CURRENT AFFAIRS –20 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 20
1.சர்வதேச அகதிகள் தின நாள் எது?
A.ஜூன் 18
B.ஜூன் 20
C.ஆகஸ்ட் 20
D.ஜூலை 20
கருப்பொருள்: வீட்டை விட்டு நம்பிக்கை
குறிப்பு:
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20_ஆம் தேதி உலக அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.
- மதக்கலவரம், இனக்கலவரம், உள்நாட்டுப் போர், இயற்கை பேரழிவுகள் போன்ற காரணங்களால் தங்கள் நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல் வெளியேறுபவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் 2000 ஆம் ஆண்டிலிருந்து ஜூன் 20ஆம் தேதி உலக அகதிகள் தினமாக ஐநா சபை அறிவித்தது.
- கீழ்க்கண்டவற்றுள் எந்த நாட்டில் சர்வதேச பொம்மை கண்காட்சி நடைபெற உள்ளது?
A.சீனா
B.அமெரிக்கா
C.இங்கிலாந்து
D.இந்தியா
குறிப்பு:
- 14-ஆவது சர்வதேச பொம்மை கண்காட்சி டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் அடுத்த மாதம் எட்டாம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கின்றது.
- இந்த கண்காட்சியில் 25 நாடுகளில் இருந்து விற்பனையாளர்கள் பங்கேற்கிறார்கள்.வால்மார்ட் மற்றும் லெகோ உள்ளிட்ட 20 பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்பதாக இந்திய பொம்மை சங்கம் தெரிவித்துள்ளது.
- இந்திய தயாரிப்புகளை பொருத்தவரை 250 தயாரிப்புகள் கண்காட்சியில் இடம்பெற உள்ளது.
- தமிழகத்தில் முதல்முறையாக எந்த மாவட்டத்தில் கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை சரி செய்யும் நவீன திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது?
A.ஓசூர்
B.கோவை
C.சென்னை
D.சேலம்
குறிப்பு:
- சென்னையில் கூகுள் வரைபடம் மூலம் வாகன நெரிசலை உடனுக்குடன் சரி செய்யும் நவீன திட்டத்தை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.
- கூகுள் வரைபடம் மூலம் எந்தெந்த இடங்களில் நெரிசல் ஏற்படுகின்றது என்ற விவரங்களை சேகரித்து அதை செயல்படுத்த புதிய செயலி ஒன்றை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- அந்த செயலி மூலம் போக்குவரத்து நெரிசல் உடனடியாக சரி செய்யப்படும் என்றும் நெரிசலின் அளவு எந்த அளவு உள்ளது என்பதை விளக்க குறிப்பிட்ட நிறங்கள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளத.
- இது பற்றிய தகவல் போக்குவரத்து போலீசாருக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே உடனுக்குடன் தெரியவரும் என்றும் பொது மக்களுக்கு தற்பொழுது இந்த தகவல் தெரிய வராது என்றும் வருங்காலங்களில் பொதுமக்களுக்கும் தெரியும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.
- அதேபோல் சென்னையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் முறை நவீன முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.
- இதற்காக ஸ்பீடு ரேடார் கன் என்ற நவீன கருவி பயன்படுத்தப்படுகிறது இந்த கருவியை முக்கியசாலை சந்திப்புகளில் மட்டும் பொருத்தி அதிவேகத்தில் வுசெல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
- தற்பொழுது 30 சாலை சந்திப்புகளில் ஸ்பீடு ரேடார் கண் கருவியை பொருத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது இவ்வாறாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார்.
4.உலக உற்பத்தி தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 19
B.ஜூன் 20
C.ஜூலை 20
D.அக்டோபர் 20
- இந்தியாவின் அயலக உளவு பிரிவான ரா அமைப்பின் தலைவராக தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
A.ரவி சிம்ஹா
B.சம்மந்த் கோயல்
C.தேஜஸ்வி யாதவ்
D.ஜெயச்சந்திரன்
குறிப்பு:
- ரா அமைப்பின் தற்போதைய தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சம்மந்த் குமார் கோயில் பதவி வகிக்கிறார்.
