CURRENT AFFAIRS –22 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
CURRENT AFFAIRS JUNE – 22
- யாருடைய தலைமையில் நடைபெற்ற ஐநா யோகா நிகழ்ச்சி உலகளவில் அதிக பிரமுகர்கள் கலந்து கொண்டதற்காக கின்னஸ் சாதனை படைத்தது?
A.ஜோ பைடன்
B.நரேந்திர மோடி
ராம் சந்திர பட்டேல்
ரிஷி சுனக்
குறிப்பு:
- பிரம்மாண்டமாக நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், அதிகாரிகள், கல்வியாளர்கள், சுகாதார வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தொழில்துறை தலைவர்கள், ஊடக பிரமுகர்கள் கலைஞர்கள், ஆன்மீக தலைவர்கள், யோகா பயிற்சியாளர்கள் என பல்வேறு தரப்பு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐநா தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்று நடத்தினார்.
- பிரதமர் மோடி வழிநடத்திய யோகா நிகழ்ச்சி அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற நிகழ்வு என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்தது.
2.உலகிலேயே எங்கு அதிக மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி யோகா பயிற்சி செய்ததற்காக கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது?
A.நியூயார்க்
B.குஜராத், சுரத்
C.லண்டன்
D.கொல்கத்தா
- தமிழகத்தில் முதல் முறையாக எங்கு புதிய தொழில்நுட்பத்திலான எண்ம எரிவாயு துணைமின் நிலையங்கள் அமைய உள்ளது?
A.கன்னியாகுமரி
B.திருநெல்வேலி
C.சென்னை
D.காஞ்சிபுரம்
குறிப்பு:
- மின்வாரியத்தை மேம்படுத்த அலுவல் பணிகள் மின்சாதனங்கள் எண்ம முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
- இந்த நிலையில் தமிழகத்திலேயே முதன்முறையாக திருவான்மியூர் மற்றும் தரமணியில் முழுவதும் என்ம தொழில்நுட்பத்துடன் கூடிய எரிவாயு துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- இதன்படி சென்னையில் உள்ள திருவான்மியூரில் 55 கோடியில் துணைமின் நிலையமும் மற்றும் தரமணியில் 708 கோடியில் ஏற்கனவே இருக்கும் மின் நிலையத்தை தரம் உயர்த்தி துணை மின் நிலையமாக மாற்றி அமைக்கும் பணிகளில் மின்வாரியம் ஈடுபட்டு வருகிறது.
- மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவும் மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
- தமிழக அமைச்சர்களில் தற்போது இலாகா இல்லாத அமைச்சராக மாற்றப்பட்டுள்ளவர் யார்?
A.தங்கம் தென்னரசு
B.செந்தில் பாலாஜி
C.எஸ் முத்துசாமி
D.மதிவேந்தன்
குறிப்பு:
- தமிழ்நாடு அமைச்சர் வி செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து அவர் பொறுப்பு வகித்து வந்த மின்சாரம் மரபுசாரா ஆற்றல் வளர்ச்சி துறையை நிதி மனிதவள மேம்பாடு அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- செந்தில் பாலாஜியின் பொறுப்பில் இருந்த இன்னொரு துறையான மதுவிலக்கு, ஆயத்தீர்வை, வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சிய அமைச்சர் எஸ் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- அத்துடன் செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- எந்த அமைச்சகத்துக்கும் தலைமை வகிக்காமல் எந்த துறைக்கும் பொறுப்பு ஏற்காமல் அமைச்சரவையில் அங்கம் வகிப்பவரே இலாக்கா இல்லாத அமைச்சர் ஆவார்.
- அமைச்சருக்கான ஊதியம்,அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்பது, வாக்களிப்பது உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் சலுகைகளும் இலாகா இல்லாத அமைச்சருக்கு உண்டு.
- இந்திய அரசியலமைப்பு பிரிவு 166(3)மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகள் அமைச்சர்களின் துறை ஒதுக்கீடு ஆகியவற்றின் வசதிக்காக ஆளுநர் விதிகளை உருவாக்கலாம் என்கிறது.
- இந்த உட்கூரின் அடிப்படையிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எந்த இலாக்காவும் இல்லாமல் அமைச்சராக தொடர அனுமதிக்கப்படுகிறது.
5.இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவு மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகள் அமைச்சர்களின் துறை ஒதுக்கீடு ஆகியவற்றின் வசதிக்காக ஆளுநர் விதிகளை உருவாக்கலாம் என்று கூறுகிறது?
A.163(1)
B.162(3)
C.163(2)
D.166(3)
- உலக மழை காடுகள் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 22
B.ஆகஸ்ட் 20
C.ஜூன் 21
D.ஜூலை 22
கருப்பொருள்:
- பாதுகாத்தல் மீள் உருவாக்குதல் மீட்டமைத்தல்.
7.எங்கு நான்காவது கொமோடோ கடற்படை பயிற்சி நடைபெற்றது?
A.இந்தோனேசியா
B.இந்தியா
C.மலேசியா
D.பிரான்ஸ்
குறிப்பு:
- ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள 40க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டு நான்காவது கொமோடோ கடற்படை பயிற்சி இந்தோனேசியாவில் மகஸர் என்ற இடத்தில் நடைபெற்றது.
- இதில் இந்தியா சார்பில் ஐ என் எஸ் சாத்புரா என்ற போர்க்கப்பல் பங்கேற்றது.
8.எல்லை பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A.அமித் அகர்வால்
B.நிதின் அகர்வால்
C.மனோஜ் பாண்டே
D.நிதிஷ் குமார்
குறிப்பு:
BSF( border security force)1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
1989 ஆம் பிரிவை சேர்ந்த ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான நித்தின் அகர்வால் எல்லை பாதுகாப்பு படையின் புதிய தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- மகளிர் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நாடு எது?
A.இந்தியா
B.இந்தோனேசியா
C.வங்காளதேசம்
D.பாகிஸ்தான்
குறிப்பு:
- ஹாங்காங்கில் நடைபெற்ற வளர்ந்து வரும் மகளிர் அணிகளுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அண்டர் 23 என்ற அறிமுக சீசனில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- இதில் வங்கதேசம் இரண்டாவது இடம் பெற்றுள்ளது. இந்திய அணியின் ஆட்டநாயகியாக கனிகா அஹிஜா அவர்களும் தொடர் நாயகியாக ஷ்ரெயங்கா பாட்டில் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- 10.உலகிலேயே கிட்டத்தட்ட 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளவர் யார் ?
A.கிறிஸ்டியானோ ரொனால்டோ
B.லினோனில் மெர்சி
C.ஜோஹன் க்ரூப்
D.ஹாரி கனே
குறிப்பு:
- கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ஆவார். இவர் 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 22 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

