CURRENT AFFAIRS –25 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ஜூன் 25 நடப்பு கால நிகழ்வுகள்
1.கூகுள் நிறுவனத்தின் பின்டெக் செயல்பாடுகளுக்கான மையம் எங்கு திறக்க உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ அறிவித்துள்ளார்?
A.மகாராஷ்டிரா
B.கொல்கத்தா
C.சென்னை
D.குஜராத்
குறிப்பு:
- கூகுள் நிறுவனம் இந்தியாவில் 82,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாகவும், கூகுள் நிறுவனத்தின் பின்டெக்ஸ் செயல்பாடுகளுக்கான மையத்தை குஜராத்தில் திறக்க உள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
2.ஐரோப்பாவின் சிறந்த கட்டுரை நூலுக்கான பரிசை பெற்றுள்ளவர் யார்?
A.பார்பரா கிங்ஸ்லோவார்
B.அருந்ததிராய்
C.ஜெஸ்ஸி கிரீன்கிராஸ்
D.ஹன்யா யாநாஹிரா
குறிப்பு:
- இந்திய ஆங்கில எழுத்தாளரும் செயல்பாட்டாளருமான அருந்ததிராயின் ஆசாதி என்கிற கட்டுரை நூலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு.
- ஐரோப்பிய சிறந்த கட்டுரை நூலுக்கான பரிசை பெற்றுள்ளது. 2018 இல் இருந்து 2020 காலகட்டத்தில் எழுதப்பட்ட 9 கட்டுரைகளின் தொகுப்பு இது.
- இதில் அந்தக் காலகட்டத்தை இந்தியாவின் அரசியல் நிலையை விவரித்துள்ளார்.
- இந்தியாவில் மேலோங்கி உள்ள அடிப்படை வாதத்தை பற்றி இந்த தொகுப்பில் ராய் துணிச்சலாக எழுதியுள்ளார்.
3.அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய மொழிகளில் உள்ள எந்த மொழிக்கான இருக்கை அமைய உள்ளது?
A.குஜராத்தி
B.ஒடியா
C.தமிழ்
D.மலையாளம்
குறிப்பு:
- உலகின் மூத்த மொழி தமிழ் என அமெரிக்காவில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
- ஹிஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய அரசின் உதவியுடன் தமிழுக்கான இருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- ஹிஸ்டன் தமிழ் இருக்கையுடன் சேர்த்து வெளிநாடுகளில் ஐசிசிஆர் அமைப்பின் தமிழ் இருக்கை மூன்றாக உயர்கிறது.
- ஏற்கனவே போலந்தில் இதன் சார்பில் இரண்டு தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
4.கீழ்க்கண்டவற்றுள் வுமன் பிரஸ் ஃபார் ஃபிக்ச விருதுக்காக இந்த ஆண்டுக்கு எந்த நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது?
A.அசாதி
B.டேமன் ஹுபர்ஹெட்
C.தி லகுனா
D.தி அமேசான்
குறிப்பு:
- பெண் எழுத்தாளர்களுக்காக 1996 லிருந்து ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் வூமன் பிரஸ் பார் பிக்சனுக்கு இந்த ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் பார்பரா கிங்ஸ்ஸ்லோவர் எழுதிய டேமன் ஹூபேர் ஹெட் என்ற நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- இவர் எழுதிய தி லகுணா என்ற நாவலுக்கு 2010 ஆம் ஆண்டுக்கான வுமன் பிரஸ் ஃபார் வழங்கப்பட்டது.
- இந்த பரிசை இரண்டு முறை பெறும் ஒரே எழுத்தாளர் இவர்தான்.
5. 37 ஆவது இந்திய தேசிய விளையாட்டு போட்டி எங்கு நடைபெற உள்ளது?
A.கோவா
B.சென்னை
C.மும்பை
D.அசாம்
குறிப்பு:
- 37வது இந்திய தேசிய விளையாட்டுப் போட்டி கோவாவில் அக்டோபர் 2023 நடைபெற உள்ளது .
- இதற்கு அதிகாரப்பூர்வ சின்னமாக மோகா சின்னத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது .
- கோவா மாநிலத்தின் மாநில விலங்கான கெளவர் காட்டெருமையை விலங்கை அடிப்படையாகக் கொண்டு இந்த மோகா சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 25 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