- அவரது பதவிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது .இந்நிலையில் ரா அமைப்பின் அடுத்த தலைவராக இந்தியாவில் மிக முக்கிய அயலக உழவு பிரிவான ரா அமைப்பின் தலைவராக ரவி சிம்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
- இவர் சத்தீஸ்காரை சார்ந்த 1988 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
6.2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு எந்த பதிப்பகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது?
A.பவானி பிரஸ்
B.கீதா பிரஸ்
C.கலையகம் பிரஸ்
D.அமிர்தா பிரஸ்
குறிப்பு:
- கடந்த 1995 ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சர்வதேச காந்தி அமைதி விருது மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஒரு கோடி ரொக்கம் ,பாராட்டு சான்றிதழ் ஆகியவை அடங்கிய இந்த விருது அகிம்சை உள்ளிட்ட காந்திய வழியில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
- அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி பரிசு உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்கூரில் உள்ள கீதா பதிப்பகத்துக்கு வழங்கப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
- இது குறித்த பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மத்தியில் சமூக மற்றும் கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்த கடந்த 100 ஆண்டுகளில் கீதா பதிப்பகம் பாராட்டத்தக்க பணிகளை செய்துள்ளது.
- காந்தியின் லட்சியங்களை ஊக்கிவிப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளது என கூறினார்.
- 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கீதா பதிப்பகம் இந்து மதம் தொடர்பான நூல்களை வெளியிடும் உலகின் மிகப்பெரிய பதிப்பாளர்களில் ஒன்றாக திகழ்கிறது.இந்த பதிப்பகம்7 கோடி புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
- இதில் 14 மொழிகளில் வெளியான பகவத் கீதையின் எண்ணிக்கை மட்டும்21 கோடியாகும்.
7 இன்டர்காண்டி டென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ஒரு கோடி பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்த முதல்வர் யார்?
A.மு க ஸ்டாலின்
B.நவீன் பட்நாயக்
C.ஜெகன்மோகன் ரெட்டி
D.நிதீஷ் குமார்
குறிப்பு:
- ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற இன்டர் காண்டிடென்டல் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி0 என்ற கோல் கணக்கில் லெபனான் அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
- இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கால்பந்து அணிக்கு ஒரு கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
8.ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை யார்?
A.சின்சால் கவிரம்மா
B.பவானி தேவி
C.அன்னு ராணி
D.தனுஷா
குறிப்பு:
- சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் வுசியில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான சாப்ட்வேர் பிரிவின் அரை இறுதியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி உஸ்பேகிஸ்தான் சேர்ந்த ஜாய்னா டேய் பிகாகோவாவிடம் போராடி தோல்வியுற்றார்.
- இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை 29 வயதான பவானி தேவி படைத்தார்.
- புதிய சரித்திரம் படைத்த பவானி தேவிக்கு இந்திய வாழ்வீச்சு சங்க பொதுச் செயலாளர் ராஜு மேத்தா வாழ்த்து தெரிவித்தார்.
9.மாநிலங்களுக்கு தேசிய சீனியர் தடைகளை சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற அணி எது?
A.கர்நாடகா
B.உத்திர பிரதேசம்
C.பஞ்சாப்
D.தமிழ்நாடு
குறிப்பு:
- மாநிலங்களுக்கு இடையிலான 62 ஆவது தேசிய சீனியர் தடகள சேம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரி உள்ள காலிங்கா ஸ்டேடியத்தில் கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்றது.
- கடைசி நாளில் நான்கு தங்க பதக்கங்களை வென்று கவனத்தை ஈர்த்த தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது உத்திரபிரதேச ஆணி இரண்டாவது இடத்தை பிடித்தது ஆண்கள் பிரிவில் தமிழகம் முதலிடமும் பெண்கள் பிரிவில் உத்தரப்பிரதேசம் முதலிடம் பெற்றது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 20 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

