TNPSC Daily CURRENT AFFAIRS PDF– 27 JUNE 2023

CURRENT AFFAIRS –27 JUNE 2023

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN THE CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App

ஜூன் 27 நடப்பு நிகழ்வுகள்

1.இந்தியாவிலேயே முதல் முறையாக எங்கு பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது?
A.ஜெய்ப்பூர்
B.ஆக்ரா
C.சென்னை
D.கான்பூர்
குறிப்பு:
 இந்தியாவிலேயே முதல்முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கும் பெட்ரோல் பங்க் சென்னை அருகே புழல் சிறை வளாகத்தில் பங்க் பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.
 இந்த பங்கை ஒரு மாதத்தில் திறப்பதற்குரிய நடவடிக்கையில் சிறை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கும் வகையில் புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனித்துறை அருகே 1.92 கோடி மதிப்பில் 1170 சதுரகிலோ மீட்டர் பரப்பளவிற்கு மற்றொரு பெட்ரோல் பங்க் கட்டப்பட்டு வருகிறது.
 இந்த பெட்ரோல் பங்குகளை பெண் கைதிகள் மட்டுமே இயக்க உள்ளனர். இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகள் மட்டும் இயக்கக்கூடிய பெட்ரோல் பங்க் புழலில்தான் திறக்கப்படுகிறது.

2. பன்னாட்டு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நாள் என்று கொண்டாடப்படுகிறது?
A.ஜூன் 26
B.ஜூன் 27
C.ஜூன் 28
D.ஜூலை 27
குறிப்பு:
 Theme: Building a stornger future together

3. தமிழக அரசு எந்த ஆண்டுக்குள் தொழு நோயை முற்றிலுமாக ஒழிக்க இலக்கு நிர்ணயத்துள்ளது
A.2035
B.2040
C.2045
D.2030
குறிப்பு:
 முதல்வர் மு.க ஸ்டாலின் 2030க்குள் தொழுநோய் இல்லாத தமிழகம் என்ற நிலையை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
 அந்த வகையில் தமிழகத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 4,000 பேருக்கு ரூ.2000 உதவித்தொகையையும்,மருந்துகள், காலணிகள் மற்றும் கையுறைகளும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

4. உலக பொருளாதார மன்றம் நடத்திய பாலின இடைவெளி அறிக்கை 2023 எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?
A.நியூசிலாந்து
B.ஐஸ்லாந்து
C.இங்கிலாந்து
D.போலந்து
குறிப்பு:
 ஒவ்வொரு ஆண்டும் உலக பொருளாதார மன்றம் சார்பில் வழங்கக்கூடிய பாலின இடைவெளி அறிக்கையில் 146 நாடுகள் கலந்து கொண்டது.
 இதில் ஐஸ்லாந்து தொடர்ந்து 14வது முறையாக முதலிடம் வகிக்கிறது. இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி முன்னேறி 127 வது இடத்தில் உள்ளது.
 கடந்த ஆண்டு 135 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 இந்த பாலின இடைவெளி அறிக்கை ஆனது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், அரசியல் மையமாகக் கொண்டு ஆய்வு மேற்கொண்டது.

5. ஒலிம்பிக் ஆர்டர் விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A. Dr.லியா லட்சி
B. Dr.சபின் நிசனிமானா
C. Dr.அனில் அபினவ்
D. Dr. டெட்ரரோஸ் கேப்ரயேஸ்
குறிப்பு:
 டோக்கியோ 2021 இல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சிறப்பாக நடத்த உறுதுணையாக இருந்ததற்காக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டாக்டர் பெட்ரோஸ் கேப்ரேயாஸ் அவர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு ஒலிம்பிக் ஆர்டர் விருதை வழங்கி கௌரவித்தது.

DOWNLOAD  Current affairs – TNPSC CURRENT AFFAIRS PDF – 27 JUNE 2023

JOIN CURRENT AFFAIRS TELEGRAM GROUP

Athiyaman Team provides tnpsc current affairs in tamil, current affairs notes, current affairs pdf file, free current affairs notes in tamil, Daily CA  notes, Monthly Current Affairs, TN Police Current affairs, TNPSC Current affairs, RRB current affairs quiz, current affair pdf file, online test for all exams..etc,.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading