CTET 2018 to be held in 20 languages including Tamil

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (CTET 2018) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் உட்பட 20 மொழிகளில் மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வை நடத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ.க்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜவடேகா் உத்தரவிட்டுள்ளாா்

இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தனி தேர்வாகவும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தனி தேர்வாகவும் நடத்தப்படுகிறது.

இந்த தகுதி தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன. முதல் தாளை ஆங்கிலம் அல்லது இந்தி ஆகிய இருமொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம். இரண்டாம் தாளை, முதல் தாளை எழுதிய மொழி அல்லாமல் வேறு மொழியில் எழுத வேண்டும். ஏற்கனவே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்க மொழி, நேபாளி, பஞ்சாபி, ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 20 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எழுதலாம் என்றிருந்தது. 

ஆனால் இந்த ஆண்டு ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளை தவிர மற்ற 17 மொழிகளும் நீக்கப்பட்டன. அதனால் முதல் தாளை ஆங்கிலத்தில் எழுதியவர்கள், இரண்டாம் தாளை இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் எழுத வேண்டிய கட்டாயம் உருவானது. இது முழுக்க முழுக்க இந்தியை திணிக்கும் செயல் என எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் இந்தி பேசாத மாநில தேர்வர்கள் கடுமையாக பாதிக்கப்பட கூடிய சூழல் உருவானது.

PJ.jpg

கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் முன்பு இருந்ததுபோல் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் தவிர மற்ற 17 மொழிகளிலும் அந்த தேர்வை எழுதலாம். இதற்கான உத்தரவை ஏற்கனவே பிறப்பித்து விட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளா

Check CTET 2018 officical Notification:

Central Teacher Eligibility Test Recruitment – 2018

 

One thought on “CTET 2018 to be held in 20 languages including Tamil

  1. Pingback: CTET 2018 Application Postponed-ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஒத்திவைப்பு! – Athiyaman Team

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us