Dindigul District Court Recruitment for Various Posts

திண்டுக்கல் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி, தமிழ்நாடு அடிப்படை பணி மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலை பணி ஆகியவற்றில் காலியாக உள்ள கீழ்வரும் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்தை டன் பதிவு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி: நகல் பரிசோதகர் – 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: நகல் வாசிப்பாளர் – 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஓட்டுநர் – 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 28 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 5 ஆண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கணினி இயக்குபவர் – 28
சம்பளம்: மாதம் ரூ.20,600 – 65,500
தகுதி: கணினி அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்.இ., பி.காம் தேர்ச்சியுடன் கணினியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்பத் தகுதி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்தில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் எந்திரம் இயக்குபவர் – 09
சம்பளம்: மாதம் ரூ.16,600 – 52,400
வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 6 மாதம் ஜெராக்ஸ் எந்திரம் இயக்கியதில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 06
வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: அலுவலக உதவியாளர் – 20
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்ரும் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பணி: இரவு காவலர் – 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். (ஆண்கள் மட்டும்)

பணி: மசால்ஜி – 04
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பணி: மசால்ஜி மற்றும் இரவு காவலர் – 02
பணி: துப்புரவு பணியாளர் – 06
பணி: ஸ்கேவெஞ்சர் – 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000
வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.
தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு, தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

ஒரு விண்ணப்பதாரர் ஒரு பதவிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து தகவல் பரிமாற்றங்களும், தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு போன்ற அனைத்து தகவல்களும் ecourt.gov.in/tn/dindigul என்ற இணையதள வலைதளத்தில் மட்டுமே தகவல்கள் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் எந்த தகவல்களும் தெரிவிக்கப்படமாட்டாது.

அனைத்து சான்றிதழ்களின் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

V.N.வளாகம், கலெக்டர் ஆபிஸ் அருகில்,

திண்டுக்கல்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.05.2018.

காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய- Click Here

விண்ணப்பம் – Download Application

 

One thought on “Dindigul District Court Recruitment for Various Posts

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: