CURRENT AFFAIRS –21 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 21
1 சர்வதேச யோகா தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 21
B.ஜூலை 21
C.ஆகஸ்ட்21
D.மே 21
குறிப்பு:
- நமது பிரதமரின் முயற்சியால் ஜூன் 21-ஆம் தேதியை ஐநா சபை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.
- இந்த ஆண்டு நமது பிரதமர் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்.
- வசுதைய குடும்பம் என்ற மையப் பொருளுடன் இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
- உலக இசை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 19
B.ஜூன் 20
C.ஜூன் 21
D.ஜூன் 22
- பெண்களை பாதுகாக்கும் நோக்கில், தனியாக இரவு பயணிக்கும் பெண்களை அழைத்துச் செல்ல ரோந்து வாகனம் எனும் புதிய திட்டத்தை எந்த மாநிலம் அமல்படுத்தியுள்ளது?
A.உத்திரபிரதேசம்
B.மகாராஷ்டிரா
C.ஒரிசா
D.தமிழ்நாடு
குறிப்பு:
- தமிழகத்தில் இரவு நேரத்தில் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்பாக செல்வதற்கு ரோந்து வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
- அதன்படி, மாநிலத்தில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பெண்கள் தனியாக பயணிக்கும் போது பாதுகாப்பு குறைவு என நினைத்தால் காவல்துறையின் உதவி எண்கள் மூலம் அழைக்கலாம்.
- இந்த வாகனம் பெண்கள் இருக்கும் இடத்திற்கே வந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்த சேவையை 1091,112 என்ற இலவச தொலைபேசி எண் மூலமாகவும் 044 -23452365, 044-28447701ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
- இந்த சேவை பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உலகின் மருந்து உற்பத்தியில் மதிப்பின் அடிப்படையில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A.17
B.12
C.14
D.15
குறிப்பு:
- உலகின் மருந்து உற்பத்தியில் அளவு அடிப்படையில் மூன்றாவது இடத்திலும் மதிப்பு அடிப்படையில் 14வது இடத்திலும் இந்தியா உள்ளது கடந்த 2022-23 இந்தியா ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளின் மதிப்பு6 டாலர்களாகும். முந்தைய ஆண்டில் இது பதினேழு பில்லியன் டாலர்களாக இருந்தது.
- கீழ்க்கண்டவற்றுள் எந்த நூல் இந்திய ஓட்டுனர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது?
A.தேஜஸ்வி சாலக்
B.தேஷ் சாலக்
C.தி ஏசியன்
D.டிரைவர் ஸ்டோரி
குறிப்பு:
- லாரிகளில் விரைவில் குளிர்சாதன (ஏசி )வசதி கட்டாயமாக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- இது தொடர்பாக தில்லியில் இந்திய ஓட்டுனர்களை கௌரவிக்கும் விதமாக தேஷ் சாலக் என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
6.கீழ்க்கண்டவற்றுள் எந்த மாவட்டத்தில் கலைஞர் கோட்டம் திறக்கப்பட்டுள்ளது?
A.சென்னை
B.காஞ்சிபுரம்
C.திருவாரூர்
D.மதுரை
குறிப்பு:
- திருவாரூர் அருகே காட்டூரில் தாயார் அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார் .
- கலைஞர் கோட்டத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்து வேலர் நூலகத்தை பிஹார் துணை முதல்வர் தேஜஸ் வி யாதவ் திறந்து வைத்தார்.
- தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக எந்த மாநிலத்தை சேர்ந்தவர் நியமிக்கப்பட உள்ளார்?
A.தமிழ்நாடு
B.அசாம்
C.அருணாச்சலப் பிரதேசம்
D.மணிப்பூர்
குறிப்பு:
- இந்திய ரிசர்வ் வங்கியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த எம் கே ஜெயின் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பாரத் ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த சுவாமிநாதன் ஜானகிராமன் பொறுப்பேற்க உள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
8.UIDAI அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
A.ரவீன் சின்கா
B.அமித் அகர்வால்
C.சங்கர் ஜெயந்த்
- சங்கர் ஜிவால்
குறிப்பு
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமீர் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார்.
- UIDAI unique identification authority of India – இந்த ஆணையம் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆதார் அடையாள அட்டையை வழங்குகிறது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 20 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

