CURRENT AFFAIRS –26 JUNE 2023
TNPSC DAILY CURRENT AFFAIRS PDF
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK
JOIN THE CURRENT AFFAIRS TELEGRAM LINK
ஜூன் 26 நடப்பு நிகழ்வுகள்
1.எந்த நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது இந்திய பிரதமருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது?
-
- மாலத்தீவுகள்
- ரஷ்யா
- எகிப்து
- பக்ரைன்
குறிப்பு:
- எகிப்தில் அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய ‘ஆர்டர் ஆப் தி நைல் ‘விருது வழங்கப்பட்டது.
- அந்த விருதை பிரதமர் மோடிக்கு எகிப்து அதிபர் அப்ததெல் ஃபட்டா எல் சிசி வழங்கி கௌரவித்தார்.
- எகிப்து நாட்டுக்கும் மனித குலத்துக்கும் ஈடு இணையற்ற சேவைகளை வழங்கும் நாடுகளின் தலைவர்கள், அதிபர்கள்,துணை அதிபர்கள் உள்ளிட்டோருக்கு ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருதை எகிப்து வழங்கி வருகிறது.
- 1915 ஆம் ஆண்டு முதல் அந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது தற்பொழுது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது .
- பல்வேறு நாடுகளின் உயரிய விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு இது 13 வது விருதாகும்.
- கடந்த 9 ஆண்டுகளில் பப்புவா நியூ கினியா, ஃபிஜி,பலாவு குடியரசு, பூட்டான், அமெரிக்கா, பக்ரைன், மாலத்தீவுகள், ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் உயரிய விருதுகளை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
2.தமிழக முதல்வர் விபி சிங்குக்கு எங்கு முழு உருவச்சிலை நிறுவப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்?
A.சென்னை
- B.மதுரை
- C.திருவண்ணாமலை
- D.திருவாரூர்
- குறிப்பு :
- சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி. பி.சிங்குக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- வி. பி.சிங் உத்திரபிரதேச மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்தார்.
- இவர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு பிரதமர் ஆனார்.
- சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அரசு பணிகளில் 27% இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற மண்டல கமிஷன் பரிந்துரையை அமல் படுத்தினார்.
3.முதல்வர் பதக்கம் 2023 இல் யாருக்கு சிறப்பு பதக்கம் யாருக்கு வழங்கப்பட உள்ளது?
- A.வே.பத்ரி நாராயணன்
- B.மா.குணசேகரன்
- C.சு.முருகன்
- D.அஸ்ரா கார்க
- குறிப்பு:
- போதைப்பொருள் ஒழிப்பில் ஈடுபட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- போதை பொருளை ஒழிப்பதற்காக உண்மையாக உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்காக முதல்வரின் பதக்கம் வழங்கப்படும் என பேரவையில்5.2022 இல் மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
- அதேபோல் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோத கடத்தலை ஒழிப்பதில் மதுரை தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் சீரிய பணியை அங்கீகரித்து அவருக்கு சிறப்பு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த விருதினை வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் மு. க.ஸ்டாலின் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.நாட்டின் 25 வது வந்தே பாரத் ரயில் எங்கு தயாரிக்கப்பட்டது?
A.மும்பை
B.சென்னை
C.கொல்கத்தா
D.கோவாகுறிப்பு:
- சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஐ சி எஃப் 25-ஆவது வந்தே பாரத் ரயில் தயாரித்து ரயில்வே துறையினரிடம் வழங்கப்பட்டது.
- பெரம்பூரில் ஐ சி எப் தொழிற்சாலையில் 2018 முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
- முக்கிய நகரங்களை இணைக்கும் அதிவிரைவு ரயில் ஆன வந்தே பாரத் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது.
- இதன் முதல் சேவை புதுடெல்லி வாரணாசி இடையே2.2019 இல் தொடங்கப்பட்டது. பாதுகாப்பிலும் வேகத்திலும் சிறந்து விளங்கும் வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுள்ளது.
- மேலும் நிகழாண்டு சுதந்திர தினத்துக்குள் 75 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ரயில்வே வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. நடப்பு உற்பத்தி ஆண்டுக்குள் சென்னை ஐ சி எஃப் இல் மட்டும் 736 வந்தே பாரத் ரயில் பெட்டிகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த ரயில் போபால் செல்ல உள்ளது.
5.உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான கிசா பிரமிடுகள் எங்கு அமைந்துள்ளது?
A.மாலத்தீவு
B.பக்ரைன்
C.எகிப்து
D.ஐக்கிய அரபு அமீரகம்குறிப்பு:
- உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான கிசா பிரமிடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- வடக்கு எகிப்தில் நைல் நதியின் மேற்கு கரை பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளின் விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
- அப்போது எகிப்து பிரதமர் மத்பூலி உடன் இருந்தார். எகிப்திலுள்ள இந்திய சமூகத்தினரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
- அப்போது அவர்களின் கடின உழைப்பு காரணமாக இருதரப்பு நல்லுறவு மேம்பட்டு வருவதாக பிரதமர் மோடி புகழாரம் சுட்டியுள்ளார்.
- அவர்களே இந்தியாவின் கதாநாயகர்கள் என்றும் அவர் அறிவித்தார்
6.போதை பொருள் ஒழிப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
A ஜூன் 15
B ஜூன் 25
C ஜூன் 26
D ஜூலை 26குறிப்பு:
- கருப்பொருள்: மக்களுக்கு முதலிடம்: களங்கத்தை நிறுத்துங்கள் மற்றும் பாகுபாட்டை தடுப்பதை வலுப்படுத்துங்கள்
7.திரிபுரா எல்லையில் உள்ள எத்தனை கிராமங்களுக்கு தியாகிகளின் பெயர் சூட்டப்பட உள்ளது?
A 75
B 25
C 50
D 100குறிப்பு:
- திரிபுரா எல்லையில் அமைந்துள்ள எட்டு மாவட்டங்களில் 75 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
- அந்த மாநிலத்தைச் சார்ந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு உயர்நீத்த தியாகிகளின் பெயர் அம்மாவட்ட கிராமங்களில் சூட்டப்பட உள்ளது.
- இதற்காக இந்திய அரசு13 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
8. குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி -2023 ஆனது எங்கு நடைபெற்றது?
A ஸ்பெயின்
B ஆஸ்திரேலியா
C இந்தியா
D இங்கிலாந்துகுறிப்பு:
- இங்கிலாந்தில் குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் கார்லஸ் அல்காரஸ் ஆஸ்திரேலியா நாட்டு அலெக்ஸ்டி மீனாவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
9.செக் பெண்கள் ஓபன் கேர்ள்ஸ் போட்டி 2023யில் எந்த நாட்டின் வீராங்கனை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்?
A செக் குடியரசு
B இந்தியா
C ஆஸ்திரேலியா
D ஸ்பெயின்குறிப்பு:
இந்திய நாட்டின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த தீக்ஷா சாகர் இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளா.ர் இப்போட்டி செக் குடியரசு நாட்டில் நடைபெற்றது.
லேடிஸ் ஐரோப்பிய பயணத்தில் இரண்டாம் பட்டம் பெற்ற வீராங்கனை ஆவார்.
DOWNLOAD Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 26 JUNE 2023
JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP
Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

