்றது?

A.மலேசியா

B.சீனா

C.வங்கதேசம்

D.இந்தியா

குறிப்பு:

  • ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் கைப்பற்றது. இதில் மகளிர் ஜூனியர் தனிநபர் பிரிவில் ஜே.பி.தன்யா(கோவை) வெள்ளிப்பதக்கம் பெற்றார் இப் போட்டியில் இந்திய வீராங்கனை பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.

 

  1. உலகக் கோப்பை வில்வித்தை மூன்றாம் நிலை போட்டியில் காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற வீரர் யார்?

A.விக்டர் அக்சேசன்

B.அந்தோணி

C.சாத்விக் சாய்ராஜ்

D.அபிஷேக் வர்மா

குறிப்பு:

  • கொலம்பியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை வில்வத்தை மூன்றாம் நிலை போட்டியில் காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவின் அபிஷேக் வர்மா தங்கம் வென்றுள்ளார். தனிநபர் பிரிவில் மூன்றாவது முறையாக தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

4.இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் ஆடவர் இரட்டையர் பிரிவில் எந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது?

A.எகிப்து

B.இத்தாலி

C.இந்தியா

D.சீனா

குறிப்பு:

  • இந்தோனேசிய ஓபன் பேட்மிட்டன் போட்டியில் ஆடவர் இரட்டையர்பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராத் ஷெட்டி கூட்டணி சாம்பியன் பட்டம் என்று வரலாறு படைத்துள்ளது .
  • சூப்பர் 1000 போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜோடி என்ற பெருமையை அவர்கள் இருவரும் பெற்றுள்ளனர்.
  • இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராத்ஷெட்டி ஜோடியானது உலக சாம்பியன் ஆன மலேசியாவின் ஆரோன் சியா, சோ வுய் யிகா ஜோடியை எதிர்த்து விளையாடியதில் இந்தியா வெற்றி பெற்றது..

 

5.எங்கு நடைபெற்ற அகழாய்வில் முதுமக்கள் தாழி குழந்தையின் வெண்கல வளையல் கிடைத்துள்ளது?

A.ஆதிச்சநல்லூர்

B.புதினாத்தம்

C.மதுராந்தகம்

D.கீழடி

குறிப்பு:

  • ஆதிச்சநல்லூர் அகழாய்வில் முதுமக்கள் தாழியில் குழந்தையின் நான்கு வளையங்களைக் கொண்ட வெண்கல வளையல் மற்றும் வெண்கல காப்புகள் இருந்தது.
  • தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது.
  • நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றிப் பட்டயம், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், கத்தி, இரும்பு வாழ் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இதில் ஒரு சிறிய முதுமக்கள் தாழியை மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்தனர். அதன் உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டையோட்டின் எலும்பு மற்றும் கையெழும்பு இருந்தது. மேலும் 4 வளையல்களைக் கொண்ட வெண்கல வளையல்கள் இருந்தன .
  • இந்த வளையல்கள்5 cmவிட்டம் 0.2 cm கன அளவு 22 கிராம் எடையுடன் அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளும்படி உள்ளன.மற்றொரு முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெல்லியம் கலந்த இரண்டு வெண்கல காப்புகள் கிடைத்துள்ளது.

 

  1. உலக அளவில் ஐநா நடத்திய பாலின பாகுபாடு குறித்த ஆய்வில் ஆண் பெண் ஊதிய பாகுபாடு எத்தனை சதவீதமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது?

A.29%

B.39%

C.49%

D.19%

குறிப்பு.

  • உலக அளவில் பத்தில் ஒன்பது பேர் பாலின பாகுபாட்டை கடைபிடிப்பதாக அண்மையில் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.
  • ஐநா வளர்ச்சி திட்டம் சார்பாக உலகம் முழுவதும் 91 நாடுகளில் 2005 முதல் 2022 வரை மூன்று கட்டங்களாக உலக மதிப்பீடுகள் ஆய்வு நடத்தப்பட்டது.
  • ஆண்களை விட பெண்கள் அதிகமாக உழைத்தாலும் ஆண் பெண் ஊதிய பாகுபாடு 39 சதவீதமாக இருப்பது என்பது பெண்களின் மீது நடத்தப்படும் உழைப்புச் சுரண்டலை வெளிச்சம் இட்டு காட்டுகிறது.

 

  1. இந்தியாவில் எந்த ஆண்டுக்குள் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

A.2027

B.2025

C.2030

D.2040.

குறிப்பு:

  • இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காச நோயை ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன் என பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
  • காசநோய் ஒழிப்பில் நிக்சய் மித்ரா என்ற அமைப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்பினர் ஆயிரக்கணக்கான காச நோயாளிகளை தத்தெடுத்து பராமரித்து வருகின்றனர்.
  • இன்று நாடு முழுவதும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட நோயாளிகள் தத்தெடுக்கப்பட்டனர் இந்த புண்ணிய செயலுக்கு வித்திட்ட நிச்சயம் மித்ராவின் 85,000 உறுப்பினர்களையும் பாராட்டுகிறேன்.
  • இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி நளினி தனது சேமிப்பு தொகை மூலம் காச நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உதவி செய்து வருகிறாள். இதே போல ஏராளமான சிறுவர்கள் காசநோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் அவர்கள் அனைவரையும் இதயத்தின் ஆழத்திலிருந்து வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

 

 

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 19 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading